புதன், மே 25, 2011

நாம் எப்படியோ உலகம் அப்படியே

அது ஒரு ஊருக்கு ஒதுக்குபுறமான இடம், அங்கே ஒரு ஞானி குடிசை போட்டுகிட்டு வாழ்ந்து கிட்டு இருந்தாரு. அந்த ஊருக்குள்ள போகணும்ன்ன அந்த குடிசை வழியே தான் போகணும்.

ஒரு நாளு அந்த பக்கமா ஒரு ஆளு வந்தான், வந்தவன் அந்த ஞானி கிட்ட
"இந்த ஊர்ல இருக்குறவங்க எல்லாம் எப்பிடி ?"ன்னு கேட்டான்,
அவரும் "இதுக்கு முன்னாடி நீ எந்த ஊர்ல இருந்தியோ அங்கே எல்லோரும் எப்பிடி இருந்தாங்க?" அப்பிடின்னு திருப்பி கேட்டாரு    

"அந்த ஊர்ல ஒருத்தன் கூட நல்லவன் இல்ல, எல்லோரும் திருட்டுப்பசங்க, இரக்கம் கிஞ்சித்துக்கும் கிடையாது" அப்பிடின்னான்

உடனே ஞானியும் இந்த ஊர்லயும் எல்லோரும் அப்பிடிதான் ரொம்ப மோசமானவங்க அப்பிடின்னாரு. அவனும் இந்த ஊர் நமக்கு  சரிப்படாதுன்னு திரும்பி போயிட்டான்

கொஞ்ச நாள் போச்சு, இன்னொருத்தான் அந்த ஊருக்கு வந்துகிட்டு இருந்தான், அவனும் பழைய ஆள் மாதிரியே ஞானி கிட்ட

"இந்த ஊர்ல இருக்குறவங்க எல்லாம் எப்பிடி ?"ன்னு கேட்டான்,

அவரும் அதே பழைய கேள்வியை "இதுக்கு முன்னாடி நீ எந்த ஊர்ல இருந்தியோ அங்கே எல்லோரும் எப்பிடி இருந்தாங்க?" அப்பிடின்னு திருப்பி கேட்டாரு    

"அந்த ஊர்ல இருந்தவங்க எல்லாம் ரொம்ப நல்லவங்க, ரொம்ப அனுசரணையா இருப்பாங்க. ஒருத்தருக்கு பிரச்சனைன்னு வந்தா எல்லோரும் சேர்ந்து அதை தீர்த்து வைப்பாங்க"  அப்பிடினு  சொன்னான்

உடனே ஞானியும் இந்த ஊர்லயும் எல்லோரும் அப்பிடிதான் ரொம்ப நல்லவங்க அப்பிடின்னாரு.

நீதி

இந்த உலகம் எப்பிடி இருக்கிறதோ நாம் அப்படி பார்ப்பதில்லை, நாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே பார்க்கிறோம், பல நேரங்களில் நம்மை  சுற்றி இருப்பவர்கள் செய்வது நாம்  என்ன செய்தோமோ  அதன் விளைவுகளாகவே இருக்கும்.

6 கருத்துகள்:

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

நன்றாக இருந்தது...

புதிய டிசைன் அருமை...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

//# கவிதை வீதி # சௌந்தர் said...

நன்றாக இருந்தது...

புதிய டிசைன் அருமை...


reply to comment link போட மறந்துட்டேன். நல்ல வேளை ஞாபகபடுத்துனீங்க !!?? நன்றி நண்பரே

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

new lay out pakkaa

பாலா சொன்னது…

ஒரு மிகப்பெரிய தத்துவத்தை மிக எளிய கதை மூலம் சொல்லப்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@சி.பி.செந்தில்குமார் நன்றி அண்ணே

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@பாலா

நன்றி பாலா

இடுகைகளை இ-மெயிலில் பெற