வியாழன், செப்டம்பர் 15, 2011

ஏலேய் மக்கா எதுனா புரியுதாலே

ஒரு நாள் ஆஃபிஸ்-ல பாஸ் அவரோட செக்ரெட்டரிய கூப்பிட்டு

"நாம இன்னைக்கி நைட் டெல்லி போகணும் மீட்டிங் இருக்கு நாளைக்கு காலையில திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.  வீட்டுல சொல்லீட்டு தேவையானது எல்லாம் எடுத்துக்கோ 8 மணிக்கு ஃப்ளைட்"

செக்ரட்டெரி வீட்டுக்கு வந்து எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு ஆஃபிஸ்-ல (இது வேற ஆஃபிஸ்) இருந்த தன் கணவருக்கு ஃபோன் பண்ணுறாங்க

"என்னாங்க எங்க டெல்லி ஆஃபிஸ்-ல  மீட்டிங் இருக்கு இன்னைக்கு நைட் புறப்படுறேன் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் பத்திரமா பார்த்துக்குங்க"

அந்த வீட்டுக்காரரு டியூஷன் சென்டர் வைச்சு இருக்க தன்னோட ஃப்ரெண்ட்க்கு ஃபோன் பண்ணி "நண்பா என் பொண்டாட்டி ஊருக்கு போறா ஒரு வாரம், டெய்லி சாயந்தரம் வீட்டுலய பார்ட்டி வைச்சுக்கலாம் என்ன சொல்ற? இன்னைக்கே ஆரம்பிச்சுடுவோம் என்னா?"

டியூஷன் சென்டர்-ல "பசங்களா சார் ஒரு வாரம் பிசி அதனால உங்களுக்கு எல்லாம் ஒரு வாரம்  லீவு"

அதுல ஒரு பையன் அவங்க தாத்தாவுக்கு ஃபோன் பண்ணி "தாத்தா எனக்கு டியூஷன் ஒரு வாரம் லீவு ஸ்கூல்-ம்  ஒரு வாரம் லீவு, என் கூட  இருப்பீங்களா?"

உடனே அந்த தாத்தா (அவரு தான் மொதோ லைன்-ல வந்த பாஸ்) தன்னோட செக்ரட்ரிக்கு ஃபோன் பண்ணி "வேற ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு நம்ம மீட்டிங் கேன்ஸல், எல்லோர்க்கும் இன்ஃபார்ம் பண்ணிடு"  

செக்ரட்ரி தன்னோட வீட்டுக்காரருக்கு ஃபோன் பண்ணி "என்னாங்க மீட்டிங் கேன்ஸல் பண்ணீட்டாறு எங்க பாஸ் அதனால சாயந்தரம் வீட்டுக்கு வந்துடுறேன் எப்பயும் போல"

வீட்டுக்காரருக்கு ஒண்ணும் புரியல ஒடனே ஃபோன் போட்டாரு தன்னோட ஃப்ரெண்ட்க்கு "டாய் என் பொண்டாட்டி ஊருக்கு போகலையாம் அதனால நம்ம பார்ட்டி எல்லாம் கேன்ஸல், நீ சரக்கோடா வீட்டுக்கு வந்துடாதே"

நண்பர் டியூஷன் சென்டர்-ல  "பசங்களா சாருக்கு வேலை இல்லை நீங்க எப்பயும் போல டியூஷனுக்கு வந்துடுங்க"

அந்த பையன் திருப்பி தாத்தாக்கு ஃபோன் பண்றான் "தாத்தா டியூஷன் இருக்காம், லீவு இல்லையாம, என்னால உங்களோட இருக்க முடியாது"

தாத்தா என்கிற பாஸ் திரும்ப தன்னோட செக்ரெட்டரி ஃபோன் பண்ணி

"நாம இன்னைக்கி நைட் டெல்லி போகணும் மீட்டிங் இருக்கு நாளைக்கு காலையில திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.  வீட்டுல சொல்லீட்டு தேவையானது எல்லாம் எடுத்துக்கோ 8 மணிக்கு ஃப்ளைட்"

என்ன இப்பவே கண்ணை கட்டுதா?- இதுக்கு பேரு தாம்ல டெட்லாக் !!.


=========================================================================

இன்றைய நீதி


ஒரு நாளு ஒரு சலூன்-ல முடி வெட்டிக்கிட்டு இருந்தாரு சுப்பு, அப்ப சலூனுக்குள்ள வந்தான் அவரோட 7  வயசு பையன் சுரேஷ் , அவன பார்த்த சலூன் கடைக்காரர்.

"இந்த பயலுக்கு எதுவுமே தெரியல சுப்பு சார்"

"என்ன சொல்றீங்க?" சுப்பு கேட்டாரு

சட்டைப்பையில் இருந்து ஒரு 5 ரூபாய் காசும் இரண்டு ஒரு ரூபாய் காசுகளும்  எடுத்து ஒரு கையில் 5 ரூபாய் காசும் இன்னொன்றில் இரண்டு 1 ரூபாய் காசுகளையும் வைச்சுக்கிட்டு

"இப்ப பாருங்க, தம்பி உனக்கு இந்த கையில இருக்க காசு வேணுமா இல்ல இந்த கையில இருக்குற காசு வேணுமா?"

பையன் ரெண்டு ஒரு ரூபா இருந்த கையை காமிச்சு "இது வேணும்"

"சரி எடுத்துக்கோ" கையில் இருந்த ரெண்டு ஒரு ரூபாய் காசுகளை பையன் கிட்ட குடுத்து விட்டாரு சலூன் கடைக்காரரு.

சுப்பு கிட்ட "பாருங்க சார் இந்த பையனுக்கு இன்னும் எது பெருசு எது சிறுசுன்னே தெரியலே!!"

கொஞ்ச நேரம் கழிச்சி கையில ஒரு கோன் ஐஸ்ஸோட உள்ள வந்தான்

அவனைப்பார்த்து "ஏன் தம்பி 5 ரூவாயை விட்டு ரெண்டு ரூவாயை எடுத்துக்கிட்ட?" சுப்பு கேட்டாரு

"மொதோ நாளே 5 ரூவாயை எடுத்து இருந்தா அப்பவே இந்த விளையாட்டை எங்கப்பா நிப்பாட்டி இருப்பாரு எனக்கு தான் தெனம் ரெண்டு ரூவா நஷ்டம். இப்ப பாருங்க ஒரு மாசமா தெனம் ரெண்டு ரூவா கெடைக்குது"

நீதி :  யார் எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.
காரணங்கள் ஏதுமின்றி காரியங்கள் நிகழுவது இல்லை
காரியங்கள் புரிந்தாலும் காரணங்கள் புரிவதில்லை

இன்றைய கடி

பாஸ்         : இன்னைக்கு நைட் நீங்க ஃப்ரீ-யா?
செக்ரட்ரி    : (வெட்க்கத்துடன்) ஆமா ஸார்..
பாஸ்        : அப்ப இந்த 100 பக்க ஃபைல்ல இருக்குறத கொஞ்சம் டைப் பண்ணி என்னோட இ-மெயிலுக்கு அனுப்பி வச்சுடுங்க!!


இன்றைய லொள்ளு

நண்பேன்டா



14 கருத்துகள்:

rajamelaiyur சொன்னது…

கடி சூப்பர் பாஸ்

rajamelaiyur சொன்னது…

வடை எனக்கா பாஸ் ?

Unknown சொன்னது…

மாப்ள கல்க்கல்யா...டேட் லாக்(டெட் லாக் அல்ல ஹிஹி!)

M.R சொன்னது…

அருமையாக ரசிக்க கூடியதாக உள்ளது .
ரசித்தேன் சிரித்தேன்

நாய் நக்ஸ் சொன்னது…

Nalla irukku,,,,
thanks......

K சொன்னது…

வணக்கம் சார், கும்புடுறேனுங்க!

மொதலாவது கதையும், இன்றயகடியும் சூப்பர்!

மகேந்திரன் சொன்னது…

ரசித்தேன் சிரித்தேன்
நல்லா இருக்கு நண்பரே.....

நிரூபன் சொன்னது…

அடப் பாவமே...டெட்லாக் சூப்பராச் சொல்லியிருக்கிறீங்க...

ஹா...ஹா....

நிரூபன் சொன்னது…

ஒவ்வோர் செயலின் பின்னும் ஒரு காரணம் இருக்கும் என்பதனை நீதி எளிமையாக விளக்கி நிற்கிறது.

நிரூபன் சொன்னது…

பிரீயா இருந்தா டைப் பண்ணக் கொடுப்பாங்களோ...

அவ்........


நண்பேண்டா லொள்ளு...செம கடி...

ரசித்தேன் பாஸ்...

bandhu சொன்னது…

டெட்லாக் கதை பிரமாதம்! அதே போல் கடியும்!

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

நல்ல கதையா இருக்கே..

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

சிந்திக்கவேண்டி
வாழ்வியல் நீதி...

முனைவர் இரா.குணசீலன் சொன்னது…

என் வலையில்

அடக்கம் செய்யவா அறிவியல்

என்னும் இடுகை வெளியிட்டிருக்கிறேன் அன்பரே..
காண அன்புடன் அழைக்கிறேன்.

http://gunathamizh.blogspot.com/2011/09/blog-post_4313.html