செவ்வாய், மே 10, 2011

கடவுளுடன் ஒரு சிறப்பு பேட்டி

கடவுள் : உள்ளே வாங்க, நீங்க என்கிட்ட பேட்டி எடுக்கணும்-ன்னு விரும்புறீங்க இல்லயா?   
நான்    :  ஆமா சாமி, உங்களுக்கு நேரம் இருந்தா (பணிவா)
கடவுள்    : எனக்கு எல்லா வேலையும் செய்ய நேரம் இருக்கு,  சரி கேட்க்க வேண்டியத கேளு
நான்    :  உங்களை ஆச்சரிய படுத்துற மனித பண்புகளை பத்தி கொஞ்சம் சொல்ல முடியுமா
கடவுள்    : ஒண்ணா ரெண்டா நெறைய இருக்கு, சொல்லுறேன் கேளு
"குழந்தையாய் இருக்கும் போது சீக்கிரம் பெரியவங்களா வளரனும்-ன்னு நினைக்கிறங்க, ஆனா வளர்ந்த பின்னாடி இன்னும் குழந்தையாய் இருந்திருக்கலாமே அப்பிடின்னு நினைக்கிறங்க"
"உடல் நலத்தை இழந்து பணம் சேக்குறாங்க, ஆனா கொஞ்ச வருஷம் கழிச்சு உடல் நலத்தை சரி பண்றதுக்கு சேத்த பணத்தை எல்லாம் இழக்குறாங்க"
"எதிர்காலத்தை பத்தி நெனச்சு நிகழ்காலத்தை மறந்துராங்க, அதனால நிகழ்காலத்திலையும் வாழாம எதிர்காலத்திலயும் வாழ முடியாம போயிருது"
"எப்பயுமே சாவு வராத மாதிரியே வாழணும்-ன்னு  நினைக்கிறாங்க, ஆனா வாழாமலேயே சாகுறாங்க"
அப்பிடின்னு சொல்லிட்டு என்னை பார்த்தாரு, கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேசலை, அப்பறம் நான் மெதுவா

நான்    : வாழ்க்கையில நாங்க இன்னும் தெரிஞ்சுக்க வேண்டியது அப்பிடின்னு என்ன இருக்கு சாமி?

கடவுள்    : இன்னும் நிறைய இருக்கு சொல்றேன் கேளு

"பிறரை உங்கள் மீது அன்பு செலுத்த வைக்க முடியாது, அதனால் உங்கள் மீது நீங்களே அன்பை வைக்க பழக வேண்டும்"
"விலை மதிக்க முடியாதது என்பது அவர்கள் வாழ்க்கையில் என்ன பெற்று இருக்கிறார்கள், அது அவர்கள் யாரை பெற்று இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே அமையும்"
"உலகில் பணக்காரர்கள் என்பவர்கள் சிறந்த எல்லாவற்றையும் பெற்றவக்ரல் அல்லர், தனக்கு தேவையானதை எல்லாம் பெற்றவர்கள் மட்டுமே" 
"தன்னோடு பிறரை ஒப்பிடுவது நல்லது அல்ல என்பதை அறிய வேண்டும்"
"நம்முடைய பிரியத்துக்குரிவர்களின் மானக்காயங்களை அறிய சில நொடிகளாவது ஒதுக்க வேண்டும், காயங்களை ஆற்ற பல வருடங்கள் ஆனாலும் பரவாயில்லை"
"பணத்தால் எதையும் வாங்க முடியும், நிம்மதி மற்றும் சந்தோஷத்தை தவிர"
"இரண்டு பேர்கள் ஒரே பொருளைப்பார்த்தாலும், பார்வைகள் வேறு வேறாக இருக்கும் என்பதை அறிய வேண்டும்"
"நல்ல நண்பர் என்பவர் உங்களைப்பற்றி எல்லாம் தெரிந்து இருந்தும் உங்களை விரும்புபவர்களாக இருப்பார்கள்"
"பிறர் உங்களை மன்னிப்பதை விட உங்களை நீங்கள் மன்னிக்க பழக வேண்டும்"

அப்பிடின்னு சொல்லிக்கிட்டு இருந்தாரா, திடீர்ன்னு மழை என்னடான்னு பார்த்தா என் தர்ம பத்தினி கையில பக்கெட்டோட, மணி இப்ப 8 இன்னும் என்ன தூக்கம், அப்புறமா ஆஃபிஸ்க்கு லேட் அய்டுச்சுன்னு கத்தக்கூடாதுன்னு வார்னிங்க் குடுத்துட்டு அவங்க வேலைய பாக்கப்போயிட்டாங்க.   சே அப்ப நான் கண்டதெல்லாம் கனவா

2 கருத்துகள்:

கூடல் பாலா சொன்னது…

மிக அருமையான கற்பனை

பாலா சொன்னது…

இப்போதுதான் முதல் முறையாக உங்கள் தளத்துக்கு வருகிறேன். அருமையாக எழுதி இருக்கிறீர்கள்.