ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு, விவசாயம் நல்லா நடந்ததால அவரு சந்தோஷமா இருந்தாரு. தேவையான வருமானம் சந்தோஷமான வாழ்க்கை வேற என்ன வேணும் ஒரு ஆளுக்கு. ஆனாலும் விதி விடுமா அவருக்கும் வந்துச்சு ஒரு நாள் சாமியார் வேசத்தில, வந்த சாமியாரு அந்த விவசாயி கிட்ட வைரத்த பத்தி பேசுனாரு. ஒரு கட்டை விரல் அளவு வைரம் இருந்தா இந்த ஊரை வாங்கிடலாம்,
நடுவிரல் அளவு வைரம் கிடைச்சா இந்த நாடே உன்னோடது, சொல்லிட்டு போயிட்டாரு அந்த சாமியாரு. அதுவரை சந்தோஷமா இருந்த விவசாயி மனசுல அடிக்க ஆரம்பிச்சது புயல். நிம்மதியா தூங்கி எந்திருச்ச மனுஷன், இப்ப குழப்பத்தோட படுக்கைக்கு போறாரு.
மறுநாள் காலையில ஒரு முடிவுக்கு வந்துட்டாரு, வைரங்களை தேடி எப்பிடியாவது கண்டுபிடிச்சிரணும்ன்னு. இருந்த நிலத்தை எல்லாம் வித்துட்டு கிளம்பினாரு ஊரை விட்டு, உலகத்தில எந்த மூலையில இருந்தாலும் கண்டுபிடிச்சிரணும்ன்னு ஒரு வைராக்கியம் மனசுல.
ஒவ்வொரு ஊரா சுத்துனாரு அந்த ஆளு, எங்கேயும் அகப்படலை வைரம். கையில இருந்த காசு தீர்ந்தப்ப அவரு மனசுல இருந்த ஆசை எல்லாம் வடிஞ்சு வெறும் விரக்தி மிச்சம் ஆச்சு இனி சாகுறத தவிர வேற வழியில்லைன்னு முடிவுக்கு வந்து தற்கொலை பண்ணிக்கிட்டாரு.
இன்னொரு பக்கம் அவர் கிட்ட நிலத்தை வாங்குனவரு ஒரு நாள் வயல்ல வேலை செய்யுறப்ப ஏதோ ஒரு பொருள் வெயில் பட்டு ஜொலிச்சிக்கிட்டு இருக்கிறதை பார்த்தாரு. அவருக்கும் தெரியலை அது என்னானு, எதுக்கும் இருக்கட்டும்ன்னு எடுத்து வேட்டியில முடிஞ்சுகிட்டாரு. சாயந்தரம் வீட்டுக்கு வந்தவரு அதை வாசல் கதவுல கட்டி தொங்க விட்டு இருந்தாரு.
அந்த வழியா வந்த சாமியார், வைரத்தை தேடி போனவன் வைரத்தோட வந்துட்டான்னு நெனைச்சு வெளியே இருந்து கூப்பிட்டாரு, வெளியே வந்த புது ஆளு, அவர் இன்னும் வரலை உங்களுக்கு எப்படி தெரியும் அவர் வந்துட்டாருன்னு கேட்டாரு. இல்லை இங்கே வைரம் தொங்கிக்கிட்டு அதான் வந்துட்டாரோன்னு நினைச்சேன் அப்பிடின்னாரு. அது வைரம் இல்லை சாமி வெறும் கல்லு, சொன்ன புது ஆளுகிட்ட, எனக்கு தெரியும் இது வைரம் தான் அடிச்சு சொன்னாரு சாமியாரு. இது மாதிரி இன்னும் நிறையா அந்த வயல்ல கிடக்கு வந்து பாருங்கன்னு சொன்னாரு புதுஆளு. கொஞ்சம் எடுத்துட்டு போயி வைர வியாபாரிகிட்ட காட்டுனாங்க, அவரும் சோதிச்சு பார்த்துட்டு அது எல்லாம் வைரம் தான்னு உறுதியா சொன்னாரு. அந்த வயல் பூராவுமே இப்படி வைரங்கள் அங்கே அங்கே நிறையா புதைஞ்சு இருந்துச்சு.
கதை சொல்லும் கதை

1. வாய்ப்புகள் எப்போதும் நம்முடைய கால்களுக்கு அடியில் தான் கிடக்கிறது அதை கண்டுபிடிப்பதில் தான் நம்முடைய வாழ்க்கை அடங்கி இருக்கிறது
2. அக்கரை எப்போதும் பச்சையாய் தான் இருக்கும்
3. வாய்ப்புகளை கண்டுணர முடியாதவர்களுக்கு, வாய்ப்புகள் கதவை தட்டுவது கூட வெறும் சத்தமாய் தான் தெரியும்
4. ஒரே வாய்ப்பு இன்னொரு முறை வாய்ப்பது இல்லை கண்டுகொள்ள வில்லை என்றால் அதுவும் கடந்து போகும், வேறு ஒரு வாய்ப்பு இன்னொரு முறை கிடைக்கலாம் ஆனால் அது நாம் இழந்த வாய்ப்பிற்கு சமமாகுமா தெரியாது.

இன்றைய லொள்ளு
சொன்ன பேச்சை எவன் கேக்குறா இங்கே
16 கருத்துகள்:
கதை சொல்லும் கதை அல்ல ,கருத்து
அருமையான தத்துவங்கள்
லொள்ளு உண்மையிலேயே லொள்ளுதான் நண்பரே .எதை செய்யக் கூடாதுன்னு சொல்றோமோ அதை செய்வதில் நம்மாளுங்க கில்லாடி
இந்த கதை சொல்லும் இன்னொரு கதை... இந்த சாமியார் பசங்க பேச்சை கேக்க கூடாதுன்னு புரியுது
சரியா சொன்னீங்க .
தத்துவங்களுடன் கூடிய கதை.. அருமை..
லொள்ளு சூப்பர்..
எவன் மட்டும் அல்ல இவளும் கேட்பதில்லை போல இருக்கிறதே
ஹி... ஹி... சூர்யா ஜீவா சொன்ன மாதிரி சாமியாருங்க பேச்சை கேட்கக்கூடாது...
செருப்பு விட்டவர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருக்காது...
அருமையா சொல்லியிருகீங்க பாஸ்
நறுக்கென்று அட்வைஸ் சொல்லும் கதை. படமும்தான்.
கதை அருமை மாப்ள...வாழ்கையின் நிதர்சனம்....கலக்கல் பதிவு!
னாம் எல்லோருமே அந்த விவசாயி போகத்தான் சகோ. நம்மிடம் இருக்கும் விலைமதிப்பற்றா திறமைகளை உணராமலே இருக்கிறோம்.
இன்றைய லொள்ளும் சூப்பர்
எத்தனையோ வாய்ப்புகளை இதே மாதிரி தவற விட்டுருக்கோம், அருமையான பதிவு வாழ்த்துக்கள்...!!!
எம்மைச் சுற்றித் தான் வாய்ப்புக்களும், வசதிகளும் குவிந்திருக்கின்றன, நாம் அவற்றினைக் கண்டு கொள்ளத் தவறுகின்றோம் என்பதனை அருமையான வைரக் கதையூடாக விளக்கமாகச் சொல்லியிருக்கிறீங்க பாஸ்.
வைரங்களை கண்டுபிடித்து கொடுத்த நண்பருக்கு நன்றி
இந்த இடத்துல செருப்பை கழற்றிப் போடாதீர்கள் என்று எப்படிச்சொன்னாலும் நம்மாளு கேட்கமாட்டான்..
மாறாக ..
அங்கு ஒரு சாமிப் படத்தை வைத்தால் கையெடுததுக் கும்பிட்டுவிட்டு வேறு இடத்தில் செருப்பைப் போடுவான் என்று நினைக்கிறேன்..
நண்பா..
வாழக்கைக்குத் தேவையான சிந்தனைகளை அழகாக வழங்கியிருக்கிறீர்கள்..
அருமை..
சினன் சின்ன விசயங்களுக்கு ரொம்ப பெருசா யோசிக்க கூடாது
உங்கள் கருத்தை அமோதிக்கிறேன்
கருத்துரையிடுக