தனி தெலுங்கானா போராட்டம்
இந்தியாவின் விடுதலைக்குப்பின் இந்தியாவின் பல்வேறு மாகாணங்கள் சிறு சிறு அரசர்களின் ஆட்சியில் இருந்தது அதில் ஒன்று ஐதராபாத். ஐதராபாத்தின் நிசாம் தன்னாட்சியை தொடர விரும்பினார். ஆனால் ஐதராபாத்தில் இருந்த இந்துக்கள் எல்லாம் இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர். அப்போதைய கணக்கின் படி இந்துக்கள் அதிகம் இருந்தனர் (93% சதவீதம்). அவர்கள் எல்லாம் சேர்ந்து "JOIN INDIA" என்ற இயக்கம் தொடங்கி நிசாமிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்களும், கம்யூனிஸ்ட்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாய் இருந்தனர். ஆனால் நிசாம் அவர்களை ஒடுக்க தன் படையின் துணையோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார்.
புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17,1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கையை நிசாமிற்கு எதிராக துவங்கியது. திரு J. N. சௌதாரி தலைமையில் ஐதராபாத நகருக்குள் புகுந்த இந்தியா இராணுவம் நிசாமின் படைகளை துவம்சம் செய்தது, இதன் மூலம் ஐதராபாத் நாடு இந்தியா வசம் ஆனது.
கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமஸ்தானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன. இவை எல்லாம் ஒன்று சேர்த்து "விசாலஆந்திரா" என்பதே அவர்களின் கனவாக இருந்தது. இறுதியில் பொட்டி ஸ்ரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது. டிசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார்.
உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.
ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு ஒன்றை அளித்தது. இந்த உடன்படிக்கையின் படி தெலுங்கானா பகுதியில் உள்ள அடிலாபாத், நிஜாமாபாத், மேடக், கரீம்நகர், வாரங்கல், கம்மம், நலகொண்டா, மகபூப்நகர் மற்றும் ஹைதராபாத் ஆந்திராவுடன் இணையும், மேலும் ஹைதராபாத் தலைநகர் ஆக்கப்படும் என்றும் ஆந்திரா இனி ஆந்திர பிரதேசம் என்று அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, மேலும் தெலுங்கானா பகுதிக்கான கவுன்சில் ஒன்று அமைக்கப்படும், அது தெலுங்கானா பகுதியில் வளர்ச்சிப்பணிகளை அல்லது திட்டங்களை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது.
தனி தெலுங்கானாவுக்கான போராட்டம்
1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். தெலுங்கானா மற்றும் ஜெய் ஆந்திரா இந்த இரண்டு இயக்கங்களும் 1969 முதல் 1972 வரை ஆந்திராவை ஸ்தம்பிக்க வைத்த போரட்டங்கள், சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.
ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும், கட்சி தலைமைக்கு (இந்திரா காந்தி) தனி தெலுங்கானாவில் விருப்பம் இல்லை என உணர்ந்தார், இதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் பிரம்மானந்த ரெட்டி ராஜினாமா செய்ய செப்டம்பர் 1971 இல் P.V. நரசிம்ம ராவ் முதல்வர் ஆனார், தெலுங்கானா பிரஜா சமிதி கட்சி உறுப்பினர்கள் தமது கொள்கைகளைக் கைவிட்டு காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.
1972 இல் துவங்கிய ஜெய் ஆந்திரா போராட்டம் இன்னொரு மிகப்பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது, முல்கிகள் (தெலுங்கானா பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள்) மட்டுமே தெலுங்கானா பகுதியில் மற்றும் ஹைதராபாத் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்கப்பட்ட போராட்டம். இதை எதிர்த்து மாநில அரசு உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது, அந்த வழக்கை விசாரித்த 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முல்கி சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பெயல் செய்த இந்த வழக்க்கின் தீர்ப்பு உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராய் வந்தது, 3 அக்டோபர் 1972 இல் வெளியான தீர்ப்பு ஆந்திரா அரசியலில் புயலை கிளப்பியது.
பிற பகுதியை சேர்ந்த ஆந்திர மக்கள் தலைநகரில் தங்களின் உரிமை இழந்து விட்டதாய் நினைத்தனர், இதை தொடர்ந்து வன்முறை நிகழ்வுகளும் தொடர்ந்தன, எனவே ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்தது. அதன் பிறகு மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பியதும் 1973இல் குடியரசு தலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் அரிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது, திரு. சென்னா ரெட்டி அவர்கள் ஆறாவது முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்ற பின் தனி தெலுங்கானா இனி ஒரு பிரச்சனையாய் இருக்காது என்று அறிவித்தார், அதன் விளைவு கட்சியில் அவருக்கு எதிரான உள்ளடி வேலைகள் நடக்க துவங்கின, விளைவு 1980 இல் ராஜினாமா செய்தார், அதன் பின் T. அஞ்சனையா முதல்வர் ஆனார் ஆனால் அவரும் 1 வருடம் 4 மாதங்களில் பதவியை இழந்தார், அதன் பின் பொறுப்புக்கு வந்த பவனம் வெங்கட்ராமன் மீண்டும் பதவியை இழக்க நேர்ந்தது, அதன் பின் ஸ்ரீ கே. விஜய பாஸ்கர ரெட்டி முதல்வர் ஆனார், அதாவது 4 ஆண்டுகளுக்குள் 4 முதல்வர்கள் மாறும் ஒரு மோசமான சூழ்நிலை நிலவியது ஆந்திராவில்.
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை துவங்கி ஆட்சியை கைப்பற்றினார் திரு N. T. ராமா ராவ். அவருடைய அரசும் தந்திரமாக கலைக்கப்பட்டது, இருந்தாலும் மறு முறையும் வென்று முதல்வர் ஆனார் NTR. ஆனால் அடுத்த முறை அவர் கொண்டு வந்த சில சட்டங்கள் மக்கள் விரும்பாத காரணத்தினால் 1989இல் காங்கிரஸ்க்கு வாக்களித்து மீண்டும் சென்னா ரெட்டி முதல்வர் ஆனார். பிறகு உட்கட்சி பூசலால் சென்னா ரெட்டிக்கு பதில் ஜனார்த்தன ரெட்டி முதல்வர் ஆனார், பின் அவரும் ராஜினாமா செய்தார் பின் விஜய பாஸ்கர ரெட்டி முதல்வர் ஆனார். இதை கண்ட மக்கள் வெறுப்படைந்து மீண்டும் அடுத்த தேர்தலில் 1994 தெலுங்கு தேசத்திற்கு வாக்களித்து என்டிஆர் முதல்வர் ஆனார், அடுத்த தேர்தலிலும் 1999இல் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று சந்திரா பாபு நாயுடு முதல்வரானார். பின் 2004-இல் YSR என்று அழைக்கப்படும் ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.
இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர். அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி(TRS)என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.
2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் டிஆர்எஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் டிஆர்எஸ்-ம் கூட்டணி அரசில் பங்கேற்றது. இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் டிஆர்எஸ் கூட்டணியிலிருந்து விலகியது.
காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது. மார்ச் 2008இல் அனைத்து டிஆர்எஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் டிஆர்எஸ் தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.
இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரஜா கட்சியை துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.
2009 பொதுத் தேர்தல்களின் போது டிஆர்எஸ் மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர். புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர். இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
டிசம்பர் 2009: டிஆர்எஸ் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் (KCR)தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்துள்ளது. டிசம்பர் 2009, 10-ஆம் நாளன்று, இந்திய மைய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று அறிவித்தது. இதற்கான அறிவிப்பை மைய உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அதே நாளில் வெளியிட்டார்.

இன்னும் குப்பையை கிளறுவோம் - அடுத்த வெள்ளிக்கிழமை
9 கருத்துகள்:
நண்பர்களே வேலை நிமித்தம் வெளியூர் சென்று இருந்ததால் ஒரு வாரம் யாருடைய பதிவிற்கும் வர இயலவில்லை, இன்று முதல் ஆட்டம் ஆரம்பம்..
பல விஷயங்களை எளிதாக புரிய வைத்த பதிவுக்கு நன்றி மாப்ள!
கிளருங்கள் ... தொடர்கிறேன் .
Very detailed post
good post.keep it up
ஆரம்ப ஆட்டமே அதிரடி!தனி தெலுங்கானாவின் ஆதிமுதல் அறிய வைத்துவிட்டீர்கள் நன்றி!தொடர்ந்து கிளறுங்கள்!
வணக்கம் சகோதரம்,
எப்படி இருக்கிறீங்க.
தனித் தெலுங்கானாக் பற்றிய பல புதிய தகவல்களை உங்கள் பதிவு மூலமாக அறிந்தேன்,
puthiya thakavalkal
வாங்க.. வாங்க.. நானும் இன்னைக்கு தான் வந்தேன்..
கருத்துரையிடுக