வியாழன், மே 26, 2011

உறவுகளின் மேல் நம்பிக்கை வையுங்கள்

ஒரு தடவ ஒரு அப்பாவும், மகளும் ஆத்தை கடந்து போயிக்கிட்டு இருந்தாங்க,
அப்பா சொன்னாரு "மகளே என் கையை நல்லா பிடிச்சுக்கோம்மா" இல்ல ஆத்துல விழுந்துடுவே
மகளோ "நீங்க என் கையை பிடிச்சுக்கோங்க டாடி" அப்பிடின்னா,
"ரெண்டுக்கும் என்னம்மா வித்தியாசம்" அப்பிடினு அப்பா கேட்டாரு
"நான் உங்க கைய பிடிச்சுகிட்டா விட்டாலும் விட்டுடுவேன், ஆனா நீங்க என் கைய பிடிச்சு இருந்தா எப்பயுமே விட மாட்டீங்கள்ள" அப்பிடின்னா


நீதி :
உறவுகளில் முக்கியமானது நம்பிக்கை, எனவே நீங்கள் விரும்புபவரின் கைகளை பற்றிக்கொளுங்கள் அவர்கள் பற்றிக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்

4 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

சிறப்பான கதை...

உறவுகள் மெய்ப்படவேண்டும்...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

நன்றி நண்பரே, இந்த தலைப்பு (உறவுகள் மெய்ப்படவேண்டும்...) எனக்கு தோணாம போச்சே.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமையான நீதி....!!!

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ
நன்றி நன்றி

இடுகைகளை இ-மெயிலில் பெற