புதன், மார்ச் 30, 2011

கீதா

நாம் ஏன் பகவத் கீதையை படிக்க வேண்டும், நமக்கு சமஸ்கிருதம் தெரியாதே!! இருந்தும் படிப்பதன் அவசியம் என்ன வந்தது. கீழே வரும அழகிய கதையை படியுங்கள்

ஒரு ஊரில் ஒரு சிறுவன், அவனுக்கு பொழுதுபோக்கு அவனுடைய தாத்தாவுடன் தான், தாத்தா எப்போதும் கீதை படித்துக்கொண்டு இருப்பார். ஒரு முறை சிறுவன் தாத்தாவிடம் கேட்டான் நான் கீதையை படித்து பார்த்தேன், எனக்கு புரியவில்லை அதனால் நான் எதையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை.  புத்தகத்தை முடியவுடன் மறந்து விடுகிறேன். புரியாததை படிப்பதில் என்ன பிரயோஜனம் என்று  கேட்டான்.

தாத்தா அவனை தன் அருகே அழைத்து வாஞ்சையுடன் தலையை வருடி கொடுத்தார். பின் அவனிடம் ஒரு கரிச்சட்டியை கொடுத்து அருகிலிருக்கும் ஆற்றுக்கு சென்று நீர் எடுத்து வர சொன்னார் சிறுவனும் ஆற்றுக்கு போய் நீர் எடுத்துக்கொண்டு வந்தான் ஆனால் வீட்டிற்கு வரும் முன்னே நீரெல்லாம் சட்டியிலிருந்த ஓட்டை வழியாக ஒழுகி விட்டது.  வெறும் சட்டியோடு வந்த சிறுவனை மறுபடியும் முயற்சி செய்ய சொன்னார் தாத்தா. சிறுவன் மீண்டும்   முயற்சித்தான் ஆனாலும் மறு முறையும் நீரில்லை.

சில முறை முயற்சித்து விட்டு இனிமேல் முடியாது முயற்சிப்பது வீண் என்று சொன்னான், இப்போது தாத்தா சொன்னார் எனக்கு நீர் எடுத்து வருவது முக்கியமில்லை அதை விட முக்கியம் இன்னொன்று இருக்கிறது இப்போது அந்த  கொஞ்சம் பார் என்றார்  அப்போதுதான் சிறுவனும் கவனித்தான் அந்த சட்டியில் இருந்து கரி அழுக்கு எல்லாம் போய் சுத்தமாக இருந்தது.  இது தான் நான் உனக்கு சொல்ல வந்தது, கீதை உனக்கு புரிய வில்லை என்றாலும் நீ நினைவில் வைக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, ஆனால் ஒவ்வொரு முறை படிக்கும் போதும் நீ உள்ளும் புறமும்   தூய்மை அடைகிறாய். அதுதான் கீதையின் சிறப்பு, மனித   குலத்துக்கு கிருஷ்ணன் குடுத்த பாடம்.

இது உங்களுக்கு பிடித்து இருந்தால் நண்பர்களுக்கு சொல்லவும்

கருத்துகள் இல்லை: