வெள்ளி, மே 20, 2011

நெகட்டிவ் (மைனஸ்) ஓட்டு பெறுவது எப்பிடி

உங்க பதிவுகளுக்கு எப்படி நெகட்டிவ் (மைனஸ்) ஓட்டுகள் வாங்குவது எப்படின்னு சொல்லித்தர போறேன்.  ஏன்னா நெகட்டிவ் ஓட்டு வாங்குறவாங்க தான் இப்ப பிரபல பதிவராம் அப்பிடின்னு ஒரு வதந்தி பரவி கிட்டு இருக்கு.  அதனால கீழே இருக்க ஸ்டெப்ஸ்-அ ஃபாலோ பண்ணுங்க நீங்களும் பிரபல பதிவர் ஆகிடுங்க

ஸ்டெப் 1    :    மொதோ நீங்க நிறைய கமெண்ட் போட பழகிக்கிடுங்க

ஸ்டெப் 2     :     நிறைய வலைப்பூக்களுக்கு ரெகுலரா போங்க

ஸ்டெப் 3    :     இப்ப உங்களுக்கு ஒரு ஐடியா கெடைக்கும் யாரெல்லாம் தாதா* பதிவர் அப்பிடின்னு

ஸ்டெப் 4     :    இங்கிருந்து தான் உங்க உண்மையான வேலை ஆரம்பிக்குது

ஸ்டெப் 5    :    உங்க லிஸ்ட்ல இருக்குற தாதா பதிவர்கள்ல யாரு ரொம்ப உணர்ச்சி வசப்படுறாரு அப்பிடின்னு பாருங்க

ஸ்டெப் 6    :    அவரு என்ன பதிவு போட்டாலும் கமெண்ட்-ல கொஞ்சம் அவர உசுப்பேத்தி விடுங்க,

ஸ்டெப்    7    :    உதாரணத்திற்கு  இதெல்லாம் ஒரு விஷயமா?  , இது ஏற்கனவே தெரியும், உங்களுக்கு வேற வேலை இல்லயா?

அவளவு தான் நீங்க பண்ண வேண்டியது, மிச்சத்த அந்த தாதா பதிவர் பார்த்துக்கிடுவார்.   அவர் மட்டுமா நெகட்டிவ் ஓட்டு போடுவாரு அவர் பதிவுக்கு வர்ற  போறவங்களையெல்லாம் இப்பிடி ஒருத்தன் இருக்கான் (உங்களைத்தான்), அவன் அதுக்கெல்லாம் சரி பட்டு வரமாட்டான்  அப்பிடின்னு இன்ஃபர்மேஷன் குடுத்துடுவாரு.

அப்பறமென்ன நீங்க என்ன பதிவு போட்டாலும் ஹிட்ஸ் நிறைய இருக்கும் ஆனா உங்க ஒரு ஓட்டை தவிர வேற வோட்டை எத்தனை  வருசமானாலும் பார்க்கமுடியாது. நீங்க தான் அப்புறம் ஓட்டு No. 1 பதிவர்.

தாதா பதிவர் = குறைந்த பட்சம் 200 followers இருக்கணும், பதிவு போட்ட 1 மணி நேரத்தில 20 ஓட்டு அப்புறம் 40 கமெண்ட்-ஸும் இருக்கணும்.

அப்பதான் நான் மேல சொன்னது எல்லாம் நடக்கும், நீங்க பாட்டுக்கு நான் ஏதாவது செய்வேன்னு நம்பி ஏதாவது முயற்சி செஞ்சா எதுவும் நடக்காது ஏன்னா நான் ரொம்ப நல்லவன் அப்பறம் நான் தாதா பதிவர் அல்ல 
10 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ் பாபு = நல்ல ஆலோசனை - புதிய இளம் பதிவர்கள் முயற்சி செய்யட்டும். அனைவருக்கும் ரமேஷ் பாபு உட்பட நல்வாழ்த்துகள் - ஆமா மதுரையா - வரும்போது சந்திக்கலாமே - நட்புடன் சீனா

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@cheena (சீனா)
கருத்துக்கு நன்றி நண்பரே, இனி தீபாவளிக்கு தான் மதுரைக்கு வர முடியும், வரும் போது தகவல் கொடுக்கிறேன் நண்பரே.

ரஹீம் கஸாலி சொன்னது…

சூப்பர் ஐடியா கொடுத்திருக்கீங்க நண்பா....

ரஹீம் கஸாலி சொன்னது…

தமிழ்மணம் உட்பட அனைத்திலும் நான் ஓட்டு போட்டுட்டேன்(நெகடிவ் வோட்டில்லை)

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ரஹீம் கஸாலி
ரொம்ப நன்றி நண்பரே, உங்கள் கருத்துக்களை தொடர்ந்து சொல்லவும். இது என்னை மேலும் மெருகு ஏற்றிக்கொள்ள உதவும்.

நிரூபன் சொன்னது…

உட்கார்ந்து யோசிப்பீங்களோ. பயனுள்ள ஐடியா.
தலைவர் சொல்லிட்டீங்க, நாம பாலோ பண்ணுறோம்.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@நிரூபன்
நன்றி நண்பரே, என்னுடைய இடுகைகளில் அதிக நேரம் எடுத்தது இது தான். என்ன போடுறதுன்னு 4 மணி நேரம் யோசிச்சேன், அப்புறம் எப்பிடி போட்ட நாம சேதாரமில்லாம தப்பிக்கலாமுன்னு 4 மணி நேரம் யோசிச்சேன், அப்புறம் 8 மணி நேரம் தூங்கி எந்திருச்சு அரை மணி நேரம் டைப் பண்ணி போட்டேன்.

ஆக மொத்தம் 16 மணி நேரத்துக்கு மேல ஆச்சு.

N.H.பிரசாத் சொன்னது…

ஐடியா நல்லா தான் இருக்கு. Workout ஆகுமா?

mani சொன்னது…

இதுவா? எனக்கு ஏற்கனவே தெரியும். உங்களுக்கு வேற வேலையே இல்லையா...?

:)

கோச்சிக்காதிங்க ஒரு வேலை நீங்க தாதா வாகிட்டா?

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@mani
நான் தாத்தா ஆனாலும் தாதா ஆக முடியாது நண்பரே. அதுக்கெல்லாம் நெறைய follower இருக்கணும் இப்பதான் 20 பேரு இருக்கீங்க. இன்னும் 200 வருவதற்கு நிறைய வருஷம் ஆகும்

இடுகைகளை இ-மெயிலில் பெற