புதன், ஜூன் 08, 2011

உதறித்தள்ளு மேலே வா

ஒரு விவசாயி ஒரு கோவேறு கழுதை வளத்துகிட்டு வந்தாரு, ஒரு நாளு அந்த கழுதை வீட்டுக்கு பின்னாடி இருந்த பாழடைந்த கிணறுக்குள்ள விழுந்துடுச்சு. விவசாயி பார்த்தாரு, உள்ள இருக்க கழுதைய வெளியே எடுக்க முடியல, கிணறும் ஆழமா இருந்தனால எதுவும் பண்ண முடியல.

அது ஒரு பாழும் கிணறு, அது எதுக்கும் ஆகாது அதனால கழுதயோட சேர்த்து கிணறை மூடிரலாம்ன்னு முடிவு பண்ணி பக்கத்துல இருந்த மண் வெட்டிய எடுத்து மண்ணை தோண்டி உள்ள போட ஆரம்பிச்சாரு.

கழுதைக்கோ வாழணும்ன்னு ஆசை, ஆனா முதலாளி மண்ணை போட்டு மூடுராறேன்னு வருத்தப்பட ஆரம்பிச்சது, கொஞ்ச நேரம் ஆச்சு கழுதை காலை மண் முடிடுச்சு, இன்னும் சும்மா இருந்தா மண்ணுக்குள போக வேண்டியதுதான்னு ஏதவாவது செய்யணும்ன்னு நெனைச்சுக்கிச்சு.

மேல இருந்த மண்ணை உதறி தள்ளுச்சு அப்பறம் காலை மேல தூக்கி வச்சுச்சி. கழுதையால மண்ணு மேல ஏறி நிக்க முடிஞ்சது. இனி இதையே செய்யலாம்ன்னு முடிவு பண்ணுச்சு. மேல விழுற மண்ணை உதறி தள்ளி கொஞ்சம் கொஞ்சமா மேல வர ஆரம்பிச்சது. கொஞ்ச நேரத்தில, மண்ணு கிணறு மேல வரை மண்ணு நிரஞ்சுடுச்சு, கழுதையும் வெளியே வந்துடுச்சு.

நீதி

வாழ்க்கையும் இப்படித்தான் சில நேரம் பிரச்சனை என்னும் மண்ணை நாம் மேல் போடலாம், வலி இருந்தாலும் எல்லாமே கொஞ்ச நேரம் தான், நாம் அதை கண்டு அஞ்சாமல் பிரச்சனைகளை உதறி தள்ளி விட்டு மேலே வர வேண்டும்.

7 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தம் மீது விழும் புழுதிகளை தூரம் தள்ளி எழவேண்டும்....

அருமையான நீதிக்கதை..
வாழ்த்துக்கள்..

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

தமிழ்மணத்தில் உங்கள் ஓட்டையும் பதிவு செய்யுங்கள்..

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர்
நன்றி சௌந்தர்
ஓட்டு போட்டுட்டேன்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கத கத ம் ம்

நிரூபன் சொன்னது…

முயற்சி உடையார், இகழ்ச்சி அடையார் எனும் ஆன்றோர் வாக்கினை மெய்ப்பிக்கும் வண்ணம் உங்களின் தத்துவ- நீதிக் கதை இருக்கிறது சகோ.

அருமையான கதை சகோ.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

நன்றி அண்ணே,

இது ஒண்ணும் கதம் கதம் இல்லையே!!?? :(

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@நிரூபன்
நன்றி சகோ.

இடுகைகளை இ-மெயிலில் பெற