செவ்வாய், மே 24, 2011

வடைய சுட்டுட்டு போனது யாரு?


இங்க நான் வடைன்னு சொன்னது, நாம வாழ்க்கையில என்ன வேணும்னு விரும்புறோமோ அதைத்தான், அது வேலையா இருக்கலாம், பணமா இருக்கலாம், உறவு முறையா இருக்கலாம், சுதந்திரமா இருக்கலாம், வீடா இருக்கலாம், காரா இருக்கலாம் இப்பிடி எதுவா வேணா இருக்கலாம்.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஃபீலிங்க் இருக்கும் வடைய பத்தி, நாம அது கிடைக்கணும்ன்னு ரொம்ப பிரயத்தனம் பண்ணுவோம், ஏன்னா அது நமக்கு சந்தோஷம் தரும்ன்னு நம்புறோம்.  ஒரு தடவை வடை உங்களுக்கு கிடைச்சுடிச்சுன்னா அதோடைய ஒண்ணாயிருவோம், அது தொலைந்து போனாலோ அல்லது நம்மள விட்டு போற சூழ்நிலையில கொஞ்சம் ஆடித்தான் போயிறோம். 

உங்க வடைய யாரும் சுடாம இருக்க சில விஷயங்கள் செய்யனும், அது கீழே

உங்க வடை உங்களுக்கு முக்கியம், உங்களுக்கு அதிகம் வேண்டுமென்றால் நீங்கள் அதில்  தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும்

உங்களை சூழ்நிலைக்கு தகுந்த படி மாற்றிக்கொள்ள தயங்கினால் உங்கள் வடை இருந்த இடம் தெரியாமல் போய்விடும்

உங்கள் வடையை அடிக்கடி சோதித்துக்கொளுங்கள், அது பழசாகிவிட்டதா என்று

புதிய வழிகளில் முயற்சித்தால் புது வடைகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு

உங்கள் பயங்களை தாண்டி வாருங்கள், புதிய வடைகளை அடையாளம் காணும் வாய்ப்புகள் கிடைக்கும்

புதிய வடையை பற்றி நினைப்பதே உங்களை வடையை நோக்கி முன்னேற வைக்கும்

எவ்வளவு வேகமாக பழைய வடையை விட்டு விட நினைக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக புதிய வடையை கண்டடைவீர்கள்

பழைய வடை கிடைக்காத சூழ்நிலையில் அதற்காக கலங்காமல்,   புதிய வடையை தேடுவது நல்லது

பழைய நம்பிக்கைகள், புதிய வடைகளை நோக்கி முன்னேற்றாது

சிறிய மாற்றங்களை முன்கூட்டியே அனுமானிப்பது அதற்கேற்ப மாற்றிக்கொள்ளுவது உங்களுக்கு பெரிய வடை கிடைக்க வாய்ப்பளிக்கும்

மாற்றங்கள் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம், அதை எதிர்பார்த்து காத்திருங்கள்.

மாற்றங்கள் நிகழும் போது வேகமாக பற்றிக்கொள்ளுங்கள் அதன் மூலம் புதிய வடைக்கான வாய்ப்புகள் கிடைக்கும்

உங்கள் வடையை எடுங்கள் கொண்டாடுங்கள்


4 கருத்துகள்:

Philosophy Prabhakaran சொன்னது…

சுதந்திரம் என்னும் எனது வடை தொலைந்து போய் ரொம்ப நாளாகி விட்டது...

Philosophy Prabhakaran சொன்னது…

இந்த வடையாவது கிடைச்சதே...

Unknown சொன்னது…

@Philosophy Prabhakaran கல்யாணம் பண்ணுனதுக்கு அப்புறம் தானே, கொஞ்ச நாள் பாருங்க கிடைக்கிற மாதிரி தெரியலேனே பழைய வடையை விட்டு புது வடை தேடுங்க (இன்னொரு கல்யாணம் இல்லை, மறுபடி பேட்சிலர்).

நன்றி நண்பரே

N.H. Narasimma Prasad சொன்னது…

'வடை' என்ற வார்த்தை மட்டும் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது. மற்றபடி பதிவு சூப்பர்.