திங்கள், நவம்பர் 14, 2011

ஸ்வீட் கொஞ்சமா எடு கொண்டாடு

இன்று உலக சர்க்கரை நோய் (நீரிழிவு) விழிப்புணர்வு தினம். (14/11/2011)

முதலில் இது ஒரு வியாதி அல்ல ஒரு குறைபாடு அவ்வளவே ஆனால் இதன் பின் விளைவுகள் உயிரை பறிக்கக்கூடியது என்பதால் அதிக கவனமாய் கண்காணிப்பில் வைத்து இருக்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமான உணவுப்பழக்கம், முறையான உடற்பயிற்சி இந்த குறைபாட்டில் இருந்து உங்களை காக்கும்

சர்க்கரை நோய் பற்றிய சில கட்டுக்கதைகளை இங்கே பார்க்கப்போறோம். 

கட்டுக்கதை 1 : சர்க்கரை உள்ளவர்கள் முற்றிலும் இனிப்பை தொடக்கூடாது

உண்மை : இது முற்றிலும் உண்மை அல்ல. டைப் 2 வகை சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்பை எடுத்துக்கொள்ளலாம்.  ஆனால் மிதமாக எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் உணவு பழக்கம் சிறந்ததாக இருக்கும் பட்சத்தில், இது உங்கள் உடல் நலத்திற்கு பெரிய தீங்கை விளைவிக்காது. முக்கியமாக இனிப்பை சாப்பிட வேண்டும் என்று இருந்தால் உங்கள் உணவின் அளவை சற்று குறைத்துக்கொள்ளலாம் #ஸ்வீட் எடு கொண்டாடு

கட்டுக்கதை 2 : சர்க்கரை அதிகம் சாப்பிட்டால் இந்த குறைபாடு வரும்

உண்மை : இது உண்மை அல்ல. இது பரம்பரை மற்றும் உங்கள் வாழ்க்கை முறை சம்மந்தப்பட்டது. குறைவாக சர்க்கரை எடுத்துக்கொண்டாலும் உங்கள் பெற்றோருக்கோ அல்லது அவரது பெற்றோர்களுக்கோ இருந்தால் உங்களுக்கு சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம். ஒரே இடத்தில் உட்கார்ந்து நீண்ட நேரம் வேலை செய்வதாலும் சர்க்கரை நோய் வரும் வாய்ப்பு அதிகம்.

கட்டுக்கதை 3  : சர்க்கரை குறைபாடு பாதிக்கப்பட்டவர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை மட்டும் உண்ணவேண்டும்

உண்மை : அப்படி அல்ல, நீங்கள் விரும்பிய உணவை உண்ணலாம், ஆனால் கொஞ்சம் கொஞ்சமாய் 7 முதல் 8  முறை எடுத்துக்கொள்ளலாம். அதன் மூலம் உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு சீராக இருக்கும் என்பது மட்டும் அல்ல கட்டுக்குள் இருக்கும். உணவிற்கு முன் அதிக நீரை எடுத்துக்கொள்வது சிறந்தது அது நீங்கள் உட்கொள்ளும் உணவின் அளவை குறைப்பதால் சர்க்கரையின் அளவும் குறைந்தே இருக்கும்


கட்டுக்கதை 4  : சர்க்கரை குறைபாடு எல்லாம் ஒரே வகையே

உண்மை : அல்ல இதில் இரண்டு வகைகள், ஒன்று உங்கள் உடம்பில் இன்சுலின் இயற்கையாகவே குறைவாக இருக்கும்,  இந்த வகையை சேர்ந்தவர்கள் வாழ்நாள் முழுவதும் இன்சுலின் மருந்தை தினமும் ஏற்றிக்கொள்ள நேரிடும். இப்போது மாத்திரை வடிவிலும் இன்சுலின் உட்க்கொள்ளுவது பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டு இருக்கிறது இன்னும் முழுமை பெறவில்லை. இன்னொரு உங்கள் உடம்பில் இன்சுலின் எதிர்ப்பு உண்டாவது அதாவது உங்கள் உடல் சுரக்கும் இன்சுலின் முழுமையாக பயன்படாமல் போவது. பொதுவாக இந்த குறைபாடு உள்ளவர்கள் இரண்டாம் வகையை சேர்ந்தவர்களாவே உள்ளனர்

கட்டுக்கதை 5   : குண்டாக இருப்பவர்களுக்கு மட்டும் சர்க்கரை குறைபாடு வரும்

உண்மை : அல்ல, ஒல்லியாக இருப்பவர்களுக்கும் வரும்.

கட்டுக்கதை 6 : முறையாக மருந்து மாத்திரை எடுத்துக் கொள்பவர்களுக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்

உண்மை : மிக மோசமாக நம்பப்படும் ஒரு கதை இது, மாத்திரைகள் மட்டும் உங்களுக்கு உதவாது. முறையான உடற்பயிற்சி, சிறந்த உணவுப்பழக்கம் மட்டுமே சர்க்கரையை கட்டுக்குள் வைத்து இருக்கும். வெறும் மாத்திரைகள் உதவாது.

சிறந்த உணவுப்பழக்கம்ன்னு சொல்லுறீங்க அப்பிடின்னா என்னன்னு சொல்லலையேன்னு நீங்க கேக்கலாம்.  சொல்லுறேன் அதையும் நீரிழிவு இருக்குறவங்க அரிசி கோதுமை எல்லாம் சாப்பிடுறதை கொஞ்சம் குறைச்சுக்கிட்டு மானாவாரி பயிர்கள்ன்னு சொல்லுற கம்பு, சோளம் மாதிரி உணவுகளை எடுத்துக்கிட்டா நல்லது. இப்ப புல்லரிசி பத்தி (ஓட்ஸ்) நிறையா விளம்பரம் வருது, உங்கள் வருமானம் இடம் தந்தால் அதையும் எடுத்துக்கொள்ளலாம்.

இன்னுமொரு முக்கியமான விஷயம் சமைக்காத உணவுகள் உடலில் கலோரிகளை அதிகப்படுத்துவதில்லை என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  எனவே சமைக்காத காய்கறிகளை முடிந்த அளவு சாலட் போல செய்து உணவாய் சேர்த்து வர சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து இருக்கும். புரத சத்து மிக்க பயறு வகைகளை எடுத்துக்கொள்ளுங்கள்.

நீங்கள் உணவருந்து நேரத்தை மாற்றி அமையுங்கள், 2 மணி நேரத்திற்கு ஒரு முறை மிதமான (கால் வயிறு) உணவை   எடுத்துக்கொள்ளுங்கள், இடையில் பசி உணர்வு ஏற்பட்டால் பழச்சாறுகளை அருந்துங்கள் முடியாதவர்கள் தண்ணீர் குடியுங்கள்.  தண்ணீர் அதிகம் எடுத்துக்கொள்வதால் உடலில் உள்ளே இருக்கும் நச்சுக்கழிவுகள் விரைவில் வெளியேற்றப்படும்.

இத்துடன் கொஞ்சம் உடற்பயிற்சியும் (குறைந்தது அரைமணி நேர நடை) சேர்த்து செய்வதன் மூலம் உங்கள் உடலின் சர்க்கரையின் அளவு அளவாய் இருக்கும். 

இன்றைய லொள்ளு  17 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

இரத்தத்தில் சர்க்கரை இருக்கிறது என்றஉடனே தன்னை ஒரு நோயாளியாக பாவித்துக் கொள்கிறார்கள்... அந்த மனநிலை வந்துவிட்டப்பிறகு அவர்கள் அதிலிருந்து விடுபட காலமாகிறது....


பொதுவாக தாங்கள் சொன்னதுபோல் இதை குறைபாடாக பார்க்க வேண்டுமே தவிர நோயாக பார்க்ககூடாது...

அப்படி இருந்தால் இது சரிசெய்ய ஏதுவாக இருக்கும்..

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

உணைவை போதுமென்ற அளவுக்கு முன் நிறுத்திக்கொண்டு உணவில் முறையான கட்டுப்பாடு இருந்தால் யாருக்கும் தெரியாமலையே இதை சரிசெய்து விடலாம்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

என் நண்பர் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது...

ஒரு வேளை அவருடைய பெயர் சீனிசாமி.. அதனாலையோ....

செங்கோவி சொன்னது…

உபயோகமான தகவல்கள்..நன்றி.

K.s.s.Rajh சொன்னது…

சர்கரை நோயாளர்களுக்கு உபயோகமான பகிர்வு

கோவை நேரம் சொன்னது…

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்...உடற்பயிற்சியாய் கொஞ்சம் நடைபயிற்சி.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

காலத்திற்கு ஏற்ற பதிவு இது, விழிப்புணர்வு பதிவுன்னு கூட சொல்லலாம்..!!!

rufina rajkumar சொன்னது…

இந்த சர்க்கரை நோயை நினைச்சாலே கசக்குதுங்க

M.R சொன்னது…

உபயோகத் தகவல் ,நன்றி பகிர்வுக்கு நண்பரே

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள இந்தப்பதிவு நெறைய விஷயங்களை அழகா சொல்லிச்செல்கிறது...நன்றி விஷயங்கள் அறிந்து கொண்டேன்!

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இனிப்பான செய்திகள்

"என் ராஜபாட்டை"- ராஜா சொன்னது…

இன்று என் வலையில்

சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி

நிரூபன் சொன்னது…

இனிய மதிய வணக்கம் பாஸ்,

மனதில் ஐயங்களுடன் வாழும் நபர்களுக்கு மகிழ்ச்சியினை ஏற்படுத்தும் பதிவினைக் கொடுத்திருக்கிறீங்க. மிக்க நன்றி!

மகேந்திரன் சொன்னது…

நல்ல விழிப்புணர்வு ஊட்டக்கூடிய
பயனுள்ள பதிவு நண்பரே...

ராஜி சொன்னது…

வந்தப்பின் தவிப்பதைவிட, சர்க்கரை நோய் வருமுன் தெரிந்துக் கொண்டு வராமல் முன்னெச்சரிக்கையாக விழிப்புடன் இருக்க வேண்டும். நல்லதொரு விழிப்புணர்வு பதிவு. பகிர்வுக்கு நன்றி சகோ

FOOD சொன்னது…

மிகவும் அவசியமான விழிப்புணர்வு பகிர்வு.

அம்பாளடியாள் சொன்னது…

பயனுள்ள தகவல் .மிக்க நன்றி சகோ பகிர்வுக்கு ...

இடுகைகளை இ-மெயிலில் பெற