செவ்வாய், மே 17, 2011

அன்பிற்கு மட்டுமல்ல கோபத்திற்கும் எல்லை இல்லை

ஒரு நாள் ஒரு தந்தை, தன்னுடைய காரை துடைத்துக்கொண்டு இருக்கும் போது அவருடைய நான்கு வயது மகன் காரில் ஏதோ கிறுக்கிக்கொண்டு இருப்பதை பார்த்தார்.   அவருடைய கோபம் தலைக்கு ஏறி வண்டியில கிறுக்காதேன்னு எத்தன தடவை சொல்லீருக்கேன்னு சொல்லி தள்ளிவிட்டாரு, பையன் பக்கத்தில இருந்த கல்லு மேல விழுந்து விரல்ல அடி பட்டுடுச்சு.

ஆஸ்பத்ரிக்கு எடுத்துட்டு போனா 2 விரல எடுக்கணும் ஒண்ணும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க, எல்லாம் முடிஞ்ச பின்னாடி பையன் கையில கட்டோட உட்கார்ந்து இருந்தான். அப்பா கிட்ட வந்தாரு, அவர் கிட்ட பையன் "என் விரல் எப்ப டாடி வளரும்" அப்பிடின்னு கேட்டான். அப்பாவால தாங்க முடியலே. 

அப்பறம் வீட்டுக்கு வந்த பின்னாடி கார் கிட்ட போயி பார்த்தாரு, பையன் காருக்கு பின்னாடி "Dad I Love You" ன்னு எழுதி வச்சு இருந்தான்.

நீதி:  அன்பிற்கு மட்டுமல்ல கோபத்திற்கும் எல்லை இல்லை

5 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ரொம்ப ஃபீலிங்கான கதை...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ
வீட்ல எப்பிடி புள்ள,குட்டிகள அடிக்காம மிரட்டமா இருக்கிகளா?

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

அடடா சில வரிகளில் எத்தனை அழகான சிந்தனையைப் புகுத்திவிட்டீர்கள் அருமை

மோகன் குமார் சொன்னது…

அர்த்தமுள்ள கதை. நல்ல பகிர்வு

cheena (சீனா) சொன்னது…

நல்ல சிந்தனையில் விளைந்த இடுகை - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

இடுகைகளை இ-மெயிலில் பெற