திங்கள், மார்ச் 28, 2011

ஊழல்

ஊழல் காரணமாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்று நூறு முன்னணி உலக நிறுவனங்களிடம் எடுக்கப்பட்ட கருத்துக் கணிப்பு கூறுகிறது.



அரசியல்வாதிகளுக்கும் பெரு முதலாளிகளுக்கும் இடையே அதிகரிக்கும் நெருக்கமானது நாட்டுக்கு பல பில்லியன் டாலர்கள் வருவாய் இழப்பை ஏற்படுத்துவதாக கேபிஎம்ஜி என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது.

"நாளாந்த தேவைகளுக்காக சிறிய அளவில் லஞ்சம் கொடுப்பது என்பது பெரும்பாலான இந்தியர்களுக்கு வாடிக்கையாகிவிட்டது" என்று கூறும் கேபிஎம்ஜியின் அறிக்கை அதே நேரம் பல பில்லியன் டாலர்கள் நஷ்டத்தை ஏற்படுத்தக் கூடிய ஊழல்களும் தற்போது சகஜமாகிவருவதாகத் தெரிவித்துள்ளது.

தொலைத் தொடர்பு, ரியல் எஸ்டேட், கட்டுமானத் துறை போன்ற துறைகளில் ஊழல் அதிக அளவு இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

ஊழல் காரணமாக நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படலாம் என்றும் இதன் காரணமாக வெளிநாட்டு நேரடி முதலீடு குறையவும் வாய்ப்புள்ளதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது.


கருத்துகள் இல்லை: