திங்கள், அக்டோபர் 10, 2011

புதிய தென்றல் - (சவால் சிறுகதைப் போட்டி –2011)

மங்களகரமாய் நடந்து கொண்டு இருந்தது அந்த கல்யாணம், உற்றார் உறவினர் யாருமில்லை ஆயினும் நண்பர்கள் உடன் இருக்க இன்னும் சில நிமிடங்களில் தம்பதி சமேதராய் ஆகப்போகும் சந்தோஷம் ராஜூவுக்கும் உஷாவுக்கும்.  ஐயர் மந்திரங்களை உச்சரித்துக்கொண்டே நண்பர்கள் மாப்பிளையை நச்சரித்துக்கொண்டே இருக்கும் போது கோவில் வாசலில் சலசலப்பு. 

"போலீஸ் வருது ராஜு" - வசந்த் சொன்னான்

"நீ பயப்படாதே நாங்க இருக்கோம்.  நீங்க ரெண்டு பெரும் மேஜர் யாரும் எதுவும் செய்ய முடியாது" - இது விஷ்ணு

"ஐ ஆம் சாரி ராஜு, உங்களை தொல்லை பண்ணுறோம்ன்னு நினைக்காதீங்க நேத்து காலையில உங்கப்பா ரகுவை யாரோ மர்டர் பண்ணியிருக்காங்க. உங்களை டிரேஸ் பண்ணி கண்டு பிடிக்க இவ்வளவு நேரம் ஆகி இருக்கு.  எங்களுக்கு உஷா மேல கொஞ்சம் சந்தேகம் இருக்கு, கொஞ்சம் விசாரணை பண்ணனும்"  - சொன்ன இன்ஸ்பெக்டர் கருணா தொடர்ந்தார்  "இனி நீங்க தான் சொல்லணும் நாங்க எப்ப எங்க விசாரணை பண்ணனும்ன்னு"

"சார் S.P. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்து இருக்கிறேன் கவலை வேண்டாம்"   நேற்று வந்த SMS ஐ டெலீட் செய்து  கொண்டே "சரி இப்ப கல்யாணம் முடியட்டும் அப்புறம் சென்னைக்கு போய் விசாரணையை துவங்கலாம் என்ன சொல்லுற ராஜூ?"  - கேட்டார் மேனேஜர் பாபு

கண்கள் கலங்கி இருந்தாலும் மனம் கலங்காமல் "பாபு சார் சொல்லுறது மாதிரியே செய்யலாம. அது சரி நீங்க எப்பிடி உஷாவை சந்தேகப்படுறீங்க?"

"எங்ககிட்ட அதுக்கான ஆதாரம் இருக்கு"

ஆறு மாதங்களுக்கு முன்

"நான் பெத்த பிள்ளை இப்பிடி என் நெஞ்சுல இடி அள்ளி போடுதே,  ஏண்டா இப்பிடி பண்ணினே?"  அழுத படி கேட்டாள் ராஜூவின் அம்மா

"நாங்க உனக்கேத்த பொண்ணா பார்க்கமாட்டோம்ன்னு நினைச்சியா ராஜு? அதுவும் ஒரு தராதரம் இல்லாத பொண்ணை போயி பார்த்து இருக்கியே உனக்கு வேற பொண்ணே கிடைக்கலயா?"  இது அக்கா

ரகுவின் வருகையால் அமைதியானது வீடு, அம்மாவின் விம்மல் மட்டும் இன்னும்

"என்னாச்சு?" கணீர் குரலில் ரகு கேக்க

"என்னான்னு சொல்லுவேன்" தொடங்கிய அம்மா தயங்கிய படியே சொல்லி முடிக்க

ரகு கொஞ்ச நேரம் அமைதியாய் இருந்தார்

"ராஜு..  அந்த பொண்ணை நாளைக்கு வீட்டுக்கு அழைச்சுட்டு வா" சொல்லிவிட்டு அவர் அறைக்கு சென்றுவிட்டார்

மறுநாள்

"சொல்லும்மா உன்னைப்பத்தி, உங்க குடும்பத்தை பத்தி நானும் கொஞ்சம் தெரிஞ்சுக்கிறேன்? சொன்ன ரகு திரும்பி ராஜூவை பார்த்து "ராஜு நீ கொஞ்சம் வெளியே இரு"

கொஞ்ச நேரத்தில் கலங்கிய கண்ணீரோட வெளியே வந்த உஷா ராஜுவை பார்த்தும் பார்க்காமல் விறுவிறுவென வெளியேறினாள்.

"என்னப்பா ஆச்சு" உள்ளே வந்த ராஜு ரகுவைப்பார்த்து கேட்டான்

"அவளுக்கு புரிய வைக்க வேண்டியது எல்லாம் புரிய வச்சுட்டேன்"

"நீங்க அவகிட்ட என்ன சொன்னீங்கன்னு எனக்கு தேவை இல்லை, எங்க கல்யாணத்தை நீங்க நடத்தி வைக்கப்போறீங்களா இல்லையா?"

ராஜூவிற்க்கு பதில் ஏதும் சொல்லாமல் "நான் ஆஃபிஸ்க்கு கிளம்புறேன் அம்புஜம்" மனைவியிடம் சொல்லிவிட்டு புறப்பட்டார் ரகு.

"சொல்லுங்க ரகு இந்த கொலையை யார் செஞ்சு இருப்பாங்க நீங்க நினைக்கிறீங்க?" கருணா

"எனக்கு தெரியல, நான் அப்பா கூட பேசி ஒரு வாரம் ஆச்சு,    கடைசியா உஷா எங்க வீட்டுக்கு வந்த அன்னைக்கு பேசுனுதுதான், அதுக்கப்பறம் நா வீட்டுல கூட தங்கலை வேணும்மின்னா எங்க மேனேஜர் பாபு கிட்ட கேட்டுப்பாருங்க நான் அவன் ரூம்-ல தான் தங்கி இருந்தேன். நாங்க திருப்பதி வந்தும் இன்னையோட மூணு நாள் ஆய்டுச்சு வேணும்ண்ணா நாங்க தங்கி இருந்த ஹோட்டல் ரிஜிஸ்டர்-ஐ செக் பண்ணி பாருங்க" 

"அப்ப நீங்க தான் உங்க அப்பாவை தீர்த்துக்கட்ட ஆள் ஏற்பாடு செஞ்சீங்களா"?

"மொதோ உஷான்னு சொன்னீங்க இப்ப நான்தான் திட்டம் போட்டேன்னு சொல்றீங்க, எங்கப்பா அப்பிடி என்னை வளக்கலை"

"உங்க கல்யாணத்தில உங்கப்பாவுக்கு இஷ்டம் இல்லை அப்படித்தானே?"

"ஆமா சார்"

"அவர் செத்தா தான் உங்க கல்யாணம் நடக்கும்னு நெனைச்சு இப்படி செஞ்சு இருக்கலாம் தானே?"

"bullshit உங்க கற்பனை எல்லை மீறுது, உங்களால் கண்டுபிடிக்க முடியலேன்னா யார் மேல வேணா பழி போடுவீங்களா?"

"இல்ல மிஸ்டர் ராஜு உங்கப்பா இறந்த கொஞ்ச நேரத்தில உங்க நண்பர் விஷ்ணு எஸ்‌பி கோகுலுக்கு அனுப்புன எம்‌எம்‌எஸ் உங்க மேல சந்தேகம் வர காரணம்" 

"அப்பிடி என்ன MMS?"

"MR கோகுல்

S W H2  6F இது தான் குறியீடு கவனம்" - விஷ்ணு  

"இங்க இமேஜ்-ல இந்த பிளாஸ்டிக் கார்ட்-ஐ பாருங்க அதுல இருக்க S W H2  6F இந்த நம்பர் என்னன்னு உங்களுக்கு தெரியுமா?" 

"தெரியலையே"

"உஷா கிட்ட கேளுங்க"

"உஷா இது என்ன நம்பர் உனக்கு தெரியுமா? "

"இது இது என் பாங்க் லாக்கர் கோட். என்னோட சம்பளத்தில வாங்குன நகை எல்லாம் இதுல தான் இருக்கு" 

"இது உங்கப்பா பெட்க்கு கீழே இருந்து தான் போட்டோ எடுத்து அனுப்பி இருக்கார் விஷ்ணு" 

"இருக்காது இது லாக்கர் சாவியோட சேர்த்து தான் வச்சு இருக்கேன் இருங்க என் பேக்-ல இன்னும் இருக்கு, இதோ பாருங்க"

லாக்கர் சாவியை பார்த்த கருணா கொஞ்சம் குழப்பத்துடன் S.P. கோகுலை மொபைல் போனில் தொடர்பு கொண்டார்

"சார் நாம சந்தேகப்பட்டது மாதிரி இந்த கொலையை அவங்க செஞ்சு இருக்க மாதிரி தெரியலை சார்"

"எதை வச்சி சொல்லுறீங்க கருணா"

"அவங்க காலை 6 மணியில இருந்தே கோயில்ல தான் இருக்காங்க, கொலை நடந்தது 6 : 15 க்கு, அதுவும் இல்லாமா நாம க்ளூ-வா நினைச்ச அந்த பிளாஸ்டிக் கார்ட்-ல ஏதோ தப்பு நடந்து இருக்கு"  

"சரி நான் கிளம்பி ஸ்டேஷன்க்கு வர்றேன்.  நீங்க கலெக்ட் பண்ண எவிடெண்ஸ் எல்லாம் பிரிண்ட்அவுட் எடுத்து வையுங்க. அப்பறம்  ஜி‌எச்க்கு போயி போஸ்ட் மர்ட்டம் ரிபோர்ட் வாங்கிட்டு வாங்க, அப்பிடியே அந்த விஷ்ணுவை ஸ்டேஷனுக்கு வரச்சொல்லுங்க. "



போலீஸ் ஸ்டேஷன்

எவிடெண்ஸ்களை பார்த்துக்கொண்டு இருந்தார் கோகுல் அப்போது மொபைல் அழைக்க எடுத்தார் VISHNU INFORMER Calling .






"சொல்லுங்க விஷ்ணு"

"சார் நான் கொஞ்சம் வர லேட் ஆகும் ஆஃபிஸ் வரை போக வேண்டி இருக்கு முடிஞ்ச அளவு சீக்கிரம் வந்துடுறேன்"

"சரி சீக்கிரம் வந்துடுங்க"

"ஏதாவது சாப்பிடுறீங்களா, காலையில இருந்தே ஒண்ணும் சாப்பிட்டு இருக்க மாட்டீங்க மணி இப்ப நாலு ஆச்சு"

"சரி சார்"

"ரெண்டு சாப்பாடு வாங்கிட்டு வாய்யா வாசலில் இருந்த கான்ஸ்டபிள்-ஐ அனுப்பினார். நல்ல சாப்பாடா வாங்கிகிட்டு வா இது கல்யாண சாப்பாடு" - கோகுல்

கொஞ்சம் வெயிட் பண்ணுங்க ரிபோர்ட் இப்ப வந்துடும், உங்க மேல இருக்க சந்தேகம் தீர்ந்துடுச்சுன்னாலும்  எப்ப நாங்க விசாரணைக்கு வரணும்

"விஷ்ணு..  இந்த பிளாஸ்டிக் கார்டை எங்க இருந்து எடுத்தீங்க?" 

"ராஜு அப்பாவோட பெட்டுக்கு கீழே இருந்து சார்"

"சரி ரகு இப்ப எங்கே இருக்காரு? அதை மட்டும் சொல்லிடு உன்னை விட்டுடுறேன்"

"என்ன கேக்குறீங்கன்னு எனக்கு புரியலை" 

"இந்த கொலையை பத்தி போலீஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணது யாரு?"

"நான் தான் சார்"

"நீ எதுக்கு நேத்து காலையில ராஜூ வீட்டுக்கு போனே?"

"அது வந்து வந்து..."

"சொல்லு உண்மையை சொல்லு இல்லை உள்ள தள்ளி முட்டிய பேத்துடுவேன்"

"டாய் எங்கப்பாவை கொன்னுட்டு உஷா மேல பழி போட பார்த்திய ஏண்டா இப்டி பண்ணே?"

பாய்ந்த ராஜூவை அமைதிபடுத்தினார் கோகுல்

"கொஞ்சம் அமைதி ராஜூ உங்கப்பா சாகலை"

"என்ன சொல்றீங்க சார்?"

"யெஸ் அவர் இன்னும் உயிரோட தான் இருக்கார், இப்ப விஷ்ணுவே உண்மைய சொல்லுவான், சொல்லு விஷ்ணு என்ன நடந்துச்சு"

"சொல்லிடுறேன் சார்"

"ராஜூ அவங்க வீட்டுக்கு ஒரே பையன், அவன் உஷாவை கல்யாணம் பண்ணிக்கிறது அவருக்கு புடிக்கலை,  உஷாகிட்ட அதை வெளிப்படையாவும் சொல்லிட்டாரு. ஆனாலும் ராஜூவை கண்வின்ஸ் பண்ண முடியல. அவன் இன்னைக்கு கோயில்ல கல்யாணம் பண்ணப்போறான்னு தெரிஞ்சு துடிச்சு போயிட்டாரு. இந்த கல்யாணத்தை எப்பிடியாவது நிறுத்திடணும்ன்னு அவர் எனக்கு முந்தாநேத்து ராத்திரி  எனக்கு ஃபோன் பண்ணினார்

"விஷ்ணு,  ராஜூ பண்ணுறது எனக்கு புடிக்கலை, இந்த கல்யாணம்  நடக்கக்கூடாது"

"என்ன பண்ணனும்ன்னு சொல்லுங்க செஞ்சுடுறேன்"

"எனக்கும் என்ன செய்யுறதுன்னு தெரியல, ஆனா இந்த கல்யாணம் நடக்கக்கூடாது" 

"அப்ப நீங்க செத்துடுங்க"

"என்ன சொல்லுற விஷ்ணு"

"பயப்படாதீங்க சார் நிஜமா இல்ல சும்மா, அதாவது உங்க சைஸ்-ல ஒரு டெட் பாடி-ய உங்க ரூம்-ல உங்க டிரஸ் மாட்டிவிட்டு போட்டுடுவோம், மொகத்த கொஞ்சம் சிதைச்சு விட்டுட்டா அடையாளம் தெரியாது. பழியை அந்த பொண்ணு மேல போட்டுடலாம் என்ன சொல்றீங்க? " 

"நீ சொல்லுறதும் சரிதான்,  போன வாரம் அந்த பொண்ணு என்னை பார்க்க வரும்போது ஒரு சாவியை ஏன் கையில் குடுத்து " இது என் லாக்கர் சாவி 50 பவுன் நகையை சேர்த்து வச்சு இருக்கேன்"ன்னு சொன்னா. அந்த கார்ட்-ஐ எப்பிடியாவது என் பெட்டுக்கடியில போட்டுட்டா எல்லோரும் அந்த பொண்ணை மட்டும் தான் சந்தேகப்படுவாங்க"

"சரி சார் அப்பிடியே செஞ்சுடுவோம்"

அப்பறம் அவர் சொன்ன மாதிரியே செட்டப் செய்துட்டு போலீஸ்க்கு தகவல் குடுத்தேன் 

"அது எல்லாம் சரி அந்த பிளாட்டிக் கார்ட்-ல இருந்த எழுத்தில கடைசி எழுத்து மட்டும் ஏன் மாத்துன" 

அது வந்து சார் "பாபு சார் சொன்னார்ன்னு... "

"என்ன சொன்னார்? முழுசா சொல்லு "

"ராஜூவோட அப்பா பேசி முடிச்சதுக்கப்பறம், நான் எங்க மேனேஜர் சார் கிட்ட விசயத்த சொன்னேன்" 

"இப்ப என்ன சார் பண்ணுறது உஷாவும் பாவம்"

"சரி அந்த கார்ட்-ல என்ன எழுதி இருந்துச்சுன்னு சொன்னே"  

"S W H2  6P"

"சரி அந்த கடைசியா இருக்க P-ஐ F-ஆ  மாத்திடு"

இது தான் சார் நடந்துடுச்சு

"சரி ராஜூ இனி இந்த கேஸ்-ல என்ன செய்யனுமோ அதை நாங்க பார்த்துக்கிறோம். நீங்க ஜாலியா உங்க கல்யாண வாழ்க்கையை ஆரம்பியுங்கள் வாழ்த்துக்கள். "

சொன்ன கோகுலிடம்

"தாங்யு சார்" சொல்லியபடி வெளியே வந்தனர் ராஜூவும் உஷாவும்

16 கருத்துகள்:

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

போட்டிக்கா ...வாழ்த்துக்கள் .

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

இதென்னா தெரியாம ராஜேஷ்குமார் கிரைம் நாவலுக்குள்ளே வந்துட்டோமொன்னு தோணிடுச்சு....கலக்கல்...!!!

சக்தி கல்வி மையம் சொன்னது…

கதை சூப்பர்.,
வாழ்த்துக்கள்..

ராஜி சொன்னது…

கதை சூப்பர். கடைசி வரை சஸ்பென்ஸை கொண்டு போனது அருமை. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

rajamelaiyur சொன்னது…

நல்ல கிரைம் கதை

rajamelaiyur சொன்னது…

அருமையான கிளைமாக்ஸ்

K சொன்னது…

விறுவிறுப்பான கதை! வெற்றி பெற வாழ்த்துக்கள்! ரமேஷ்!

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

ரொம்ப நாள் கழிச்சு ஒரு கிரைம் கதை படிச்சேன்... பகிர்வுக்கு நன்றி.

ஆமினா சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோ

செங்கோவி சொன்னது…

விறுவிறுன்னு கொண்டு போயிருக்கீங்க..வெற்றி பெற வாழ்த்துகள்.

'பரிவை' சே.குமார் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துக்கள்!

கோகுல் சொன்னது…

எழுத்துக்களில் விறு விறு கதை சுறு சுறு .வெற்றி காண வாழ்த்துக்கள்!

பெயரில்லா சொன்னது…

விறுவிறுப்பான கதை ரமேஷ்...
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

நிரூபன் சொன்னது…

மீண்டும் வணக்கம் பாஸ்.

நான் சொல்வதில் தவறு என்றால் என்னை மன்னிக்கவும்,.


கதை நகர்வு, திரிலிங்குடன், ஒரு கிரைம் ஸ்டோரியை நகர்த்திய விதம், மொழி நடை, வேண்டிய இடங்களில் ஏற்ற இறக்கம் அனைத்தும் அருமை.

ஆனால் கதையில் போட்டோ எங்காவது ஒரு இடத்தில் பொருந்தி வர வேண்டும் என உடான்ஸ் சொல்லியிருக்கே.
இதனை நீங்க தவற விட்டிருக்கிறீங்க என்று நினைக்கிறேன்.

காரணம் இப் பதிவில் போட்டோ இல்லையே.

Unknown சொன்னது…

@நிரூபன்

நன்றி நிரூ..

இது அந்த போட்டோவில் இருந்த க்ளுவை மையமாக வைத்து எழுதிய கதை, என்னுடைய தவறான புரிதலே காரணம் அடுத்து வரும் கதைகளில் போட்டோவை வைத்து எழுதுகிறேன்..

Unknown சொன்னது…

கதை நல்லா இருக்கு.
வாழ்த்துகள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html