வெள்ளி, ஜூன் 24, 2011

பெரியவங்க சொல்லீட்டு போனது

 1. எதிரியை எளிதாக எடை போடாதீர்கள், முள் சிரியதாய் இருந்தாலும் காலில் குத்தி விட்டால், முழுமையாய் நீக்கும் வரை  உங்களால் நடக்க இயலாது 
 2. கர்மவினை கருணை இல்லாதது,  யோகியாய் இருந்தாலும் மனித உருவில் இருக்கும் வரை கர்மவினைகளை அனுபவித்தே தீரவேண்டும்.
 3. மரணம் ஒரு ஒட்டகம் போலே ஒவ்வொருவர் கூடாரத்தின் முன்னும் மண்டியிட்டு காத்துக்கொண்டு இருக்கிறது
 4. பாம்பை பிடிக்க உன் எதிரியின் கையை பயன்படுத்து
 5. சகோதரர் போலே வாழ்ந்தாலும், தொழில் செய்யும் போது அந்நியர் போலே செய்யுங்கள்
 6. எளிதாய் கிடைக்கும் எல்லாம் இழிவாகவே மதிக்கப்படும்
 7. ரோஜா வேண்டும் என்று ஆசைப்படுபவன் முள்ளையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்
 8. பகலில் வந்தடைய வேண்டும் என்றால் இரவிலேயே புறப்படவேண்டும்
 9. நீங்கள் உங்களுக்கு செய்து கொள்ளும் பாவங்களுக்கு பரிகாரம் இல்லை
 10. எல்லா இலையுதிர் காலத்திற்கும் ஒரு வசந்தகாலம் உண்டு, எல்லா பாதைகளுக்கும் ஒரு முடிவு உண்டு
 11. கேள்வி கேட்கப்படும் வரை பதில் சொல்லாதீர்கள்
 12. பெரிய மனிதர்கள் எப்போதும் குழந்தை இதயம் கொண்டு இருப்பர்
 13. ஊரின் கதவுகளை எளிதாக அடைக்கலாம் ஆனால் ஒருவரின் வாயை அடைப்பது கடினம்
 14. கண்ணில் இருந்து மறைபவர் இதயத்தில் இருந்தும் மறைக்கப்படுகிறார்
 15. புத்திசாலி பிறர் அனுபவங்களில் இருந்து ஞானம் பெறுகிறார்
 16. பறவைகளே மரங்களை தேர்ந்து எடுக்கின்றன, மரங்கள் பறவைகளை  தேர்ந்துஎடுப்பதில்லை
 17. வளையாத வில்லில் இருந்து அம்பை எய்ய முடியாது
 18. தெரியாத ஒருவருக்கு கற்றுக்கொடுப்பது எளிது, கற்றுக்கொள்ள விருப்பம் இல்லாதவனுக்கு பிரம்மனாலும் கற்றுக்கொடுக்க இயலாது
 19. உங்களுக்கு என்ன தெரியும் தெரியாது என்று அறிந்து இருத்தலே ஞானம்
 20. எப்பிடி பார்த்தாலும் ஒருவரின் இறந்தகாலம் எப்போதும் எதிர்காலத்தை விட சிறந்ததாகவே இருக்கும்.

10 கருத்துகள்:

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Super thinkings

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

Very super post

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

I like this type of post . . . Thanks friend

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி சொன்னது…

அருமையானதும் வாழ்க்கைக்கு அவசியமானதுமான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீர்கள் நண்பா!

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா

நன்றி ராஜா...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி

ரொம்ப நன்றி அண்ணே..

சமுத்ரா சொன்னது…

Nice sayings..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

வாழ்க்கைக்கு தேவையாய வார்த்தைகள்...

எல்லோர் மனதில் பொறிக்கப்பட வேண்டும்..

மகேந்திரன் சொன்னது…

பொன்னேட்டில் எழுத வேண்டிய
சொக்கத்தங்க வார்த்தைகள்

சும்மாவா சொன்னாங்க பெரியவங்க!!!

அன்பன்
மகேந்திரன்

நிரூபன் சொன்னது…

பாஸ், சான்ஸே இல்லை பாஸ்..
தனித்துவமான ஒரு படைப்பினைத் தத்துவ முத்துக்களோடு தந்திருக்கிறீங்க.
இவ் வசனங்களை எங்கள் வீட்டுச் சுவரில் ஒட்டி, அடிக்கடி பார்க்க வேண்டும், அப்போது தான் எம் வாழ்க்கையும் புத்துணர்ச்சியுள்ளதாக பயணக்கும்.

பகிர்விற்கு நன்றி சகோ.

இடுகைகளை இ-மெயிலில் பெற