வியாழன், மே 05, 2011

பேஸ்ட் செய்ய தெரியாவிட்டால் காப்பி செய்யாதீர்கள்

ஒரு கோவில்ல ஒரு உபாசகர் பேசிக்கிட்டு இருந்தாரு, பேசிக்கிட்டு இருக்கும் போது அவர் சொன்னாரு "என் வாழ்க்கையின் வசந்த காலம் என்பது என் மனைவி அல்லாத ஒரு பெண்ணின் தோளில் கிடந்தது தான்"  அப்பிடின்னாரு. கேட்டு கிட்டு இருந்தவங்களுக்கு ஒரே அதிர்ச்சி. என்ன ஒரு உபாசகர் இப்பிடி  பேசுறாரே அப்பிடியின்னு. கொஞ்ச நேரம் அங்கே ஒரே மௌனம், அப்புறம் உபாசகரே தொடர்ந்தாரு .
.
.
.
.
.
.
.
.
.
.
அந்த பெண் வேறு யாருமல்ல, என்னுடைய தாய் அப்பிடினு, அதை கேட்டவுடனே ஒரே கரகோஷம் அது அடங்க கொஞ்ச நேரம் ஆச்சு, 

இதை கேட்டுகிட்டு இருந்த ஒருத்தரு இதை வீட்டுல பேசி அசத்திரலாம், அப்பிடின்னு நெனைச்சுக்கிட்டாரு. வீட்டுக்கு வந்த பின்னாடி ஒரு 4 ரவுண்ட் போட்ட அப்புறமா, சத்தமா "என் வாழ்க்கையின் வசந்த காலம் என்பது என் மனைவி அல்லாத ஒரு பெண்ணின் தோளில் கிடந்தது தான்" அப்பிடின்னு சொன்னாரு (அவங்க வீட்டுக்காரம்மா சமையல் கட்டுல இருந்தாங்க),

இத கேட்ட அவங்க எட்டி பத்தாங்களா, நம்ம ஆளுக்கு, அடுத்து என்ன பேசணுமின்னு மறந்து போச்சு.  என்னமோ யோசிச்சு பார்த்தாரு ஹுஹூம் வரலை. கடைசியா என்ன பண்றதுன்னு தெரியாம
.
.
.
.
.
.
.
.
.
.
அது யாருன்னு மறந்துட்டேன், அவ யாருன்னு எனக்கு தெரியாது அப்பிடின்னாரு.

அவரு கண்ணு முழிச்சி பாக்கும் போது ஆஸ்பத்திரில இருந்தாரு உடம்பெல்லாம் கட்டு போட்டு. என்ன நடந்ததுங்கறது நீங்களே ஊகிச்சுக்குங்கக


கதையின் நீதி:

பேஸ்ட் செய்ய தெரியாவிட்டால் காப்பி செய்யாதீர்கள்

15 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

haa ஹா ஹா டைட்டிலில் உள்குத்து.. பதிவில் காமெடி கும்மாங்குத்து..

ராஜகுரு சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
♔ம.தி.சுதா♔ சொன்னது…

மிகவும் அருமையான நகைச் சுவையுங்க... தலைப்பு சூப்பர்...

ராஜகுரு சொன்னது…

வலைதளங்களில் எங்கே இருந்து காப்பி அடிக்கிறாங்கன்ணு கண்டுபிடிக்க கீழே உள்ள பதிவு உதவலாம்...
http://rajaguru-rajam.blogspot.com/2011/05/blog-post.html

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்
நன்றி அண்ணே.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ராஜகுரு
தகவலுக்கு நன்றி நண்பரே

குடந்தை அன்புமணி சொன்னது…

haa ஹா ஹா டைட்டிலில் உள்குத்து.. பதிவில் காமெடி கும்மாங்குத்து..
(இது எனது காப்பி பேஸ்ட் கருத்துரை ஹா...ஹா...)

♔ம.தி.சுதா♔ சொன்னது…

உங்க மெயிலை ஒரு தடவை பாருங்கள் சகோதரம்...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@♔ம.தி.சுதா♔
உதவி தேவைப்பட்டால் முதல் அழைப்பு ம.தி. சுதாவுக்கு தான். அப்ப கூட சுடு சோறு உங்களுக்கு தான் பாஸு.

நன்றிகளுடன்
ஜ.ரா. ரமேஷ் பாபு

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

அட்டகாசம்

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்
வருகைக்கு நன்றி.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

கலக்கல்

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்
உங்களுக்கு தெரியுது, நெறைய பேருக்கு தெரியலியே தல.

வசந்தவாசல் அ.சலீம்பாஷா சொன்னது…

ஓஹோ.. அப்படியா? நான்கூட, காலையில் (பேஸ்ட்) பிரஸ் பன்னாதவங்க, காபி சாப்பிடாதிங்கன்னு சொன்னீங்களோன்னு நினச்சேன்.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@வசந்தவாசல் அ.சலீம்பாஷா
வருகைக்கு நன்றி, கருத்துக்கு நன்றி மேலும் ஒரு புது தலைப்பு குடுத்ததுக்கும் நன்றி. என் அடுத்த இடுகை "பிரஷ் பண்ணாதவங்க காப்பி சாப்பிடாதீங்க" தான்

இடுகைகளை இ-மெயிலில் பெற