ஒரு நாள் சுப்பு முடி வெட்ட சலூனுக்கு போனாரு, அங்க கொஞ்சம் கூட்டமா இருந்துச்சா, அவரு முறை வர்ற வரை கத்துகிட்டு இருந்தாரு,
அவரு முறை வந்ததும் சேர்-ல போயி உட்கார்ந்தார், அவருக்கு முடி வெட்ட வந்தவரு ஒரு ஓட்டை வாய், ஏதாவது பேசாம முடி வெட்ட மாட்டாரு. அதே மாதிரி சுப்பு கிட்ட பேச ஆரம்பிச்சாரு, எது எதுவோ பேசி கடைசி கடவுளை பத்தி பேச ஆரம்பிச்சாரு. ஒரே திட்டு கடவுள் இல்லவே இல்லைன்ற மாதிரி பேசிக்கிட்டே இருந்தாரு.
சுப்புவும் ஒரு கட்டத்தில பொறுமையை இழந்து, "ஏன்யா இப்பிடி திட்டுற, கடவுள் இல்லைன்னு எப்பிடி சொல்லுற? உனக்கு என்னய்யா தெரியும் கடவுளை பத்தி" அப்பிடின்னாரு,
முடி வெட்டுறவரும் சலிக்கமா, "கடவுள்ன்னு ஒருத்தர் இருந்தா, நாட்ல இப்பிடி எல்லாம் அநியாயம் நடக்குமா? ரோட்ல போயி பாருங்க எவ்வளவு பேரு சோறு தண்ணி இல்லாம திரியுறாங்க?, நல்லது செய்யுறவங்க எல்லாம் கஷ்டப்படுறாங்க. கொள்ளை அடிக்கிறவன், ஊரை அடிச்சு உலையில போடுறவன் எல்லாம் நல்லா இருக்கான்" அப்பிடின்னாரு
சுப்புவுக்கும் என்ன பதில் சொல்றதுன்னு தெரியலே, சரி இனி இவன் கிட்ட பேச முடியாதுன்னு நெனைச்சுக்கிட்டு, சும்மா இருந்துட்டாரு. முடி வெட்டி முடிச்சவுடனே காசை குடுத்துட்டு வெளியே வந்தாரு. முடி வெட்டுறவர் சொன்ன மாதிரி நெறைய பேரு அந்த மார்க்கெட்-ல பிச்சை எடுத்துக்கிட்டு இருந்தாங்க. ஆனாலும் அவர் மனசு முடி வெட்டுறவர் சொன்னதை ஒத்துக்க முடியலை
கொஞ்ச தூரம் வந்து இருப்பாரு, உடனே சுப்பு மூளையில பல்ப் எரிஞ்சது, உடனே நேரா சலூனுக்கு வந்தாரு, அந்த முடி வெட்டுறவரை பார்த்து இங்க முடி வெட்டுறவங்களே இல்லை அப்பிடின்னாரு.
சுப்புவை ஒரு மாதிரி பார்த்த முடி வெட்டுறவர், "யோவ் இப்ப தானே உனக்கு முடி வெட்டி விட்டேன், உனக்கு ஏதாவது ஆயிடுச்சா? நான் தான் இருக்கேனே" அப்பிடின்னாரு
"இல்லை" கத்துனார் சுப்பு, "முடி வெட்டுறவங்க இருந்தா ஊர்ல ஏன்யா ஜடா முடியோட நிறைய பேரு சுத்திக்கிட்டு இருக்காங்க, வெளியில போயி பாரு"
"அதுக்காக முடி வெட்டுறவங்களே இல்லை சொல்லிடுறாத? அவங்க என்கிட்ட வந்தா வெட்டி விடுறேன்" அப்பிடின்னாரு முடி வெட்டுறவர்.
"அது தான், அதே தான்!! நீ இன்னும் கடவுள் கிட்ட போகலை" அப்பிடின்னாரு சுப்பு
நீதி
கடவுளை சரணடையாதவர்களுக்கு மனக்கவலையில் இருந்து விடுதலை கிடைப்பது அரிது

5 கருத்துகள்:
அருமையான அறிவுரை...
உண்மையில் நன்றாக இருக்கிறது..
@# கவிதை வீதி # சௌந்தர்
நன்றி சௌந்தர்
கடவுளை எப்படி அறியலாம் என்பது பற்றிய அருமையான கதையும், அதன் கீழ்,
ஒரு வரியில் நச்சென்று ஒரு தத்துவமும் அருமை சகோ.
//கடவுளைச் சரணடையாதவர்களுக்கு மனக்கவலையில் இருந்து விடுதலை கிடைப்பது அரிது//

@நிரூபன்
நன்றி சகோ..
கருத்துரையிடுக