திங்கள், ஏப்ரல் 11, 2011

அக்கவுண்டன்ட் கதைகள் - I

மூணு அக்கௌண்டண்ட்ஸ்-உம், மூணு இஞ்சீனியர்களும் ஒரு நாள் டிரைன்-ல கான்பரன்ஸ்க்கு போய்கிட்டு இருந்தாங்க. அவங்கள்ள இஞ்சீனியர் எல்லாம் அவங்கவங்களுக்கு தனித்தனியாய் டிக்கெட் எடுத்து இருந்தாங்க. ஆனா இந்த அக்கௌண்டண்ட்ஸ் மட்டும் ஒரே ஒரு டிக்கெட் மட்டும் வச்சுருந்தாங்க. இஞ்சீனியர்களுக்கு சந்தேகம் எப்பிடி ஒரு டிக்கெட்-ல மூணு பேரு போவீங்க செக்கர் வந்தா மாட்டிக்க மாட்டீங்களா? அப்பிடின்னு கேட்டாங்க. அதுக்கு அவங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க தெரியும்னு சொன்னாங்க. 

சொன்ன மாதிரியே செக்கர் வர நேரம் பார்த்து மூணு பேரும் எந்திருச்சு டாய்லெட்க்குள்ளே போயிட்டாங்க.  செக்கர் எல்லார் டிக்கெட்டையும் செக் பண்ணிட்டு, டாய்லெட் கதவ தட்டி டிக்கெட் பிளீஸ் அப்பிடின்னாரு, உள்ளே இருந்து ஒரே ஒரு கையை நீட்டி டிக்கெட்டை வெளியே குடுத்தாரு ஒரு அக்கவுண்டன்ட், செக்கர் டிக் பண்ணிட்டு போயிட்டாரு. இதை பார்த்த இஞ்சீனியர்களுக்கு இந்த ஐடியா நமக்கு தோணாம போச்சே அப்பிடினு நெனச்சுக்கிட்டு திரும்பி வரும் போது இதே டிரிக்க நாமளும் செய்வோம் பேசிக்கிட்டாங்க.

கான்பரன்ஸ் எல்லாம் முடிச்சிட்டு திரும்பி வரும் போது மூணு இஞ்சீனியர்களும் ஒரு டிக்கெட்டோட டிரைன் ஏறிட்டாங்க, ஆனா அக்கவுண்டன்ட் மூணு பேரும் இந்த தடவ டிக்கெட் எடுக்கவே இல்லை.

இப்ப  என்ன டிரிக் பண்ணிருப்பாங்க டிக்கெட் இல்லாம டிரைன்-ல போறதுக்கு?.

விடையை பின்னூட்டத்தில் இடவும் 

2 கருத்துகள்:

குடந்தை அன்புமணி சொன்னது…

இது ரொம்ப பழசுங்கண்ணா... அக்கவுண்ட்ஸ் செக்கர் மாதிரி போய் கதவைத் தட்டி
டிக்கெட்டை வாங்கிட்டு வந்திடுவாங்க...

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@குடந்தை அன்புமணி
கதை வேணா பழசா இருக்கலாம், ஆனா நம்ம நட்பு புதுசு இல்லையா அண்ணா?

இடுகைகளை இ-மெயிலில் பெற