செவ்வாய், மே 24, 2011

எளிதெலாம் எளிது அல்ல



ஒரு நாளு ஒரு ஆளு கூடை நிறைய புழுக்களோட நடந்து போய்க்கிட்டு இருந்தாறு, வழியில ஒரு புறா அவர நிப்பாட்டி எங்கே போறீங்க, கூடையில என்ன இருக்கு அப்பிடின்னு கேட்டுச்சு, அந்த ஆளும் கூடையில புழு இருக்கு, சந்தையில போயி வித்துட்டு இறகு வாங்கப்போறேன்ன்னு சொன்னாரு.

புறாவும் எனக்கும் புழு தேவைப்படுது, என்கிட்ட அந்த புழுவை குடுங்க, நான் உங்களுக்கு இறகு தாரேன் அப்பிடின்னுச்சு, அவரும் சரின்னு சொல்லிட்டு புழுவை குடுத்துட்டு புறா கிட்ட இறகை வாங்கிக்கிட்டு போயிட்டாரு.  இதே மாதிரி தெனமும் நடக்க ஆரம்பிச்சது

நாளடைவுல புறவோட இறகெல்லாம் காணாம போச்சு, புறா இப்ப பார்க்கவே அசிங்கமா ஆயிடுச்சு, அதுக்கிட்ட இறகுகள் இல்லாததால புழுவை வாங்க முடியல.  பறக்கவும் முடியாம, இரையும் கிடைக்காம புறா செத்துப்போச்சி


நீதி

புறா மாதிரி நாம கூட எல்லாத்துக்கும் எளிதான வழி தேடுறோம், ஆனா சில நேரம் அந்த புறா மாதிரி ஆயிடுறோம்.

 

6 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

சரிதாங்க...

Unknown சொன்னது…

@# கவிதை வீதி # சௌந்தர் ரைட் நண்பரே

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அசத்துரீங்களே மக்கா, நீதி சூப்பர்....!!!

Unknown சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ இன்னும் நிறைய வச்சுருக்கேன்.

நிரூபன் சொன்னது…

நீதிக் கதை அருமையாக இருக்கிறது சகோ.

வாழ்கைக்குப் பாடமாய்த் உங்களின் கதையில் தத்துவமும் கலந்திருக்கிறது.

Unknown சொன்னது…

@நிரூபன்

நன்றி நண்பரே.