வியாழன், மார்ச் 31, 2011

நான் ரெடி நீங்க ரெடியா

நான் ரெடி நீங்க ரெடியா என கட்டை விரலை உயர்த்திகாட்டும் வயிற்றில் உள்ள சிசு

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் டொன்னா சேயர் (வயது 29) இவரது கணவர் சீமன் பிஸ்கோ டொன்னா சேயர் கர்ப்பமாக இருந்ததை தொடர்ந்து மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு சென்றார்.

அங்கு அவருக்கு ஸ்கேன் எடுக்கபட்டது ஸ்கேனில் வளரும் சிசுவை பர்ஹ்த போது தன் தலை மிகவும் சிறியதாகவும் வளர்ச்சியுறாத நிலையிலும் காணப்பட்டது அதற்கு டாக்டர்கள் தேவையான மருந்துகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.

சில வாரங்கள் கழித்து மீண்டும் டொன்னா பரிசோதனைக்கு சென்ற போது அதே நிலைமையே மிண்டும் நீடித்தது இதனால் தம்பதியனர் மிகவும் வருத்தம் அடைந்தனர். இந்த நிலையில் சமீபத்தில் டொன்னா பரிசோதனைக்கு சென்றார். ஸ்கேன் எடுத்து பார்த்த போது அவரது வயிற்றில் வளரும் அதில் 6 மாதமான அந்த பிஞ்சுக்குழந்தையின் வளர்ச்சி குறிப்பிடதக்க முன்னேற்ரம் அடைந்து இருந்தது மேலும் அந்த சிசுவின் கட்டை விரல் உயர்த்திக்காட்டியப்படி வெற்றியின் அடையாள சின்னமாக இருந்தது ஸ்கேன் படத்தில் தெரியவந்தது.இதை பார்த்த டாகடர்களும் பெற்றோர்களும் ஆச்சரியம் அடைந்தனர். நான் ரெடி நீங்க ரெடியா என்பது போல் அந்த குழந்தை கட்டைவிரலை உயர்த்தி இருந்தது.

2 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

எதேச்சையா நடந்திருக்கலாம்

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

நன்றி சி.பி. அண்ணே. பர்ஸ்ட் கமெண்ட் உங்களோடது!!

இடுகைகளை இ-மெயிலில் பெற