வியாழன், செப்டம்பர் 22, 2011

ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி

இன்றைய சிந்தனை 

1. "நீங்கள் எதை எல்லாம் செய்ய முடியும்  அல்லது  கனவு காண முடியும் என்பதை உடனே துணிந்து ஆரம்பியுங்கள். துணிச்சல் மேதைமை, சக்தி மற்றும் மாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது."

2. "பாதுகாப்பு என்பது பெரும்பாலும் ஒரு மூட நம்பிக்கை. வாழ்க்கை எப்போதும் ஒரு பயம் உள்ள சாகசமாகவே உள்ளது."

3. "சில செயல்கள் கடினம் என்பதால் நாம் துணிந்து செய்யாமல் இருக்கிறோம், உண்மையில் நாம் துணிந்து செய்யாததால் மட்டுமே அது கடினமாக தோன்றுகிறது"

4 . "எப்போதும் விளிம்பு வரை செல்ல முயலுங்கள், அங்கே தான் செயல்களின் பலன் கிடைக்கும்" 

5. "விஷயங்கள் கட்டுப்பாட்டில் தெரிகிறது என்றால், நீங்கள் போதுமான அளவிற்கு போகவில்லை என்று பொருள்"

6 . "ஒரு பெரிய அடி எடுத்து வைக்க பயப்படவேண்டாம்.  இரண்டு சிறிய அடியை வைத்து கடலை கடக்க முடியாது."

7. "தினமும் உங்களை பயமுறுத்தும் ஒரு செயலை செய்யவும்"

8 . "உங்கள் உள்ளுணர்வினை   நம்புங்கள். உங்கள் தவறுகளே   வேறொருவரின் தவறுகளை விட சிறந்த ஞானம் தரும்"

9. "வாழ்க்கையில் பல முடிவில்லா ஆபத்துக்கள் உள்ளன, அவற்றில் ஒன்று பாதுகாப்பு" 

10. "தவறுகளை கண்டு பயப்படாதே. அவை எதுவும் இல்லை."


11 . "இன்று செய்த செயல்களை விட செய்யாமல் விட்ட செயல்களை நினைத்து பின் வருந்த வேண்டாம்.  பாதுகாப்பான துறைமுகங்களை விட புயல் வீசும் கடல் நிச்சயம் சிறந்தது"

12. "முத்துக்கள் எப்போது கடற்கரையில் கிடைக்காது முத்தெடுக்க வேண்டுமென்றால் மூச்சடக்கி கடலுக்குள் மூழ்க வேண்டும்"

13. "மொட்டு மலருவது கூட ஒரு வலி நிறைந்த நிகழ்வு தான் பூவுக்கு"

14 . "வாய்ப்புகள் எப்போதுமே இடையூறுகளை பற்றி அஞ்சாதவர்களுக்கே கிட்டும்"

15 . "தேவை மட்டுமே இடையூறுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கொடுக்கும்"

16. "நீங்கள் கெட்டவர்களாக இருக்கக்கூடாது என்கிற பயமே உங்களை நல்லவர்களாக வைத்து இருக்கிறது"

17. "வெற்றி என்பது தொடர் தோல்விகளுக்கு பிறகே வாய்க்கிறது"

18. "உங்களுக்கு எந்த இடையூறும் இல்லை என்றால் நீங்கள் எந்த இடையூறையும் தைரியமாக எதிர் கொள்ளலாம்" 

19. "ஒரு இறந்த மீன் ஓடைக்கு கீழே மிதக்க முடியும்,  ஆனால் அது உயிருடன் இருக்கும் மீனால் மட்டுமே அலையை எதிர்த்து நீந்த முடியும்"

20 . "இடர்களை எதிர் கொள்ளுங்கள்: வெற்றி பெற்றால், சந்தோஷம் கிடைக்கும், இல்லாவிட்டால் ஞானம் கிடைக்கும்"

இன்றைய லொள்ளு 


22 கருத்துகள்:

cheena (சீனா) சொன்னது…

அன்பின் சுரேஷ் பாபு - அருமையான சிந்தனை - லொள்ளு சூப்பர் - இது டேஷ் போர்டில் வரவில்லை - பொறுத்திருந்து பார்க்க வேண்டும் - 150 - ஃப்ரெண்டு மச்சான் - வந்திருந்தது - 150க்கு நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

திகைக்க வைக்கும் சிந்தனைகள்...

மொட்டு மலர்வது கூட ஒரு வலிநிறைந்த நிகழ்வு தான் பூவுக்கு...

சூப்பர்...

வலிகள் இல்லாத வாழ்க்கை இனிக்காது...

# கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

லொல்லும் சூப்பர்..

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

பதிவிற்கு ஏற்ற தலைப்பு..

சிந்திக்க தூண்டும் சிந்தனைகள்.

அருமை...

NAAI-NAKKS சொன்னது…

Good thinking !!!!

suryajeeva சொன்னது…

அது சரி...

N.H.பிரசாத் சொன்னது…

நல்ல ஒரு அருமையான தன்னம்பிக்கை பதிவு. பகிர்வுக்கு நன்றி.

Lakshmi சொன்னது…

நல்ல சிந்தனைகள் எல்லாமே நல்லா இருக்கு.

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

தன்னம்பிக்கை வரிகள் கலகலப்புடன் சூப்பர்...!!!

நிரூபன் சொன்னது…

இனிய இரவு வணக்கம் பாஸ்,
இருங்க படிச்சிட்டு வாரேன்.

நிரூபன் சொன்னது…

வாழ்வில் மேம்படுவதற்கேற்ற சிந்தனைகளைத் தொகுத்து தந்திருக்கிறீங்க.

நல்லதோர் பகிர்வு.

நிரூபன் சொன்னது…

லொள்ளு சூப்பர் பாஸ்...

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

அருமை .

தமிழ்வாசி - Prakash சொன்னது…

சிந்தனையும் லொள்ளும் சூப்பர்

Rathnavel சொன்னது…

அருமையான பதிவு.
அருமையான செய்திகள்.
வாழ்த்துக்கள்.

M.R சொன்னது…

நல்ல தத்துவங்கள் நண்பரே

மீன் கூட இடம் பற்றாமல் பெரிய இடமாக பார்க்கிறது ஹும்..

கோகுல் சொன்னது…

முதலில் 150-க்கு வாழ்த்துக்கள்!
ரஸ்க் சாப்பிட நாங்க தயாராயிட்டோம்!

பெயரில்லா சொன்னது…

சிந்தனை + லொள்ளு = கலக்கல்

Philosophy Prabhakaran சொன்னது…

நிறைய கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

150க்கு வாழ்த்துக்கள்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

இன்றைய சிந்தனைகள் சூப்பர்.

FOOD சொன்னது…

வலிகளின்றி வாழ்க்கையில்லை.

இடுகைகளை இ-மெயிலில் பெற