புதன், மே 18, 2011

சுலபம் கடினம்

கெட்டது சுலபம், நல்லது கடினம்
தோற்பது சுலபம், வெல்வது கடினம்

பேசுவது சுலபம், கேட்பது கடினம்
முடிப்பது சுலபம், தொடங்குவது கடினம்

அழுக்கு சுலபம், சுத்தம் கடினம்
கனவு சுலபம், அதை மெய்ப்படுத்துவது கடினம்

பொய் சுலபம், மெய் கடினம்
விழுவது சுலபம், எழுவது கடினம் 

சந்தேகம் சுலபம், நம்பிக்கை கடினம்
சிரிப்பு சுலபம், கண்ணீர் கடினம்

விமர்சனம் செய்வது சுலபம், அதை எடுத்துக்கொள்வது கடினம்
போர் சுலபம், அமைதியாய் இருப்பது கடினம்

முட்டாளாய் வாழ்வது சுலபம், மேதாவியாய் வாழ்வது கடினம்
கோழையாய் இருப்பது சுலபம், வீரனாய் இருப்பது கடினம்

விருந்து சுலபம், பட்டினி கடினம்
உறக்கம் சுலபம், விழித்து இருத்தல் கடினம் 

வீழ்வது சுலபம், வாழ்வது கடினம்
நண்பனை பெறுவது சுலபம், நண்பனாய் இருப்பது கடினம்


7 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

nice...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

"பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நண்புரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்... தெரிந்துக் கொள்ள வலைச்சரம் வாங்க...

"பச்சைக்கிளி பாண்டியம்மா V/s பதிவர்கள்...."

http://blogintamil.blogspot.com/2011/05/vs.html

! ❤ பனித்துளி சங்கர் ❤ ! சொன்னது…

ஒவ்வொரு வரியிலும் வார்த்தையிலும் உண்மை நிரம்பிக் கிடக்கிறது . அருமையான சிந்தனை . பகிர்ந்தமைக்கு நன்றி

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்

எப்பிடி நன்றி சொல்றதுன்னே தெரியலே நண்பரே. ஆனாலும் சொல்றேன் நன்றி, வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு.

♔ம.தி.சுதா♔ சொன்னது…

போர் சுலபம் அமைதி தான் கடினம் அருமை சகோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
உலகத் தமிழனுக்கு வன்னிமகனின் கெஞ்சல் மடல்.. ?

cheena (சீனா) சொன்னது…

படிப்பது சுலபம் - எழுதுவது கடினம் ரமேஷ் பாபு - நட்புடன் சீனா

இடுகைகளை இ-மெயிலில் பெற