மகிழ்ச்சி ஒரு பயணம், சேருமிடம் அல்ல. அதனால் மகிழ்ச்சிக்காக காத்திருக்காதீர்கள், இப்போது இருப்பதை விட மகிழ்ச்சியான தருணம் எப்போதும் வராது
எல்லோரையும் எல்லா தவறுகளுக்கும் மன்னியுங்கள்
வாழ்க்கை அழகா இல்லாமல் இருக்கலாம் ஆனாலும் அது நல்லது
யாரோடும் உங்களை பொருத்தி பார்க்காதீர்கள், ஏனென்றால் அவர்கள் கடந்து வந்த பாதைகள் உங்களுக்கு தெரியாது
ஒரு நாளைக்கு மூன்று பேரையாவது சிரிக்கவையுங்கள்
விழித்து இருக்கும் போது நிறைய கனவு காணுங்கள்
உங்கள் மகிழ்ச்சியை உங்களை தவிர யாரும் அதிகரிக்க முடியாது
வாழ்க்கை சிறியது அதை பிறரை வெறுப்பதற்கு விரயமாக்காதீர்கள்
இறந்த காலத்துடன் சமரசம் செய்து கொள்ளுங்கள், இல்லையேல் இறந்த காலம் உங்கள் நிகழ்காலத்தை பாழாக்கி விடும்
இன்றைய சிரிப்பு
ஒரு போதகர் இறக்கும் சமயத்தில அவரோட டாக்டரையும், வக்கீலையும் வீட்டுக்கு வரச்சொல்லி செய்தி அனுப்புனார். ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்தாங்க. போதகர் அமைதியா படுத்து இருந்தாரா, இவங்க வந்த உடனே ரெண்டு பக்கமும் ஒவ்வொருதரா நிக்க வச்சுகிட்டாரு. எதுவுமே பேசல உத்திரத்தையே பார்த்துக்கிட்டு படுத்து இருந்தாரு.
கொஞ்ச நேரம் ஒரு சத்தமும் இல்லை, பொறுமை இழந்த டாக்டர் எங்களை ஏன் இங்க வரச்சொன்னீங்க, ஏதாவது ஆசை இருக்கா நாங்க என்ன செய்யணும் சொல்லுங்க? அப்பிடின்னு கேட்டாரு.
உடம்புல இருந்த கொஞ்ச நஞ்ச சக்தியெல்லாம் திரட்டி போதகர் பேச ஆரம்பிச்சாரு, எனக்கு ஒரே ஒரு ஆசை, அதான் உங்களை வரச்சொன்னேன். உடனே டாக்டர் சொல்லுங்க, நாங்க என்ன செய்யணும்? உடனே அந்த போதகர் என் பக்கத்தில இருந்தா போதும். அப்பிடின்னாரு. அவங்களுக்கு ஒண்ணும் புரியல, ரெண்டு பேரும் முழிச்சிக்கிட்டே இருந்தாங்க, அப்ப போதகர் சொன்னாரு யேசு ரெண்டு திருடனுங்க நடுவில தான் செத்தாரு, நானும் அப்பிடி சாகணும்ன்னு தான் உங்கள வரச்சொன்னேன்.

12 கருத்துகள்:
நல்லதொரு பகிர்வு..
நகைச்சுவை நன்றாக இருந்தது.
தத்துவம் நன்றாகவே இருக்கிறது.
@முனைவர்.இரா.குணசீலன் நன்றி நண்பரே, உங்கள் கருத்துகளுக்கு
@N.H.பிரசாத்
வருகைக்கு நன்றி நண்பரே
ஹா ஹா ஹா ஹா அடபாவி....
@MANO நாஞ்சில் மனோ
அப்பாடா இன்னைக்கு மூணு பேர சிரிக்க வைக்க முடியுமான்னு நெனச்சு கிட்டே இருந்தேன். மூணாவது ஆளு கெடைச்சுட்டீங்க நன்றி மனோ அண்ணே.
haa haa haa ஹா ஹா ஹா ( 4வது ஆள்)
நகைச்சுவை மற்றும் சிந்தனை இரண்டுமே அருமை.
@சி.பி.செந்தில்குமார்நன்றி அண்ணே, எல்லாம் உங்க கருணை.
@பாலா
நன்றி நண்பரே
அன்பின் ரமேஷ் பாபு - பொன்மொழிகள் அத்தனையும் அருமை - இறந்த காலத்துடன் சமரசம் - உண்மை. கடைச்யில் சிரிப்பு - நல்லா சிரிச்சேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
கருத்துரையிடுக