திங்கள், அக்டோபர் 31, 2011

இதுக்கு பேரு தான் மாத்தியோசி

ஒரு சிறுகதை போட்டிக்கு அறிவிப்பு வந்து இருந்துச்சு. கதையில மதம், செக்ஸ், மர்மம் அப்புறம் அதுல ஒரு புரியாத விஷயம் இல்ல ரகசியம் இருக்கணும் இது தான் கண்டிஷன். இருக்குறதுலயே சின்ன கதை வெற்றி பெறும் அப்பிடின்னு சொல்லிட்டாங்கா. 

ஒரு சர்தார்ஜி கதை எழுதி அனுப்பினாரு. கதை இதுதான்

"கடவுளே என் மனைவிக்கு குழந்தை பிறக்கப்போகுது" 

போட்டிக்கான கடைசி தேதி முடிஞ்ச ஒரு வாரத்துல போட்டி வச்சவங்க கிட்ட இருந்து ஃபோன்.

"இருக்குறதிலேயே உங்க கதை தான் சிறுசு. நீங்க அதை விளக்க முடியுமா?"

சர்தார்ஜி விளக்க ஆரம்பிச்சாரு

"கடவுள் - மதம்

மனைவி - செக்ஸ்

குழந்தை பிறக்கப்போகுது - மர்மம் (என்ன குழந்தைன்னு)"

"சரி புரியாத விஷயம் இல்ல ரகசியம் என்ன?"

"ஓ அதுவா அந்த குழந்தைக்கு அப்பா யாருன்னு?"

=========================================================================

BMW 760 LI - ரூ 5000 மட்டும் விளம்பரத்தை பார்த்த உடனே குஷியான சர்தார் அந்த விளம்பரத்தில இருந்த நம்பர்க்கு ஃபோன் பண்ணினாரு

"எப்ப வந்து காரை வாங்கிகிடலாம்?" ன்னு கேட்டார்..

"சாயந்தாரம் 5 மணிக்கு வாங்க .."

சாயந்தாரம் 5 மணி சொன்ன மாதிரி சர்தார் காசை எடுத்துக்கிட்டு அவங்க சொன்ன அட்ரெஸ்க்கு போனார். எல்லாம் சுமூகமா முடிஞ்சுடுச்சு

"இந்த காரு ரொம்ப விலை ஜாஸ்தியாச்சே. 5000 ரூவாயிக்கு ஏன் விக்கிறீங்க?"

"அதுவா ஏன் புருஷன் அந்த செகேரட்டரியோட ஓடிப்போயிட்டான். அவன் தான் ஃபோன் பண்ணி இந்த காரை வித்து வர்ற காசை எல்லாம் எனக்கு அனுப்பி வைன்னு சொன்னான் அதான்"

=========================================================================

அவர்      : உங்க கிராமத்தில பிறந்த பெரிய மனுஷன் யாருங்க?
சர்தார் : எங்க ஊர்ல பிறக்கும் போது எல்லோரும் குழந்தையா தான் இருப்பாங்க

அவர்   :    காலிங் பெல் ரிப்பைர் பண்ணனும்ன்னு நாளு நாளைக்கு முன்னே உன்னை கூப்பிட்டு சொன்னேன் இன்னும் ஏன்யா வரலை?
சர்தார : நாளு நாளா உங்க வீட்டுக்கு வந்து பெல் அடிச்சுக்கிட்டே இருக்கேன் யாரும் வந்து கதவை தொறக்கலியே!!?




இன்றைய லொள்ளு


15 கருத்துகள்:

கோகுல் சொன்னது…

ஓ!இப்படியும் மாத்தி யோசிக்கலமோ?
ஹி ஹி!

ஆனால் சர்தார்கள் ஜோக்குகளில் மட்டும் தான் இப்படி யோசிக்கிறார்கள் என நினைக்கிறேன்!சரியா?

சக்தி கல்வி மையம் சொன்னது…

சர்தார்ஜி ஜோக்கு எப்பவுமே எவர்கிரீன் தான், சூப்பர்.,

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

சிரித்தேன் நண்பா...

M.R சொன்னது…

முதல் நகைச்சுவை அருமை ,கடைசி படம் அருமை நகைச்சுவை படித்தேன் ,ரசித்தேன் ஹா ஹா ஹா

N.H. Narasimma Prasad சொன்னது…

ரசிக்கத்தகுந்த பதிவு. பகிர்வுக்கு நன்றி.

மகேந்திரன் சொன்னது…

மாத்தி யோசிக்கலாம்
ஆனால் யோசித்தபின் மாத்தகூடாது...
ரசித்து சிரித்தேன் நண்பரே...

rajamelaiyur சொன்னது…

இன்றைய லொள்ளு சூப்பர்

SURYAJEEVA சொன்னது…

உங்கள் கற்பனை கதாபத்திரங்களுக்கு இனிமேல் சர்தார்ஜிக்களை தவிர்த்து விட்டு ஏதாவது புதுசாக உருவாக்கலாம் என்பது என் எண்ணம்...

கூடல் பாலா சொன்னது…

முதல் ஜோக் செம காமெடி !

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

சர்தார்ஜி கதை சின்னதா இருந்தாலும் கலக்கலா இருக்கு... ஹி..ஹி...

விச்சு சொன்னது…

நல்ல கதை... ஹாஹாஹா

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

நல்ல நகைச்சுவையாக உள்ளது.

பாலா சொன்னது…

முதல் ஜோக்கே அட்டகாசம்... அனைத்தும் அருமை.

நிரூபன் சொன்னது…

இனிய காலை வணக்கம் பாஸ்,
நலமா?
தீபாவளி எல்லாம் எப்படி இருந்திச்சு?

ஐயாயிரம் ரூபா கார் மேட்டர் நிஜமாகவே மாத்தி யோசித்திருக்கிறீங்க.
ஏனைய விடயங்களும் ஓக்கே பாஸ்...

ராஜா MVS சொன்னது…

அனைத்தும் அருமை.....