செவ்வாய், மே 10, 2011

பாவம் நாங்கள் விட்டுவிடுங்கள்

கடந்த சில ஆண்டுகளாகவே எங்களை போன்ற மக்களை வருத்திக்கொண்டு இருப்பது, விலைவாசி உயர்வு மட்டுமே.  எல்லாம் விண்ணை முட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரம், எப்படி சமாளிப்பது என்பது தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறோம். இதில் மிக முக்கியமானது பெட்ரோல் மற்றும் டீசெல் விலை ஏற்றம், எல்லா பொருட்களின் விலையிலும் இது எதிரொலிக்கிறது. மறை முகமாக. 

கடந்த ஒரு மாதமாக தேர்தல் நடப்பதால் இவற்றின் விலையில் மாற்றம் இல்லாமல் இருப்பது கொஞ்சம் ஆறுதல், எனினும் இன்று இறுதி கட்ட தேர்தல் தேர்தல் முடியும் தருவாயில் இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் விலை ஏற்றம் பற்றிய அறிவிப்புகள் வரலாம்.  ஐந்து மாநில தேர்தல்கள் ஒவ்வொரு மாதம் ஒரு மாநிலம் என்று நடத்தி இருந்தால், இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்கள் விலை ஏற்றம் இல்லாமல் இருந்திருக்கும்.   என்ன செய்வது 

மண்ணெண்ணை மற்றும் எல்‌பி‌ஜி எனப்படும் சமையல் எரிவாயு அரசின் நேரடி கட்டுபாட்டில் இருப்பதால் இதன் விலையில் குறிப்பிட தகுந்த மாற்றங்கள் இல்லை இதுவரை, இனி இது கூட அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கபடலாம் என்ற கருத்து முன் வைக்கப்படுகிறது. இதனால் சமையல் எரிவாயுக்கு அரசு வழங்கும் மானியங்கள்  நிறுத்தப்படலாம்.

எனவே அந்த விலையும் எங்கள் தலை மீதே விழும், குறைந்தது 700 வரை விலை ஏறக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. கொஞ்சம் கொஞ்சமாக விலை ஏற்றினால் மக்களும் பழகி விடுவார்கள் என்பதே அரசின் நோக்கமாக இருந்து இருக்கிறது இதுவரை. ஆனால் சமையல் எரிவாயு விலை ஏற்றம்  குருவி தலையில் பனங்காய் என்பது போல் மிக அதிகம். 

இதன் மூலம் அரசுக்கு 11,000 கோடி மிச்சப்படும் என்று புள்ளி விவரங்கள் சொல்லப்படுகிறது. மேலும் ஏழை மக்களுக்கு மட்டும் மானியம் தொடர்வது என்பதை பற்றி ஆராயப்படுகிறது என்கிறது ஒரு தகவல் அதுவும் நேரடியாக இல்லாமல் வருடத்திற்கு 6 அல்லது 7 சிலிண்டர்களுக்கு மட்டும் இது பொருந்தும் அதுவும் மானியத்தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிகிறது. எதுவும் எதுவரை சாத்தியம் என்று தெரியவில்லை.    

தேவை இல்லாத  எவ்வளோ விசயங்களுக்கு செய்யப்படும் செலவுகளை முறைப்படுத்தி இந்த மாதிரியான தேவையான மானியங்களை தொடர அரசு முன் வரவேண்டும். பள்ளிகள்  திறக்கப்போகும் இந்த தருணத்தில் கல்விக்கட்டணம் என்கிற பெரிய பூதம் காத்து இருக்கிறது தவிர்க்க முடியாத சூழ்நிலையில் இது போன்ற தவிர்க்க கூடிய விலை ஏற்றங்களைபற்றி யோசனை செய்ய வேண்டும் அரசு.

இது எங்களை போன்ற சாதாரண மக்களுக்கு மேலும் பொருளாதார சிக்கலையே உருவாக்கும்.  பாவம் நாங்கள் எங்களை விட்டுவிடுங்கள்  

4 கருத்துகள்:

மர்மயோகி சொன்னது…

இன்றைய தினத்தந்தி தலையங்கத்தை அப்படியே காப்பி அண்ட் பேஸ்ட் பண்ணி இருக்கீங்கள்..வாழ்த்துக்கள்..

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@மர்மயோகி
அப்ப நானும் காப்பி பேஸ்ட் பதிவர் ஆயிட்டேன்னு நீங்க ஒத்துகிட்டீங்க தானே?

வருகைக்கு நன்றி நண்பரே

குடந்தை அன்புமணி சொன்னது…

http://thagavalmalar. blogspot.com/2011/05/blog-post.htm வாருங்கள். ஓர் இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

எல்லாமே மக்கள் தலையில'தான் விடியுது போங்க....

இடுகைகளை இ-மெயிலில் பெற