புதன், செப்டம்பர் 21, 2011

ஒவ்வொரு ஃப்ரெண்ட்டும் தேவை மச்சான்!!

இது என்னோட 150 வது பதிவு.. இதுவரைக்கும் அதரவு தந்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள்.    எவ்வளவோ ப்ளேடு / மொக்கை போட்டு இருக்கேன் பதிவுல,  எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இன்னும் என் பதிவுகளை படிக்கும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி.  தொடர்ந்து இன்னும் நிறைய பதிவுகள் எழுதணும்ன்னு ஆசை, உங்கள் ஆதரவால் எல்லாம் நல்லாவே நடக்கும்.


இன்றைய சிந்தனை

காலம் தாமதிக்காது

பிறந்ததொரு காலம்
    இறப்பது இன்னொரு காலம்
விதைத்தது ஒரு காலம்
    அறுவடை இன்னொரு காலம்
இடறி விழுந்தது ஒரு காலம்
    நிமிர்தெழுவது இன்னொரு காலம்
கண்ணீர் கன்னம் நிரப்பியது ஒரு காலம்
    சிரிப்பு இதழ் நிறைக்கும்  இன்னொரு காலம்
தேடி திரிந்தது ஒரு காலம்
    தொலைத்து நிற்பது இன்னொரு காலம்
பிடித்தே இருந்தது  ஒரு காலம்
    விலகி இருப்பது இன்னொரு காலம்
மனம் முழுக்க அன்பு இருந்தது ஒரு காலம்
    வெறுப்பை தவிர வேறல்லாமல் இருப்பது இன்னொரு காலம்
நாம் தாமதிக்கலாம்
    காலம் தாமதிக்காது


நேத்து ஒரு நியூஸ் படிச்சேன் புதுசா ஒரு படம் எடுக்குறாங்களாம் பேரு 6, எல்லாம் 6 மாசம் / 6 வாரம் / 6 நாள் / 6 மணி / 6 நிமிஷம் / 6 செகண்ட்-ல நடக்குற சம்பவங்கள் கதையாம். சரி நாமளும் 6 வச்சி ஏதாவது பதிவை தேத்த முடியுமான்னு யோசிச்சேன் அதோட விளைவு கீழே

கல்யாணம் பண்ண 6 வாரத்துல / 6 மாசத்தில / 6 வருசத்தில என்ன நடக்குது

கொஞ்சல்ஸ்

6 வாரத்தில        :    ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு நெனச்ச நேரம் எல்லாம்
6 மாசத்தில        :    எப்பயாவது ஐ லவ் யு
6 வருசத்தில    :    லவ்வா  அப்பிடின்னா?

ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வந்தா

6 வாரத்தில        :    அன்பே    நான் வந்துட்டேன் - சாயந்தரம் 6 மணிக்கே 
6 மாசத்தில        :    வந்துக்கிட்டே இருக்கேன் - சாயந்தரம் 8 மணிக்கு   
6 வருசத்தில    :    (மனைவி பையன் கிட்ட) நீ தூங்குடா உங்க டாடி எப்ப வருவாரோ தெரியாது  - மணி நைட் 11 மணி


பரிசு


6 வாரத்தில        :    செல்லம் நான் ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் உனக்கு பிடிச்சு இருக்கா பாரேன்
6 மாசத்தில        :    பூ ஏன் பேக்-ல இருக்கு கொஞ்சம் சாமிக்கு போட்டுட்டு நீ கொஞ்சம் வைச்சுக்கோ
6 வருசத்தில    :    இந்தா பணம் ஏதாவது வாங்கிக்கோ


ஃபோன் அடிச்சா

6 வாரத்தில        :    கண்ணு உனக்கு தான் ஃபோன் உங்க அம்மா லைன்-ல
6 மாசத்தில        :    ஃபோன் உனக்கு தான் இங்க இருக்கு
6 வருசத்தில    :    எவ்வளவு நேரம் ஃபோன் அடிக்குது பாரு சீக்க்ரம் எடுத்து தொலையேன்

சமையல்

6 வாரத்தில        :    இவ்வளவு ருசியா நான் சாப்பிட்டதே இல்லை
6 மாசத்தில        :    இன்னைக்கு என்ன சமையல்
6 வருசத்தில    :    இன்னைக்கும் அதே தானா


டிரஸ்

6 வாரத்தில        :    இந்த டிரஸ்-ல நீ தேவதை மாதிரி இருக்கே
6 மாசத்தில        :    திருப்பியும் புது டிரஸ் எடுத்து இருக்கியா
6 வருசத்தில    :    இவ்வளவு காசு போட்டு இப்ப புது டிரஸ் தேவையா

இன்றைய கேள்வி

ஒரு மரணதண்டனை கைதி அவனுக்கு மூணு சான்ஸ் சாகுறதுக்கு

1.    மொதோ ரூம்ல பூராவும் யாக குண்டம் மாதிரி தீ எரியும் அதுக்குள்ள போகணும்
2.    ரெண்டாவது ரூம்ல நிறைய சிங்கங்கள் இருக்கு மூணு வருஷம் பட்டினி
3.     மூணாவது ரூம்ல குண்டு ரொப்புன துப்பாக்கியோட இவனோட எதிரி இருக்கான்

இதுல எந்த ரூமுக்கு போனா அவனுக்கு நல்லது ?


இன்றைய லொள்ளு

24 கருத்துகள்:

வியபதி சொன்னது…

நல்ல சிந்தனை.. ஆனால் ஆறு வருங்களில் இவ்வளவு மோசமாகவா மாறும்?/

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@வியபதி
நன்றி நண்பரே..

இதெல்லாம் நடக்க கூடாதுன்னு நினைக்கிறவங்க டிவேர்ஸ் பண்ணிக்கிறாங்களோ!!?

suryajeeva சொன்னது…

எதிரியிடம் போய் சிக்கி கொள்வதே மேல், சாவதற்கு முன் அவன் கோபமாவது தீர வழி உண்டாகும்...

!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…

இன்றைய லொள்ளு சூப்பர்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

150 க்கு வாழ்த்துக்கள் .

விக்கியுலகம் சொன்னது…

மாப்ள வாழ்த்துக்கள்....அந்த சமையல் விஷயம் ரெண்டு தரப்புக்கும் பொதுவானதா...ஹிஹி....சாகரதுன்னு முடிவானதுக்கப்புறம்....!

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

@suryajeeva

நன்றி நண்பா...

ஆனா நீங்க எப்பயுமே சீரியஸா தான் இருப்பீங்களா? உங்க போட்டோ என்னை மொறைக்கிற மாதிரியே இருக்கே # டவுட்

N.H.பிரசாத் சொன்னது…

150 பதிவு வரை எழுதியிருக்கும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள். தொடர்ந்து பல நல்ல பதிவுகளை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பகிர்வுக்கு நன்றி.

பாலா சொன்னது…

150க்கு வாழ்த்துக்கள்.

அப்புறம் நமக்கு கல்யாணத்தில் அனுபவம் இல்லீங்க...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

நூற்றி அம்பதாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்...

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

அய்யய்யோ டுடே லொள்ளு, செத்தான் அவன் ஹே ஹே ஹே ஹே...

தனிமரம் சொன்னது…

150 பதிவுக்கு வாழ்த்துக்கள்! 
கலியாண விபரம் இன்னும் போதல இப்பத்தான் சிலகாலம் திருமணம் முடித்து பிறகு பார்க்கலாம் இவை உண்மையா என்று!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

150க்கு வாழ்த்துக்கள்.

தமிழ்வாசி - Prakash சொன்னது…

ஒன்னரை சதத்துக்கு வாழ்த்துகள்.

இரவு வானம் சொன்னது…

ஒன் பிப்டிக்கு வாழ்த்துக்கள் நண்பா, அனைத்துமே கலக்கலாக இருந்தது

M.R சொன்னது…

150-க்கு வாழ்த்துக்கள்

Philosophy Prabhakaran சொன்னது…

150-க்கு வாழ்த்துக்கள்...

Philosophy Prabhakaran சொன்னது…

எதை பார்த்தாலும் இத வச்சி எப்படி பதிவு தேத்துறதுன்னு யோசிக்க ஆரம்பிச்சிட்டீங்க போல...

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

150வது பதிவிற்கு வாழ்த்துக்கள், தொடர்ந்தும், பல்சுவைப் பதிவுகளால் எங்களை மகிழ்வியுங்கள்.

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

150வது பதிவிற்கு வாழ்த்துக்கள், தொடர்ந்தும், பல்சுவைப் பதிவுகளால் எங்களை மகிழ்வியுங்கள்.

நிரூபன் சொன்னது…

காலம் பற்றிய சிந்தனைக் கவிதை அருமை பாஸ்.

நிரூபன் சொன்னது…

வித்தியாசமான கற்பனையோடு, ஆறினை வைத்து அசத்தல் காமெடி பண்ணியிருக்கிறீங்க.

நிரூபன் சொன்னது…

இன்றைய கேள்விக்கான விடை, ஆப்சன் 3

ஜ.ரா.ரமேஷ் பாபு சொன்னது…

கருத்து சொன்ன நண்பர்கள் எல்லோருக்கும் நன்றி..

இந்த பதிவில் கேட்டக்கப்பட்ட கேள்விக்கான விடை

சிங்கம் இருக்கும் அறை சிறந்தது ஏன்னா 3 வருஷம் பட்டினியா இருந்தா சிங்கமெல்லாம் செத்து போயிருக்கும்..

ஐயோ அங்கே யாரோ அருவாளோட வர்ற மாதிரி தெரியுது நான் எஸ்கேப் !!

இடுகைகளை இ-மெயிலில் பெற