வெள்ளி, நவம்பர் 18, 2011

காலையில பட்டினி கிடந்து உடம்பை குறைக்கிறீங்களா - உஷார்

இன்னைக்கு இருக்க அவசர உலகத்தில நிறைய பேரு காலை உணவை சரியா எடுத்துக்கிறது இல்லை, சிலர் எடுத்துக்கிறதே இல்லை.   அதனால என்ன ஆகும்ன்னு கேக்குறீங்களா?  பக்கவாதம், மாரடைப்பு மற்றும் திடீர் மரணம். இது மிரட்டுறதுக்காக சொல்லலைங்க. சமீபத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்லுது. இது மாதிரி அசம்பாவிதங்களை தடுக்க இந்த காலை உணவு உதவி செய்யுதுன்னு  ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது.   அதோட காலை உணவு தான் அந்த நாளோட முக்கியமான உணவுன்னும் சொல்றாங்க.

அவங்க ஆராய்ச்சியோட முடிவு என்ன சொல்லுதுன்னா மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம்  எல்லாம் காலை 8  மணியிலிருந்து 10  மணிக்குள்ள அதிகம் ஏற்படுறதாம். அதுக்கு காரணம் பிளட்லெட் என்கிற ரத்ததில இருக்க ஒருவகை உயிரணுக்கள் ரொம்ப ஆக்டிவா இருக்குமாம். இதோட வேலை ரத்தத்தை கெட்டிப்படுத்துறது. அதாவது உடம்புல எங்கையாவது காயம் பட்டு ரத்தம வந்து கொஞ்ச நேரத்தில கெட்டி ஆயிடும் அதுக்கு காரணம் இந்த பிளேட்லட். 

இது காலையில ஆக்டிவா இருக்குறதால, தமனிக்குள்ள கொழுப்புகள் மூலமா உள்ள நுழைஞ்சு அங்கே இருக்குற ரத்தத்தை உறைய வைச்சுடுதாம், அதனால தான் மாரடைப்பு, பக்கவாதம்  திடீர்ன்னு ஏற்படுத்துன்னு சொல்றாங்க. சரி அதுக்கும் காலையில சாப்பிடுறதுக்கும் என்ன சம்மந்தம்ன்னா நீங்க சாப்பிடுற உணவு இந்த பிளேட்லட் ஆக்டிவேஷன குறைக்குதாமா, அதனால மாரடைப்பு பக்கவாதம் வர்றது தவிர்க்கப்படுத்துன்னும் சொல்றாங்க.

உடம்பு வெயிட் போட்டுருக்கு உடம்பை குறைக்கணும் இல்லை ஆஃபிஸ் தூரமா இருக்கு சீக்கிரம் போகணும் இப்படி நிறைய காரணம் சொன்னாலும் காலையில உணவை தவிர்க்க கூடாதுங்க, அட்லீஸ்ட் 2 வாழைப்பழம் சாப்பிட்டு போனா 2 மணி நேரம் தேவையான சக்தி உடம்புக்கு கிடைக்கும்.

அதனால நண்பர்களே காலை உணவை தவிர்க்காதீங்க.

இன்னைக்கு காலையில ஒரு கட்டுரை படிச்சேன் நம்ம கழுகு இணைய தளத்தில, அதுல மைதா மாவு எப்பிடி தயாரிக்கிறாங்கன்னு விரிவா எழுதி இருக்காங்க.  மைதா மாவு நீரிழிவு நோய்க்கு எப்பிடி வழி செய்யுதுன்னும் சொல்லி இருக்காங்க. அதை படிச்சதுக்கு அப்பறம் பப்ஸ் திங்க கூட பயமா இருக்கு.  நீங்களும் படிச்சு பாருங்களேன். http://www.kazhuku.com/2011/11/blog-post_18.html

இன்றைய சிந்தனை

1.    சூழ்நிலைக்கு ஏற்ப எந்த ஒரு முடிவையும் எடுக்க துணிந்தவரே சிறந்த தலைவர்.

2.    தொழிலாளியிடம் மட்டும் அல்ல முதலாளியிடமும் இருக்க வேண்டியது விசுவாசம்

3.    மறுதலிப்பது நேர்மையற்ற செயல் அல்ல, ஆனால் கீழ்படியாமை நேர்மையற்றது

16 கருத்துகள்:

rufina rajkumar சொன்னது…

enathu vetha vaakku:
you must know when to say "NO"
and how to say "NO"

சென்னை பித்தன் சொன்னது…

காலை உணவுதான் மிக முக்கியம் என்று சொல்வார்கள்.அதை வலியுறுத்திச் சொல்லியிருக்கிறீர்கள். நன்று.

suryajeeva சொன்னது…

உங்களுக்கு பப்ஸ் எனக்கு பிரட் தின்னவே பயமா இருக்கு...
ஆனாலும் காலையில் கண்டிப்பா சாப்பிடனும் என்று பெரியவர்கள் சொன்னாலும் ஏன் என்ற கேள்வி குடைந்து கொண்டே இருந்தது..
இன்றைக்கு உங்களால் அந்த பதில் கிடைத்தது

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமையான தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி.

கனவின் பயணம் சொன்னது…

Kalakkure machaan. enakkakave ellam eluthina maathiri irukku!

தமிழ்வாசி - Prakash சொன்னது…

காலை உணவு மிக முக்கியமானது. பகிர்வுக்கு நன்றி.


நம்ம தளத்தில்:
சின்ன பீப்பா, பெரிய பீப்பா: இரண்டு பெண்களின் அரட்டைக் கச்சேரி

K.s.s.Rajh சொன்னது…

அருமையான தகவல் பாஸ் நான் கூட காலை உணவில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை

K.s.s.Rajh சொன்னது…

இனி காலை உணவை உண்டுவிட்டுதான் மறுவேலை

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள உண்மைதான்....கஞ்சியாவது எடுத்துக்கனும்யா!

பாலா சொன்னது…

கண்டிப்பாக காலை உணவை தவிர்க்க கூடாது. நிறைய இளசுகள் காலை உணவை சாப்பிடுவதே இல்லை. இதனால் அல்சர் வந்து படாத பாடு பட்டு மீண்டது எனக்குத்தான் தெரியும்.

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

niraiya maanavarkal kooda thupoi seikiraarkal,avarkalukku naanum arivurai koori ullen, nanri..

r.v.saravanan சொன்னது…

காலை உணவு முக்கியம்


பகிர்வுக்கு நன்றி

விச்சு சொன்னது…

நல்ல கருத்துக்கள்.

FOOD சொன்னது…

நல்ல பகிர்வு. கழுகு தளத்தில் பல நல்ல தகவல்கள். அருமை.

M.R சொன்னது…

பயனுள்ள தகவல் நண்பரே
பகிர்விற்கு நன்றி

N.H.பிரசாத் சொன்னது…

காலைல சாப்பிடாம போனா இவ்வளவு பிரச்சனை இருக்கா? அய்யய்யோ...

இடுகைகளை இ-மெயிலில் பெற