செவ்வாய், மே 03, 2011

காப்பி பேஸ்ட் பண்ண தெரியாதவர்களுக்கு மட்டும்....

நீங்க ஒரு வெப் பேஜ்-ஐ படிச்சு கிட்டு இருக்கீங்க, அதுல இருக்க கன்டன்ட் உங்களுக்கு ரொம்ப பிடுச்சு இருக்கு, அதை அப்பிடியே காப்பி பண்ணி உங்க ஃபிரண்ட்ஸ்களுக்கு  மெயில்-ல போடணும், இல்லை நீங்க எழுதுன மாதிரி பிளாக்-ல போடணும் ஆனா வெப் பேஜ் கன்டன்ட்-ஐ செலக்ட் பண்ண முடியல (அதுக்கெல்லாம் ஸ்கிரிப்ட் இருக்கு ஆனா நிறைய வேலை செய்யாது) ஏன்னா வெப்சைட் அட்மினிஸ்டிரேட்டர் ஸ்கிரிப்ட் எழுதி வெப் பேஜ் கன்டன்ட் எல்லாம் பாதுகாப்பா வச்சு இருப்பாரு.

சரி நம்ம எப்பிடி காப்பி பண்றதுன்னு சொல்லுறேன். இதுக்கு நிறைய வழி இருக்கு. அதுல எனக்கு தெரிஞ்ச கொஞ்சம்

1. Opera அப்பிடினு ஒரு பிரவுசர் இருக்கு மானங்கெட்ட பிரவுசர் அது, டெவலப்பர் எல்லாம் எங்கெங்கயோ காப்பி பண்ணி  ஸ்கிரிப்ட்-ஐ திருடி வெப்பகே-ல சேர்த்து இருப்பான், ஆனா 99% இந்த பிரவுசர்-ல வேலை செய்யாது. அதை நம்ம யூஸ் பண்ணிக்கிவோம், அந்த பிரவுசர்-ல வெப்பேஜ்-ஐ ஓபன் பண்ணுங்க. அப்புறம் எது எது வேணுமோ அந்த பேஜ்-ல இருந்து எப்பயும் போல காப்பி பேஸ்ட் பண்ணிக்குங்க.

2. இது எந்த பிரவுசர்-ல இருந்து வேணுமினாலும் பண்ணலாம், எல்லா பிரவுசர்-லயும் File menu இருக்கும். அங்கே போயி "save web page as" அப்பிடின்னு ஆப்ஷன் இருக்கும். அதை கிளிக் பண்ணுங்க. சிஸ்டம் எங்க இந்த file-எ save பண்ணணுமின்னு கேட்க்கும் நீங்க location செலக்ட் பண்ணிட்டு, file name குடுத்துட்டு, அதுக்கு கீழே Save Type As அப்பிடின்னு வரும் அதுல "webpage complete" செலக்ட் பண்ணிட்டு சேவ் பட்டன்-ஐ கிளிக் பண்ணுங்க. இப்ப அந்த பேஜ் உங்க சிஸ்டம்-ல ஸ்டோர் ஆயிரும். அப்புறம் அதை உங்க பிரவுசர்-ல ஓபன் பண்ணுனா,  பேஜ் ஓபன் ஆகும் எல்லா கன்டன்டுக்கு மேல ஒரு மஞ்ச கலர் பார் வரும், கீழே படத்துல பாருங்க, அங்கே "Allow Blocked Content"   அப்பிடின்னு ஒரு ஆப்ஷன் வரும் அதை கண்டிப்பா செலக்ட் பண்ணக்கூடாது. இப்ப உங்க பிரவுசர்-ல இருக்க கன்டன்ட்-ஐ அப்பிடியே காப்பி பேஸ்ட் பண்ணிக்கலாம்.

3. இது இன்னொரு டிரிக், பேஜ் ஓபன் ஆகிக்கிட்டே இருக்கும் போது ரைட் கிளிக் பண்ணுங்க அங்கே நார்மல் கான்டெக்ஸ்ட் மெனு ஓபன் ஆகும், (பேஜ் ஃபுல்-லா லோட் ஆயிட்டா சில நேரம் மெனு வராது)   பேஜ் ஃபுல்-லா லோட் ஆகுற வரை வெயிட் பண்ணுங்க, அப்புறம் அந்த மெனு லிஸ்ட்ல "Select All" அப்பிடின்னு ஒரு ஆப்ஷன் வரும், அதை கிளிக் பண்ணுங்க. அப்புறம் உங்க கீபோர்ட்-ல கண்ட்ரோல் கீ பிரஸ் பண்ணிக்கிட்டே சி பிரஸ் பண்ணுங்க (Ctrl + C), இப்ப அந்த பேஜ்-ல இருக்க எல்லா கன்டன்ட்-வும் காப்பி ஆயிடும். இப்ப notepad-ல பேஸ்ட் பண்ணிக்கிட்டு உங்களுக்கு வேண்டிய கன்டன்ட்-ஐ எடிட் பண்ணிக்குங்க.

டிஸ்கி: வேற ஏதாவது வழி இருந்தா, இதை படிக்கிறவங்க கமெண்ட்-ல போடுங்க, எல்லோருக்கும் பயன்படும்   

3 கருத்துகள்:

களவாணி சொன்னது…

தலைவரே ... தலையை சுத்தி மூக்க தொடுறீங்க. ஜாவஸ்க்ரிப்ட் Disable பண்ணுங்க. Tools --> Options --> Content -- > Remove "Enable Javascript" check box. in firefox.
and reload page.

Or search for "No Script" extension for firefox in google.

Unknown சொன்னது…

@களவாணிச்சே இவளவு ஈஸியா ஒரு வழி இருக்கா? தெரியாம போச்சே.
கருத்துக்கு நன்றி நண்பரே.

ஆனா ஜாவா ஸ்கிரிப்ட் disable பண்ணா வேற வெப்சைட் பார்க்கும் போது, சரியாய் தெரியாதே!!.

பெயரில்லா சொன்னது…

opera இத காப்பி ப்[ஏஆஸ்ட் பண்ண முடியல