வியாழன், அக்டோபர் 27, 2011

போதிதர்மர் தமிழரா?

இது ஒரு சந்தேகப்பதிவு. அதாவது எனக்கு வந்த சந்தேகம் பத்தின பதிவு. 

இந்த தீபாவளிக்கு வெளியான 7 ஆம் அறிவு திரைப்படத்தில் முதல் 25 நிமிடங்கள் போதிதர்மர் யாருன்னு அழகா வரலாறை சொல்லுகிறார் டைரக்டர்.  நல்லா இருக்கு,  சூர்யா நல்லா பண்ணி இருக்கார். 

25 வது நிமிடம் மக்கள் கிட்ட கருத்து கேக்குற மாதிரி ஒரு சீன் வச்சு இருக்கார், அதாவது தமிழ்நாட்டுல (எந்தெந்த ஊருன்னு தெரியல) இருக்க சில மக்கள் கிட்ட போதிதர்மர் யாருன்னு கேக்குறாங்க. 100% பதில் யாருக்கும் தெரியலே. அவ்வளவு ஏன் எனக்கு கூட தங்கமலர்-ல (தினத்தந்தி இலவச இணைப்பு வெள்ளிக்கிழமை வரும்) படக்கதைகள் மூலமா தெரியும் ஆனா அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்ன்னு தெரியாது.

பராந்தக சோழன் யாருன்னு கேட்டா கூட நிறைய பேருக்கு தெரியாது, வீராணம் ஏரியை வெட்டுனவர் யாருன்னு கேட்டா தெரியாது, வைகை டாம் கட்டுனவர் யாருன்னு கேட்டாலும் தெரியாது.   இன்னும் கொஞ்ச நாள்ல பெரியாரும் அண்ணாவும் கூட மறந்துடுவோம்.  ஏன்னா நம்ம வரலாற்று அறிவு அப்பிடி. சுதந்திர போராட்டத்தை மட்டுமே வரலாறுன்னு படிக்கிற புள்ளைங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? 

சரி விஷயதுக்கு வர்றேன்

இந்த படம் பார்த்ததுக்கு அப்பறம் கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு, அதாவது போதிதர்மர் ஒரு தமிழர் அப்பிடின்னு டைரக்டர் ரொம்ப உறுதியா சொல்லுறாரு. எதை வச்சு சொல்லுறாரோ தெரியலை. சரி நம்ம சந்தேகத்த தீர்த்துக்கிடுவோமே அப்பிடின்னு ஓடுறா கைப்புள்ள கூகுளுக்கும் விக்கிபீடியாக்கும் தேடுனா ஹுகும் விஷயம் கிடைக்கலை. பல்லவர்களின் பூர்வீகம் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

எல்லாம் யூகத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டு இருக்கு. முற்கால சோழர்களுக்கும் பிற்கால சோழர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதும் பிராமணர்கள் என்பதும் நான் தேடிய வரையில் கிடைத்த செய்தி.  இன்னும் சில வலைதளங்களில்அவர்கள் பாரசீகத்தில் இருந்து இந்தியாவிற்குள் வந்தனர்னும் பார்க்க முடியுது. அவர்கள்  தமிழர்கள் என்று எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

மேலதிக குறிப்புகளுக்கு

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

http://www.kamat.com/kalranga/deccan/pallavas.htm

http://www.civilserviceindia.com/subject/History/prelims/pallavas.html

http://www.iranian.com/History/2003/May/Pallava/index.html

இன்னும் கூகிளில் தேடினால் நிறைய கிடைக்கிறது ஆனா குழப்பம் தான் மிச்சம். இதை படிக்கும் நண்பர்கள் யாராவது போதிதர்மர் தமிழர் அப்பிடிங்கிறதுக்கு ஏதாவது ஆதாரம் கிடைச்சா கொஞ்சம்  கமெண்ட்-ல போடுங்களேன்..

பிற்சேர்க்கை :
இந்த பதிவை நீங்க படிச்சுக்கிட்டு இருக்கும் போது இந்த வலைப்பூவை பார்வை இட்டவர்கள் எண்ணிக்கை (அதாங்க ஹிட்ஸ்)  ஒரு லட்சம் கடந்து இருக்கும். இதுவரை தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்துக்கொண்டு நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள்.

31 கருத்துகள்:

Dr. Butti Paul (Real Santhanam Fanz) சொன்னது…

ஹிட்ஸ் கணக்குக்கு வாழ்த்துக்கள்.

போதி தர்மர் பற்றிய பல வராலற்றுக்குரிப்புகள் "he is a south indian Monk" அப்புடின்னுதான் சொல்லுது, எதிலையும் அவர் தமிழன்னு சொல்றதுக்கான ஆதாரம் இல்ல. ஆனா நம்ம நாட்டுல ஒருவர் இதையே ஆய்வு செய்து போதி தர்மர் தமிழரே என சமர்பித்த ஆய்வுக்கட்டுரை ஏற்கப்பட்டு அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டதா ஒரு பதிவுல ஆதாரத்துடன் படிக்க கிடைத்தது. ஏழாம் அறிவு மேலுள்ள வெறுப்பு அந்த பதிவை முன்னுக்கு பின் முரணானதாக ஆக்கியிருந்தாலும் பதிவை பொறுமையுடன் படித்தால் அவர் தமிழரே என்றே பதில் கிடைக்கிறது. (இணைப்புக்கு பிலாசபி பிரபாகரன் சாரின் ஏழாம் அறிவு விமர்சனம் பார்க்கவும்) பதிவை மீண்டும் ஒரு முறை படித்து அவர் தமிழர்தானா என்பதனை உறுதிப்படுத்தி ஒரு பின்னூட்டம் இட்டால் மகிழ்ச்சி அடைவேன்.

Unknown சொன்னது…

@Dr. Butti Paul

கருத்திற்கு நன்றி சகோ. இன்று தான் அவருடைய பதிவை படித்தேன் நேற்று இணையத்திற்கு வராததால் அவர் பதிவை மிஸ் செய்துவிட்டேன். அவருடைய பதிவில் இருந்து

//சினிமாவே பார்க்காதவர்கள் கூட ஏழாம் அறிவை பரிந்துரைக்க காரணமாக இருந்த விஷயங்கள் போதி தர்மர், தமிழர்களின் பெருமை etc etc. இது உண்மையிலேயே தமிழருக்கு பெருமையா அல்லது வியாபார தந்திரமா என்ற குழப்பத்துடனேயே படம் பார்த்தேன். //

அவருக்கும் சந்தேகம் இருப்பது போலே தானே எழுதி இருக்கிறார்?

அவருடைய இணைப்பு பதிவிலும்
(http://marakkanambala.blogspot.com/2011/10/blog-post.html )

//போதி தர்மரின் கால கட்டங்களை(கி.பி.520) வைத்து, அவரை, களப்பிரர் என்று எடுத்துக்கொண்டால்கூட, களப்பிரர்களை ‘கன்னடர்’ என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி. கன்னடத்தின் மூலமொழியே தமிழ்தான். மிகப்பெரிய மேதையான போதி தர்மருக்கு, அப்போதிருந்த அணைத்து மொழிகளும் தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. எனவே, பல்லவ மன்னனுக்கு பிறந்தவர் என்ற அடிப்படையிலும், திராவிடர் என்ற அடிப்படையிலும் வைத்துப் பார்க்கும்போது, போதி தர்மரும் தமிழர்தான் என்பதில் ஐயமில்லை’’ என்கிறார். //

தமிழ் பேசுபவர் எல்லாம் தமிழர் என்று எப்படி ஏற்றுக்கொள்வது? கொஞ்சம் விளக்கினால் தேவலை.

இது ஒரு விளம்பர யுத்தியாகவே படுகிறது.

எனக்கும் தமிழ் எழுத, படிக்க,பேச ஏன் பாட கூட வரும் ஆனால் நான் தமிழன் அல்ல நண்பரே.. நான் அப்படி சொன்னாலும் இங்கே ஏற்றுக்கொள்பவர்கள் இல்லை..

பெயரில்லா சொன்னது…

dear ramesh, you pls check with "hai" madhan, who has written "vantharhal-vendrarhal" book about india's past.

Unknown சொன்னது…

@பெயரில்லா கருத்துக்கு நன்றி சகோ.. இதை தான் எதிர் பார்த்தேன். ஆனாலும் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

இன்னொன்றையும் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன். இது யாரையும் அவதூறு செய்யும் நோக்கத்தில் எழுதப்பட்ட பதிவு அல்ல. சரியான வரலாறு திரிபு இல்லாமல் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எழுதப்பட்டது.

தமிழகத்தில் இருந்து ஒருவர் சென்று சாதனை செய்தார் என்பதே நமக்கு பெருமை தரக்கூடிய விஷயம் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். அவர் தமிழராய் இருந்தால் கூடுதல் சிறப்பு

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

தீபாவளிக்கு வந்த படத்தில எந்த படம் முதல்ல பார்க்கலாம் யாராவது சொல்லுங்களேன்

K.s.s.Rajh சொன்னது…

எனக்கும் டைரக்டர் எப்படி உறுதியாக சொல்கின்றார் என்று கேள்வியிருக்குத்தான்?(நான் படம் பார்கவில்லை முருகதாஸ் டீ.வி பேட்டியில் சொன்னதை வைத்து சொல்கின்றேன்.

பெயரில்லா சொன்னது…

ஏன் பிராமணர்கள் தமிழர்கள் இல்லையா? அப்ப உ. வே. சா., பாரதி, கல்கி இவுங்களே தமிழன் இல்லனா பெரியார் கலைஞர் இவங்கதான் உங்க டெபனிஷன்படி தமிழங்களா?

அப்புறம் அதென்ன திராவிடர்கள் எல்லாம் தமிழர்கள் மாதிரி அடிச்சுவிடுறீங்க. போய் ஆந்திரா கர்நாடகாவின் தமிழ்தான் உங்க மொழிக்கு தாய்ன்னு சொல்லிப்பாருங்க...

பெயரில்லா சொன்னது…

ஏன் பிராமணர்கள் தமிழர்கள் இல்லையா? அப்ப உ. வே. சா., பாரதி, கல்கி இவுங்களே தமிழன் இல்லனா பெரியார் கலைஞர் இவங்கதான் உங்க டெபனிஷன்படி தமிழங்களா?

அப்புறம் அதென்ன திராவிடர்கள் எல்லாம் தமிழர்கள் மாதிரி அடிச்சுவிடுறீங்க. போய் ஆந்திரா கர்நாடகாவின் தமிழ்தான் உங்க மொழிக்கு தாய்ன்னு சொல்லிப்பாருங்க...

Unknown சொன்னது…

@பெயரில்லா ஐயா நீங்க யாரோ எவரோ கமெண்ட் லைன்-ல குழப்பம் பண்ணாதீங்க..

உங்களுக்கு புரியிற மாதிரி சொன்னா தமிழ் பேசுறவங்க எல்லாம் தமிழர் இல்லை. நீங்க சொன்ன சிலர் கூட தமிழர் இல்லை என்பது எதார்த்தம் அதை அவர்களே ஒத்து கொள்வார்கள்.

Dr. Butti Paul (Real Santhanam Fanz) சொன்னது…

மன்னிக்கணும் நண்பரே, இது சற்று நமது அறிவுக்கு எட்டாத விடயம். போதிதர்மர், தென்னிந்தியாவில் இருந்து சொன்றவர் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருப்பதாக தெரியவில்லை. தமிழரா இல்லையா என்பதுக்கு தெளிவான ஆதாரங்கள் இருப்பது போலும் தெரியவில்லை. காஞ்சிவரத்தில் பிறந்தார் எனவும் பல்லவ மன்னனின் மூன்றாவது இளவரசர் எனவும் பல வரலாற்றாளர்கள் ஏற்றுக்கொண்டுள்ளதாக தெரிகிறது. சிலர் அவர் தமிழர் எனவும் கூறியிருக்கிறார்கள். ஆயினும் ஆதாரம் எதுவும் கண்ணில் படவில்லை. தென்னிந்தியாவில் இருந்து சென்ற ஒரு மகான் என்றே வைத்துக்கொள்வோம். தமிழரா இல்லையா என விவாதித்து சொந்தம் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. போதி தர்மர் தமிழர் இல்லை என்றோ தென் இந்தியாவில் இருந்து சென்றவர் இல்லை என்றோ தக்க ஆதாரங்கள் கிடைப்பின் மட்டுமே இதனை விளம்பர உத்தியாக எடுத்துக்கொள்ளலாம். மேலும் போதிதர்மரே ஒரு கற்பனை பாத்திரம் எனவும் சொல்கிறார்கள்.

http://www.tamilheritage.org/kidangku/bodhidharma/bodhi3_1.pdf

http://www.helium.com/items/1455762-bodhidharmabudhismrealityshaolintibetanzenpractisedharma

http://www.whatdoyouthinkmyfriend.com/Lighter/bodhid.html

இவற்றுடன் விக்கிபீடியாவில் உள்ள ரெபரென்ஸ் கலை படித்துப்பாருங்கள், மண்ட காஞ்சிடும்.

பெயரில்லா சொன்னது…

சரி சாமி, எம்ம மரமண்டைக்கு ஏறுகிற மாதிரி சுருக்கம தமிழர் என்பவர் யாருன்னு விளக்க முடியுமா?

தமிழ் பேசுபவர் தமிழ்நாட்டில் வசிப்பவர் இதெல்லாம் இல்லைனா ஏதாவது ஜெனடிக் டெஸ்ட் ஏதாவது வைச்சிருக்கீங்களா?

Unknown சொன்னது…

@பெயரில்லா ஐயா உங்க பேரை தெரிஞ்சிக்கலாமா?

உங்களுக்கு புரியிற மாதிரி சொல்லணும்ன்னா ஸ்கூல்-ல சேர்க்கும் போது தாய்மொழி அப்படின்னு ஒரு இடம் இருக்கும் அங்கே தமிழ் அப்பிடின்னு நிரப்பி குடுக்குறவங்க தான் தமிழர். அது இல்லாம இங்கே எனக்கு சந்தேகம் போதிதர்மர் தமிழரான்னு தானே ஒழிய வேற யாரும் தமிழரா இல்லாங்கிறது இல்லை..

Unknown சொன்னது…

@Dr. Butti Paul அண்ணே தகவல்களுக்கு நன்றி..

பெயரில்லா சொன்னது…

என்னோட பேரு சம்பத்துங்க. என்கிட்ட வலைபதிவு எல்லாம் இல்லைங்க (இதை தெரிஞ்சி என்ன பண்ண போறீங்க? எழுதற பாயிண்ட பாருங்க சார்)

போதிதர்மர் பத்தி பல சந்தேகங்கள் இருக்குது. அவருதான் குங்-பூவை கண்டுபிடிச்சாரா, இந்தியாவுல இருந்தான் வந்தாரா? இப்படி. ஏன்னா சைனாகாரனுக ஏதாவது நீதிக்கதை சொல்லுனும்னா உடனே இவரு பேருலதான் ஆரம்பிப்பானுகளாம் (உதாரணமாக அவருக்கு ஒரு நாள் தூக்கம் வந்துதாம்,அதனால காண்டாகி தனது கண்ணிமைய பிச்சி வீச அதிலிருந்து வந்ததுதான் தேநீர். இவரு செத்து பலகாலம் கழித்து இவரு ஒரு செருப்பு மட்டும் போட்டுகிட்டு ரோட்டுல போனாராம், அப்புறம அவரு சமாதிய தெறந்து பார்த்தா அங்க அவரு உடம்பு இல்லையாம் ஒரு செருப்பு மட்டும் இருந்துதாம்.அதனால இவரு நிஜமாலுமே இருந்தாரா இல்ல கற்பனை கேரக்டரான்னு கருத்துவேறுபாடுகள் இருக்கு. முதல்ல அது உறுதியானதும் அவரு தமிழனா இல்லையான்னு ஆராய்ச்சி பண்ணலாம்.
புத்தமத ஆராய்ச்சியாளர் பேரா. ரிச்சர்ட் இவரை தமிழன் தமிழன்னு உரிமை கொண்டாடுவதை கிண்டலடித்து (இந்தப்படம் வராததுக்கு முன்னாடியே) எழுதியதை படித்து பாருங்க; The story I like best is the one that makes him a South Indian. I like this version for no better reason than that I am partial to South Indians, maybe because two of my most beloved teachers were Tamil and Telugu. (Ever heard of a Tamil Theravadin Zen Buddhist? They're about as rare as Canadian Sautraantikas, but a hell of a lot more polite.) Moreover, nearly all the really great Buddhist thinkers, such as Naagaarjuna, Dignaaga, Dharmakiirti and Buddhaghosa, were Tamil or Telugu. For the sake of economy of admiration, I find it convenient to think that Bodhidharma must also have come from the same part of India; this saves me a lot of time and money on pilgrimages, because I only have to go to one place to pay respects to every Buddhist whose thinking has shaped my understanding of Buddhism. (I'm currently gathering a mountain of evidence that proves beyond a shadow of doubt that the Buddha himself was born, became enlightened, taught the dharma and died in Tamilnadu. Of course people will scoff at this evidence at first, since I am making most of it up, but I suspect that within fifty years people will start believing in it. Nobody gets a PhD in Buddhist studies from McGill unless they sign a statement affirming their belief that the Buddha came from Madras instead of Magadha.)

வவ்வால் சொன்னது…

போதி தர்மர் மேட்டர் படத்து விளம்பரத்துக்கு மட்டுமே.

பல்லவர்கல் தமிழர்கள் என்று சொல்வதற்கே ஆதாரம் இல்லை. அப்புற்ம் எங்கே போதி தர்மா தமிழர்னு சொல்ல ஆதாரம் வரும்.

#பல்லவர்கள் ஆப்கானில் இருந்து வந்த பஹ்லவா என்ற ட்ரைப் ,

#கர்நாடகவை சேர்ந்த பல்லால வம்சம் தான் பல்லவ வம்சம் என்பது

#சாலுக்கிய வகையினர் என்பது , சாலுக்கியர்களும் இவர்களும் பங்காளிகள்.

#வட இந்திய பழங்குடியினர் என்பது. பல்லவர்களை காடவர் கோன் என்பார்கள், சிம்மவர்மன்=பஞ்சபாத்அ ச்ம்ஹன்,=ஐயசிகள் காடவர்கோன், இவர் 63 நாயன்மார்களில் ஒருவர்.

#நாகர் வம்சத்தை சேர்ந்தவர்கள், மணிபல்லவ தீவை சேர்ந்த்அ நாக இளவரசிக்கும், சோழ மன்னனுக்கும் பிறந்தவர்கள் தான் பல்லவர்கள், நாக இளவரசி ஒரு தொட்டிலில் வைது பசுங்கொடியால் சுற்றி கடலில் விட்ட குழந்தை பின்னர் வளர்ந்து பல்லவ வம்சம் உருவானதாக கதை, பல்லவம் = கொடி என பொருல் உண்டு.

# தமிழ் வேந்தர்கள்னு எப்போதும் சேர,சோழ, பாண்டியர்களை மட்டும் இலக்கியங்கள் சொல்லி வருவதும் ஒரு காரணம்.

இனிமே நீங்களே பல்லவர்கள் யாருனு கண்டு புடிச்சி , போதி தர்மர் யாருனு கண்டு புடிங்க!

---------------------------------------------------------------------
@பெயரில்லா
தமிழ் பேசினால் தமிழர் சரி வச்சுப்போம்,

அமெரிக்காவிலோ,இங்கிலாந்திலோ போய் ஆங்கிலம் பேசியதும் நம்மள ஒயிட்ஸ்னு சொல்றாங்களாம் உண்மையா? :-))

பிரசன்னா கண்ணன் சொன்னது…

ரமேஷ்,
தமிழகத்தின் கி.பி 300 முதல் 600 வரையிலான காலகட்டம், களப்பிரர் காலம் என்று சொல்லப்படுகிறது..
களப்பிரர் என்பவர் கன்னடர் என்பது முழுக்க ஒரு அனுமானம் மட்டுமே.. காரணம், அந்த அதை மெய்ப்பிக்கும் வகையில் எந்த ஒரு கல்வெட்டுமே ஆதாரமாக கிடைக்கவில்லை நமக்கு..
அதனால்தான் அதை இருண்ட காலம் என்றும் வரலாற்று வல்லுனர்கள் சொல்லி இருக்கின்றார்கள்..

நீங்க சொன்ன தங்கமலர் மேட்டர் - அது போதிசத்துவர்.. போதிதர்மர் அல்ல.. இருவரும் வேறு வேறு என்று எனது எண்ணம்..
முடிந்தால் அதை சற்று அலசி ஆராய்ந்து தெரிவிக்கவும்..

Yoga.S. சொன்னது…

வணக்கம்!உங்கள் சந்தேகத்தை தீர்த்துவைக்கக் கேட்டால் உங்களையே......................!சரி விடுங்கள்,"அவருக்கே"அவர் மேல் சந்தேகம் போலும்!

பெயரில்லா சொன்னது…

அட‌ நாயே, ஒன்னோட‌ பேரே த‌மிழ் கிடையாது, அப்போ நீ த‌மிழ‌னா?

நீங்க‌ளா எதையும் புடுங்காதிங்க‌, அடுத்த‌வ‌ன் சொல்ற‌துல‌ குறை சொல்ல‌ கெள‌ம்பிட்டிங்க‌. நீ ஒரு ஆணியும் புடுங்க‌ வேணாம்...

SURYAJEEVA சொன்னது…

தாய்மொழி தமிழ் என்று கொடுப்பவர்கள் தமிழர் என்றால் பண்டைய காலத்தில் தாய்மொழி என்று எங்கு எழுத கொடுத்தார்கள் என்ற கேள்வி எழுகிறது... ஆகையால் சமுதாய நோக்கில் பார்த்தால் தமிழ்மொழியை தாய் மொழியை ஏற்றுக் கொண்டவர்கள் அனைவரும் தமிழர்களே என்று வேண்டுமானால் சொல்லலாம்... மற்றபடி இன்னும் தமிழன், தெலுங்கன், மலையாளி கன்னடன் என்று மக்கள் பிரிந்து செல்வதை நான் விரும்பவில்லை...

Unknown சொன்னது…

@பெயரில்லா
என் பேராவது தமிழ் இல்ல ஆனா உங்களுக்கு பேரே இல்லையா? கோவமா கமெண்ட் போட்டா பத்தாது, போடுறதுக்கு முன்னாடி கொஞ்சம் நல்லா படிச்சு பார்க்கணும், நான் தமிழன் அல்ல என்றே குறிப்பிட்டு இருக்கிறேன்.

கேக்குறவன் கேணப்பயலா இருந்தா கேப்பையில நெய் வடியும்ன்னு பெரியவங்க சொல்லி இருக்காங்கா அப்ப நீங்க யாருன்னு தனியா வேற சொல்லணுமா?

Unknown சொன்னது…

@பெயரில்லா கருத்துக்கு நன்றி நண்பா.

Unknown சொன்னது…

@suryajeeva
நன்றி சூர்யஜீவா சார். உங்கள் கருத்தை நான் வழிமொழிகிறேன். மேற்படி தமிழன் யார் என்பதற்கு நான் குடுத்த விளக்கம் முழுமையும் சரி அல்ல ஆனா தவறும் அல்ல என்று நம்புகிறேன். என் தாய்மொழி ஸௌராஷ்ட்ரம். நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் மதுரையில். நான் தமிழன் என்று சொன்னால் இங்கே எத்தனை பேர் ஏற்றுக்கொள்வார்கள்?

அதுவும் இல்லாமல் போதிதர்மர் நாம் நாட்டில் இருந்து போய் எல்லா கலைகளையும் பரப்பினார் சந்தோஷம் அதை இங்கே மறுப்பதற்க்கு இல்லை. இது மொதோ 25 நிமிடம் காட்டுறாங்க அப்பறம் ஒரு 5 நிமிஷம் வர்ற சீன்களை பாருங்கோ, போதிதர்மர் ஒரு தமிழர் அவரை தமிழ் மக்களுக்கு தெரியவில்லைகிற மாதிரி காட்டுறாரே டைரக்டர் அது தான் கொஞ்சம் நெருடல். அதை விட முக்கியம் இதை சென்சார் போர்டு-ல கூட ஆட்சேபனை சொல்லல போல இருக்கே? அப்ப நம்மள ஒருத்தரு நீங்க மக்கு பசங்கடான்னு கேலி பண்ணுனா சிரிச்சுக்கிட்டு சும்மா இருக்கணுமா?

வந்தவாசி ஜகதீச பாகவதர் சொன்னது…

ஐயா, இன்று நீங்கள் அமெரிக்கா போய், நாளை ஆராய்ச்சி பண்ணி, நாளை மறு நாள் டாக்டரேட் பெற்று, பிறகு நோபெல் பரிசு பெற்றீர்களானால், உங்களை அப்போது எல்லோரும் தமிழர் என்றே கூறுவர், நீங்கள் மறுத்தாலும்.

விச்சு சொன்னது…

நாம் எல்லோருமே வரலாற்றை சரிவர புரிந்துகொள்ள முடியாது. வரலாறே சில சமயங்களில் காலத்தின் கட்டாயங்களினால் பொய் சொல்லுகின்றன அல்லது சொல்ல முயற்சி செய்கின்றன.

பாலா சொன்னது…

அதுக்குத்தான் இந்த மாதிரி விஷயங்களை நான் யோசிக்கிறதே இல்லை. படத்த பார்த்தமா பொழுது போச்சா அவ்வளவுதான்.

ராஜி சொன்னது…

புரியாத புதிர்களில் போதிதர்மாவும் ஒருவர்

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

இந்த படம் இன்னும் எத்தனை குழப்பங்களையும், சிக்கல்களையும் கொண்டு வரப் போகிறதோ? ஈஸ்வரா?

சென்னை பித்தன் சொன்னது…

நீங்கள் மன்றத்தில் வைத்திருப்பது ஒரு நல்ல கேள்விதான்.ஆனால் சரியான பதில் கிடைக்காமல் சிலநேரம் கிளை பிரிந்து வேறெங்கொ சென்று விடுகிறது.பார்க்கலாம்,படம் சொல்லும் செய்திக்கு வரும் எதிர்வினைகளை.

சென்னை பித்தன் சொன்னது…

லட்சாதிபதிக்கு வாழ்த்துகள்!

கோகுல் சொன்னது…

அவர் தமிழரோ இல்லையோ நல்ல வியாபாரத்தந்திரம்!

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,
உங்களின் பதிவில் உள்ள சந்தேகங்களுக்கு விடை கூறும் முகமாக செங்கோவி பாஸ் அவர்களும் ஒரு பதிவு எழுதியிருக்கார்.
எனக்கும் ஒரே குழப்பமா இருக்கு பாஸ்...

ஹிட்ஸ் அடித்ததற்கு வாழ்த்துக்கள்.
தொடர்ந்தும் சமூகத்திற்குப் பயனுள்ள விடயங்களைத் தந்து பல வாசகர்களை உங்கள் பதிவுகள் சென்று சேர வாழ்த்துக்கள்.