புதன், அக்டோபர் 12, 2011

அதிர்ச்சி வைத்தியம் - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

அது K.K.V  மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்

DEEN  போர்ட்டுக்கு பின் அமர்ந்து இருந்த சுப்புவிடம் "சார் உங்களை பார்க்க நெட்வொர்க் இஞ்சீனியர் கணேஷ் வந்து இருக்கார், வரச்சொல்லவா சார்?"

"உள்ள அனுப்பு"

"சொல்லுங்க கணேஷ் எனி இம்ப்ரூவ்மெண்ட்ஸ்"

"ஆமா சார் நம்ம இ-மெயில் செர்வரை யூஸ் பண்ணி தான் அந்த மெயில் எல்லாம் போயிருக்கு"

"எப்பிடி கண்டு பிடிச்சீங்க?"

"எல்லா மெயிலையும் சர்வர்ல ஒரு காப்பி இருக்க மாதிரி ஏற்கனவே செட் பண்ணி வச்சு இருக்கேன், அப்புறம்  கீவோர்ட் ஃபில்டர் பண்ணி இந்த மெயில் எல்லாம் எடுத்தேன், இங்கே பாருங்க பிரிண்ட் அவுட்"  - டேபிள் மேல் வைத்தார் கணேஷ்

அதை பார்த்துக்கொண்டே இருக்கும் போதே மொபைல் அழைக்க மொபைல்-ஐ பார்த்தார் சுப்பு "VISHNU INFORMER" calling.





கொஞ்சம் அதிர்ச்சி ஆகி கணேஷ் இங்கே பாருங்க இது வரை மெயில் மட்டும் தான் வந்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப அந்த பையன் மொபைல் நம்பர்ல இருந்து கால் வர ஆரம்பிச்சுடுச்சி. நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்துக்கொண்டார் சுப்பு.

"ஃபோனை எடுங்க சார்"

டொய்ங்க் டொய்ங்க் "எங்கேஜ் டோன் வருது கணேஷ்"

"சரி நீங்க ரீ-டயல் பண்ணுங்க சார் பார்ப்போம்"

டயல் செய்தார் சுப்பு "நீங்கள் அழைத்த இந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை"ன்னு வருது கணேஷ்  

"சார் இது கொஞ்சம் எல்லை மீறி போற மாதிரி இருக்கு போலீஸ்க்கு போயிடலாமா?"

"போலீஸ்க்கு போனால் ஹாஸ்பிடல் பேர் கெட்டுடும் பார்க்கலாம் எனக்கு என்னவோ யாரோ இந்த பிரச்சனையை பெருசாக்கலாம்ன்னு விளையாடுற மாதிரி தெரியுது. ஆனா யாருன்னு தான் தெரியல"

ஏற்கனவே நம்ம குடுத்த தப்பான ட்ரீட்மெண்ட்-ஆல குமார் செத்து போயிட்டதை கண்டு பிடிச்சதால தான் அந்த விஷ்ணு பயலையும் போட்டு தள்ளுனோம் ஆனா இது என்ன புது பிரச்சனை? மனசுக்குள் நினைத்தவாறே

"சரி கணேஷ் வேற ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடைச்சா எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க"

"சரி சார்" குரூர புன்னகையோடு வெளியேறினான் கணேஷ்

"டீன் பயப்பட ஆரம்பிச்சுட்டாரு இனி இந்த மாதிரி தப்பு இந்த ஹாஸ்பிடல்-ல நடக்காது" - கோகுலுடன் போனில் கணேஷ்

"அவருக்கு உன் மேல ஒண்ணும் சந்தேகம் வரலியே?"

"உன் இனிஷியல்-ஐ பார்த்து நீ போலீஸ் SP ன்னு நினைச்சுட்டாரு, நீ போலி SP-ன்னு தெரியாது ஹா ஹா"

"சரி விஷ்ணு நம்பர்-ல இருந்து கால் எப்பிடி போச்சு?"

"அதுவும் நம்ம ஹாஸ்பிடல்-ல இருக்க IP ஃபோன்ல CLI (caller line Identification) நம்பரா அந்த ஃபோன் நம்பர் செட் பண்ணி டயல் பண்ண சொன்னேன். இது எப்படி இருக்கு?" 

" நீ குடுக்குற ஷாக் ட்ரீட்மெண்ட் நல்லா தான் வேலை செய்யுது"

11 கருத்துகள்:

சக்தி கல்வி மையம் சொன்னது…

பரிசு பெற வாழ்த்துக்கள்..

ராஜி சொன்னது…

Kadhai nalla irukku. Parisu pera vazhthukkal

Yaathoramani.blogspot.com சொன்னது…

ட்விஸ்ட் பிரமாதம்
வெற்றி பெற வாழ்த்துக்கள்

K சொன்னது…

வெற்றிபெற வாழ்த்துக்கள் நண்பா!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

வெற்றிபெற வாழ்த்துக்கள் ரமேஷ்...

கோகுல் சொன்னது…

ஆஹா!மூன்றாவதா?கலக்குங்க வாழ்த்துக்கள்!

மகேந்திரன் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பரே

IlayaDhasan சொன்னது…

நல்ல ட்விஸ்ட் ,வித்யாசமான அப்ரோச் , வாழ்த்துக்கள் நண்பரே!

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

அதிர்ச்சி வைத்தியம் கதை நகர்வு, சம்பவ விளிப்பு, டுவிட்ஸ் கலந்து கதை நகர்த்திய விதம் இவை அனைத்தையும் உள்ளடக்கி சிறப்புற வந்திருக்கிறது.

வாழ்த்துக்கள் பாஸ்.

நிரூபன் சொன்னது…

அப்புறமா உங்க டெம்பிளேட் ஒரு தடவை கிளிக் செஞ்சா மறு படியும், மறுபடியும் ரிலோட் ஆகுது?

என்னான்னு பாருங்க.

Unknown சொன்னது…

@நிரூபன்

தகவலுக்கு நன்றி நிரூ. இப்போ சரி பண்ணீட்டேன்