திங்கள், மே 30, 2011

கொஞ்சம் நொறுக்ஸ்

மனைவி     : என்னங்க ரெண்டு நாளு என்னை பார்க்க முடியலேன்னா என்ன பண்ணுவீங்க
கணவர்        : ரொம்ப சந்தோஷபடுவேன்
திங்களகிழமை பார்க்க முடியல
அப்பிடியே செவ்வாய், புதன் கிழமையும் போச்சு
வியாழக்கிழமை லேசா வீக்கம் வத்தி ஒர கண்ணால வீட்டுக்காரம்மாவ பார்க்க முடிஞ்சது

மனைவி    : என்னங்க ஏதாவது தேடிக்கிட்டு இருக்கீங்களா?
கணவர்        : இல்லையே ஏன் கேட்குறே?
மனைவி     : அப்ப நம்ம மேரேஜ் சர்டிபிகேட்-அ வச்சுக்கிட்டு என்ன பண்றீங்க?
கணவர்        : எங்கயாவது எக்ஸ்பைரி டேட் இருக்கான்னு பார்த்துகிட்டு இருக்கேன்!!??

ஒருவர்            : சார் என் பொண்டாடிய காணோம்
இன்னொருவர்    : யோவ் இது போஸ்ட் ஆஃபிஸ், போலீஸ் ஸ்டேஷன் போயி கம்ப்ளைண்ட் குடு
ஒருவர்            : சே சந்தோசத்தில எங்க இருக்கேன்னு தெரியலே!!!??

வக்கீல்     : உங்க வீட்டுக்காரரை ஏம்மா இப்பிடி அடிச்சீங்க
பெண்        : காலையில எழுந்த உடனே நான் எங்கே இருக்கேன் சாந்தின்னு கேட்டாரு
வக்கீல்     : அதுல என்னம்மா தப்பு
பெண்        : நாசமா போச்சு என் பேரு சாந்தி இல்ல சார், சுமதி

வக்கீல்     : ஏன்யா, அந்த ஆள விட்டுட்டு உன் பொண்டாட்டிய சுட்டே
ஆண்        : என்னால வாரத்துக்கு ஒரு ஆள சுட முடியாது சார்

ஒருவர்               : பொம்பளைங்க மட்டும் எப்பிடி, ரொம்ப நாள் சந்தோஷமா, ஆரோக்யமா வாழுறாங்க?
இன்னொருவர்    : அவங்களுக்குதான் பொண்டாட்டி     கிடையாதே!!??

ஆண்     :     எம ராஜாவே என் மனைவிக்கிட்ட பேசணும் இந்த ஃபோன்-ல பேசிக்கவா?
எமன்    :     சரி பேசிக்க
ஆண்    :     எவ்வளவு சார்ஜ் பண்ணுவீங்க
எமன்    :     நரகம் டூ நரகம் ஃப்ரீ

7 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வடை...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

செம சிரிப்பு போங்க...!!!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

அடப்பாவி மனோ இங்கேயும் வந்திட்டியாடா?

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

ரசிக்கும்படி இருந்தது..

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

நன்றி மனோ சார்..

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

நன்றி சிபி சார்

//அடப்பாவி மனோ இங்கேயும் வந்திட்டியாடா?

இதுலயுமா பொறாம? நீங்களும் அடிக்கடி வாங்க என்ன இப்ப கேட்டு போச்சு

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி சௌந்தர்..

இடுகைகளை இ-மெயிலில் பெற