செவ்வாய், மே 31, 2011

நீங்கள் நீங்களாகவே இருங்கள்

ஒரு நாளு ஒரு 40 வயசு பெண்ணுக்கு ஹார்ட் அட்டாக்ன்னு ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போனாங்க, சாகுற நிலைமை அந்த அம்மா கடவுளை பார்த்துச்சு, உடனே அவர் கிட்ட "என் ஆயுசு அவ்வளவுதானான்னு?" கேட்டுச்சு,

கடவுளும்  "இல்லயே இன்னும் 43  வருஷம் 8 மாசம் 27 நாள் நீ உயிரோட இருப்பே"     அப்பிடின்னாரு 

ஆஸ்பத்திரியில அந்த அம்மாவ காப்பாத்திட்டாங்க

இருந்தாலும் அந்த ஆஸ்பத்திரிய விட்டு போகாம,  அது இதுன்னு தன்னை அழகாகிக்க என்ன எல்லாம் செய்ய முடியுமோ எல்லாம் செஞ்சுகிச்சு, தலைக்கு டை கூட போட்டுகிச்சு, அதன் கடவுளே சொல்லிட்டாரே இன்னும் 40 வருஷம் உயிரோட இருப்பேன்னு அந்த தைரியத்தில தான்.

எல்லாம் முடிஞ்சு வீட்டுக்கு வர்ற வழியில ஆக்சிடென்ட் ஆயி செத்துப்போச்சாம், நேரா கடவுள் கிட்ட போயி என்னய்யா இன்னும் 40 வருஷம் உயிரோட இருப்பேன்னு நீ தானே சொன்னே அதுக்குள்ள சாக வச்சுட்டியே அப்பிடின்னு கேட்டுச்சாம்,

அதுக்கு கடவுளும் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு, நீ யாருன்னு எனக்கு தெரியலயேம்மா அப்பிடின்னாராம்

நீதி :

அதான் தலைப்புலேயே குடுத்திட்டேனே

11 கருத்துகள்:

koodal bala சொன்னது…

நல்ல பகுத்தறிவு சிந்தனை

கோவை நேரம் சொன்னது…

அருமை...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@koodal bala

நன்றி பாலா

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@கோவை நேரம்

நன்றி ஜீவா

FOOD சொன்னது…

இயற்கை நேசரா நீங்கள்?

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@FOOD
எல்லாமே பிடிக்கும் சார், விளையாட்டு பையன் சார் நானு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>ஜ.ரா.ரமேஷ் பாபு said...

@FOOD
எல்லாமே பிடிக்கும் சார், விளையாட்டு பையன் சார் நானு

உங்க எதிர் வீட்டு ஃபிகர் கூட இதையே தான் சொல்லுச்சு .. அவங்க வாழ்க்கைல விளையாடிட்டீங்களாமே? ஹி ஹி

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஹஹா கலக்கல் தொடருங்கள்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

ஓட்டு போட்டாச்சி

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சி.பி.செந்தில்குமார்

நன்றி தல உங்க வருகைக்கு.

இப்பிடி எல்லாம் உண்மையை உடைக்க கூடாது அப்புறம் அழுதுடுவேன்.......

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@ஆர்.கே.சதீஷ்குமார்

நன்றி அண்ணா,

இடுகைகளை இ-மெயிலில் பெற