புதன், மே 18, 2011

மன அழுத்தத்தை சமாளிப்பது எப்பிடி

ஒரு நாளு ஒரு தத்துவ பேராசிரியர் அவரோட மாணவர்களைப்பார்த்து, இந்த தண்ணீர் டம்ப்ளர் எவ்வளவு எடை இருக்கும் அப்பிடின்னு கேட்டாரு. பசங்க எல்லாம் ஒரு 50 கிராம்லா இருந்து 100 கிராம் இருக்கும் அப்பிடின்னு சொன்னாங்க. இதை உங்களால் தூக்க முடியுமா? அப்பிடினு அடுத்த கேள்வியா கேட்டாரு, உடனே ஒரு பையன் நான் ரெடி அப்பிடினு, உடனே அந்த பையன் உள்ளங்கையில  எடுத்து வச்சுட்டு நான் சொல்ற வரைக்கும் இதை கீழே வைக்காதேன்னு சொல்லிட்டாரு.

கொஞ்ச நேரம் ஆச்சு பையன் கை லேசா நடுங்க ஆரம்பிச்சது, பையன் பொறுத்துக்கிட்டு டம்ப்ளரா கையில வச்சுக்கிட்டு இருந்தான்.   ஒரு மணி நேரம் ஆச்சு இப்ப பையனோட தோள்பட்டை வலிக்க ஆரம்பிச்சது, அதையும் பொறுத்துகிட்டான்.  கொஞ்ச நேரம் கழிச்சு அவனால சமாளிக்க முடியல, சார் இதுக்கு மேல முடியாது கீழே வச்சிரவா அப்பின்னு கேட்டான்.

இப்ப அந்த ஆசிரியர் சொன்னாரு, ஒரு பொருளோட எடை எப்பவும் அதை எவ்வளவு நேரம் வச்சுருக்கிறோம் என்பதை பொறுத்தே இருக்கும், அது மாதிரி தான் நம்முடைய மனஅழுத்தமும் எப்பயுமே மனசுக்குள்ளேயே வச்சுகிட்டு இருந்தா பிரச்சனை தான். எப்ப எல்லாம் முடியுதோ அப்பவெல்லாம் அதை கீழே வச்சுடணும்.  எப்ப தேவையோ அப்ப மட்டும் அதை தூக்கிக்கிட்டா போதும்.

எனவே மக்களே, ஆஃபிஸ் டென்சனெல்லாம் ஆஃபிஸ்-லயே விட்டுவிட்டு வீட்டுக்கு போவோம், மறுநாள் ஆஃபிஸ் வந்து அதை திரும்பவும் தூக்கிவோம்.

3 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அருமை அருமை...

Unknown சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ
என்னாடா இன்னும் காணோமேன்னு பார்த்தேன், கரெக்ட்-அ வந்துடீங்க. நன்றி

cheena (சீனா) சொன்னது…

சூப்பர் ரமேஷ் பாபு - அலுவலகத்த வுட்டுக் கிளம்பும் போது துண்ட உதறித் தோள்ல போட்டுக்கிட்டு வந்துடணும் - மறு நா போய்ப் பாத்துக்கலாம் மத்ததெல்லாம் - நட்புடன் சீனா