உலகின் மகிழ்ச்சியான 10 நாடுகள்.
மகிழ்ச்சியை எப்பிடி அளவிடுவது
மகிழ்ச்சி என்பது அவ்வளவு எளிதாக அளவிட முடியாதது, ஆளுக்கு ஆள் மாறக்கூடியது. சிலருக்கு மழை பெய்தால் மகிழ்ச்சி ஆனால் சிலருக்கு வெயில் மகிழ்ச்சி தரும். இங்கே பல விசயங்கள் கருத்தில் கொண்டு "வேர்ல்டு டேட்டாபேஸ்" என்ற கம்பெனி ஆய்வுகள் மேற்கொண்டு நாடுகளை வரிசை படுத்தி இருக்கிறார்கள்
10. Luxembourg – 7.6 புள்ளிகள்
பணக்கார நாடுகளில் வாழுவது என்பது எல்லோருக்கும் ஒரு வித பெருமை அளிக்கும் விஷயம். இது ஒரு மிகச்சிறிய ஐரோப்பிய நாடு, மிக சிறிய ராணுவம் மோதம் 800 பேர் மட்டுமே. மேலும் ஒரு உலக சாதனை தனி நபர் ஆல்கஹால் எடுத்துக்கொள்ளும் விகிதம் அதிகம் உடைய நாடு.
9. Guatemala – 7.6 points
இது ஒரு மத்திய அமெரிக்க நாடு, அதிகளவு புயலாலும், நிலநடுக்கத்தாலும் பாதிப்படையக்கூடிய நாடு. எனினும் இங்கு காஃபி மற்றும் வாழை ஏற்றுமதி அதிகம். மிக குறைந்த விலையில் வாழை கிடைக்கும்
8. Canada – 7.6 points
மகிழ்ச்சியான மக்கள், மகிழ்ச்சியான நாட்டை உருவாக்குகிறார்கள் என்ற உண்மை இவர்களை பார்த்தால் தெரியும். இதுவரை 1.5 மில்லியன் மக்கள் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர், இதன் மூலம் வறுமை நாடுகளில் வசிக்கும் மக்கள் பெரிய அளவில் நோய்களில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளனர்
7. Sweden – 7.7 points
உலகிலேயே அதிக வரி விதிப்பு உடைய நாடு ஏறக்குறைய 80% வரை வரிகள் உண்டு, ஆனால் அங்கு கிடைக்கும் சலுகைகள் அதிகம். குழந்தை முதல் நாளை இறக்கப்போகும் பெரியவர் வரை எல்லோரும் சலுகைகள் உண்டு.
6. Australia – 7.7 points
ஆறாவது இடத்தில் இருப்பது ஆஸ்ட்ரேலியா, இதன் பெயர் "Australis" என்ற பெயரில் இருந்து வந்தது, இதற்கு தெற்கு பகுதி என்று அர்த்தம். பிரிட்டிஷ் இந்த நாட்டை காலனியக 1788 முதல் 1868 வரை வைத்து இருந்தனர்
5. Finland – 7.7 points
இந்த நாட்டில் இருந்து தான் நோக்கியா மொபைல் வந்தது, உலகில் மொபைல் போன் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு மற்றும் அதிக ஏற்றுமதி செய்யும் நாடு.
4. Iceland – 7.8 points
இது வட துருவத்திற்கு அருகில் இருக்கும் நாடு. வட துருவதிற்கு அருகில் இருந்தாலும் எரிமலைகள் மற்றும் வெப்ப நீர் ஊற்றுகள் அதிகம் இருக்கும் நாடு, அவர்கள் இதிலிருந்து மின்சாரம் தயாரிக்கிறார்கள் மிக குறைந்த விலையில், இதன் மூலம் அவர்கள் இரும்பு பதப்படுத்தும் துறையில் கோலோச்சுகிறார்கள். ஆஸ்ட்ரேலியா மற்றும் ஆப்ரிக்கா நாடுகளில் இருந்து இரும்பை பதப்படுத்த இங்கே தான் அனுப்புகிறார்கள்
3. Austria – 8.0 points
இவர்களும் Iceland போலவே மின்சார உற்பத்தி 80% வரை காற்று, நீர் மற்றும் சூரிய சக்தி மூலமே. இங்கே 16 வயதில் ஓட்டு போடலாம் 18 வயதானால் கட்டாய ராணுவ பயிற்சி உண்டு. கல்வி முழுவதும் இலவசம். (செமஸ்டர் கட்டணம் தவிர)
2. Switzerland – 8.1 points
உலகில் சீஸ் மற்றும் சாக்லேட் அதிகம் உற்பத்தி செய்யும் நாடு, இயற்கை வளங்கள் நிறைந்த நாடு. உலகிலேயே அதிக குப்பைகளை மறுசுழற்சி செய்யும் ஒரே நாடு.
1. Denmark – 8.2 points
இங்கும் வரிகள் அதிகம் ஆனால் சலுகைகள் அதிகம் கிடைக்கும் நாடு. கார்களுக்கு இங்குதான் அதிக வரி விதிக்கப்டுகிறது அதிகபட்சம் 180% வரை, அதனால் இங்கே எல்லோரும் இருசக்கர வாகனங்களையே அதிகம் உபயோகிக்கின்றனர்.
இந்த பட்டியலில் இருக்கும் பிற நாடுகள்
அமெரிக்கா - 7.4 புள்ளிகள் - 17வது இடம்
பிரிட்டன் - 7.1 புள்ளிகள் - 22வது இடம்
ஃபிரான்ஸ் - 6.5 புள்ளிகள் - 39வது இடம்
சீனா - 6.3 புள்ளிகள் - 44வது இடம்
இந்தியா -6.3 புள்ளிகள் - 45வது இடம்
ஜப்பான் - 6.3 புள்ளிகள் - 46வது இடம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக