ஒரு நாளு குப்புவும், சுப்புவும் படகுல போயிக்கிட்டு இருந்தாங்களா? அப்ப பெரிய சூழல்ல மாட்டிக்கிட்டாங்க, படகு உடைஞ்சு ரெண்டு பேரும் கடல்ல விழுந்துதிட்டாங்க. கண்ணு முழிச்சு பார்க்கும் போது, ஏதோ ஒரு தீவுல மயக்கமா கிடந்தாங்க. மயக்கம் தெளிஞ்சதுக்கு அப்புறம் பார்த்தா அந்த தீவுல இவங்கள தவிர வேற யாரும் இல்லை.
"சரி இனி எப்பிடி நம்ம ஊருக்கு போறதுன்னு யோசிப்போம்" அப்டின்னாரு சுப்பு
"இந்த போங்கு விளையாட்டுக்கு நான் வரல, நீ தனியா போ, நான் தனியா போறேன்" அப்பிடின்னாரு குப்பு
சுப்புவுக்கு ஒரே வருத்தம் இருந்தாலும் "சரி நான் அந்த பக்கம் போயிடுறேன்" அப்பிடின்னு சொல்லிட்டு போயிட்டாரு.
ரெண்டு பேருக்கும் ஒரே பசி, இப்ப சாப்பிட ஏதாவது கிடைச்சா நல்லா இருக்கும் அப்பிடின்னு நெனைச்சாங்கலாம், நினைச்ச நேரத்தில அங்க இருந்த மரத்தில காய்கள் எல்லாம் பழமா மாறிடுச்சாம்.
ஒரு வாரம் கழிச்சு, குப்புவுக்கு ஒரே அடிக்க ஆரம்பிச்சுடுச்சு, சும்மா சாப்பிட்டு தூங்கி எந்திரிக்கிறது. இங்க ஒரு பொண்ணு மட்டும் இருந்தா நல்லா இருக்குமே அப்பிடினு நெனைச்சார், அன்னைக்கு நைட் இன்னொரு படகு அதே மாதிரி உடைஞ்சி, குப்பு இருந்தா கரை பக்கம் ஒதுங்குச்சு, அதுல ஒரு அழகான பொண்ணு குப்பு எதிர் பார்த்த மாதிரி. அவருக்கு ஆச்சரியமா இருந்தாலும், அந்த பொண்ணை காப்பாத்தி கல்யாணமும் பண்ணிக்கிட்டாரு.
இப்ப ஒரு வீடு இங்க இருந்தா குடும்பம் நடத்த வசதியாய் இருக்குமே அப்பிடின்னு நெனைச்சார், மேஜிக் மாதிரி காலையில அவங்க இருந்த எடத்துல ஒரு வீடு வந்துருச்சு. ஆனா சுப்புக்கு இன்னும் ஒண்ணும் கிடைக்கலை, சாப்பாட தவிர
கொஞ்ச நாள் போச்சு, குப்புவுக்கு இனி இங்க இருக்க முடியாதுன்னு தோணுச்சு, "ஒரு கப்பலோ இல்ல படகோ இங்க வந்து நம்மள காப்பாத்த வராதா?" ன்னு நெனைச்சார், அவரு நெனைச்ச மாதிரியே ஒரு படகு அந்த தீவ நோக்கி வந்தது.
குப்புவும் அவரு பொண்டாடிய கூட்டிக்கிட்டு படகுல ஏற போனப்ப, ஒரு குரல்
"என்னப்பா குப்பு உன் நண்பன் சுப்புவ விட்டுட்டு நீ மட்டும் போக போறியா? " அது அந்த தீவு தேவதை இதுவரை அவங்க வேண்டியத நிறைவேத்தி வச்சதும் அதுதான்
"அவன் ஒரு ராசியில்லாத பய இது எல்லாம் நான் நெனைச்சதால வந்தது, இது என் அதிர்ஷ்டம், அதுல அவனுக்கு பங்கு குடுக்கணும்ன்னு அவசியமில்லை" அப்பிடின்னாரு குப்பு
"நீங்க தப்பா நெனைச்சுகிட்டு இருக்கீங்க, இது எல்லாம் சுப்புவோட அதிர்ஷ்டம் என்ன புரியலையா அவரு தான் நீங்க என்ன நெனைச்சாலும் நடக்கணும்ன்னு வேண்டிக்கிட்டாரு"
நீதி
நம்முடைய பிரார்த்தனைகளின் பலன்கள், நாம் பிரார்த்திப்பதால் மட்டும் இல்லை

2 கருத்துகள்:
Ramesh,
i cant blev, this is ramesh?
sri kumar.
@sri kumar
நான் தான், நல்ல இருக்கா எதுனா தப்ப இருந்தா சொல்லுங்க ஸ்ரீ.
கருத்துரையிடுக