திங்கள், செப்டம்பர் 05, 2011

சர்வம் பல்ப்மயம் - இது எங்க ஏரியா

ஒரு நாளு பாத்திரம் விளக்கிக்கிட்டு இருந்த அம்மாவை பார்த்து பொண்ணு கேட்டா
"ஏம்மா  உங்களுக்கு அங்க அங்க வெள்ளை முடி இருக்கு?"
அதுக்கு அம்மா
"நீ எப்ப எல்லாம் என்ன கஷ்டப்படுத்துற மாதிரி குறும்பு பண்ணுறியோ அப்ப எல்லாம் அம்மாக்கு ஒரு வெள்ளைமுடி வளரும்"
கொஞ்ச நேரம் பொண்ணு யோசிச்சா அப்புறமா
"அப்ப ஏன் பாட்டிக்கு தலைமுடி எல்லாம் வெள்ளையா இருக்கு, நீ ரொம்ப கஷ்டப்படுத்துட்டீயா?"

*************************************************************************************************************************
ஒரு நாளு ஒரு டீச்சர் ஸ்கூல்-ல சுறா மீன் பத்தி கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க அப்ப
"சுறா மீன் பெருசா இருந்தாலும் ஒரு மனுசனை முழுசா முழுங்க முடியாது, ஏன்னா அதுக்கு தொண்டை சிறுசு"
நடுவில புகுந்த ஒரு பொண்ணு
"இல்ல மிஸ் போன வாரம் பேப்பர்-ல போட்டு இருந்தான், சுறா ஒரு ஆளை முழுங்கிடுச்சுன்னு"
"நான் தான் சொல்லுறேன்-ல அதுக்கு எல்லாம் சாத்தியமே இல்லை, சுறாவால மனுசனை முழுங்க முடியாது" - திரும்ப சொன்னாங்க டீச்சர்
"சரி நான் சொர்க்கத்துக்கு போனதுக்கு அப்புறம் அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சுகிறேன்" - அப்பிடின்னா பொண்ணு
"அந்த ஆள் நரகத்துக்கு போயிருந்தா?" டீச்சர் கேட்டாங்க
"அப்ப நீங்க கேட்டு எனக்கு சொல்லுங்க" அப்பிடினுச்சாம் பொண்ணு

*************************************************************************************************************************
ஒரு நாள் ஸ்கூல்-ல டூர் கூட்டிக்கிட்டு போனாங்க, போன எடத்துல மத்தியானம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க அது பஃபே சிஸ்டம், ஒரு டீச்சர் என்ன பண்ணாங்க மொதோ இருந்த ஆப்பிள் தட்டுல "எல்லோரும் ஒன்று மட்டும் எடுத்துக்கொள்ளவும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்" அப்பிடின்னு ஒரு பேப்பர்-ல எழுதி வச்சாங்க.

கடைசியா சாக்லேட் தட்டு இருந்த்தது,   அதுல ஒரு குட்டி பையன் "இங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க கடவுள் ஆப்பிள் தட்டை கவனிச்சுக்கிட்டு இருக்காரு!!" அப்பிடின்னு எழுதி வச்சுட்டு போயிட்டான்

*************************************************************************************************************************

அவர் : நல்ல வக்கீலுக்கும் சிறந்த வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்?
இவர் : தெரியலயே!!
அவர் : நல்ல வக்கீலுக்கு சட்டம் நல்லா தெரியும், சிறந்த வக்கீலுக்கோ எல்லா நீதிபதிகளையும் நல்லா தெரியும்

*************************************************************************************************************************

ஒரு நாளு ஒரு அழகான காலேஜ் பொண்ணு, புரொஃபசர் ரூமுக்கு வந்துச்சு

"நான் எக்ஸாம்-ல பாஸ் பண்ணனும் சார், நான் எதுவேணுமினாலும் செய்யிறதுக்கு தயாரா இருக்கேன், மிச்சம் உங்க கையில தான் இருக்கு"

"அப்பிடியா, எது வேணுமின்னாலும் செய்வீயா"?

"ஆமா சார்!!"

"அப்ப புஸ்தகத்தை எடுத்து படி"

*************************************************************************************************************************

ஒரு நாளு ஒரு வீட்டுக்காரம்மா காலையில எந்திரிச்ச உடனே
"என்னங்க இன்னைக்கு ஒரு கனவு நீங்க எனக்கு ஒரு வைர மாலை பரிசா குடுக்குற மாதிரி, இதுக்கு என்ன அர்த்தம்"

"மனச போட்டு குழப்பிக்காதே, இதுக்கு பதில் சாயந்தரம் தெரியும்" அப்பிடின்னு சொல்லிட்டு வீட்டுக்காரரு வேலைக்கு போயிட்டாரு.

சாயந்தரம் வீட்டுக்காரரு கையில ஒரு கிஃப்ட் பார்சல், ஆர்வமா அந்தம்மா தொறந்து பார்த்தாங்க, அதுல
"கனவுகளும் அதன் பலன்களும்" புத்தகம்..

12 கருத்துகள்:

மகேந்திரன் சொன்னது…

முதல் துணுக்கு

முதல் மற்றும் மூன்றாம் துணுக்கு மனத்தைக் கவர்ந்தது.
இந்த காலத்து குழந்தைகள் கிட்டே பேச முடியாது நண்பரே....

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

4 ...ம் ...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

ரசித்து சிரித்தேன்....

அத்தனையும் அழகு....

தமிழ்வாசி - Prakash சொன்னது…

எல்லாமே செம டாப்பு...

பாலா சொன்னது…

எல்லாம் செம பல்பு. வேறென்ன சொல்ல...

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள அடடடா அச்சரா சூப்பருய்யா!

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

haa haa haa ஹா ஹா செம

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

நிரூபன் சொன்னது…

பாட்டி பத்தி சின்னப் பொண்ணு கேட்ட கேள்வி..சரியான பல்பு தான்.

நிரூபன் சொன்னது…

முதல் இரண்டு பல்புகளும் ,குழந்தைப் புள்ளைங்க கொடுத்திருக்காங்களே.

நிரூபன் சொன்னது…

வக்கீல் ஜோக்கும் கலக்கல் பாஸ்,
ரசித்தேன்.
அனைத்து ஜோக்குகளும் அசத்தல்.

ராஜி சொன்னது…

கனவுகளும், அதன் பலன்களும் ஜோக் அருமை சகோ!

இடுகைகளை இ-மெயிலில் பெற