வெள்ளி, நவம்பர் 11, 2011

சின்னப்புள்ளைத்தனமா இல்ல இருக்கு

ஜட்ஜ் : ஏம்மா உங்க வீட்டுக்காரை சேரை வச்சு அடிச்ச?
பெண் : டேபிளை தூக்க முடியலே ஐயா அதான்

கஸ்டமர் : ரூம் சர்வீஸ்? எனக்கு துவட்ட ஒரு துண்டு கொண்டு வந்து தறீங்களா?
ரூம் சர்வீஸ் : கொஞ்சம் இருங்க சார் இன்னொருத்தர் துவட்டிக்கிட்டு இருக்காரு

ஒரு பேய் இன்னொரு பேய் கிட்ட என்ன சந்தேகம் கேக்கும்
இந்த மனுஷ பயலுகளை எல்லாம் நம்புறியா?

ரிசப்ஷன் : என்ன சார் ஹனிமூன் வந்து இருக்கேன்ன்னு சொல்றீங்க ஆனா தனியா வந்து இருக்கீங்க
இவர்         : என் பொண்டாட்டி ஏற்கனவே ஊட்டியை பார்த்து இருக்காங்க. அதான் நான் மட்டும் வந்து இருக்கேன்  

அவர் : இங்கே பாருங்க சிங்கம் போன தடம் தெரியுது
இவர் : ஆமா நீங்க அது எங்கே போய்கிட்டு இருக்குன்னு பாருங்க நான் அது எங்கே இருந்து வந்து இருக்குன்னு பார்க்கிறேன்

அவர் : என் பொண்டாட்டிக்கு என்ன வேணும்ன்னே தெரியாது
இவர் : நீங்க குடுத்து வைச்சவரு என் பொண்டாட்டி அப்படி இல்லை

மேனேஜர் : தம்பி ஒரே நேரத்தில நிறைய வேலை வந்தா சமாளிச்சுடுவியா?
இவன் :  அதெல்லாம் அனுபவம் இருக்கு சார், நான் கடந்த மூணு மாசத்தில 12 கம்பெனி மாறியிருக்கேன்.

ஜட்ஜ் : என்னம்மா உங்க வீட்டுக்காரருக்கு இப்பயாச்சும் டைவர்ஸ் குடுத்துடலாமா?
பெண் : 15 வருஷம் இந்த மனுசனோட குடும்பம் நடத்தி இருக்கேன். அவரு இப்பதானே டைவர்ஸ் கேக்குறாரு இன்னும் கொஞ்சம் நாள் கழிச்சு தரலாம்

ஒரு சாஃப்ட்வேர் எஞ்சீனியர் தம் அடிச்சுக்கிட்டு இருந்தாரு. அந்த பக்கம் வந்த பொண்ணு

பெண் : ஏங்க சிகரட் பிடிக்கிறது உடல் நலத்திற்கு கெடுதின்னு பாக்கெட் மேலேயே வார்னிங்க்ன்னு போட்டு இருக்காங்களே நீங்க படிச்சு பாக்குறது இல்லையா?  
சா.எ. : நாங்க எரர் (error) வந்தா தான் கவலைபடுவோம் வார்னிங்க்கை எல்லாம் கண்டுக்கிறது இல்லை   

அவர் : எங்க சோகமா இருக்கீங்க
இவர் : என் பொண்டாட்டி 30 நாள் பேசமாட்டேன்னு சொல்லிட்டா
அவர் : அதுக்கு சந்தோசப்படாம ஏன் சோகமா இருக்கீங்க
இவர் : அதுவா இன்னைக்கு தான் 30 வது நாள் 

இன்றைய லொள்ளு 

ஓட்டு போட்ட எல்லோருக்கும் சமர்ப்பணம்  


15 கருத்துகள்:

N.H. Narasimma Prasad சொன்னது…

நகைச்சுவை துணுக்குகள் மிக அருமை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

N.H. Narasimma Prasad சொன்னது…

நகைச்சுவை துணுக்குகள் மிக அருமை நண்பரே. பகிர்வுக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் சொன்னது…

நன்றாக சிரிக்க வைத்த நகைச்சுவை துணுக்குகள்..

பகிர்வுக்கு நன்றி..

SURYAJEEVA சொன்னது…

படம் சூப்பர்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹா ஹா ஹா ஹா அந்த சிங்கம் கதைதான் சூப்பர் டூப்பர் ஹா ஹா ஹா மனசுவிட்டு சிரிக்க வச்சுடுச்சு ஹா ஹா ஹா...!!! என்னமா பில்டப்பு குடுத்து தப்பிக்க பாக்குறான்ய்யா...

ராஜா MVS சொன்னது…

நகைச்சுவை எல்லாம் சூப்பர்... பாஸ்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

All Joks Super...

சென்னை பித்தன் சொன்னது…

ஹா,ஹா,ஹா.சூப்பர் ஜோக்ஸ்.

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி.... சிரிப்பு துணுக்குகள் சூப்பர்

நம்ம தளத்தில்:
மெக்கானிகல் துறையினருக்கான தொடர்...! சிஎன்சி (CNC PROGRAMMING & OPERATIONS) PART- 11

M.R சொன்னது…

நகைச்சுவை அருமை தொகுப்பு நண்பரே

பெயரில்லா சொன்னது…

சிரிக்க வைத்த நகைச்சுவை துணுக்குகள் நண்பரே...

ADMIN சொன்னது…

நல்லதொரு 'கலகல'ப்பான சிரிப்பை வரவழைத்த பதிவு..நன்றி!



எனது வலையில் இன்று:

மாவட்டங்களின் கதைகள் - தூத்துக்குடி மாவட்டம்(Thoothukudi)

நேரமிருக்கும்போது தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!

செங்கோவி சொன்னது…

நிறைய வேலை வந்தா எப்படிச் சமாளிக்கிறதுன்னு தெரிஞ்சுக்கிட்டேன்..நன்றி.

Unknown சொன்னது…

என்னதான் சொல்லுங்க மாப்ள அந்த தலையில்லா படம்தான் டாப்பு ஹிஹி!

நிரூபன் சொன்னது…

நறுக்கென்று மனதில் பதியும் குறு குறு ஜோக்ஸ் மச்சி

ரசித்தேன்!