புதன், மார்ச் 30, 2011

மிஸ்டர் எக்ஸ்

டாக்டர்            :     உங்களுக்கு மூளையில கட்டி வந்திருக்கு
மிஸ்டர் எக்ஸ் :     உங்கள எப்பிடி புகழுறதேன்னு தெரியலே
டாக்டர்            :     நான்  என்ன சொன்னேனு புரிஞ்சதா?
மிஸ்டர் எக்ஸ் :      நீங்களாவது எனக்கு மூளை இருக்குனு ஒத்துக்கிட்டீங்களே

டீச்சர் :    தம்பி 5 கூட்டல் 4 எவ்வளவு
மிஸ்டர் எக்ஸ் :  ஒன்பது
டீச்சர் : அப்பிடின்னா 4 கூட்டல் 5 எவ்வளவு
மிஸ்டர் எக்ஸ் : உல்டாவா கேட்டா எனக்கு தெரியாதா?!! ஆறு !!!

மிஸ்டர் எக்ஸ் : ஸார், என் பையனுக்கு விட்டமின் மாத்திரை வேணும்
அவர்             : என்ன விட்டமின் ஸார் ஏ,பி,சி யா ??
மிஸ்டர் எக்ஸ் : எதுனா குடுங்க என் பையனுக்கு ஏ,பி,சி எல்லாம் தெரியாது

நண்பர் : என்ன நண்பா நான் குடுத்த CD எப்பிடி
மிஸ்டர் எக்ஸ்: என்ன பெரிய சி‌டி குடுத்த, பயங்கரமான படம்னு பார்த்த ஒண்ணுமே வரலேயே
நண்பர்: எந்த சி‌டி-ய  எடுத்துட்டு போனே
மிஸ்டர் எக்ஸ் : "ஹெட் க்ளினர்"

மிஸ்டர் எக்ஸ் :(அழுது கொண்டே) எங்கம்மா செத்துபோயிடங்காண்ணு டாக்டர் சொல்லிட்டார்
நண்பர்:    அழதீங்க, எல்லாம் கொஞ்ச நாள்ல சரியா போயிரும்
மிஸ்டர் எக்ஸ் :(சத்தமாக அழுகிறார்)
நண்பர் : என்னாச்சு
மிஸ்டர் எக்ஸ்: என் தங்கச்சி ஃபோன் பண்ணா
நண்பர்: என்னவாம்
மிஸ்டர் எக்ஸ் : அவங்க அம்மாவும் செத்து போயிட்டாங்களாம்

உடன் பணியாற்றுபவர்: என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்,  லிப்ட்-ல வரும் போது கரண்ட் கட் ஆயிருச்சு அதன் 4 மணி நேரம் லேட்
மிஸ்டர் எக்ஸ் : பரவால்ல எனக்கு கூட அப்பிடித்தான் எஸ்காலடோர்ல வரும் போது கரண்ட் கட் 3 மணி நேரம் லேட்

1 கருத்து:

மனம் திறந்து... (மதி) சொன்னது…

ஏன், அதுக்கப்புறம், அவரு தம்பி போன் பண்ணலியா...? அப்போ என்ன பண்ணாரு இவரு? தரையிலே உருண்டு புரண்டு அழுதாரோ?
இப்பிடியே போனா வெளங்கிடுவீங்க ....நீங்களும்...உங்க மிஸ்டர் எக்ஸும்! ஹூம்... வீட்ல திட்டு வாங்கறது பத்தலேன்னு இங்கயும் கூடைய வச்சிக்கிட்டு ஒக்காந்துட்டீங்க போலிருக்கு! என்னத்த சொல்ல...! விதி யாரை விட்டுது?

இடுகைகளை இ-மெயிலில் பெற