வெள்ளி, மே 06, 2011

கல்யாணமாம் கல்யாணம்

கல்யாணம் சொர்க்த்தில நிச்சயிக்கபடுதுன்னா நரகத்தில என்ன நிச்சயிக்கப்படுகிறது?
கல்யாணதுக்கு அப்புறம் வரும் நாட்கள்

கல்யாணத்துக்கு முன்னாடி காசி யாத்திரை அப்பிடின்னு ஒரு சம்பிரதாயம் பண்ணுவாங்க ஏன்னு தெரியுமா?
மாப்பிள்ளை தப்பிச்சு போறதுக்கு கடைசியா ஒரு சான்ஸ் தறாங்க

ஒரு சிகரட் உங்க வாழ்நாளில் 2 நிமிடம் குறைக்கும்
ஒரு பியர் உங்க வாழ்நாளில் 4 நிமிடம் குறைக்கும்
ஒரு வேலை நாள் உங்க வாழ்நாளில் 8 மணி நேரம் குறைக்கும்

எல்லா ஆண்களும் ஒரு தடவையாவது கல்யாணம் செய்யணும் ஏன்னா சந்தோஷம் மட்டுமே வாழ்க்கை ஆயிடாது

கல்யாணம் பண்ணாத ஆம்பளைங்களுக்கு நிறைய TAX போடணும், ஏன்னா கொஞ்ச பயலுக மட்டும் எப்பிடி சந்தோஷமா இருக்கலாம்?

நான் தீவிரவாதத்தை கண்டு அஞ்சுவதில்லை, ஏன்னா எனக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு. 

புதுசா கல்யாணம் பண்ணவங்க ஒரு மாதிரி சிரிச்சா எல்லோருக்கும் தெரியும் ஏன்னு!
கல்யாணமாகி 10 வருஷம் ஆனவங்க ஒரு மாதிரி சிரிச்சா சிரிச்சா எல்லோரும் கேட்ப்பாங்க ஏன்னு?

காதலுக்கு கண் தெரியாது, கண்ணு தொறக்கணுமின்னா கல்யாணம் பண்ணுங்க

ஒரு ஆண் அவன் பொண்டாட்டிக்கு கார் கதவை தொறந்து விடுறான்ன,  ஒண்ணு கார் புதுசா இருக்கணும், இல்லை பொண்டாட்டி புதுசா இருக்கணும்

கணவன் : நம்ம கல்யாண நாளுக்கு எங்கே போகலாம்?
மனைவி : இதுவரைக்கும் நான் போகாத எடத்துக்கு கூட்டிட்டு போவீங்களா?
கணவன் : அப்ப வா சமையல் கட்டுக்கு போகலாம். 

ஒரு புருசனும் பொண்டாட்டியும் ஒரு மாய கிணறு முன்னாடி வந்து நின்னாங்க, மொதோ புருஷன் மனசுக்குள்ளே அவனோட ஆசையா நினைச்சுக்கிட்டு காசை தூக்கி போட்டான், அப்புறம் பொண்டாட்டி கிணத்துக்கிட்டே வந்தவ கால் தடுக்கி கிணத்துக்குள்ளே விழுந்து முங்கிடிச்சு, ஒரு நிமிஷம் அதிர்ச்சியான புருஷன் சிரிச்சுக்கிட்டே இது நிஜமாவே வேலை செய்யுது அப்பிடின்னான்

12 கருத்துகள்:

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

சிரிச்சி முடியல போங்கப்பா ஹா ஹா ஹ ஹா.....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹேய் வடையும் எனக்கா....

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

ஹேய் வடையும் எனக்கா....

Unknown சொன்னது…

@MANO நாஞ்சில் மனோ

கருத்துக்கு நன்றி, ஆமா அனுபவம் பேசுதோ? இல்ல பழசெல்லாம் ஞாபகம் வருதோ!!!??

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

ஹா..ஹா...ஹ...ஹா....

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

அநியாயத்துக்கு காமடி பண்றீர்....


எனது நண்பர்களுக்கு திருமணம் செய்ய சொல்லி வற்புறுத்துவேன்....

நான் மட்டும் என்ன இளிச்சவாயனா...

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் அப்படித்தானே...

Unknown சொன்னது…

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.
எல்லாத்துலயும் நல்லதும் இருக்கும், கெட்டதும் இருக்கும், உங்களுக்கு தெரியாதது இல்லை. இங்க சொன்னது எல்லாம் ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அடுத்த பதிவுல சொல்லறேன்.

rajamelaiyur சொன்னது…

Ha . . Ha . . Ha . . Super comedy

rajamelaiyur சொன்னது…

I am new visitor of your blog

Unknown சொன்னது…

@"என் ராஜபாட்டை"- ராஜா
வாங்க ராஜா, படிச்சு பாருங்க உங்க கருத்துகளை சொல்லுங்க. நாலா இருந்த சொட்டுங்க, இல்லாட்டி குட்டுங்க. எல்லாம் நம்ம ராஜ்யம் தான்.

இராஜராஜேஸ்வரி சொன்னது…

மாயக்கிணறு பக்கம் போகாதீங்க.

Unknown சொன்னது…

@இராஜராஜேஸ்வரி

வருகைக்கு நன்றி அக்கா இல்ல தெரியல. நண்பியே அப்பிடியே வச்சுக்கலாம்.

அது சரி ஒரு ஆள் சந்தோசமா இருந்தா உங்களுக்கு பிடிக்காதா?