இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராசு மாகாணம் என்ற பெயர் மதராசு மாநிலம் என்று மாற்றம் கண்டது, தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தது.
1953-இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது.
1956இல் மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அந்த பெயர் மாற்றப்படவில்லை ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் வழக்கத்தில் இருந்தது. இன்னும் வட இந்தியாவில் மதராசி என்ற சொல் இன்றும் வழக்கத்தில் உள்ளது, அவர்களுக்கு தென் இந்தியாவில் இருந்து வரும் எல்லோருமே மதராசிகள் தான்.
"சென்னை ராஜ்ஜியம்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் சங்கரலிங்கனார் 1957-ல் உண்ணா விரதம் இருந்தார். இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 63.
விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது. இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.
"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார்.
மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார்.

"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே" என்று அண்ணா கூறினார்.
"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார்.
நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.
அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 78-வது நாளில் (அக்டோபர் 13, 1957) அவர் மரணம் அடைந்தார். இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது.
தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின. இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.
இதுபற்றிய அறிவிப்பை 24-2-1961-ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார். அதில்
"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம். இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும். எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம்.
"இப்படி இரண்டு விதமாக பெயர் இருக்கலாமா?" என்று பலருக்கு சந்தேகம் ஏற்படலாம். ஜெர்மனியை எடுத்துக்கொள்ளுங்கள். உலகில், "ஜெர்மனி" என்றால்தான் தெரியும். ஆனால் ஜெர்மானியர்கள் தங்கள் தேசத்தை "டூஷ் லேண்ட்" என்றுதான் அவர்கள் மொழியில் கூறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏதாவது குறைவு வந்துவிட்டதா? வெளி உலகில், "ஜெர்மனி" என்று சொல்லக்கூடாது என்று அவர்கள் தடுக்கவில்லை. அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.
இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.
எனினும், ஆங்கிலத்திலும் "TAMILNADU" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அந்த கோரிக்கை அப்போது ஏற்கப்படவில்லை. பிறகு அதுவும் ஏற்கப்பட்டு இப்போது ஆங்கிலத்திலும் TAMILNADU என்றே எழுதப்படுகிறது.
14 கருத்துகள்:
mudhal முதல் மழை
daittilil டைட்டிலில் ஒரு வில்லங்கம்??
@சி.பி.செந்தில்குமார்
நன்றி அண்ணே!!
வில்லங்கம் எதுவும் இல்லை அண்ணே, பழசை எல்லோருக்கும் ஞாபகப்படுதுறதுக்கு தான் குப்பை தொட்டி. வாரம் ஒரு நாள் எழுதிக்கிட்டு இருக்கேன்.
தமிழ்நாட்டிற்கும் இதற்கும் எதுவும் சம்மந்தம் இல்லை..
டைட்டில் சூப்பர் நண்பா..
அறிந்துகொள்ளவேண்டிய செய்தி. வாழ்த்துக்கள்.
சேம் பிளட் ஹி ஹி...
டுடே லொள்ளு ம்ஹும் ரொம்பதான் ஹா ஹா ஹா ஹா...
புதிய தகவலுடன்...
லொள்ளுக்கு ஒரு சபாஷ்...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
அறிந்து கொள்ள வேண்டிய நல்லபதிவுதான்.
தெரியாத விஷயம். தெரிந்து கொள்ள வைத்தீர் சகோ! நல்லதொரு பதிவு. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!
பக்கம் பக்கமாக இருக்கும் பதிவை விட பக்கத்தின் இறுதியில் இருக்கும் படமே அதிகம் ரசிக்க வைத்தது...
நல்ல பதிவு மாப்ள!
கருத்துரையிடுக