செவ்வாய், அக்டோபர் 04, 2011

உஷார் பண்ணப்போறீங்களா கொஞ்சம் உஷார்

பையன் ஒரு பொண்ணு கிட்ட போயி ப்ரபோஸ் பண்ணுனான்

"கண்ணே இந்த உலகத்திலயே நீ தான் அழகு, உன்னை நான் காதலிக்கிறேன்" பையன் 

"அப்பிடியா அப்ப உங்க பின்னாடி என்னை விட ஒரு அழகான பொண்ணு நிக்குதே அது யாரு?" - இது பொண்ணு

பையன் திரும்பி பார்த்தான் யாருன்னு அவ்வளவுதான் பொண்ணு பொரிய ஆரம்பிச்சுட்டா

"நீ ஒரு ஏமாத்து பேர்விழி என்னை உண்மையிலேயே காதலிக்கிறவனா இருந்தா நீ திரும்பி பார்த்து இருக்க மாட்டே இப்பவே இப்பிடின்னா இன்னும் நாள் ஆச்சுன்னா என்னென்ன பண்ணுவ நீ எனக்கு வேண்டாம்"

- இது எப்பிடி இருக்கு உஷார் மக்களே


அவர்    :     யோவ் இது கோழி காலா இல்லை காகா காலா?
சர்வர்   :     உங்களுக்கு ருசியில ஏதாவது வித்தியாசம் தெரியுதா
அவர்    :     இல்லை.. 
சர்வர்   :     அப்ப அது எதுவா இருந்தா என்ன?

வாத்தியார்    :   உங்க அப்பாக்கு என்ன வயசாகுது
பையன்          :    என் வயசுதான்
வாத்தியார்    :    என்ன சொல்லுற?
பையன்           :    நான் பொறந்ததுக்கப்பறம் தான் அவர் அப்பா ஆனாரு!!?


இன்றைய சிந்தனை

1.    நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்தீர்கள் என்பது முக்கியம் அல்ல என்ன சொல்லி தந்தீர்கள் என்பதே முக்கியம்

2.    தன் மேல் விழுந்த கற்களை வைத்தே கோட்டை கட்டுபவன் புத்திசாலி, உங்கள் மேல் விழும் கற்களை புறம் தள்ளாதீர்கள் 

3.    நீங்கள் நடக்கும் போது சுகமாய் இருக்க வேண்டும் என்றால் பூமி எங்கும் மெத்தை போல் இருக்க வேண்டும் என்று விரும்புவதை விட நீங்கள் செருப்பை அணிந்து கொள்வது நல்லது

4.    உங்களை மீறி யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாது

5.    வாய்ப்பு என்பது கடவுளின் குறிப்பு சரியாக புரிந்து கொண்டால் வெற்றி பெறலாம்


இன்றைய லொள்ளு

எல்லோரும் கண்ணை காதை எல்லாம் மூடிக்குங்க உங்க கண்ணையும் காதையும் குத்த வந்துட்டார்


17 கருத்துகள்:

IlayaDhasan சொன்னது…

இன்றைய லொள்ளு சூப்பர்.

கமெண்ட் படிக்கும் அனைத்து நண்பர்களும் , என் கதையை படியுங்கள் :
B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

suryajeeva சொன்னது…

நான் மெத்துன்னு நடக்கலேன்னாலும் பரவாயில்லை இந்த உலகத்தில் செருப்பு வாங்க வழி இல்லாம இருக்கிறவங்க மெத்துன்னு நடக்க வழி பண்ணனும், அதுக்கு என்ன பண்றது

ரஹீம் கஸாலி சொன்னது…

arumai

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ரஹீம் கஸாலி நன்றி அண்ணே மொதோ தடவை வந்து இருக்கீங்க அதுவும் அருமைன்னு கமெண்ட் போடட்டு இருக்கீங்க ரொம்ப சந்தோசம் அண்ணே

நிரூபன் சொன்னது…

இனிய இரவு வணக்கம் பாஸ்,

உஷார் காமெடி சூப்பர்..

பொண்ணுங்க பசங்களை நம்பாது இப்படியெல்லாம் டெஸ்ட்டிங் பண்ணுவாங்களா?
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

அப்புறமா இன்றைய சிந்தனை வழமை போலவே அசத்தல் பாஸ்..

வேலாயுதம் ட்ரெயிலர் சூப்பர்.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அய்யய்யோ டாகுட்டர் கண்ணை குத்த வர்றார் ஒடுங்கலேய்...

ரெவெரி சொன்னது…

லொள்ளு நல்லாயிருந்திச்சு...

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள விஷயங்கள் செம...நன்றி!

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ஹா..ஹா...

தமிழ்வாசி - Prakash சொன்னது…

கண்டிப்பா வேலாயுதம் ட்ரைலர் பாக்கணுமா?

Powder Star - Dr. ஐடியாமணி சொன்னது…

இன்றைய சிந்தனையில் 4 வதா சொல்லியிருப்பது சூப்பர்! வாழ்த்துக்கள்!

கோகுல் சொன்னது…

பையன் படு சுட்டி!

சிந்தனைகள் அனைத்தும் அருமை!

லொள்ளு! செம லொள்ளுங்கோ!

M.R சொன்னது…

கலக்கல் தொகுப்பு ,சிரிக்க வைத்தன

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

பொண்ணுங்க இப்படியெல்லாம் டெஸ்ட்டு வெச்சா ஒருபயலும் தேற மாட்டான்.....

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

எல்லாத்தையும் நல்லா போட்டுட்டு கடைசில டாகுடர போட்டு பயமுறுத்திட்டீங்களே.....

செங்கோவி சொன்னது…

அப்பா காமெடியும் டாக்குட்டர் காமெடியும் சூப்பர்.

பெயரில்லா சொன்னது…

nalla irukku,fernando
swiss fernando

இடுகைகளை இ-மெயிலில் பெற