செவ்வாய், ஏப்ரல் 12, 2011

நிறைய சாப்பாடு அப்பறம் கொஞ்சம் தண்ணி

உலகத்திலேயே சாப்பிடுவதை கூட ஒரு கலையாக செய்வதில் நமக்கு நிகர் நாம் தான், வேறு எவரும்  நம்மை நெருங்க கூட முடியாது, கொறஞ்சது 600 கிராம்லா இருந்து 750 கிராம் வரை அசால்ட்டா உள்ள தள்ளுறோம் அதுல ஒண்ணும் தப்பு இல்லை. 

இந்த இடுகை சாப்பிடும் போது ஜில்லுனு தண்ணி இல்லாட்டி சாஃப்ட் ட்ரிங்க்ஸ் (பெப்சி/கோக்)  குடிக்கணும்னு ஆசைப்படுற எல்லாருக்கும் ஒரு எச்சரிக்கை.

ஜில்லுனு தண்ணி குடிச்சா என்ன ஆகும், நீங்க சாப்பிடும் போது எண்ணை-ல பொரிச்சது கூட கொஞ்சம் சேர்த்து உள்ள தள்ளி   இருப்பீங்க, அந்த எண்ணை-ஐ எல்லாம் ஐஸ் தண்ணி  கெட்டி அக்கிரும், அதனால செரிக்கிறது லேட் ஆகும்.

சமயத்தில அந்த கெட்டி கொழுப்பு உங்க இரத்தக்குழாய்-ல படிஞ்சுரும், இது இப்பிடியே ரொம்ப காலத்துக்கு நடந்தா உங்களுக்கு மாரடைப்பு வருவதற்கான சாத்தியக்கூறுகள் 90% வரை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.



என்ன செய்யலாம்ன்ன சப்பாட்டுக்கு அப்புறம் சூடா ஒரு டீ அடிக்கலாம், விக்கிற விலைவாசில டீ அடிக்க  உங்க பட்ஜெட் இடம் கொடுக்கலைன்னா சூடா ஒரு டம்ப்ளர் தண்ணி குடிக்கலாம், அதனால கொழுப்பு எல்லாம் இரத்தக்குழாயிலே படியாம தவிர்க்கலாம். 

டிஸ்கி
என்ன இது பிடிச்சுருக்கா, பிடிச்சு இருக்கும்னு நம்புறேன், கொஞ்சம் கமெண்ட் போட்டுட்டு மறக்காம ஓட்டும் போட்டுட்டு போயிட்டா, எல்லோருக்கும் இது போயி சேரும்  

கருத்துகள் இல்லை: