திங்கள், மே 16, 2011

உங்களை நீங்களே துன்புறுத்திக்கொள்ளாதீர்கள்

உங்களை  நீங்களே துன்புறுத்திக்கொள்ளாதீர்கள்

ஒரு நாள் இரவு, ஒரு பாம்பு இரை தேடி ஒரு தச்சரின் அறைக்குள் நுழைந்தது.  அந்த அறைக்குள் தச்சு வேலைக்கு தேவைப்படும் ஆயுதங்கள் இருந்தன, அவற்றில் ஒன்று ரம்பம். இரை தேடி வந்த பாம்பு அந்த ரம்பத்தின் மெதுவாக ஏறியது, ரம்பம் கூர்மையாக இருந்ததால் சிறு காயம் ஏற்பட்டுவிட்டது. அதை கண்ட பாம்பு, ரம்பம் தன்னை தாக்குவதாக எண்ணிக்கொண்டு ரம்பத்தை கொத்தியது.

இப்போது வாயிலிருந்தும் ரத்தம் வழியத்தொடங்கியது, இதனால் அதிக  கோபமுற்ற பாம்பு மேலும் வேகமாக தாக்க தொடங்கியது. இதனால் உடல் முழுவதும் கிழிந்து ரத்தம் கொட்டியது. அந்த ரத்தம் ரம்பத்தையும் சிவப்பாக மாற்றிவிட்டது, இதை கண்ட பாம்பு   கடைசியாக ஒரு கொத்து கொத்திவிட்டு திரும்பி விடலாம் என்று எண்ணி வேகமாக கொத்தியது. கொத்திய வேகத்தில் பாம்பின் தலை தனியாக பிய்த்துக்கொண்டு விழுந்தது. 

மறுநாள் அந்த தச்சர் தன்னுடைய அறையில் ஒரு செத்த பாம்பை பார்த்தார். 

நீதி :  சில நேரங்களில் பிறரை துன்புறத்த நினைத்து, நம்மை நாமே துன்புறுத்திக்கொள்ளுகிறோம்

-------------------------------------------------------------------------

ஒரு முட்டாளிடம் முத்தம் பெறலாம் தவறில்லை
ஒரு முட்டாளுக்கு முத்தம் கொடுக்கலாம் தவறில்லை
ஆனால் ஒரு முத்தம் உங்களை முட்டாள் ஆக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்

உங்கள் வாழ்க்கையில் யார் வரவேண்டும் என்று விதி நிர்ணயிக்கலாம், ஆனால்
யார் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது உங்கள் மனம் மட்டுமே 

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

In the snake story, the moral is not correct.

Snake did not like to harm the saw. It only did it in self-defence.

No snake ever likes to harm other beings. It eats frogs etc. because it is in the food chain.

Snake bites us only in self defence when we think it came to sting us.

In this story, it stung the saw fearing that the saw would harm it.

Please understand snakes first. Such stories will spread wrong information about snakes to the people. Snakes are harmless beings.

For ur moral, you may go to better stories.

Unknown சொன்னது…

@Anonymous

கருத்துக்கு நன்றி நண்பரே, எனக்கு பாம்பை பற்றி அவ்வளவாக தெரியாது,
இது ஒரு உருவக கதை மட்டுமே, பாம்பின் இடத்தில் நம்மை பொருத்தி பார்க்க வேண்டுமே தவிர நேரடி பொருள் கொள்வது சரியல்ல

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நீதி கதை, அடுத்து தத்துவம் ஹே ஹே ஹே ஹே ரமேஷ் சூப்பர்....

Unknown சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

நன்றி அண்ணே!! உங்க ஆதரவுக்கு.