திங்கள், அக்டோபர் 31, 2011

இதுக்கு பேரு தான் மாத்தியோசி

ஒரு சிறுகதை போட்டிக்கு அறிவிப்பு வந்து இருந்துச்சு. கதையில மதம், செக்ஸ், மர்மம் அப்புறம் அதுல ஒரு புரியாத விஷயம் இல்ல ரகசியம் இருக்கணும் இது தான் கண்டிஷன். இருக்குறதுலயே சின்ன கதை வெற்றி பெறும் அப்பிடின்னு சொல்லிட்டாங்கா. 

ஒரு சர்தார்ஜி கதை எழுதி அனுப்பினாரு. கதை இதுதான்

"கடவுளே என் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகுது" 

போட்டிக்கான கடைசி தேதி முடிஞ்ச ஒரு வாரத்துல போட்டி வச்சவங்க கிட்ட இருந்து ஃபோன்.

"இருக்குறதிலேயே உங்க கதை தான் சிறுசு. நீங்க அதை விளக்க முடியுமா?"

சர்தார்ஜி விளக்க ஆரம்பிச்சாரு

"கடவுள் - மதம்

மனைவி - செக்ஸ்

குழந்தை பிறக்கப்போகுது - மர்மம் (என்ன குழந்தைன்னு)"

"சரி புரியாத விஷயம் இல்ல ரகசியம் என்ன?"

"ஓ அதுவா அந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு?"

=========================================================================

BMW 760 LI - ரூ 5000 மட்டும் விளம்பரத்தை பார்த்த உடனே குஷியான சர்தார் அந்த விளம்பரத்தில இருந்த நம்பர்க்கு ஃபோன் பண்ணினாரு

"எப்ப வந்து காரை வாங்கிகிடலாம்?" ன்னு கேட்டார்..

"சாயந்தாரம் 5 மணிக்கு வாங்க .."

சாயந்தாரம் 5 மணி சொன்ன மாதிரி சர்தார் காசை எடுத்துக்கிட்டு அவங்க சொன்ன அட்ரெஸ்க்கு போனார். எல்லாம் சுமூகமா முடிஞ்சுடுச்சு

"இந்த காரு ரொம்ப விலை ஜாஸ்தியாச்சே. 5000 ரூவாயிக்கு ஏன் விக்கிறீங்க?"

"அதுவா ஏன் புருஷன் அந்த செகேரட்டரியோட ஓடிப்போயிட்டான். அவன் தான் ஃபோன் பண்ணி இந்த காரை வித்து வர்ற காசை எல்லாம் எனக்கு அனுப்பி வைன்னு சொன்னான் அதான்"

=========================================================================

அவர்      : உங்க கிராமத்தில பிறந்த பெரிய மனுஷன் யாருங்க?
சர்தார் : எங்க ஊர்ல பிறக்கும் போது எல்லோரும் குழந்தையா தான் இருப்பாங்க

அவர்   :    காலிங் பெல் ரிப்பைர் பண்ணனும்ன்னு நாளு நாளைக்கு முன்னே உன்னை கூப்பிட்டு சொன்னேன் இன்னும் ஏன்யா வரலை?
சர்தார : நாளு நாளா உங்க வீட்டுக்கு வந்து பெல் அடிச்சுக்கிட்டே இருக்கேன் யாரும் வந்து கதவை தொறக்கலியே!!?




இன்றைய லொள்ளு


வியாழன், அக்டோபர் 27, 2011

போதிதர்மர் தமிழரா?

இது ஒரு சந்தேகப்பதிவு. அதாவது எனக்கு வந்த சந்தேகம் பத்தின பதிவு. 

இந்த தீபாவளிக்கு வெளியான 7 ஆம் அறிவு திரைப்படத்தில் முதல் 25 நிமிடங்கள் போதிதர்மர் யாருன்னு அழகா வரலாறை சொல்லுகிறார் டைரக்டர்.  நல்லா இருக்கு,  சூர்யா நல்லா பண்ணி இருக்கார். 

25 வது நிமிடம் மக்கள் கிட்ட கருத்து கேக்குற மாதிரி ஒரு சீன் வச்சு இருக்கார், அதாவது தமிழ்நாட்டுல (எந்தெந்த ஊருன்னு தெரியல) இருக்க சில மக்கள் கிட்ட போதிதர்மர் யாருன்னு கேக்குறாங்க. 100% பதில் யாருக்கும் தெரியலே. அவ்வளவு ஏன் எனக்கு கூட தங்கமலர்-ல (தினத்தந்தி இலவச இணைப்பு வெள்ளிக்கிழமை வரும்) படக்கதைகள் மூலமா தெரியும் ஆனா அவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்ன்னு தெரியாது.

பராந்தக சோழன் யாருன்னு கேட்டா கூட நிறைய பேருக்கு தெரியாது, வீராணம் ஏரியை வெட்டுனவர் யாருன்னு கேட்டா தெரியாது, வைகை டாம் கட்டுனவர் யாருன்னு கேட்டாலும் தெரியாது.   இன்னும் கொஞ்ச நாள்ல பெரியாரும் அண்ணாவும் கூட மறந்துடுவோம்.  ஏன்னா நம்ம வரலாற்று அறிவு அப்பிடி. சுதந்திர போராட்டத்தை மட்டுமே வரலாறுன்னு படிக்கிற புள்ளைங்க கிட்ட வேற என்ன எதிர்பார்க்க முடியும்? 

சரி விஷயதுக்கு வர்றேன்

இந்த படம் பார்த்ததுக்கு அப்பறம் கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு, அதாவது போதிதர்மர் ஒரு தமிழர் அப்பிடின்னு டைரக்டர் ரொம்ப உறுதியா சொல்லுறாரு. எதை வச்சு சொல்லுறாரோ தெரியலை. சரி நம்ம சந்தேகத்த தீர்த்துக்கிடுவோமே அப்பிடின்னு ஓடுறா கைப்புள்ள கூகுளுக்கும் விக்கிபீடியாக்கும் தேடுனா ஹுகும் விஷயம் கிடைக்கலை. பல்லவர்களின் பூர்வீகம் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் இல்லை.

எல்லாம் யூகத்தின் அடிப்படையிலேயே எழுதப்பட்டு இருக்கு. முற்கால சோழர்களுக்கும் பிற்கால சோழர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தை ஆண்டவர்கள் பல்லவர்கள். பல்லவர்கள் தமிழர்கள் அல்ல அவர்கள் வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பதும் பிராமணர்கள் என்பதும் நான் தேடிய வரையில் கிடைத்த செய்தி.  இன்னும் சில வலைதளங்களில்அவர்கள் பாரசீகத்தில் இருந்து இந்தியாவிற்குள் வந்தனர்னும் பார்க்க முடியுது. அவர்கள்  தமிழர்கள் என்று எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

மேலதிக குறிப்புகளுக்கு

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D

http://www.kamat.com/kalranga/deccan/pallavas.htm

http://www.civilserviceindia.com/subject/History/prelims/pallavas.html

http://www.iranian.com/History/2003/May/Pallava/index.html

இன்னும் கூகிளில் தேடினால் நிறைய கிடைக்கிறது ஆனா குழப்பம் தான் மிச்சம். இதை படிக்கும் நண்பர்கள் யாராவது போதிதர்மர் தமிழர் அப்பிடிங்கிறதுக்கு ஏதாவது ஆதாரம் கிடைச்சா கொஞ்சம்  கமெண்ட்-ல போடுங்களேன்..

பிற்சேர்க்கை :
இந்த பதிவை நீங்க படிச்சுக்கிட்டு இருக்கும் போது இந்த வலைப்பூவை பார்வை இட்டவர்கள் எண்ணிக்கை (அதாங்க ஹிட்ஸ்)  ஒரு லட்சம் கடந்து இருக்கும். இதுவரை தொடர்ந்து தங்கள் ஆதரவை அளித்துக்கொண்டு நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள்.

செவ்வாய், அக்டோபர் 25, 2011

இப்ப சொல்லுங்க காப்பி பேஸ்ட் தப்பா?

இன்னைக்கி காப்பி பேஸ்ட் பண்ணா நாளைக்கு விருது

கொஞ்சம் கீழே இருக்க வீடியோ எல்லாம் பாருங்கோ நம்ம ஆஸ்கார் நாயகன் எங்கே இருந்து எல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணி இருக்காரு.  இன்னும் நிறையா இருக்கு கொஞ்சம் உங்க பார்வைக்கு.



















கடைசியா


இப்ப நீங்க முடிவு பண்ணிக்குங்க.

நீதி  : ஒருத்தர்கிட்ட இருந்து சுட்டா அது திருட்டு நிறையா பேரு கிட்ட இருந்து சுட்டா அது ஆராய்ச்சி அதுக்கு விருதும் கிடைக்கும்

திங்கள், அக்டோபர் 24, 2011

இப்பிடி ப்ரபோஸ் பண்ணனும் தெரியுதா?

 அது ஒரு கல்யாண வரவேற்பு, அபார்ட்மெண்ட்டில் இருந்த எல்லோரும் அழைக்கப்பட்டு இருந்தனர் அதில் ஒரு மனைவியை இழந்த தாத்தாவும், கணவரை இழந்த பாட்டியும் சந்தித்து கொண்டனர். இருவரும் தங்கள் நிலையை பகிர்ந்து கொண்டனர்.  விழா முடிந்து வெளியே வரும் போது தாத்தா கேட்டார்

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?"

கொஞ்ச நேரம் யோசித்த பாட்டி "சரி பண்ணிக்கிறேன்"

மறுநாள் காலை

"அவ என்ன சொன்னா சரின்னு சொன்னாளா இல்ல மாட்டேன்னு சொன்னாளா மறந்துட்டேனே" குழப்பத்தோடு அங்கும் இங்கும் நடந்து கொண்டே இருந்தார்.   "என்ன ஒரு ஞாபக மறதி?" தன்னைத்தானே நொந்துகொண்டே சிறிது நேரம் யோசித்தவர் பாட்டியையே கேட்டுவிடுவது என்று அவர் ஃப்ளாட் நோக்கி புறப்பட்டார்

"வாங்க வாங்க" - பாட்டி

"நேத்து நான் உங்க கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறீங்களா கேட்டப்ப சரின்னு சொன்னீங்களா இல்ல மாட்டேன்னு சொன்னீங்களா?"

"சரின்னு தானே சொன்னேன்?"

"அப்பாடி ரொம்ப நேரம் குழப்பமாவே இருந்துச்சி இப்ப சந்தோஷமா இருக்கு"

"என்னை தேடி வந்ததுக்கு தாங்க்ஸ்ங்க"

"ஏங்க?"

"இல்ல நேத்து என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கிறீங்களா கேட்டது யாருன்னு மறந்துட்டேன்"

இன்றைய சிந்தனை


1.    இரண்டு முயல்களை விரட்டிச்சென்றால் இரண்டையும் இழக்க வேண்டி இருக்கும்

2.    மகிழ்ச்சியாய் இருப்பது கடினம் அல்ல ஏனென்றால் மகிழ்ச்சியை உருவாக்குபவரே நீங்கள் தான்

3.    நாம் வாழும் வாழ்க்கை மட்டுமே எந்த கதவை திறக்க அல்லது மூட வேண்டும் என்று முடிவு செய்யும்

4.    நாம் தள்ளிப்போடும் போது வாழ்க்கை வேகமாய் நகர்கிறது

5.    உங்களால் எது எல்லாம் செய்ய முடிகிறதோ அதுவே நீங்கள் ஆகிறீர்கள்

இன்றைய லொள்ளு







வெள்ளி, அக்டோபர் 21, 2011

ஐயோ ஐயோ முடியலைப்பா...

இன்னைக்கி தேர்தல் முடிவுகளை பார்த்துக்கொண்டு இருக்கிறேன், எதிர் பார்ததது போலவே ஆளும்கட்சி அறுவடை செஞ்சுக்கிட்டு இருக்கு பார்க்கலாம்.. 

இந்த பதிவை நீங்க படிக்கிற நேரம் இல்லை பார்த்து சிரிச்சுக்கிட்டு இருக்குற நேரம் எல்லா முடிவும் அறிவிச்சு முடிச்சு இருப்பாங்க. அதனால இன்னைக்கு சும்மா சிரிப்பு பதிவு படம் பாருங்க கருத்து சொல்லுங்க. 









கடைசியா இப்பிடி சிக்னல் விழுந்தா என்ன செய்யுறது?





டிஸ்கி  :

போர் அடிக்கிற மாதிரி இருந்தா கமெண்ட் போடாதீங்க ஆனா ஓட்டு அவசியம் போடுங்க. 

கடுப்பா இருந்தா ஓட்டும் வேணாம் நான் தலைவர் மாதிரி எதையாவது சொல்லி சமாளிச்சுக்கிறேன். 

வியாழன், அக்டோபர் 20, 2011

இங்கே காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறது தப்பா?

பொண்டாட்டிங்க அடிக்கடி மாடிக்கிட்டே இருக்குற என்னைப்போல அப்பாவிகளுக்கு இது சமர்ப்பணம்

உங்க வீட்டுல எப்ப பார்த்தாலும் சண்டையா இருக்கா?  எங்க வீட்டுல அப்படித்தான் ரெண்டு பேரும் சேர்ந்து முழிச்சுக்கிட்டு இருக்க 2 மணி நேரத்துல முக்காமணி நேரம் சண்டை போடவும் மிச்சம் இருக்க நேரம் சமாதானப்படுத்தவும் சரியா போயிடுதே என்ன பண்றதுன்னு யோசிச்சேன், எங்கே சண்டை ஆரம்பிக்குதுன்னு ஒரு பட்டியல் போட்டேன். அவங்க அதிகமா கேக்குறது எல்லாம்

1.    என்ன யோசனையில இருக்கீங்க ?

2.    என் மேல நெஜமாவே பாசம் இருக்கா?

3.    நான் குண்டாயிட்டேனா?

4.    அந்த பொண்ணு என்ன விட அழகா இருக்காளா?

5.    நான் செத்துப்போயிட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா? 





சரி இப்ப என்ன பதில் சொன்ன எஸ்கேப் ஆகலாம்ன்னு யோசிச்சதுல கிடைச்சது தான் இது

1.    என்ன யோசனையில இருக்கீங்க ?

என்ன தான் நாம நூறு யோசனையில இருந்தாலும் "உன்னை பத்தி தான், இந்த வாரம் எங்கே வெளியே கூட்டிக்கிட்டு போகலாம்னு யோசிச்சுக்கிட்டு இருக்கேன்". அதே மாதிரி அவங்களை கூட்டிக்கிட்டு பார்க்குக்கோ இல்ல காய் வாங்கிட்டு வராவோ செய்யுங்க அப்பறம் இந்த கேள்வி உங்களை கேக்க மாட்டாங்க.  (நாம என்ன பொய் சொல்லிட்டு தண்ணி அடிக்க போகலாம்னு அவங்க இல்லாத நேரம் யோசிக்கலாம்)

2.    என் மேல நெஜமாவே பாசம் இருக்கா?

பிடிக்கவே இல்லைன்னாலும் ஆமான்னு அடிச்சு (அவங்களை இல்லை) சொல்லிடுங்க, அப்பிடித்தான் நினைக்கிறேன் இல்ல ஆமான்னு சொன்னதான் ஒத்துக்குவியா இப்பிடி எல்லாம் பேசிடாதீங்க, அதே மாதிரி சொல்லுறப்ப கொஞ்சம் சிரிச்சிக்கிட்டே சொல்லுங்க சலிப்புல பேசுற மாதிரி இருந்தாலும் பாணால்


3.    நான் குண்டாயிட்டேனா?

அப்பிடி எல்லாம் இல்லம்மா அப்பிடின்னு சொல்லணும் அப்பிடி இல்லாம கொஞ்சம் குண்டு ஆயிட்டே இல்ல எத வச்சு கேக்குறே இப்பிடி எல்லாம் கேட்டா உங்க இன்சூரன்ஸ் பணம் பட்டுவாடா பண்ணுறத்துக்கு நீங்களே தேதி குறிச்சிட்டீங்கன்னு அர்த்தம்


4.    அந்த பொண்ணு என்ன விட அழகா இருக்காளா?

இந்த கேள்வி ரோட்ல போகும் போது வரும் இல்ல யாராவது புதுசா வேலைக்கு சேர்ந்து இருக்காங்கன்னு வீட்டுல ஒளரும் போது வரும் தயவு செஞ்சு இல்லவே இல்லைன்னு தலையில அடிச்சு சத்தியம் பண்ணிடுங்க, அத விட்டுட்டு உன்னை விட அழகா இல்லைன்னு சொல்லிடாதீங்க விளைவு விபரீதமா இருக்கும் !!

5.    நான் செத்துப்போயிட்டா இன்னொரு கல்யாணம் பண்ணுவீங்களா?

பதில் சொல்ல முடியாத கேள்வி என்ன பதில் சொன்னாலும் ஒத்துக்க மாட்டாங்க ஹூம் அதனால வேற ஏதாவது கேள்வி கேட்டு அவங்கள திசை திருப்புறது மட்டும் தான் உங்களை காப்பாத்தும். உண்மையிலேயே உங்க மனசுல ஒரு தடவை பண்ணுண தப்பை இன்னொரு வாட்டி பண்ண மாட்டேன்ன்னு நினைக்குறது எனக்கு தெரியுது ஆனாலும் அதையும் சொல்லிதொலைச்சுடாதீங்க..  


எது எதுக்கோ நாம நம்மள / நம்ம கொள்கைகளை அட்ஜஸ்ட் பண்ணி போறோம் இல்ல காம்ப்ரமைஸ் பண்ணிக்கிறோம்.  பொண்டாட்டி நம்ம கூடவே இருக்கிற ஜீவன் நாளைக்கு நம்மளால எழுந்து நடக்க முடியாத போது நம்ம பீயை அள்ளி போட்டு சுத்தம் பண்ணப்போறதும் அவங்க தான் அவங்களுக்காகவும் கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணுறதுல தப்பு ஒண்ணும் இல்லையே??







எப்பிடி அடிச்சுக்கிறாங்க பாருங்க



புதன், அக்டோபர் 19, 2011

இந்த படம் எல்லாம் எப்பிடி இருக்கு?


இதய பலகீனம் உள்ளவர்கள் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
 

















கொசுறு : இன்னக்கி பதிவு எழுத நேரம் இல்ல சும்மா அதான் இப்பிடி

செவ்வாய், அக்டோபர் 18, 2011

சந்தோஷமா இருக்கணுமா?

உண்மையான சந்தோசம் விலை மதிக்க முடியாதது,  குறுகிய மனம் இருந்தால் அதை நம்மால் அனுபவிக்க முடியாது. பிறரின் பொய் நன்னடத்தையற்ற தன்மை நம் சந்தோஷத்தை பரிதாபம் ஆக்கிவிடக்கூடியது. நீண்ட நாள் சந்தோஷமாய் வாழ வேண்டும் என்ற நினைப்பு பிறரின் செய்கைகளால் சலித்துப்போகும் ஆபத்துக்கள் உண்டு. பொய்கள் சுயநலங்கள் நிரம்பிய ஒரு சமூகத்தில் வாழ்வது அவ்வளவு சுலபம் இல்லை.  ஆனாலும் வாழவேண்டிய கட்டாயம் எல்லோருக்கும் உண்டு.

நாம சிலருக்கு முக்கியமானவங்களா இருக்கோம், சிலர் நமக்கு முக்கியமானவங்களா இருக்காங்க. நமக்கு  தெரிஞ்சவங்களோட சந்தோஷமும் துக்கமும் நம்மள அதிகம் பாதிக்கும்.  அடுத்தவங்க சந்தோசத்துக்கு நாம உத்திரவாதம் தர முடியாட்டியும், அவங்களோட துக்கத்துக்கு நாம காரணம் இல்லாம இருந்துக்கலாம் இல்லையா. நம்மள சுத்தி இருக்குறவங்க சந்தோஷமா இருந்தாலே நாமளும் சந்தோஷமா இருக்கலாம்.    

"கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ",  "சாரி தெரியாம நடந்துடுச்சு" , "இதெல்லாம் இங்கே சகஜம்"   இங்கே சொன்னது மாதிரி இன்னும் நிறைய இருக்கு. எல்லாம் தப்பு நடந்த பின்னாடி அதை சமாளிக்க சொல்லுற வாசகங்கள்.  எந்த ஒரு நிகழ்வுக்கும் ஒரு தாக்கம் இருக்கலாம்.

ஒரு மனுசனோட தாக்கத்திற்கு உட்படாதவங்க யாரும் இருக்க முடியாது அது நல்ல விஷயமாகவும் இருக்கலாம், இல்லை கெட்ட விஷயமாகவும் இருக்கலாம். ஆனா எல்லோரும் நான் நல்லவன்ன்னு காட்டிக்கிறதுக்கு நிறைய மெனேக்கெடுறாங்க ஆனா அது ரொம்ப நாள்  நிலைக்காது நிஜமாவே நல்லவங்களா இல்லாட்டி. எப்பயுமே ஒரு காரியம் நடந்தா அதுல இருக்க உண்மையை அலசி அதை மட்டும் எடுத்துக்கணும், ஏன்னா பொய்யில் மூழ்கி வாழ முயற்சி பண்ணுவதை விட வேறு பெரிய வதை வாழ்க்கையில் கிடையாது.

வாழ்க்கையில் நம்ம சந்தோஷம் நாம் எவ்வளவு உண்மையா இருக்கோங்கிறதை பொறுத்து தான் இருக்கும். பொய் தனிப்பட்ட உறவுகளிலும் சமூக உறவுகளிலும் ஒரு பெரிய புயலை வீசவே செய்கிறது. உலகில் நடந்த பெரிய யுத்தங்கள் இது போன்ற பொய்களால் தூண்டப்படவை தான்.  இதை கண்டு கொள்ளும் அறிவே நம்மை துன்பங்களில் இருந்து மீட்க்கும்

எல்லோரும் என்ன யோக்கியங்களான்னு கேக்குறவன் எப்பயுமே ஒரு யோக்கியனா இருக்க முடியாது. விளம்பரம் இல்லாமல் நாம் செய்யும் எந்த ஒரு நல்ல செயலும் கவனிக்கப்படுவதில்லைங்குறதால நாம நல்லது செய்யாம இருக்க வேணாமே? அட்லீஸ்ட் நமக்கு தெரிஞ்சவங்களுக்காவது முடிஞ்ச நல்லது செய்யலாமே?

எந்த ஒரு பொருள் மேலயும் பிறருக்கு இருக்கும் உரிமையை நாம மதிக்காத போது அந்த பொருள் மேல அவருக்கு இருக்குற உரிமை ஆபத்துக்குள்ளாகுதே. உறவுகள்ல பரஸ்பர நம்பிக்கை ரொம்ப அவசியம் அந்த நம்பிக்கை கெட்டுப்போகாதவரை அந்த உறவில் சந்தோஷம் இருக்கும், எப்ப குடுத்த வார்த்தையை காப்பாத்த முடியாம போகுதோ (என்ன காரணம் வேணுமின்னா இருக்கலாம்) அந்த உறவில் இருக்கும் சந்தோஷம் செத்துப்போகும், அது எப்படிப்பட்ட உறவாய் இருந்தாலும்.

உங்களால செய்ய முடியிற விஷயங்களை மட்டும் செஞ்சு தாரேன்னு ஒத்துக்கோங்க மத்த எதையும் ஒத்துக்காதீங்க, முடியாதுன்னு மறுத்துடுங்க. சொன்ன வார்த்தையை காப்பத்துறவங்க தான் கோபுரம் மதிக்கப்படுறாங்க மத்தவங்க எல்லாம் குப்பை மாதிரி. ஒரு தடவை வார்த்தை தவறிட்டா அந்த வாய்ப்பை இன்னொரு முறை நமக்கு கிடைக்கும்ன்னு சொல்லறதுக்கு இல்லை.

எல்லா கடமையும் சரியா செஞ்சா சந்தோஷம் உங்ககிட்டயே இருக்கும், நாம பொறக்கும் போதே நம்ம கிட்ட இருக்கிறது பெத்தவங்களுக்கு செய்ய வேண்டிய கடமை.  அதுக்கப்பறம் மற்றவர்கள், நண்பர்கள், சமுதாயம் உலகம் எல்லாமே நம்ம கடமை ஜாஸ்தி ஆயிக்கிட்டே தான் போகுது.

குழந்தையின் அற்ப முயற்சியும், புதுசா வேலைக்கு சேர்ந்தவங்க ஆலோசனையும் சட்டென புறக்கணிக்கப்படுவதும் கண்டு கொள்ளப்படாமல் போவதும் இயல்பே அதற்கும் காரணங்கள் இருக்கலாம் சரியான திட்டமிடப்படாமல் இருந்து இருக்கலாம்,  அதுவே வேறுபட்ட நியாயங்களாக உருவெடுக்கும் "என்னை கேட்டு தான் பெத்தீங்களா?"  போன்ற வெடிக்கும் நியாயங்களாக அவை மாறிவிடும அபாயம் உண்டு.  சின்ன விஷயமா இருந்தாலும் ஒரு ஊக்கம் குடுத்தா அவங்க தவறுகளை மென்மையா சுட்டிக்காட்டுனா அந்த உறவில் சந்தோஷம் இருக்கும்.

அதே மாதிரி தான்  உழைப்பும், எல்லா நேரத்திலயும் இனிமையாய் இருப்பது இல்லை ஆனாலும் சலிப்புடன் சோம்பேறிகளாய் வாழ்வதை விட உழைக்கிறது சந்தோஷம். சுறுசுறுப்பாக இல்லாதவர்கள் அதிக வேலையை சுற்றி இருப்பவர்கள் மேல் திணித்து விடுகிறார்கள். சோம்பேறிகளுடன் வேலை செய்வது கொஞ்சம் கஷ்டம் அவங்க நம்மளையும் சோர்வடைய வச்சுடுவாங்க, முடிஞ்சா அந்த மாதிரி ஆளுங்களோட வேலை செய்யாம இருக்குறது உத்தமம்.

நம்ம பிரச்சனையை நாம் உற்று பார்க்க தவறும் போது, நமக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்கள் பயனற்றே போகும். எனவே பிரச்சனைகள் என்று வரும் போது கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, உண்மையான நிலையினை பிரித்து பார்க்க ஆரம்பித்தால் எந்த பிரச்சனையும் எளிதில் தீர்க்க முடியும்.

எந்த ஒரு விஷயத்தையும் யார் சொன்னாலும் அதில் இருக்கும் உண்மை பொய்களை கண்டுபிடிக்க தெரிஞ்சுக்கணும், நம்ம கிட்ட சொல்லுறவாங்க சரியான்னு அவங்களுக்கே  தெரியாம நம்மகிட்ட சொல்லலாம். சிலர் தங்களோட சுயநலத்துக்கு பொய்யான தகவல்களை பரப்பிடுறாங்க.  அதோட விளைவுகளை பத்தி அவங்க கவலைப்படுறது இல்லை. நம்ம காதுக்கு வர்ற தகவல்களை எல்லாம் அப்பிடியே எடுத்துக்க ஆரம்பிச்சோம்னா நம்மள அந்த ஆண்டவனாலும் காப்பாத்த முடியாது.

வாக்கையில முன்னேறி இருக்கிறவங்களை பாருங்க எப்பவும் அவங்க படிக்கிறதை நிப்பாட்ட மாட்டாங்க, இதுக்கு மேல படிக்கிறதுக்கு ஒண்ணும் இல்லைன்னு நினைக்கிறவங்க அதுக்கு மேல முன்னேறாம போயிடுவாங்க. படிக்கிறத படிக்கிறதோட நிப்பாட்டமா அதை தொடர்ந்து பயன் படுத்தவும் செய்யணும் அப்ப தான் படிப்பும் பலன் தரும்.

கடைசியா

மற்றவர்கள் உங்களுக்கு என்ன செய்யக்கூடாதுன்னு நீங்க நினைக்கிறீங்களோ அதை நீங்கள் மற்றவர்களுக்கு செய்யாதீர்கள். பிறர் எப்படி உங்களை நடத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அவ்விதமே நீங்கள் பிறரை நடத்துங்கள்.  தகுதியான செயல்கள் செய்வது மட்டுமே நமக்கு மகிழ்ச்சியை தரும், எந்த செயல் நமக்கு மகிழ்ச்சியை தரும் என்பதை நாம் தான் முடிவு செய்ய வேண்டும் 

இன்றைய லொள்ளு


வெள்ளி, அக்டோபர் 14, 2011

இப்பிடி எல்லாமா இருக்கு?

1.    ஒரு மணி நேரம் சுவத்துல தலையை முட்டுனா  நம் உடல் இழப்பது 900 கலோரி (மெதுவா முட்டணும் மண்டை உடைஞ்சா சங்கம் பொறுப்பில்ல)

2.    உடம்பில் இருக்கும் கடினமான தசை நாக்கு

3.    ஆங்கிலத்தில் சின்ன வாக்கியம் "I AM"

4.    1865 பிப்ரவரி மாதம் பௌர்ணமி இல்லாத மாதம்

5.    1 கலோன் டீசலுக்கு 6 இன்ச் தான் போகுமாம் "The cruise liner  Queen Elizabeth II"

6.    நீங்க 8 வருஷம் 7 மாசம் 6 நாள் விடாம கத்துனா கிடக்கிற சக்தியை வச்சு ஒரு கப் காஃபி மட்டும் சூடாக்கலாமாம்.

7.    பூனை நூறு விதமாய் சத்தம் எழுப்பும் திறன் வாய்ந்ததாம்

8.    பிறந்ததில் இருந்து இறக்கும் வரை ஒரே அளவில் இருக்கும் உறுப்பு கருவிழி

9.    எலக்ட்ரிக் சேரை கண்டு பிடிச்சவர் ஒரு பல்மருத்துவராம்

10.    பூனையின் சிறுநீர் இருட்டில் ஒளிரும் தன்மை உடையதாம்



இன்றைய சிந்தனை


1.    வாழ்க்கையை வார்த்தைகளால் அனுபவிக்க முடியாது எனவே வாழ்ந்தே அனுபவியுங்கள்

2.    நீங்களே மற்றவர்களுக்கு கற்றுத்தருகிறீர்கள் உங்களை அவர்கள் எப்படி மதிக்க வேண்டும் என்று

3.    நான் பேசத்தெரியாமல் இருந்த போது கேக்காமலே எல்லாம் கிடைத்தது ஆனால் பேச ஆரம்பித்த பின் கேட்டதில் கொஞ்சம் கூட கிடைக்கவில்லை #குழந்தை பருவம் இனிது

4.    வாழ்க்கையில் நீளமான செயல் நாம் வாழ்ந்து கொண்டே இருப்பது

5.    ஒரு வேளை உணவு இல்லை எனில் அந்த வாழ்வு வாழ்வதற்கே தகுதி இல்லாதது

இன்றைய லொள்ளு

ஆசிரியர்கள் மன்னிக்க







வியாழன், அக்டோபர் 13, 2011

ஆம்பளைங்களுக்கு குழந்தை பிறந்தா ? (நானா யோசிச்சேன்)

என்னடா வில்லங்கமா ஏதோ மேட்டர் சொல்லப்போறானேன்னு பயமா இருக்கா?, சும்மா. சரி விசயத்துக்கு வருவோம். ஆம்பளைங்களும் பிள்ளை பெத்துகிற மாதிரி இருந்திருந்தா என்னன்ன மாற்றங்கள் உலகத்தில இருந்து இருக்கும்?

1.    சம்பளத்தோட மகப்பேறு விடுமுறை ஒரு ரெண்டு வருஷமாவது இருந்து இருக்கும்

2.    வயித்தில விழுற சுருக்கம் காணாமலே போற மாதிரி ட்ரீட்மெண்ட் கண்டுபிடிச்சு இருப்பாங்க

3.    பிரசவத்துக்கு அப்பறம் விழுகுற எக்ஸ்ட்ரா சதையை குறைக்க நல்ல மருந்து கண்டுபிடிச்சு இருப்பாங்க

4.    நார்மல் டெலிவெரி இல்லாமலே பண்ணியிருப்பாங்க எல்லாம் சிசேரியன்

5.    குடும்ப கட்டுபாடு தீவிரமா செயல்படுத்தி இருப்பாங்கே

6.    ரெட்டைப்பிள்ளை பெத்துக்கணும்ன்னு யாரும் ஆசைப்பட மாட்டாங்க

7.    வாந்தி தான் கொடூரமான வியாதின்னு அறிவிச்சு இருப்பாங்க

உங்களுக்கும் இன்னும் ஏதாவது தோணுனா கமெண்ட்-ல போடுங்க


இன்றைய சிந்தனை


1.    பின்னால் இழுக்கப்பட்ட அம்பு தான் வேகமாய் முன்னோக்கி செல்லும், நீங்கள் பின்னால் இழுப்படுகிறீர்கள் என்றால் வேகமாய் முன்னே போகப்போகிறீர்கள் என்று பொருள்

2.    ஜெயித்த குதிரையும் அடி வாங்கி இருக்கும் தோற்ற குதிரையும் அடி வாங்கி இருக்கும், அடி வாங்கிய போதெல்லாம் வேகமாக முன்னே கால் எடுத்து வைத்த குதிரை ஜெயித்து இருக்கும், அடியை வாங்கும் போது சோர்ந்த குதிரை தோற்று இருக்கும்.    வாழ்க்கையும் அப்படித்தான்

3.    உங்களை பிறர் தாழ்த்தி பேசுவது மோசம் அல்ல நீங்கள் உங்களை தாழ்வாக நினைத்துக்கொண்டு இருப்பதே மோசம்

4.    உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் குறைவாகவே இருக்கிறது அதில் பிறர் வாழ்க்கையை வாழாதீர்

5.    வாழ்க்கை ஆசீர்வாதங்களால் நிரம்பியது சில நேரம் நாம் குருடர்களாய் அதை காணாமல் விட்டு விடுகிறோம்.

6.    வாழ்க்கை எப்போதும் இரண்டு வாய்ப்புகளை கொடுக்கிறது எடு அல்லது விடு 

இன்றைய லொள்ளு


எங்கேயெல்லாம் கடை போட்டு இருக்காங்கே!!



புதன், அக்டோபர் 12, 2011

அதிர்ச்சி வைத்தியம் - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

அது K.K.V  மல்டி ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடல்

DEEN  போர்ட்டுக்கு பின் அமர்ந்து இருந்த சுப்புவிடம் "சார் உங்களை பார்க்க நெட்வொர்க் இஞ்சீனியர் கணேஷ் வந்து இருக்கார், வரச்சொல்லவா சார்?"

"உள்ள அனுப்பு"

"சொல்லுங்க கணேஷ் எனி இம்ப்ரூவ்மெண்ட்ஸ்"

"ஆமா சார் நம்ம இ-மெயில் செர்வரை யூஸ் பண்ணி தான் அந்த மெயில் எல்லாம் போயிருக்கு"

"எப்பிடி கண்டு பிடிச்சீங்க?"

"எல்லா மெயிலையும் சர்வர்ல ஒரு காப்பி இருக்க மாதிரி ஏற்கனவே செட் பண்ணி வச்சு இருக்கேன், அப்புறம்  கீவோர்ட் ஃபில்டர் பண்ணி இந்த மெயில் எல்லாம் எடுத்தேன், இங்கே பாருங்க பிரிண்ட் அவுட்"  - டேபிள் மேல் வைத்தார் கணேஷ்

அதை பார்த்துக்கொண்டே இருக்கும் போதே மொபைல் அழைக்க மொபைல்-ஐ பார்த்தார் சுப்பு "VISHNU INFORMER" calling.





கொஞ்சம் அதிர்ச்சி ஆகி கணேஷ் இங்கே பாருங்க இது வரை மெயில் மட்டும் தான் வந்துக்கிட்டு இருந்துச்சு. இப்ப அந்த பையன் மொபைல் நம்பர்ல இருந்து கால் வர ஆரம்பிச்சுடுச்சி. நெற்றியில் இருந்த வியர்வையை துடைத்துக்கொண்டார் சுப்பு.

"ஃபோனை எடுங்க சார்"

டொய்ங்க் டொய்ங்க் "எங்கேஜ் டோன் வருது கணேஷ்"

"சரி நீங்க ரீ-டயல் பண்ணுங்க சார் பார்ப்போம்"

டயல் செய்தார் சுப்பு "நீங்கள் அழைத்த இந்த எண் இப்போது உபயோகத்தில் இல்லை"ன்னு வருது கணேஷ்  

"சார் இது கொஞ்சம் எல்லை மீறி போற மாதிரி இருக்கு போலீஸ்க்கு போயிடலாமா?"

"போலீஸ்க்கு போனால் ஹாஸ்பிடல் பேர் கெட்டுடும் பார்க்கலாம் எனக்கு என்னவோ யாரோ இந்த பிரச்சனையை பெருசாக்கலாம்ன்னு விளையாடுற மாதிரி தெரியுது. ஆனா யாருன்னு தான் தெரியல"

ஏற்கனவே நம்ம குடுத்த தப்பான ட்ரீட்மெண்ட்-ஆல குமார் செத்து போயிட்டதை கண்டு பிடிச்சதால தான் அந்த விஷ்ணு பயலையும் போட்டு தள்ளுனோம் ஆனா இது என்ன புது பிரச்சனை? மனசுக்குள் நினைத்தவாறே

"சரி கணேஷ் வேற ஏதாவது இன்ஃபர்மேஷன் கெடைச்சா எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க"

"சரி சார்" குரூர புன்னகையோடு வெளியேறினான் கணேஷ்

"டீன் பயப்பட ஆரம்பிச்சுட்டாரு இனி இந்த மாதிரி தப்பு இந்த ஹாஸ்பிடல்-ல நடக்காது" - கோகுலுடன் போனில் கணேஷ்

"அவருக்கு உன் மேல ஒண்ணும் சந்தேகம் வரலியே?"

"உன் இனிஷியல்-ஐ பார்த்து நீ போலீஸ் SP ன்னு நினைச்சுட்டாரு, நீ போலி SP-ன்னு தெரியாது ஹா ஹா"

"சரி விஷ்ணு நம்பர்-ல இருந்து கால் எப்பிடி போச்சு?"

"அதுவும் நம்ம ஹாஸ்பிடல்-ல இருக்க IP ஃபோன்ல CLI (caller line Identification) நம்பரா அந்த ஃபோன் நம்பர் செட் பண்ணி டயல் பண்ண சொன்னேன். இது எப்படி இருக்கு?" 

" நீ குடுக்குற ஷாக் ட்ரீட்மெண்ட் நல்லா தான் வேலை செய்யுது"

செவ்வாய், அக்டோபர் 11, 2011

சொல்ல மறந்த கதை - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

குறிப்பு : இது சவால் சிறுகதைப் போட்டி –2011 க்கான என்னுடைய இரண்டாவது சிறுகதை


"சந்துரு என்ன பார்த்துக்கிட்டு இருக்கீங்க? யார் ஃபோட்டோ அது? "




குரல் கேட்டு திரும்பிய சந்துரு பின்னால் பிரின்சிபால் நிற்பதை கண்டு கொஞ்சம் அதிர்ச்சி ஆகி எழுந்து நின்றான்

"குட் மார்னிங் சார்"

"வேலை நேரத்தில இப்பிடி எல்லாம் பெர்சனல் வொர்க் பண்ணக்கூடாதுன்னு தெரியாதா உங்களுக்கு? இனி இப்பிடி நடந்துக்கிட்டா உங்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டி வரும், இது உங்களுக்கு கடைசி வார்னிங்க்"

"இல்லை சார் ஒரு சிறுகதை போட்டிக்கு அறிவிப்பு வந்து இருக்கு அதுக்கான க்ளூ தான் இந்த ஃபோட்டோ. நம்ம காலேஜ் பசங்களும் கலந்து கிட்டா நல்லா இருக்கும்ன்னு தான் டீடெயில்ஸ் பார்த்துக்கிட்டு இருந்தேன். நீங்க பர்மிஷன் குடுத்தா நோட்டீஸ் போர்டு-ல போடுட்டுடலாம்.  தப்புன்னா மன்னிச்சூடுங்க சார்"

"ம்.. வெரி குட் ஐடியா அதுவும் சரி தான் பசங்ககளுக்கு இப்பிடி எக்ஸ்ட்ரா கர்ரிகுலர் ஆக்டிவிடிஸ் இருக்கணும். நோட்டீஸ் போர்டு-ல ஒட்டீட்டு சர்க்குலர் அனுப்பிடுங்க" 

"தாங்யு சார்"   சந்தோசமாய் அடுத்த வேலையை ஆரம்பித்தான் சந்துரு


திங்கள், அக்டோபர் 10, 2011

புதிய தென்றல் - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

மங்களகரமாய் நடந்து கொண்டு இருந்தது அந்த கல்யாணம், உற்றார் உறவினர் யாருமில்லை ஆயினும் நண்பர்கள் உடன் இருக்க இன்னும் சில நிமிடங்களில் தம்பதி சமேதராய் ஆகப்போகும் சந்தோஷம் ராஜூவுக்கும் உஷாவுக்கும்.  ஐயர் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே நண்பர்கள் மாப்பிளையை நச்சரித்துக்கொண்டே இருக்கும் போது கோவில் வாசலில் சலசலப்பு. 

"போலீஸ் வருது ராஜு" - வசந்த் சொன்னான்

"நீ பயப்படாதே நாங்க இருக்கோம்.  நீங்க ரெண்டு பெரும் மேஜர் யாரும் எதுவும் செய்ய முடியாது" - இது விஷ்ணு

"ஐ ஆம் சாரி ராஜு, உங்களை தொல்லை பண்ணுறோம்ன்னு நினைக்காதீங்க நேத்து காலையில உங்கப்பா ரகுவை யாரோ மர்டர் பண்ணியிருக்காங்க. உங்களை டிரேஸ் பண்ணி கண்டு பிடிக்க இவ்வளவு நேரம் ஆகி இருக்கு.  எங்களுக்கு உஷா மேல கொஞ்சம் சந்தேகம் இருக்கு, கொஞ்சம் விசாரணை பண்ணனும்"  - சொன்ன இன்ஸ்பெக்டர் கருணா தொடர்ந்தார்  "இனி நீங்க தான் சொல்லணும் நாங்க எப்ப எங்க விசாரணை பண்ணனும்ன்னு"

"சார் S.P. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்து இருக்கிறேன் கவலை வேண்டாம்"   நேற்று வந்த SMS ஐ டெலீட் செய்து  கொண்டே "சரி இப்ப கல்யாணம் முடியட்டும் அப்புறம் சென்னைக்கு போய் விசாரணையை துவங்கலாம் என்ன சொல்லுற ராஜூ?"  - கேட்டார் மேனேஜர் பாபு

கண்கள் கலங்கி இருந்தாலும் மனம் கலங்காமல் "பாபு சார் சொல்லுறது மாதிரியே செய்யலாம. அது சரி நீங்க எப்பிடி உஷாவை சந்தேகப்படுறீங்க?"

"எங்ககிட்ட அதுக்கான ஆதாரம் இருக்கு"

ஆறு மாதங்களுக்கு முன்

"நான் பெத்த பிள்ளை இப்பிடி என் நெஞ்சுல இடி அள்ளி போடுதே,  ஏண்டா இப்பிடி பண்ணினே?"  அழுத படி கேட்டாள் ராஜூவின் அம்மா

"நாங்க உனக்கேத்த பொண்ணா பார்க்கமாட்டோம்ன்னு நினைச்சியா ராஜு? அதுவும் ஒரு தராதரம் இல்லாத பொண்ணை போயி பார்த்து இருக்கியே உனக்கு வேற பொண்ணே கிடைக்கலயா?"  இது அக்கா

ரகுவின் வருகையால் அமைதியானது வீடு, அம்மாவின் விம்மல் மட்டும் இன்னும்

"என்னாச்சு?" கணீர் குரலில் ரகு கேக்க

"என்னான்னு சொல்லுவேன்" தொடங்கிய அம்மா தயங்கிய படியே சொல்லி முடிக்க

ரகு கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தார்

"ராஜு..  அந்த பொண்ணை நாளைக்கு வீட்டுக்கு அழைச்சுட்டு வா" சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்

மறுநாள்

"சொல்லும்மா உன்னைப்பத்தி, உங்க குடும்பத்தை பத்தி நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிறேன்? சொன்ன ரகு திரும்பி ராஜூவை பார்த்து "ராஜு நீ கொஞ்சம் வெளியே இரு"

கொஞ்ச நேரத்தில் கலங்கிய கண்ணீரோட வெளியே வந்த உஷா ராஜுவை பார்த்தும் பார்க்காமல் விறுவிறுவென வெளியேறினாள்.

"என்னப்பா ஆச்சு" உள்ளே வந்த ராஜு ரகுவைப்பார்த்து கேட்டான்

"அவளுக்கு புரிய வைக்க வேண்டியது எல்லாம் புரிய வச்சுட்டேன்"

"நீங்க அவகிட்ட என்ன சொன்னீங்கன்னு எனக்கு தேவை இல்லை, எங்க கல்யாணத்தை நீங்க நடத்தி வைக்கப்போறீங்களா இல்லையா?"

ராஜூவிற்க்கு பதில் ஏதும் சொல்லாமல் "நான் ஆஃபிஸ்க்கு கிளம்புறேன் அம்புஜம்" மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார் ரகு.

"சொல்லுங்க ரகு இந்த கொலையை யார் செஞ்சு இருப்பாங்க நீங்க நினைக்கிறீங்க?" கருணா

"எனக்கு தெரியல, நான் அப்பா கூட பேசி ஒரு வாரம் ஆச்சு,    கடைசியா உஷா எங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு பேசுனுதுதான், அதுக்கப்பறம் நா வீட்டுல கூட தங்கலை வேணும்மின்னா எங்க மேனேஜர் பாபு கிட்ட கேட்டுப்பாருங்க நான் அவன் ரூம்-ல தான் தங்கி இருந்தேன். நாங்க திருப்பதி வந்தும் இன்னையோட மூணு நாள் ஆய்டுச்சு வேணும்ண்ணா நாங்க தங்கி இருந்த ஹோட்டல் ரிஜிஸ்டர்-ஐ செக் பண்ணி பாருங்க" 

"அப்ப நீங்க தான் உங்க அப்பாவை தீர்த்துக்கட்ட ஆள் ஏற்பாடு செஞ்சீங்களா"?

"மொதோ உஷான்னு சொன்னீங்க இப்ப நான்தான் திட்டம் போட்டேன்னு சொல்றீங்க, எங்கப்பா அப்பிடி என்னை வளக்கலை"

"உங்க கல்யாணத்தில உங்கப்பாவுக்கு இஷ்டம் இல்லை அப்படித்தானே?"

"ஆமா சார்"

"அவர் செத்தா தான் உங்க கல்யாணம் நடக்கும்னு நெனைச்சு இப்படி செஞ்சு இருக்கலாம் தானே?"

"bullshit உங்க கற்பனை எல்லை மீறுது, உங்களால் கண்டுபிடிக்க முடியலேன்னா யார் மேல வேணா பழி போடுவீங்களா?"

"இல்ல மிஸ்டர் ராஜு உங்கப்பா இறந்த கொஞ்ச நேரத்தில உங்க நண்பர் விஷ்ணு எஸ்‌பி கோகுலுக்கு அனுப்புன எம்‌எம்‌எஸ் உங்க மேல சந்தேகம் வர காரணம்" 

"அப்பிடி என்ன MMS?"

"MR கோகுல்

S W H2  6F இது தான் குறியீடு கவனம்" - விஷ்ணு  

"இங்க இமேஜ்-ல இந்த பிளாஸ்டிக் கார்ட்-ஐ பாருங்க அதுல இருக்க S W H2  6F இந்த நம்பர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?" 

"தெரியலையே"

"உஷா கிட்ட கேளுங்க"

"உஷா இது என்ன நம்பர் உனக்கு தெரியுமா? "

"இது இது என் பாங்க் லாக்கர் கோட். என்னோட சம்பளத்தில வாங்குன நகை எல்லாம் இதுல தான் இருக்கு" 

"இது உங்கப்பா பெட்க்கு கீழே இருந்து தான் போட்டோ எடுத்து அனுப்பி இருக்கார் விஷ்ணு" 

"இருக்காது இது லாக்கர் சாவியோட சேர்த்து தான் வச்சு இருக்கேன் இருங்க என் பேக்-ல இன்னும் இருக்கு, இதோ பாருங்க"

லாக்கர் சாவியை பார்த்த கருணா கொஞ்சம் குழப்பத்துடன் S.P. கோகுலை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்

"சார் நாம சந்தேகப்பட்டது மாதிரி இந்த கொலையை அவங்க செஞ்சு இருக்க மாதிரி தெரியலை சார்"

"எதை வச்சி சொல்லுறீங்க கருணா"

"அவங்க காலை 6 மணியில இருந்தே கோயில்ல தான் இருக்காங்க, கொலை நடந்தது 6 : 15 க்கு, அதுவும் இல்லாமா நாம க்ளூ-வா நினைச்ச அந்த பிளாஸ்டிக் கார்ட்-ல ஏதோ தப்பு நடந்து இருக்கு"  

"சரி நான் கிளம்பி ஸ்டேஷன்க்கு வர்றேன்.  நீங்க கலெக்ட் பண்ண எவிடெண்ஸ் எல்லாம் பிரிண்ட்அவுட் எடுத்து வையுங்க. அப்பறம்  ஜி‌எச்க்கு போயி போஸ்ட் மர்ட்டம் ரிபோர்ட் வாங்கிட்டு வாங்க, அப்பிடியே அந்த விஷ்ணுவை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க. "



போலீஸ் ஸ்டேஷன்

எவிடெண்ஸ்களை பார்த்துக்கொண்டு இருந்தார் கோகுல் அப்போது மொபைல் அழைக்க எடுத்தார் VISHNU INFORMER Calling .






"சொல்லுங்க விஷ்ணு"

"சார் நான் கொஞ்சம் வர லேட் ஆகும் ஆஃபிஸ் வரை போக வேண்டி இருக்கு முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்துடுறேன்"

"சரி சீக்கிரம் வந்துடுங்க"

"ஏதாவது சாப்பிடுறீங்களா, காலையில இருந்தே ஒண்ணும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க மணி இப்ப நாலு ஆச்சு"

"சரி சார்"

"ரெண்டு சாப்பாடு வாங்கிட்டு வாய்யா வாசலில் இருந்த கான்ஸ்டபிள்-ஐ அனுப்பினார். நல்ல சாப்பாடா வாங்கிகிட்டு வா இது கல்யாண சாப்பாடு" - கோகுல்

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ரிபோர்ட் இப்ப வந்துடும், உங்க மேல இருக்க சந்தேகம் தீர்ந்துடுச்சுன்னாலும்  எப்ப நாங்க விசாரணைக்கு வரணும்

"விஷ்ணு..  இந்த பிளாஸ்டிக் கார்டை எங்க இருந்து எடுத்தீங்க?" 

"ராஜு அப்பாவோட பெட்டுக்கு கீழே இருந்து சார்"

"சரி ரகு இப்ப எங்கே இருக்காரு? அதை மட்டும் சொல்லிடு உன்னை விட்டுடுறேன்"

"என்ன கேக்குறீங்கன்னு எனக்கு புரியலை" 

"இந்த கொலையை பத்தி போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணது யாரு?"

"நான் தான் சார்"

"நீ எதுக்கு நேத்து காலையில ராஜூ வீட்டுக்கு போனே?"

"அது வந்து வந்து..."

"சொல்லு உண்மையை சொல்லு இல்லை உள்ள தள்ளி முட்டிய பேத்துடுவேன்"

"டாய் எங்கப்பாவை கொன்னுட்டு உஷா மேல பழி போட பார்த்திய ஏண்டா இப்டி பண்ணே?"

பாய்ந்த ராஜூவை அமைதிபடுத்தினார் கோகுல்

"கொஞ்சம் அமைதி ராஜூ உங்கப்பா சாகலை"

"என்ன சொல்றீங்க சார்?"

"யெஸ் அவர் இன்னும் உயிரோட தான் இருக்கார், இப்ப விஷ்ணுவே உண்மைய சொல்லுவான், சொல்லு விஷ்ணு என்ன நடந்துச்சு"

"சொல்லிடுறேன் சார்"

"ராஜூ அவங்க வீட்டுக்கு ஒரே பையன், அவன் உஷாவை கல்யாணம் பண்ணிக்கிறது அவருக்கு புடிக்கலை,  உஷாகிட்ட அதை வெளிப்படையாவும் சொல்லிட்டாரு. ஆனாலும் ராஜூவை கண்வின்ஸ் பண்ண முடியல. அவன் இன்னைக்கு கோயில்ல கல்யாணம் பண்ணப்போறான்னு தெரிஞ்சு துடிச்சு போயிட்டாரு. இந்த கல்யாணத்தை எப்பிடியாவது நிறுத்திடணும்ன்னு அவர் எனக்கு முந்தாநேத்து ராத்திரி  எனக்கு ஃபோன் பண்ணினார்

"விஷ்ணு,  ராஜூ பண்ணுறது எனக்கு புடிக்கலை, இந்த கல்யாணம்  நடக்கக்கூடாது"

"என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்க செஞ்சுடுறேன்"

"எனக்கும் என்ன செய்யுறதுன்னு தெரியல, ஆனா இந்த கல்யாணம் நடக்கக்கூடாது" 

"அப்ப நீங்க செத்துடுங்க"

"என்ன சொல்லுற விஷ்ணு"

"பயப்படாதீங்க சார் நிஜமா இல்ல சும்மா, அதாவது உங்க சைஸ்-ல ஒரு டெட் பாடி-ய உங்க ரூம்-ல உங்க டிரஸ் மாட்டிவிட்டு போட்டுடுவோம், மொகத்த கொஞ்சம் சிதைச்சு விட்டுட்டா அடையாளம் தெரியாது. பழியை அந்த பொண்ணு மேல போட்டுடலாம் என்ன சொல்றீங்க? " 

"நீ சொல்லுறதும் சரிதான்,  போன வாரம் அந்த பொண்ணு என்னை பார்க்க வரும்போது ஒரு சாவியை ஏன் கையில் குடுத்து " இது என் லாக்கர் சாவி 50 பவுன் நகையை சேர்த்து வச்சு இருக்கேன்"ன்னு சொன்னா. அந்த கார்ட்-ஐ எப்பிடியாவது என் பெட்டுக்கடியில போட்டுட்டா எல்லோரும் அந்த பொண்ணை மட்டும் தான் சந்தேகப்படுவாங்க"

"சரி சார் அப்பிடியே செஞ்சுடுவோம்"

அப்பறம் அவர் சொன்ன மாதிரியே செட்டப் செய்துட்டு போலீஸ்க்கு தகவல் குடுத்தேன் 

"அது எல்லாம் சரி அந்த பிளாட்டிக் கார்ட்-ல இருந்த எழுத்தில கடைசி எழுத்து மட்டும் ஏன் மாத்துன" 

அது வந்து சார் "பாபு சார் சொன்னார்ன்னு... "

"என்ன சொன்னார்? முழுசா சொல்லு "

"ராஜூவோட அப்பா பேசி முடிச்சதுக்கப்பறம், நான் எங்க மேனேஜர் சார் கிட்ட விசயத்த சொன்னேன்" 

"இப்ப என்ன சார் பண்ணுறது உஷாவும் பாவம்"

"சரி அந்த கார்ட்-ல என்ன எழுதி இருந்துச்சுன்னு சொன்னே"  

"S W H2  6P"

"சரி அந்த கடைசியா இருக்க P-ஐ F-ஆ  மாத்திடு"

இது தான் சார் நடந்துடுச்சு

"சரி ராஜூ இனி இந்த கேஸ்-ல என்ன செய்யனுமோ அதை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க ஜாலியா உங்க கல்யாண வாழ்க்கையை ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள். "

சொன்ன கோகுலிடம்

"தாங்யு சார்" சொல்லியபடி வெளியே வந்தனர் ராஜூவும் உஷாவும்

வெள்ளி, அக்டோபர் 07, 2011

இவனுங்க எப்ப திருந்தி ஹூம் நாடு விளங்கிடும்

50 வது கல்யாண நாளுக்கு வந்த அழைப்பிதழை பார்த்து அந்த நண்பருக்கு ஒரே ஆச்சரியம். விழாவுக்கு போயிட்டாரு. அங்க பேசும் போது நண்பர் கேட்டாரு

"இவ்வளவு சந்தோஷமா இருக்கீங்களே எப்பிடி?"

"அதுவா நாங்க வாரத்துக்கு ரெண்டு வாட்டி வெளியே போயி சாப்பிடுவோம்."

"அப்பிடியா அப்பறம்"

"ஆஃபிஸ்க்கு போன உடனே அவங்களுக்கு ஃபோன் பண்ணி பேசிடுவேன்"

"ரொம்ப ஆச்சரியம் சார் அப்புறம்"

"ரெண்டு பேரும் வேற வேற பெட்டுல தான் படுப்போம்"

"சுவாரசியாம இருக்கே அப்புறம்"

கொஞ்சம் சோகமா "நேத்து தான் அவளை அவங்கம்மா வீட்டுல இருந்து கூட்டீட்டு வந்தேன்"

"அவங்க எப்ப அவங்கம்மா வீட்டுக்கு போனாங்க?"

"அவங்க தலை பிரசவத்துக்கு!!"

==================================================================

"எங்களுக்கு கல்யாணம் ஆயி ரொம்ப வருஷம் ஆயுடுச்சு இன்னும் குழந்தை பிறக்கலை, பார்க்காத டாக்டர் இல்ல" - அந்த சாமியாரை பார்த்து சொன்னார் குப்பு

"சரி மகனே நான் நாளைக்கு யாத்திரை கிளம்புறேன், போற வழியில உனக்காக கோவில்-ல விளக்கு ஏத்தி அந்த சாமி கிட்ட வேண்டிக்கிறேன அந்த சாமி உனக்கு அருள் செய்யட்டும்"

"சரி சாமி"

15 வருஷம் கழிச்சு, சாமியார் ஊருக்கு திரும்பி வந்தாரு. வர்ற வழியில குப்புவோட சம்சாரம் அந்த வழியா வந்தாங்க வயிறு கொஞ்சம் பெருசா இருந்துச்சு, சாமியாருக்கு சந்தோஷம்

"என்னமா எப்பிடி இருக்கீங்க, இப்ப தான் அந்த ஆண்டவன் கண்ணை தொறந்துட்டான் போல இருக்கே?"

"சாமி நீங்க எந்த கோயில விளக்கு போட்டீங்க? இன்னும் அது எரிஞ்சுக்கிட்டே இருக்கா அப்பிடி இருந்தா மொதோ அணைச்சூடுங்க சாமி"

"ஏம்மா என்னாச்சு"

"இது எங்களுக்கு 15 வது குழந்தை!!"


இன்றைய சிந்தனை

1.    எதிர்காலத்தின் சிறப்பு அது எப்போதும் நாளைக்கே ஆரம்பிக்கும்

2.    பணத்தால் நாயை வாங்கலாம் ஆனா வாலாட்ட வைக்க அன்பு வேணும் அதவிட முக்கியம் அதுக்கு வால் வேணும்

3.    இங்கே புதிய தவறுகள் எதுவும் இல்லை எல்லாம் பழையதே சில பெரிய மனிதர்கள் செய்துவிடுவதால் விளம்பரபடுத்தப்படுகிறது!

4.    சிரிக்கவோ அல்லது சிரிக்க வைக்க தெரியாவிட்டால் நீங்கள் செத்தாருள் வைக்கப்படுவீர்கள்

5.    நல்லா கவனிங்க நண்பர்களே ஜெயிக்கிற யாரும் "இது வெறும் விளையாட்டுன்னு" சொல்ல மாட்டாங்கே, அது தோக்குறவங்க மட்டும் தான் சொல்லுறாங்கே

இன்றைய லொள்ளு

 


செவ்வாய், அக்டோபர் 04, 2011

உஷார் பண்ணப்போறீங்களா கொஞ்சம் உஷார்

பையன் ஒரு பொண்ணு கிட்ட போயி ப்ரபோஸ் பண்ணுனான்

"கண்ணே இந்த உலகத்திலயே நீ தான் அழகு, உன்னை நான் காதலிக்கிறேன்" பையன் 

"அப்பிடியா அப்ப உங்க பின்னாடி என்னை விட ஒரு அழகான பொண்ணு நிக்குதே அது யாரு?" - இது பொண்ணு

பையன் திரும்பி பார்த்தான் யாருன்னு அவ்வளவுதான் பொண்ணு பொரிய ஆரம்பிச்சுட்டா

"நீ ஒரு ஏமாத்து பேர்விழி என்னை உண்மையிலேயே காதலிக்கிறவனா இருந்தா நீ திரும்பி பார்த்து இருக்க மாட்டே இப்பவே இப்பிடின்னா இன்னும் நாள் ஆச்சுன்னா என்னென்ன பண்ணுவ நீ எனக்கு வேண்டாம்"

- இது எப்பிடி இருக்கு உஷார் மக்களே


அவர்    :     யோவ் இது கோழி காலா இல்லை காகா காலா?
சர்வர்   :     உங்களுக்கு ருசியில ஏதாவது வித்தியாசம் தெரியுதா
அவர்    :     இல்லை.. 
சர்வர்   :     அப்ப அது எதுவா இருந்தா என்ன?

வாத்தியார்    :   உங்க அப்பாக்கு என்ன வயசாகுது
பையன்          :    என் வயசுதான்
வாத்தியார்    :    என்ன சொல்லுற?
பையன்           :    நான் பொறந்ததுக்கப்பறம் தான் அவர் அப்பா ஆனாரு!!?


இன்றைய சிந்தனை

1.    நீங்கள் உங்கள் குழந்தைகளுக்கு என்ன செய்தீர்கள் என்பது முக்கியம் அல்ல என்ன சொல்லி தந்தீர்கள் என்பதே முக்கியம்

2.    தன் மேல் விழுந்த கற்களை வைத்தே கோட்டை கட்டுபவன் புத்திசாலி, உங்கள் மேல் விழும் கற்களை புறம் தள்ளாதீர்கள் 

3.    நீங்கள் நடக்கும் போது சுகமாய் இருக்க வேண்டும் என்றால் பூமி எங்கும் மெத்தை போல் இருக்க வேண்டும் என்று விரும்புவதை விட நீங்கள் செருப்பை அணிந்து கொள்வது நல்லது

4.    உங்களை மீறி யாரும் உங்களை அவமானப்படுத்த முடியாது

5.    வாய்ப்பு என்பது கடவுளின் குறிப்பு சரியாக புரிந்து கொண்டால் வெற்றி பெறலாம்


இன்றைய லொள்ளு

எல்லோரும் கண்ணை காதை எல்லாம் மூடிக்குங்க உங்க கண்ணையும் காதையும் குத்த வந்துட்டார்






திங்கள், அக்டோபர் 03, 2011

பெத்தவங்களை கவனிக்காம இருந்தா இப்படித்தான்

"தம்பி இனி அந்த ராட்சஸி அதான் உங்கம்மா கூட வாழ முடியாதுடா விவாகரத்து கேட்டு கோர்ட்க்கு போறேன்"  வெளிநாட்டில் வேலை செய்து கொண்டு இருக்கும் மகனிடம் சுப்பு போனில்

"அப்பா ஏன் என்னாச்சு,  இத்தனை வருஷம் சந்தோஷமா தான் இருந்தீங்க?" - அலறினான் மகன்

"இல்லப்பா என் மனசே சரியில்லை"

"அவசரப்பட்டு எதுவும் பண்ணிடாதீங்க, சிங்கப்பூர்-ல இருக்க தங்கச்சிகிட்ட பேசுறேன்." - டொக் ஃபோன் கட்

அடுத்த கால்

"சுகந்தி அப்பா இப்ப ஃபோன் பண்ணியிருந்தாரு விவாகரத்து வாங்கப்போறாராம், என்ன செய்யுறதுன்னு தெரியல"

"என்ன அண்ணே சொல்ற இத்தனை வயசுக்கு மேல அப்பாவுக்கு ஏன் புத்தி இப்பிடி ஆயுடுச்சு. நாம இங்க இருந்து எதுவும் செய்ய முடியாது, எப்டியாவது ஒரு 10 - 15 நாள் லீவு போட்டுட்டு அண்ணி குழந்தைகளை கூட்டிக்கிட்டு ஊருக்கு வரப்பாரு, நானும் அவரோட வந்துடுறேன் நேர்-ல பேசலாம். அப்பா கிட்ட சொல்லிடுறேன்" - டொக்

அடுத்த கால்

"அப்பா அண்ணன் ஃபோன் பண்ணி இருந்தான் ரொம்ப கஷ்டமா இருக்குப்பா"

"என்னம்மா பண்ணுறது இனி இவ கூட வாழ முடியாது அதான்"

"இல்லப்பா நாங்க லீவு போட்டு கெளம்புறோம் ஊருக்கு நாங்க வர்ற வரை எதுவும் பண்ண வேண்டாம்" - டொக்

சுப்பு மெல்ல திரும்பி மனைவியிடம் "செல்லம் உன் பிரச்சனை இப்ப சால்வ் ஆயுடுச்சு, ரொம்ப வருஷம் ஊரு பக்கம் வராத நம்ம ரெண்டு பசங்களும் தீபாவளிக்கு  ஊருக்கு வர்றாங்க!!"  

போங்கயா ஊருக்கு போயி பெத்தவங்களை பாருங்க இந்த தீபாவளிக்காவது!!

இன்றைய சிந்தனை


1.    உங்களுடைய செயல்கள் பிறரின் கனவுகளுக்கு / கற்றுக்கொள்வதற்கு / செயலை செய்வதற்கு தூண்டுகோலாய் இருந்தால் நீங்கள் தலைவர்

2.    எந்த செயலை துவங்கும் முன்னே நிஜம் என்ன என்பதை தெரிந்து கொள்ளுவதும் முடிக்கும் போது நன்றி சொல்லுவதும் நீங்கள் தலைவர் என்பதை பிறருக்கு உணர்த்தும்

3.    செய்து கொண்டே இருந்தாலும் செய்ய ஏதாவது மிச்சம் வைத்து இருப்பவன் அடிமை  எதுவும் செய்யாவிட்டாலும் செய்ய எதுவும் மிச்சம் வைத்து இருக்காதவன் தலைவன்

4.     தானாய் சிந்திப்பவன் எப்போதும் தலைவனாய் இருக்கிறான்

5.    தோற்றுவிடுவோம் என்று பயந்து கொண்டு இருப்பதால் தான் இன்னும் நான் தொண்டனாகவே இருக்கிறேன்






இன்றைய லொள்ளு


ஸ்டார்ட் ம்யூசிக் நௌ