செவ்வாய், மே 17, 2011

வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடு

ஒரு விவசாயி தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரரை திட்டிவிட்டார், பின்னர் தவறை உணர்ந்த அவர் பாவமன்னிப்பு கேட்க  அருகில் இருக்கும் தேவாலயத்திருக்கு சென்றார். அங்கிருந்த போதகரிடம் விஷயத்தை கூறி பாவமன்னிப்பு கோரினார். போதகர் அவரிடம் ஒரு கூடை நிறைய கோழியின் இறகுகளை கொடுத்து ஊரின் நடுவில் சென்று கொட்டிவிட்டு  வரச்சொன்னார்.  விவசாயியும் போதகர் சொன்னபடி கொட்டி விட்டு வந்தார்.

போதகர் கொட்டியதை மீண்டும் அள்ளிக்கொண்டு வரச்சொன்னார்.  விவசாயியும் தன்னால் முடிந்த வரை அதை அள்ள முயற்சி செய்தார். ஆனால் அவரால் முடியவில்லை காலி பையுடன் திரும்பி வந்தார்.  இப்போது போதகர் சொன்னார், இந்த உண்மை உன் வார்த்தைகளுக்கும் பொருந்தும்,

"ஒரு முறை கொட்டி விட்டால் மறுமுறை உன்னால் அள்ள முடியாது. எனவே வார்த்தைகளை கவனமாக தேர்ந்தெடு"

டிஸ்கி :  வடிவேலுவுக்கும் இந்த இடுகைக்கும் எந்த தொடர்பும் இல்லை 

5 கருத்துகள்:

பனித்துளி சங்கர் சொன்னது…

ஆயுதங்களின் தாக்குதலில் இல்லாத வலியை சில வார்த்தைகள் ஏற்படுத்திவிடும் என்பதை உணர்த்துகிறது தங்களின் பதிவு . பகிர்ந்தமைக்கு நன்றி

போளூர் தயாநிதி சொன்னது…

nalla sinthanai ulam kanintha parattukal

Unknown சொன்னது…

@! ❤ பனித்துளி சங்கர் ❤ !
வருகைக்கு நன்றி நண்பரே

Unknown சொன்னது…

@போளூர் தயாநிதி
thanks for your comment and keep comment which help me to improve

cheena (சீனா) சொன்னது…

கொட்டிய சொற்கள் அள்ள இயலாதவை. சூப்பர் டிஸ்கி ரமேஷ் பாபு - நட்புடன் சீனா