வெள்ளி, செப்டம்பர் 30, 2011

இந்த பசி தீர்க்க வழி சொல்ல மறந்தாயோ காளி

இன்றைய கவிதை

இயலாமை

பிறக்கும் போது
வெறும் வயிற்று பசியுடன்
படைத்தாய் காளி!! 


நான் வளர என்னோடு
சேர்ந்தது ஆசை எனும் பல பசிகள் காளி !!
ஒவ்வொரு நிலையிலும்
ஆசை பசியின் வீரியம் கூடியதே
ஒழிய குறையவில்லை காளி !!

எதை கண்ட போதும்
கண்கள் விரிந்தே தவிர
அறிவு விரியவில்லை
அறிய விடாமல் கெடுத்தாயோ காளி!!

கண்ணீரை எல்லாம் தன்
கருவிழியின் பின் மறைத்து நான்
விரும்பியதை எல்லாம் வாங்கி
என் ஆசை பசி ஆற்றிய தந்தையின்
வலி தெரியாமல் மறைத்தாய் காளி !!

இன்று உணர்கிறேன் என் தந்தையின் வலி
நான் தந்தையான பின்னே
இன்னும் நீ காட்டவில்லை காளி
என் குழந்தையின் ஆசை எனும் பசி
எல்லாம் தீர்க்கும் வழி !!


இன்றைய சிந்தனை

ஒரு நாளு ஒரு முயல் அதோட வீட்டுக்கு வெளியே உக்காந்து லேப்டாப்-ல ஏதோ டைப் பண்ணிக்கிட்டு இருந்துச்சு, அங்க வந்த நரி முயலைப்பார்த்து

"என்ன பண்ணிக்கிட்டு இருக்க?"

"முயல் எப்பிடி நரிய வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்"

"நீ என்ன லூசா எந்த ஊருல முயல் நரிய வேட்டையாடி இருக்கு?"

"நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்"

கொஞ்ச நேரம் கழிச்சி நரியோட எலும்போட வெளியே வந்த முயல் திரும்ப டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு, கொஞ்ச நேரத்தில ஒரு ஓநாய் அந்த பக்கம் வந்தது

"முயலாரே என்ன பண்றீங்க?"

"முயல் எப்பிடி ஓநாயை வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்"

"ஹே ஹே இது எங்கேயாவது நடக்குமா?"

"நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்"

கொஞ்ச நேரம் கழிச்சி ஓநாயோட எலும்போட வெளியே வந்த முயல் திரும்ப டைப் பண்ண ஆரம்பிச்சுச்சு, கொஞ்ச நேரத்தில ஒரு கரடி அந்த பக்கம் வந்தது

"முயலாரே என்ன பண்றீங்க?"

"முயல் எப்பிடி கரடியை வேட்டையாடி சாப்பிடும்ன்னு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கிட்டு இருக்கேன்"

"நம்ப முடியலையே?"

"நம்பலையா கொஞ்சம் என் வீட்டுக்குள வேணா வந்து பாரேன்"

வீட்டின் உள்ளே : முயல் உள்ள இருந்த சிங்கத்துக்கிட்ட கரடியை அறிமுகப்படுத்திக்கிட்டு இருந்துச்சு

நீதி :  நீங்க எவ்வளவு கேவலமா வேலை செய்யுறீங்க என்பது முக்கியம் இல்லை உங்க பாஸ்-க்கு உங்களை பிடிச்சு இருக்கா இல்லையாங்குறது தான் முக்கியம்.


இன்றைய லொள்ளு

---- பசங்கவியாழன், செப்டம்பர் 29, 2011

இது காதல் உணரும் தருணம்

இன்றைய கவிதை

புல்வெளியில் நடக்கும் போது
முள் குத்தியது நெஞ்சில்
என்ன செய்வேன்

மூச்சில் அடிக்கிறது புயல்
கண்ணிலோ பெருமழை
நெஞ்சில் எரிமலை
பூமியின் சுழற்சி கால்களில்

என் பிரியமானவளுடன்
சிறு சண்டை வரும் போதெல்லாம்
எல்லாம் பஞ்ச பூதங்களையும்
ஒரு சேர அனுபவிக்கிறேன்

முகத்தில் கீறி இருந்தாலும்
நொந்து போயிருக்க மாட்டேன்
மனதில் அல்லவா கீறி விட்டாள் 

என் மீதான
அவள் காதலை
அவளுக்கு உணர்த்தும்
இனி வரும்
நாளெல்லாம்
இன்றைய சிந்தனை


1.    இன்றைய நாம் நேற்றைய எண்ணங்களின் மிச்சம், நல்ல நாளை இன்றைய நல்ல எண்ணங்கள்  மூலமே

2.    விழித்து இருக்கும் போது நீங்கள் செய்த தவறுகளை எண்ணி பாருங்கள் உறக்கத்தில் இருக்கும் போது பிறருடைய தவறுகளை எண்ணி பார்க்கலாம்

3.    வாழ்க்கை எளிமையானது ஆனால் எளிதானது அல்ல

4.    நாம் பிறக்கும் போது உடன் வந்தது ஈரம், நிர்வாணம் மற்றும் பசி

5.    நாம் வாழும் வாழ்க்கை முள் செடியின் மேல் இருக்கும் தேனை நக்குவது போல் தான் பல சமயம் இருக்கிறது

6.    எங்கே மகிழ்ச்சி என்று தேடிக்கொண்டு இருந்தால் உங்களால் மகிழ்ச்சியாய் இருக்க முடியாது

7.    செல்வம் இல்லாமல் போகலாம் ஆனால் வாழ்க்கை இருக்கும்

8.    எல்லோர் வாழ்விலும் சொல்லமுடியாத ஒரு ரகசியம், மாற்றமுடியாத ஒரு பிழை, அடைய முடியாத ஒரு கனவு, மறக்க முடியாத ஒரு காதல் இருக்கும்.

9.    வாழ்க்கை புத்தகத்தில் கேள்விகள் மட்டுமே உண்டு பதில் இருப்பதில்லை

10.    வாழ்க்கையில் வெற்றி பெற நிறைய வேலை செய்யணும், நிறைய விளையாடணும் அப்பறம் வாயை  மூடிக்கிட்டு இருக்கோணும்.இன்றைய லொள்ளு
புதன், செப்டம்பர் 28, 2011

வானவில் உறவுகள் இது கொஞ்சம் சாயம் போனது

இன்றைய கவிதை

படையல்

வீட்டின் உள்ளே
இலை நிறைய சோறு
நாலு காய் பொரியல்
பாயாசம் அப்பளம் வடை
எல்லாம் நிறைந்து இருந்தது
ஊதுபத்தி புகையும்
படத்தின் முன் பிள்ளை!

கால ஓட்டத்தில்
கால் ஓட்டம் நின்ற போது
கஞ்சிக்கு வழி செய்ய
மறந்த பிள்ளை
இப்போது திதி நாளும்
மறந்து போய் வைக்கிறான்
அமாவாசை படையல்!

வீட்டிற்கு வெளியே
செத்துப்போன எதையோ
கொத்திக்கொண்டு
காக்கையின் உருவில்
தந்தை!!
இன்றைய சிந்தனை

1.    சிரிக்க மறந்த தருணம் சிந்திக்கவும் மறக்கிறோம்

2.    ஒரே பார்வை ஒரே இலக்கு

3.    எப்படி செய்ய வேண்டும் சொல்லாதீர்கள், என்ன செய்ய வேண்டும் என்று மட்டும் சொல்லுங்கள்

4.    என்ன கிடைத்ததோ அதை வைத்து வாழுகிறோம் உண்மையில் வாழ்க்கை என்ன கொடுத்தோம் என்பதை பொறுத்தே

5.    தங்களுக்கு தேவை என்று பிறர் உணரும் முன்னே உருவாக்கப்படும் எந்த பொருளும் விலை போகும்இன்றைய லொள்ளு

திங்கள், செப்டம்பர் 26, 2011

தோல்வியின் ரணங்கள் வெற்றியின் தளங்கள்


இன்றைய கவிதை

கழுத்து அறுபட்டு 

துடித்துக்கொண்டு 


இருப்பதைக் கண்டும் 


மனம் பதறவில்லை 


துடிப்படங்கிய பின் 


கேட்டேன் 


எனக்கு ஒரு அரைக்கிலோ குடு 


அதுல ரெண்டு லெக் பீஸ்


உங்களோடு வாழ்வதை விட 


சாவதே மேல் என்று 


சொல்வது போல் 


கூண்டில் இருந்த 


கோழியின் கண்கள் !!

இன்றைய சிந்தனை

தோல்வி என்று நீங்கள் நினைப்பது எல்லாம் தோல்விகள் அல்ல.

வெற்றி பெற்ற எல்லோருக்கும் பொதுவான ஒரு விஷயம் அவர்கள் தோல்விகளை எல்லாம் ஒரு பொருட்டாக மதித்தது இல்லை. தோல்விகள் பற்றிய அவர்களது பார்வை வேறு மாதிரி இருந்தது அவர்களை வெற்றியாளர்களாக மாற்றியது. 999 முறை தோற்றாலும் 1000 வது முறை அடுத்த விஷயத்தில் கவனம் செலுத்துபவன் எப்போதும் முந்தைய தோல்விகளை முயற்சியாகவே  பார்ப்பான், அயர்ச்சி கொள்ளுவதில்லை. அதுவே அவனுக்கு வெற்றியை தேடிதரும்.


   1.    வெற்றி வேகமாக வேண்டுமானால் உங்கள் தோல்வியின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்

2.    தோல்வி ஒரு வாய்ப்பு அடுத்த முயற்சியை இன்னும் புத்திசாலித்தனமாய் துவங்க

3.    கீழே விழாமல் இருப்பது நம்முடைய சிறப்பு அல்ல கீழே விழுந்தாலும் எழுவதே சிறப்பு

4.    தோற்க பயந்தவர்கள் என்றுமே வெற்றியை ருசித்தது இல்லை.

5.    எப்படி செய்கிறோம் என்பது ஒரு பொருட்டே அல்ல எப்போதும் நினைப்பதை விட புத்திசாலித்தனமான கருத்துக்கள் இருக்கும்.

6.    தோல்வி என்பதும் வெற்றியே நாம் அதில் இருந்து கற்றுக்கொள்ளும் போது

7.     முதல் தோல்வியே முடிவான தோல்வி என்று முடிவு செய்யாதீர்

8.    தடைகள் தோல்விகள் ஆகாது

இன்றைய லொள்ளு 

வெள்ளி, செப்டம்பர் 23, 2011

டேமேஜர் சாரி மேனேஜர் குப்பண்ணா

இந்த பதிவு புதுசா வேலைக்கு சேர்ந்தவங்களுக்கு

உங்க ஆஃபிஸ்-ல மேனேஜர் சொல்லுறதுக்கு வேற உள்ளர்த்தம் இருக்கும் அது என்னானு சொல்லுறது தான் இந்த பதிவு

1. "நாம செய்யலாம்" ன்னு சொன்னா "நீ செஞ்சு முடிச்சுடு" அப்பிடின்னு அர்த்தம்

2. "நீங்க நல்ல வேலை செஞ்சு இருக்கீங்க" ன்னு சொன்னா "இன்னும் உங்களுக்கு நெறைய வேலை குடுக்கப்போறேன்" ன்னு அர்த்தம்

3. "நாங்க அதுல தான் வேலை பார்த்துக்கிட்டு இருக்கோம்" ன்னு சொன்னா "இன்னும் அதை பார்க்கவே இல்லை இனிமே தான் ஆரம்பிக்கப்போறோம்" ன்னு அர்த்தம்

4. "நாளைக்கு காலையில மொதோ வேலை இதுதான்"ன்னு சொன்னா "குறைந்த பட்சம் நாளைக்கு நைட் தான் வேலை முடியும்" ன்னு அர்த்தம்

5. "இன்னும் கொஞ்சம் டிஸ்கஸ் பண்ணிட்டு முடிவு பண்ணலாம்" - னா " ஏற்கனவே முடிவு எடுத்தாச்சு என்ன செய்யணும்ன்னு அப்பறம் சொல்றேன்" ன்னு அர்த்தம்

6. "இங்கே கொஞ்சம் குளறுபடி ஆயிடுச்சு"ன்னு சொன்னா "பொய் சொல்லுறோம்" ன்னு அர்த்தம்

7. "மீட்டிங் வச்சு முடிவு பண்ணிக்கலாம்" -ன்னு சொன்னா "இப்ப எனக்கு டைம் இல்லை" ன்னு அர்த்தம்

8. "நாம எப்பவேனாலும் பண்ணலாம்" - ன்னு சொன்னா "சொன்ன நேரத்துக்கு பண்ண முடியாது" ன்னு அர்த்தம்

9. "எங்களுக்குள்ள கொஞ்சம் மாற்று கருத்து இருக்கு" ன்னு சொன்னா "இரண்டு பேரும் அடிச்சுக்கிட்டோம்" ன்னு அர்த்தம்

10. "உங்க வேலை எல்லாம் லிஸ்ட் எடுங்க நான் எப்பிடி உதவ முடியும்னு பார்க்குறேன்" - ன்னு சொன்னா "நீ உன் வேலையை எப்பிடி முடிக்கமுடியும்ன்னு பாரு என்கிட்ட வராதே" ன்னு அர்த்தம் 
11. "நாம தப்பு எங்கேன்னு கண்டு பிடிக்கணும்" ன்னு சொன்னா "உன் தப்பு எங்கேன்னு இன்னும் கொஞ்ச நேரத்தில சொல்லுறேன்" ன்னு அர்த்தம்

12. "நாம எல்லாம் ஒரே டீம்" - ன்னு சொன்னா "என்னைய மட்டும் நீங்க திட்ட முடியாது"ன்னு அர்த்தம்

13. "இது நல்ல கேள்வி" - ன்னு சொன்னா "இது வரைக்கும் இதைப்பத்தி தெரியாது" ன்னு அர்த்தம்

14. "குடும்பம் முக்கியம் எப்ப வேணுமினாலும் லீவு எடுத்துக்குங்க, ஆனா வேலை மட்டும் நிக்காம பார்த்துக்குங்க" அப்பிடின்னா உங்களுக்கே தெரியும் இதுக்கு என்ன அர்த்தம்ன்னு

15. "ALL THE BSET" அப்பிடின்னா "உங்களுக்கு ஆப்பு ரெடி" ன்னு அர்த்தம்


இன்றைய சிந்தனை

 • உங்கள் வாழ்வில் சிறந்த நாள் - இன்று
 • சிரமமான ஒரே வேலை - ஒரு வேலையை ஆரம்பிப்பது
 • எளிதான ஒரே வேலை - பிறரிடம் குற்றங்களை காண்பது
 • உபயோகம் இல்லாத சொத்து - கௌரவம்
 • உபயோகமான ஒரே சொத்து - பணிவு
 • மிகவும் தேவையான ஒன்று - நுண்ணறிவு
 • கடினமான செயல் - தோல்வியை ஒப்புக்கொள்வது
 • சிறந்த பரிசு - மன்னிப்பு
 • சிறந்த ஞானம் - அனுபவம்

இன்றைய லொள்ளுவியாழன், செப்டம்பர் 22, 2011

ரிஸ்க் எடுக்குறது எல்லாம் ரஸ்க் சாப்பிடுற மாதிரி

இன்றைய சிந்தனை 

1. "நீங்கள் எதை எல்லாம் செய்ய முடியும்  அல்லது  கனவு காண முடியும் என்பதை உடனே துணிந்து ஆரம்பியுங்கள். துணிச்சல் மேதைமை, சக்தி மற்றும் மாயம் ஆகியவற்றை உள்ளடக்கியது."

2. "பாதுகாப்பு என்பது பெரும்பாலும் ஒரு மூட நம்பிக்கை. வாழ்க்கை எப்போதும் ஒரு பயம் உள்ள சாகசமாகவே உள்ளது."

3. "சில செயல்கள் கடினம் என்பதால் நாம் துணிந்து செய்யாமல் இருக்கிறோம், உண்மையில் நாம் துணிந்து செய்யாததால் மட்டுமே அது கடினமாக தோன்றுகிறது"

4 . "எப்போதும் விளிம்பு வரை செல்ல முயலுங்கள், அங்கே தான் செயல்களின் பலன் கிடைக்கும்" 

5. "விஷயங்கள் கட்டுப்பாட்டில் தெரிகிறது என்றால், நீங்கள் போதுமான அளவிற்கு போகவில்லை என்று பொருள்"

6 . "ஒரு பெரிய அடி எடுத்து வைக்க பயப்படவேண்டாம்.  இரண்டு சிறிய அடியை வைத்து கடலை கடக்க முடியாது."

7. "தினமும் உங்களை பயமுறுத்தும் ஒரு செயலை செய்யவும்"

8 . "உங்கள் உள்ளுணர்வினை   நம்புங்கள். உங்கள் தவறுகளே   வேறொருவரின் தவறுகளை விட சிறந்த ஞானம் தரும்"

9. "வாழ்க்கையில் பல முடிவில்லா ஆபத்துக்கள் உள்ளன, அவற்றில் ஒன்று பாதுகாப்பு" 

10. "தவறுகளை கண்டு பயப்படாதே. அவை எதுவும் இல்லை."


11 . "இன்று செய்த செயல்களை விட செய்யாமல் விட்ட செயல்களை நினைத்து பின் வருந்த வேண்டாம்.  பாதுகாப்பான துறைமுகங்களை விட புயல் வீசும் கடல் நிச்சயம் சிறந்தது"

12. "முத்துக்கள் எப்போது கடற்கரையில் கிடைக்காது முத்தெடுக்க வேண்டுமென்றால் மூச்சடக்கி கடலுக்குள் மூழ்க வேண்டும்"

13. "மொட்டு மலருவது கூட ஒரு வலி நிறைந்த நிகழ்வு தான் பூவுக்கு"

14 . "வாய்ப்புகள் எப்போதுமே இடையூறுகளை பற்றி அஞ்சாதவர்களுக்கே கிட்டும்"

15 . "தேவை மட்டுமே இடையூறுகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கொடுக்கும்"

16. "நீங்கள் கெட்டவர்களாக இருக்கக்கூடாது என்கிற பயமே உங்களை நல்லவர்களாக வைத்து இருக்கிறது"

17. "வெற்றி என்பது தொடர் தோல்விகளுக்கு பிறகே வாய்க்கிறது"

18. "உங்களுக்கு எந்த இடையூறும் இல்லை என்றால் நீங்கள் எந்த இடையூறையும் தைரியமாக எதிர் கொள்ளலாம்" 

19. "ஒரு இறந்த மீன் ஓடைக்கு கீழே மிதக்க முடியும்,  ஆனால் அது உயிருடன் இருக்கும் மீனால் மட்டுமே அலையை எதிர்த்து நீந்த முடியும்"

20 . "இடர்களை எதிர் கொள்ளுங்கள்: வெற்றி பெற்றால், சந்தோஷம் கிடைக்கும், இல்லாவிட்டால் ஞானம் கிடைக்கும்"

இன்றைய லொள்ளு 


புதன், செப்டம்பர் 21, 2011

ஒவ்வொரு ஃப்ரெண்ட்டும் தேவை மச்சான்!!

இது என்னோட 150 வது பதிவு.. இதுவரைக்கும் அதரவு தந்த நண்பர்கள் எல்லோருக்கும் நன்றிகள்.    எவ்வளவோ ப்ளேடு / மொக்கை போட்டு இருக்கேன் பதிவுல,  எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இன்னும் என் பதிவுகளை படிக்கும் எல்லா நண்பர்களுக்கும் நன்றி.  தொடர்ந்து இன்னும் நிறைய பதிவுகள் எழுதணும்ன்னு ஆசை, உங்கள் ஆதரவால் எல்லாம் நல்லாவே நடக்கும்.


இன்றைய சிந்தனை

காலம் தாமதிக்காது

பிறந்ததொரு காலம்
    இறப்பது இன்னொரு காலம்
விதைத்தது ஒரு காலம்
    அறுவடை இன்னொரு காலம்
இடறி விழுந்தது ஒரு காலம்
    நிமிர்தெழுவது இன்னொரு காலம்
கண்ணீர் கன்னம் நிரப்பியது ஒரு காலம்
    சிரிப்பு இதழ் நிறைக்கும்  இன்னொரு காலம்
தேடி திரிந்தது ஒரு காலம்
    தொலைத்து நிற்பது இன்னொரு காலம்
பிடித்தே இருந்தது  ஒரு காலம்
    விலகி இருப்பது இன்னொரு காலம்
மனம் முழுக்க அன்பு இருந்தது ஒரு காலம்
    வெறுப்பை தவிர வேறல்லாமல் இருப்பது இன்னொரு காலம்
நாம் தாமதிக்கலாம்
    காலம் தாமதிக்காது


நேத்து ஒரு நியூஸ் படிச்சேன் புதுசா ஒரு படம் எடுக்குறாங்களாம் பேரு 6, எல்லாம் 6 மாசம் / 6 வாரம் / 6 நாள் / 6 மணி / 6 நிமிஷம் / 6 செகண்ட்-ல நடக்குற சம்பவங்கள் கதையாம். சரி நாமளும் 6 வச்சி ஏதாவது பதிவை தேத்த முடியுமான்னு யோசிச்சேன் அதோட விளைவு கீழே

கல்யாணம் பண்ண 6 வாரத்துல / 6 மாசத்தில / 6 வருசத்தில என்ன நடக்குது

கொஞ்சல்ஸ்

6 வாரத்தில        :    ஐ லவ் யு ஐ லவ் யு ஐ லவ் யு நெனச்ச நேரம் எல்லாம்
6 மாசத்தில        :    எப்பயாவது ஐ லவ் யு
6 வருசத்தில    :    லவ்வா  அப்பிடின்னா?

ஆஃபிஸ் முடிச்சு வீட்டுக்கு வந்தா

6 வாரத்தில        :    அன்பே    நான் வந்துட்டேன் - சாயந்தரம் 6 மணிக்கே 
6 மாசத்தில        :    வந்துக்கிட்டே இருக்கேன் - சாயந்தரம் 8 மணிக்கு   
6 வருசத்தில    :    (மனைவி பையன் கிட்ட) நீ தூங்குடா உங்க டாடி எப்ப வருவாரோ தெரியாது  - மணி நைட் 11 மணி


பரிசு


6 வாரத்தில        :    செல்லம் நான் ஒரு மோதிரம் வாங்கிட்டு வந்து இருக்கேன் உனக்கு பிடிச்சு இருக்கா பாரேன்
6 மாசத்தில        :    பூ ஏன் பேக்-ல இருக்கு கொஞ்சம் சாமிக்கு போட்டுட்டு நீ கொஞ்சம் வைச்சுக்கோ
6 வருசத்தில    :    இந்தா பணம் ஏதாவது வாங்கிக்கோ


ஃபோன் அடிச்சா

6 வாரத்தில        :    கண்ணு உனக்கு தான் ஃபோன் உங்க அம்மா லைன்-ல
6 மாசத்தில        :    ஃபோன் உனக்கு தான் இங்க இருக்கு
6 வருசத்தில    :    எவ்வளவு நேரம் ஃபோன் அடிக்குது பாரு சீக்க்ரம் எடுத்து தொலையேன்

சமையல்

6 வாரத்தில        :    இவ்வளவு ருசியா நான் சாப்பிட்டதே இல்லை
6 மாசத்தில        :    இன்னைக்கு என்ன சமையல்
6 வருசத்தில    :    இன்னைக்கும் அதே தானா


டிரஸ்

6 வாரத்தில        :    இந்த டிரஸ்-ல நீ தேவதை மாதிரி இருக்கே
6 மாசத்தில        :    திருப்பியும் புது டிரஸ் எடுத்து இருக்கியா
6 வருசத்தில    :    இவ்வளவு காசு போட்டு இப்ப புது டிரஸ் தேவையா

இன்றைய கேள்வி

ஒரு மரணதண்டனை கைதி அவனுக்கு மூணு சான்ஸ் சாகுறதுக்கு

1.    மொதோ ரூம்ல பூராவும் யாக குண்டம் மாதிரி தீ எரியும் அதுக்குள்ள போகணும்
2.    ரெண்டாவது ரூம்ல நிறைய சிங்கங்கள் இருக்கு மூணு வருஷம் பட்டினி
3.     மூணாவது ரூம்ல குண்டு ரொப்புன துப்பாக்கியோட இவனோட எதிரி இருக்கான்

இதுல எந்த ரூமுக்கு போனா அவனுக்கு நல்லது ?


இன்றைய லொள்ளு

திங்கள், செப்டம்பர் 19, 2011

இது ஒரு சாமியார் கதை

ஒரு நாள் சுப்பு கார் எடுத்துக்கிட்டு வெளியே போனாரு, வீட்டுக்கு திரும்பி வரும் போது கார் ரிப்பேர் ஆயுடுச்சு, அது ஒரு நடு ராத்திரி. என்ன செய்யுறதுன்னு சுத்தி பார்த்தாரு. பக்கத்துல ஒரு மடம் இருந்துச்சு..

உள்ள போனாரு சில துறவிங்க தூங்காம இருந்தாங்க, அவக கிட்ட விஷயத்தை சொல்லி ஏதாவது செய்யமுடியுமான்னு கேட்டாரு.

அவங்களும் இன்னைக்கு நைட் இங்க தங்கிக்குங்க காலையில மெக்கானிக் வருவாரு காரை சரி பண்ணிக்கிட்டு எடுத்துட்டு போகலாம்னு சொன்னாங்க, அவரு தூங்க ஒரு ரூம்மும் குடுத்தாங்க.

அவரு தூங்குன கொஞ்ச நேரத்தில ஒரு வினோத சத்தம், இதுவரை அவர் அப்பிடி ஒரு சத்தம் கேட்டதே இல்லை, கொஞ்ச நேரத்தில அது அடங்கிடுச்சு, காலையில துறவிங்க கேட்டு கேட்டுக்கலாம்ன்னு தூங்கிட்டாரு.

காலையில ஒரு மெக்கானிக்கை கூடி வந்து காரையும் சரி பண்ணி குடுத்தாங்க துறவிங்க..

கிளம்புறதுக்கு முன்னாடி ஒரு துறவிகிட்ட "ஐயா நேத்து ராத்திரி ஒரு வினோத சத்தம் கேட்டுச்சே அது என்ன?"  சுப்பு கேட்டாரு..

"எனக்கு அது என்னான்னு தெரியும் ஆனா உங்களுக்கு சொல்ல முடியாது ஏன்னா நீங்க துறவி இல்லை" - துறவி சொன்னாரு

சரி - கெளம்பீட்டாரு சுப்பு

கொஞ்ச நாள் கழிச்சு அதே மாதிரி இன்னொரு நிகழ்வு, கார் அதே எடத்துல ரிப்பேர் ஆயுடுச்சு. அதே மாதிரி சுப்பு உதவி  கேட்டு மடத்துக்கு போனாரு. அன்னைக்கு  நைடடும் அதே சத்தம். காலையில எந்திருச்சு துறவிக்கிட்ட "நேத்தும் அதே மாதிரி சத்தம் கேட்டேன் இப்பவாவது என்னானு சொல்லுவீங்களா?" கேட்டாரு சுப்பு 

"இல்லயாப்பா நீ துறவியில்லயே உன்கிட்ட சொல்ல முடியாது" இந்த தடவையும் துறவி மறுத்துட்டாறு

"சரி நான் துறவி ஆயிடலாம்ன்னு முடிவு பண்ணீட்டேன், எப்பிடி துறவி ஆகுறதுன்னு கொஞ்சம் சொல்லுறீங்களா?" சுப்பு கேட்டார்

"இந்த உலகத்தில இருக்க புல்லோட (சரக்கு இல்லைங்கோ) எண்ணிக்கையும், மண் துகளோட எண்ணிக்கையையும் எண்ணி சொல்லிட்டா நீ துறவி ஆயுடலாம்" - துறவி சொன்னாரு

சுப்பு கெளம்பி போயிட்டாறு

25 வருஷம் ஓடிருச்சு

சுப்பு திரும்பி வந்தாரு துறவிக்கிட்ட

"ஐயா நீங்க சொன்ன மாதிரி எண்ணிட்டேன் 566441,23,56,45,345 புல்லும் 4321220,10,02,34,34,345 மண் துகளும் இருக்கு"

"சரி உனக்கு இப்ப துறவி ஆகுற தகுதி வந்துடுச்சு"

அன்னைக்கு நைட் அதே சத்தம், மறு நாள் சுப்பு துறவிக்கிட்ட போயி "இப்பயாவது நான் அந்த சத்தம் பத்தி தெரிஞ்சுக்கலாமா?" கேட்டாரு

"சரி என்கூட வா.." துறவி கூட்டிக்கிட்டு போனாரு

ஒரு சாவியை சுப்புகிகிட்ட குடுத்தாரு துறவி "நீயே தொறந்து பாரு"

கதவை தொறந்தாரு சுப்பு அங்கே...... 

ஐ நான் சொல்ல மாட்டேன் ஏன்னா நீங்க துறவி இல்லையே!!?  - இதுக்காக நீங்க துறவி ஆக வேண்டாம் சுப்பு என்ன பார்த்திருப்பாரு உங்க யூகங்களை கமெண்ட்-ல போடுங்க பதில் நாளைக்கு... 

=========================================================================

இன்று சில தகவல்

 1. கோகோ-கோலா வின் உண்மையான நிறம் - பச்சை
 2. உலகில் இருக்கும் எல்லா கண்டங்களின் பெயரும் ஆங்கிலத்தில் எழுதும் போது எந்த எழுத்தில் துவங்குகிறதோ அதே எழுத்தில் முடியும்
 3. நீங்கள் தும்மும் போது இதயம் ஒரு கணம் நின்று பிறகு துடிக்கும்
 4. 111,111,111 x 111,111,111 = 12,345,678,987, 654,321
 5. எல்லா போலார் கரடிகளும் இடது கை பழக்கம் உடையது

இன்றைய லொள்ளு


வெள்ளி, செப்டம்பர் 16, 2011

அணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி

வணக்கம் உறவுகளே,

இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி)  .  தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் நம்ம நண்பர் சக பதிவர் கூடல் பாலா (தொடர்புக்கு +919940771407) அவர்களும் உண்ணாவிரதம் இருக்கிறார், அவருக்கு ஆதரவாக சக பதிவர்களும், பிளாக், ட்விட்டர், ஃபோன் என தங்களால் இயன்ற வழியில் ஆதரவும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நானும் இப்ப அந்த ஜோதியில ஐக்கியம் ஆயிட்டேனே

இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாக நிறைய கட்சிகள் ஆதரவு குரல்களும் எழுப்பி உள்ளன. மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல தலைவர்களும் போராட்டத்திற்கு வரக்கூடும் என்று எதிர் பார்க்கிறோம்.  இதில் சில பல உள்குத்துகளும் உண்டு, ஆளும் கட்சிக்கு தலைவலி  கொடுக்கவேண்டும்.. (வேண்டாம் நமக்கு அரசியல் எஸ்கேப்) 

சரி விசயத்துக்கு வருகிறேன்.

இன்னைக்கு நாம் நாட்டின் மின் தேவை 568 பில்லியன் கிலோ வாட்ஸ்.  இவ்வளவு கரெண்ட் எதுக்குன்னு மலைக்காதீங்க, எல்லாத்துக்கும் நாம தான் காரணம். என்ன புரியலையா  அதை கடைசி சொல்லுறேன்

தற்போதைய கணக்குப்படி மின்சாரம்

அனல் மின்நிலையங்கள் மூலம் 65.34%
நீர்மின் நிலையங்கள் மூலம்    21.53%
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள்  மூலம் 10.42%
(காற்று/எரிவாயு/சூரிய சக்தி)
அணு மின் நிலையங்கள் மூலம் 2.70%  நமக்கு கிடைக்குது

அப்ப கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு US$ 3.5 பில்லியன் எதுக்கு செலவு பண்ணனும் அப்பிடின்னு நீங்க கேக்குறது புரியுது. இன்னும் பத்து முதல் 15 வருடங்களுக்குக்குள் இப்போது இருக்கும் நிலக்கரியில 90% பயன்படுத்தப்பட்டுவிடும், இதனால் அனல் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்த வேண்டிய நிலைமை வரும். அப்போ அந்த 65% மின்சாரத்துக்கு என்ன பண்றது காத்தும் / தண்ணியும் கேரண்டீ இல்லை. மழை / காத்து இருக்குறப்பதான் இது சரியா வரும் மத்த நேரங்கள்-ல மின் உற்பத்தி பண்ண முடியாது  மழை ஒரு மூணு மாசம் நல்லா பெய்யும் காத்து கூட அப்பிடித்தான்.

இந்த நிலையில அணு மின்நிலையங்கள் குறைந்த செலவில் அதிக மின் உற்பத்திக்கு கை குடுக்கும்.   அதுக்கு தான் இப்ப இருந்தே தயாராகுறோம் அப்பிடின்னு அரசு சொல்லுது. அவங்க என்ன காரணம் சொல்லுறாங்கன்னா வருஷம் பூராவுமா சுனாமியும் நிலநடுக்கமும் வருது, எப்பாயாவது தானே வருது அதை எல்லாம் தாங்கக்கூடிய அளவுல இந்த மின்னிலையம் கட்டியிருக்கோம் பயப்படாதீங்க (அச்சம் தேவை இல்லை - முதல்வர் அறிவிப்பு)  . இதுக்கு முன்னாடி 2006 சுனாமி வந்த்தப்ப கல்பாக்கம் பத்திரமா தானே இருந்துச்சு? அப்பிடினும் கேக்குறாங்க அரசு தரப்புல.

அதை விட இன்னொண்ணு என்னான முக்கவாசி பணத்தையும் ஏற்கனவே செலவு (ஏப்பம்) பண்ணிட்டோம் ஏற்கனவே 100 மெகாவாட்  மின்சார உற்பத்தி நடந்துகிட்டு இருக்கு இப்ப நிப்பாட்டுனா முதலுக்கே மோசம் வந்துடும்ன்னு சொல்றாங்க அரசு தரப்புல. 

அதெல்லாம் சரி தான் அதுக்காக எப்பிடி உயிரை பணயம் வைக்கிறதுன்னு கேக்குறீங்களா?  நம்ம இஞ்சீனியருங்க அழகு தெரியாதா எங்களுக்கு ஒரு வேலை பார்த்துட்டு நிறைய வேலை முடிச்சுட்டோம்ன்னு ரிபோர்ட் குடுத்துவாங்க.  பாவம் அமைச்சருங்க, முதல்அமைச்சருங்க அவங்க ரிப்போர்ட்டை நம்பி எதையாவது சொல்லிடுவாங்க பின்னாடி ஏதாவது ஆச்சுன்னா அவஸ்தைப்படப்போறது எங்க புள்ள குட்டீங்க தானே ஏற்கனவே போபால் மக்கள் பட்ட அவஸ்தை இன்னைக்கு வரைக்கும் அவங்க வாரிசுகள் படுற அவஸ்த்தையை நாங்க மறக்கலைன்னு நீங்க சொல்லுறது எனக்கு புரியுது.  அதுவும் ஞாயம் தான்.

என்ன பண்றது இதுக்கு பின்னாடி இருக்குற அரசியல் உலக அரசியல், என்னான இந்த அணு உலை கழிவுகள் கொட்ட ஒரு எடம் வேணுமே  அவங்களுக்கு ஏற்கனவே வேண்டிய அளவு அவங்க நாட்டுல கொட்டி முடிஞ்சாச்சு.  அதனால நம்ம ஊரை அதுக்கு ஒரு குப்பைத்தொட்டி மாதிரி பயன்படுத்திக்கலாம்ன்னு நினைக்கிறாங்க அதனால தானோ இதுக்கு மட்டும் எவ்வளவு வேணா செலவு செய்யவும் தயாரா இருக்காங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம்..

சரி நாம எப்பிடி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருவது, நாம போயி உண்ணாவிரதம் இருக்கலாம் அவங்களோட சேர்ந்து ஆனா பிரச்சனை தீர்ந்துடுமா என்ன?  தீராதுன்னே தோணுது.   எப்பிடியும் சமாதானம் பேச வருவாங்க அது கூட ஆபத்து இல்லை, நமக்குள்ளேயே யாராவது கருப்பு ஆடு இருந்தா இன்னும் ஆபத்து. அவங்க விலை போயிட்டா போராட்டம் பிசுபிசுத்து போயிடுமே..   ஆனா இந்த போராட்டம் இதுக்கு முன்னாடி நடந்த மாதிரி இல்லாம வெற்றி மட்டும் அடையணும்ன்னு ஆசைப்படுறேன்.    

என்ன செயாலாம்ன்னு யோசிச்சேன்,  ஏன்னா இன்னைக்கு தனி நபர் மின் நுகர்வு இந்தியால தான் ஒரு ஆளு 704 கிலோ வாட்ஸ்ன்னு ஒரு ஆய்வு சொல்லுது.  நம்ம தேவைகளை கொஞ்சம் குறைச்சுக்கிட்டா உற்பத்தி பண்ண வேண்டிய நிர்பந்தமும் குறைஞ்சுடுமே.  தேவை இருந்தாத்தானே உற்பத்தி தேவை இல்லையினா என்ன பண்ணுவாங்க அதை பத்திரமா சேமிச்சும் வைக்க முடியாதே. அப்ப தேவையை குறைச்சுட்டா, சரி எப்பிடி எல்லாம் குறைக்கலாம் கீழே இருக்குற மாதிரி சில விஷயங்களை தவிர்த்தாலே மின் தேவையை குறைக்கலாம் ஏதோ நம்மால முடிஞ்சது

1.    காலையில எந்திருச்சு  கீசர் (Geyser) போட்டு திரும்ப தூங்கப்போறது.  1 மணி நேரம் கழிச்சு எந்திரிக்கும் போது அதுவே ஆஃப் ஆகி இருக்கும். அரை மணி நேரம் போட்டாலே தேவையான அளவு  சூடு கெடைச்சுடும் (சென்னை மக்கள் மன்னிக்கவும்) 

2.    முழிச்சிக்கிட்டு இருக்குற நேரம் எல்லாம் டி‌வி பாக்கணும்னு நினைக்கிறது

3.     பகல்-ல கூட பல்பு போட்டு விட்டு இருக்குறது

4.    நைட் 8 மணிக்கு மேலே எல்லா கடைகளையும் அடைச்சுடணும் இல்லை பெரிய பெரிய லைட் மட்டுமாவது அணைச்சுடனும்

5.    வீட்டுல இருக்குற மிக்ஸி கிரைண்டர் எல்லாம் எடுத்துவிட்டுட்டு அம்மிக்கல்லுக்கு மாறுனா உங்க வீட்டுக்காரம்மா (நீங்க கூட) சிலிம் ஆகுறது கன்பர்ம்

6 .     சாயந்தரம் ஒரு ரெண்டு மணி நேரம் பக்கத்துல இருக்க கோயிலுக்கோ / பார்க்குகோ நடந்து போயிட்டு வரலாம் அந்த ரெண்டு மணி நேரம் உங்க வீட்டு மின்சாரமும் குறையும், உடம்புல இருக்குற சுகரும் குறையும்

இன்னும் நாம நெனச்சா எதுவேணா செய்யலாம்... உங்களுக்கு தோணுனதை கமெண்ட்-ல போட்ட நெறையா பேருக்கு பயன் உள்ளதா இருக்கும்..

இந்த அவலம் வேண்டாமே  நமக்கு - சிந்திப்போமா ??வியாழன், செப்டம்பர் 15, 2011

ஏலேய் மக்கா எதுனா புரியுதாலே

ஒரு நாள் ஆஃபிஸ்-ல பாஸ் அவரோட செக்ரெட்டரிய கூப்பிட்டு

"நாம இன்னைக்கி நைட் டெல்லி போகணும் மீட்டிங் இருக்கு நாளைக்கு காலையில திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.  வீட்டுல சொல்லீட்டு தேவையானது எல்லாம் எடுத்துக்கோ 8 மணிக்கு ஃப்ளைட்"

செக்ரட்டெரி வீட்டுக்கு வந்து எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு ஆஃபிஸ்-ல (இது வேற ஆஃபிஸ்) இருந்த தன் கணவருக்கு ஃபோன் பண்ணுறாங்க

"என்னாங்க எங்க டெல்லி ஆஃபிஸ்-ல  மீட்டிங் இருக்கு இன்னைக்கு நைட் புறப்படுறேன் திரும்பி வர ஒரு வாரம் ஆகும் பத்திரமா பார்த்துக்குங்க"

அந்த வீட்டுக்காரரு டியூஷன் சென்டர் வைச்சு இருக்க தன்னோட ஃப்ரெண்ட்க்கு ஃபோன் பண்ணி "நண்பா என் பொண்டாட்டி ஊருக்கு போறா ஒரு வாரம், டெய்லி சாயந்தரம் வீட்டுலய பார்ட்டி வைச்சுக்கலாம் என்ன சொல்ற? இன்னைக்கே ஆரம்பிச்சுடுவோம் என்னா?"

டியூஷன் சென்டர்-ல "பசங்களா சார் ஒரு வாரம் பிசி அதனால உங்களுக்கு எல்லாம் ஒரு வாரம்  லீவு"

அதுல ஒரு பையன் அவங்க தாத்தாவுக்கு ஃபோன் பண்ணி "தாத்தா எனக்கு டியூஷன் ஒரு வாரம் லீவு ஸ்கூல்-ம்  ஒரு வாரம் லீவு, என் கூட  இருப்பீங்களா?"

உடனே அந்த தாத்தா (அவரு தான் மொதோ லைன்-ல வந்த பாஸ்) தன்னோட செக்ரட்ரிக்கு ஃபோன் பண்ணி "வேற ஒரு முக்கியமான வேலை வந்துடுச்சு நம்ம மீட்டிங் கேன்ஸல், எல்லோர்க்கும் இன்ஃபார்ம் பண்ணிடு"  

செக்ரட்ரி தன்னோட வீட்டுக்காரருக்கு ஃபோன் பண்ணி "என்னாங்க மீட்டிங் கேன்ஸல் பண்ணீட்டாறு எங்க பாஸ் அதனால சாயந்தரம் வீட்டுக்கு வந்துடுறேன் எப்பயும் போல"

வீட்டுக்காரருக்கு ஒண்ணும் புரியல ஒடனே ஃபோன் போட்டாரு தன்னோட ஃப்ரெண்ட்க்கு "டாய் என் பொண்டாட்டி ஊருக்கு போகலையாம் அதனால நம்ம பார்ட்டி எல்லாம் கேன்ஸல், நீ சரக்கோடா வீட்டுக்கு வந்துடாதே"

நண்பர் டியூஷன் சென்டர்-ல  "பசங்களா சாருக்கு வேலை இல்லை நீங்க எப்பயும் போல டியூஷனுக்கு வந்துடுங்க"

அந்த பையன் திருப்பி தாத்தாக்கு ஃபோன் பண்றான் "தாத்தா டியூஷன் இருக்காம், லீவு இல்லையாம, என்னால உங்களோட இருக்க முடியாது"

தாத்தா என்கிற பாஸ் திரும்ப தன்னோட செக்ரெட்டரி ஃபோன் பண்ணி

"நாம இன்னைக்கி நைட் டெல்லி போகணும் மீட்டிங் இருக்கு நாளைக்கு காலையில திரும்பி வர ஒரு வாரம் ஆகும்.  வீட்டுல சொல்லீட்டு தேவையானது எல்லாம் எடுத்துக்கோ 8 மணிக்கு ஃப்ளைட்"

என்ன இப்பவே கண்ணை கட்டுதா?- இதுக்கு பேரு தாம்ல டெட்லாக் !!.


=========================================================================

இன்றைய நீதி


ஒரு நாளு ஒரு சலூன்-ல முடி வெட்டிக்கிட்டு இருந்தாரு சுப்பு, அப்ப சலூனுக்குள்ள வந்தான் அவரோட 7  வயசு பையன் சுரேஷ் , அவன பார்த்த சலூன் கடைக்காரர்.

"இந்த பயலுக்கு எதுவுமே தெரியல சுப்பு சார்"

"என்ன சொல்றீங்க?" சுப்பு கேட்டாரு

சட்டைப்பையில் இருந்து ஒரு 5 ரூபாய் காசும் இரண்டு ஒரு ரூபாய் காசுகளும்  எடுத்து ஒரு கையில் 5 ரூபாய் காசும் இன்னொன்றில் இரண்டு 1 ரூபாய் காசுகளையும் வைச்சுக்கிட்டு

"இப்ப பாருங்க, தம்பி உனக்கு இந்த கையில இருக்க காசு வேணுமா இல்ல இந்த கையில இருக்குற காசு வேணுமா?"

பையன் ரெண்டு ஒரு ரூபா இருந்த கையை காமிச்சு "இது வேணும்"

"சரி எடுத்துக்கோ" கையில் இருந்த ரெண்டு ஒரு ரூபாய் காசுகளை பையன் கிட்ட குடுத்து விட்டாரு சலூன் கடைக்காரரு.

சுப்பு கிட்ட "பாருங்க சார் இந்த பையனுக்கு இன்னும் எது பெருசு எது சிறுசுன்னே தெரியலே!!"

கொஞ்ச நேரம் கழிச்சி கையில ஒரு கோன் ஐஸ்ஸோட உள்ள வந்தான்

அவனைப்பார்த்து "ஏன் தம்பி 5 ரூவாயை விட்டு ரெண்டு ரூவாயை எடுத்துக்கிட்ட?" சுப்பு கேட்டாரு

"மொதோ நாளே 5 ரூவாயை எடுத்து இருந்தா அப்பவே இந்த விளையாட்டை எங்கப்பா நிப்பாட்டி இருப்பாரு எனக்கு தான் தெனம் ரெண்டு ரூவா நஷ்டம். இப்ப பாருங்க ஒரு மாசமா தெனம் ரெண்டு ரூவா கெடைக்குது"

நீதி :  யார் எந்த ஒரு செயலை செய்தாலும் அதற்கு ஒரு காரணம் இருக்கும்.
காரணங்கள் ஏதுமின்றி காரியங்கள் நிகழுவது இல்லை
காரியங்கள் புரிந்தாலும் காரணங்கள் புரிவதில்லை

இன்றைய கடி

பாஸ்         : இன்னைக்கு நைட் நீங்க ஃப்ரீ-யா?
செக்ரட்ரி    : (வெட்க்கத்துடன்) ஆமா ஸார்..
பாஸ்        : அப்ப இந்த 100 பக்க ஃபைல்ல இருக்குறத கொஞ்சம் டைப் பண்ணி என்னோட இ-மெயிலுக்கு அனுப்பி வச்சுடுங்க!!


இன்றைய லொள்ளு

நண்பேன்டாபுதன், செப்டம்பர் 14, 2011

நீங்க ஆளு எப்பிடி கண்டு பிடிக்கலாம் வாங்க!!

எனதருமை சகோதர சகோதரிகளே,

வணக்கம்

என்ன எல்லோரும் இன்னைக்கு நலம் தானே!!. இன்னைக்கும் சில விசயங்களை உங்க கிட்ட பகிர்ந்து இருக்கேன். படிச்சு பார்த்துட்டு உங்க கருத்தையும் கொஞ்சம் சொல்லுங்க.

ஒரே நேரத்தில கீழே வர்ற சம்பவங்கள் நடக்குது

1. தொலைபேசி அழைப்பு வருகிறது
2. உங்கள் குழந்தை அழுகிறது
3. உங்கள் வீட்டு கதவை யாரோ தட்டுகிறார்கள்
4. துணி மாடியில் காயப்போட்டு இருக்கீங்க மழை தூறல் போட ஆரம்பிக்கிறது
5. குடிதண்ணி பிடிக்க வைத்த குடம் நிரம்பி வழிய ஆரம்பித்துவிட்டது

வீட்டுல வேற பெரியவங்க யாரும் இல்ல  நீங்க மட்டும் தான் இருக்கீங்க..

இப்போ நீங்க இதை வரிசை படுத்துங்க பார்க்கலாம் எதுக்கு நீங்க முக்கியத்துவம் குடுக்குறீங்கன்னு..

பதில் அப்புறமா கமெண்ட்-ல போடுறேன்

இன்றைய க(டி)விதை

திருமணத்திற்கு முன்
மகிழ்ச்சி என்றால்
என்னவென்று உணரவில்லை!!
உணரும் போது
நேரம் கடந்துவிட்டது

குடுக்கல் வாங்கல்
உங்கள் திருமண வாழ்வை
மகிழ்ச்சியாய் வைத்து இருக்கும்
எப்போதும்
கணவன்  குடுப்பதும்
மனைவி வாங்குவதும்!!

லவ் மேரேஜ்
அரேஞ்சுடு மேரேஜ்
என்ன நல்லது?
கேட்டேன் நண்பனிடம்
நண்பன் சொன்னேன்
ஒண்ணு தற்கொலை
இன்னொன்னு கொலை
உனக்கு எது வேண்டுமோ
எடுத்துக்கோ மச்சி

விவாகரத்து ஏன் நிறையா ஆயுடுச்சு தெரியுமா?
கல்யாணம் நெறைய பண்ணிக்குறாங்க அதான்
 
"அன்பே நீ இல்லாமல் எப்பிடி நான் வாழுவேன்"
சரக்கு அடித்துக்கொண்டு சொன்ன புருஷனை பார்த்து
"பேசுறது நீங்களா இல்ல சரக்கா?" கேட்டாள் மனைவி
"நான்தான் சரக்குகிட்ட பேசிக்கிட்டு இருக்கேன்"

இன்றைய லொள்ளு 

எப்பிடி எல்லாம் வேலைய புடிக்கிறாங்க பாருங்கஇவரு தான் மேல இருக்க அப்ளிகேஷன்-ஐ ஃபில்-அப்  பண்ண புண்ணியவான், இவருக்கும் வேலை குடுத்து இருக்காங்க வால்மார்ட் - கலிபோர்னியால


செவ்வாய், செப்டம்பர் 13, 2011

உங்களுக்கும் இது எல்லாம் நடக்குதா அண்ணே?

அண்ணே நான்தாண்ணே 10 ஓட்டு பதிவரு பேசுறேன்..  

எல்லோரும் நல்லா இருக்கீங்களா?  திடீர்ன்னு காலையில ஒரு யோசனை எதுக்கெல்லாம் நான் சலிச்சுக்கிறேன்னு அதோட விளைவு கீழே இருக்குறது, உங்களுக்கும் அப்படித்தானா? கொஞ்சம் சொல்லுங்களேன்   


 1. எப்போதெல்லாம் நான் வெற்றிக்கான சாவியை கண்டுபிடிக்கும் போது  பூட்டை யாரோ மாற்றிவிடுகிறார்களே
 2. நான் மது அருந்துவதால் எந்த பிரச்சனையும் தீர்க்க முடியாது, ஆனால் மீண்டும் யோசித்தால் பால் அருந்துவதால் கூட தீர்க்க முடியவில்லையே!!
 3. எனக்கு தேவை இல்லாத நேரத்தில் தான் கடன் வாங்கச்சொல்லி தினமும் தொலைபேசியில் அழைப்பு வரும்
 4. நான் வாழ்க்கையில் விரும்பக்கூடிய அனைத்து விஷயங்களும் சட்டவிரோதமாக அல்லது அதிக விலை உடையதாக இருக்கிறதே
 5. எனக்கும் பணக்காரன் ஆக திட்டம் இருக்கிறது ஆனால் எல்லா நேரத்திலும் அது சாத்தியப்படுவதில்லை
 6. வெற்றி பெற முடியவில்லையா, நான்  தோற்றத்தக்கான அடையாளங்களை முதலில் அழித்துவிட எத்தனிக்கிறேன்
 7. நான் ரொட்டியின் எந்தப்பக்கம் வெண்ணையை தடவினாலும், கீழே விழும் பொது வெண்ணை இருக்கும் பக்கமே மண்ணில் விழுகிறதே  
 8. நான் எதையாவது குறிப்பிடும் போது அது நல்லது என்றால், அதை எல்லோரும் எடுத்துக்கொள்வர், ஆனால் அது மோசமாகஇருந்தால், யாரும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அது நடக்கிறதே!!
 9. நான் சீக்கிரம் வந்தால், பஸ் தாமதமாக வரும். நான் தாமதமாக வந்தாலும் பஸ் இன்னும் தாமதமாக வருகிறதே ஏனென்றால்  ஏற்கனவே   ஒரு பஸ்-ஐ தவறவிட்டு விட்டேன் 
 10. நான் எந்த பொருள் வாங்கினாலும் அது இன்னொரு இடத்தில் இன்னும் மலிவாக கிடைத்து இருக்கும் என்றே நினைக்கிறேன்
 11. நான் எந்த வரிசையில் நிற்கிறேனோ  அதைவிட பக்கத்தில் இருக்கும் வரிசை வேகமாக நகருவது போல் உணர்கிறேன் 
 12. நான் எப்போதெல்லாம் கல்லூரிக்கு வரவில்லையோ அப்போதெலாம் சரியாய் ஆசிரியர் எடுத்துவிடுவார் வருகைபதிவு
 13. நான் ரோமிங்கில் இருக்கும் போது மட்டும் அதிகமான தவறான அழைப்புகள் வரும்
 14. நான் குளியலறையில் இருக்கும் போது மட்டுமே கதவு மணி அல்லது உங்கள் மொபைல் அழைப்பு வரும்
 15. ஒரு நீண்ட காத்திருப்பிற்கு பின், இரண்டு பஸ்கள் எப்போதும் ஒன்றாக வரும், நான் ஏறும் பஸ் மட்டும் கூட்டம் அதிகமாய்ஏறும் இன்னொன்று கூட்டம் குறைவாய் இருக்கும் 
 16. காற்று எந்தப்பக்கம் அடித்தாலும் நான் பிடிக்கும் சிகரெட் புகை எப்போதும் புகை பிடிக்காதவரின் பக்கமே செல்கிறது.

  கடைசியாய் முக்கியமான ஒன்று
 17. நான் அலுவலகத்தில் நண்பர்களுடன் மொபைல் / chat / g-talk  பயன்படுத்தி அரட்டை அடிக்கும் போது ....... எப்போதும் என்னுடைய PM / PL / GM, நம் அருகில் நின்று கவனித்துக்கொண்டு இருப்பர்..

என்ன வாழ்க்கை சார் இது சே...

இன்றைய லொள்ளு 


இவர் பேட்டிங் பண்ணும் போது மட்டும் ஏன் அண்ணா இப்பிடி ஃபீல்டிங் செட் பண்ணுறாங்கே 
திங்கள், செப்டம்பர் 12, 2011

இது தாம்லே கார்ப்பரேட் தத்துவம் - புரிஞ்சுக்கோ

குப்பு சுப்பு ரெண்டு பேரும்,  இந்த வார கடைசில போரடிக்குதேன்னு மலையேற (trucking) போனாங்க.

அது ஒரு அடர்ந்த காடு கொஞ்ச தூரம் உள்ள போகும் போதே ஒரே கும்மிருட்டு, அவ்வளவு அடர்ந்து இருந்துச்சு காடு. கொஞ்ச தூரத்தில கொஞ்சம் வெளிச்சம் அதை நோக்கி நடை போட்டாங்க, வெளிச்சத்துகிட்ட வந்து பார்த்தா ஒரு புலி உக்காந்து இருந்துச்சி

மூஞ்சில பசி வெறி தெரிஞ்சது, புலிய பார்த்த உடனே  சுப்பு எடுத்தாரு ஓட்டம், ஆனா குப்பு தன்னோட பேக்-ல  இருந்து ரீபோக் ஷூவை எடுத்துக்கிட்டு இருந்தாரு.

இதை பார்த்த சுப்பு "ரீபோக் ஷூ போட்டா புலிய விட வேகமா ஓட முடியுமா சீக்கிரம் வாலே புலி புடிக்கிற முன்னாடி ஓடிரலாம்" மின்னு சொன்னாரு

"நெசம் தாம்லே  புலிய விட வேகமா ஓடமுடியாது ஆனா உன்னை விட வேகமா ஓட முடியும்"

கொசுறு :  அப்பாடி ஒரு பதிவு தேத்தியாச்சி இன்னைக்கு  ஹா ஹா ஹா


இன்றைய லொள்ளு 

காண்ட்ராக்டர் கிட்ட பேரம் பேசுனா இப்பிடிதான் வீடு கட்டுவாரு 


வெள்ளி, செப்டம்பர் 09, 2011

குப்பைத்தொட்டி - மெட்ராஸ் ஸ்டேட் டூ தமிழ்நாடு

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராசு மாகாணம் என்ற பெயர் மதராசு மாநிலம் என்று மாற்றம் கண்டது, தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தது.
1953-இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது.

1956இல்  மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அந்த பெயர் மாற்றப்படவில்லை ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்"  என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் வழக்கத்தில் இருந்தது.   இன்னும் வட இந்தியாவில் மதராசி என்ற சொல் இன்றும் வழக்கத்தில் உள்ளது, அவர்களுக்கு தென் இந்தியாவில் இருந்து வரும் எல்லோருமே மதராசிகள் தான்.

"சென்னை ராஜ்ஜியம்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் சங்கரலிங்கனார் 1957-ல் உண்ணா விரதம் இருந்தார்.  இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 63.

விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.   இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.

"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார்.

மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார். 

"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே"  என்று அண்ணா கூறினார். 

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார். 

நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.

அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 78-வது நாளில் (அக்டோபர் 13, 1957) அவர் மரணம் அடைந்தார். இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது.

தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின. இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.

இதுபற்றிய அறிவிப்பை 24-2-1961-ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார். அதில்

"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம். இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும். எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். 

"இப்படி இரண்டு விதமாக பெயர் இருக்கலாமா?" என்று பலருக்கு சந்தேகம் ஏற்படலாம். ஜெர்மனியை எடுத்துக்கொள்ளுங்கள். உலகில், "ஜெர்மனி" என்றால்தான் தெரியும். ஆனால் ஜெர்மானியர்கள் தங்கள் தேசத்தை "டூஷ் லேண்ட்" என்றுதான் அவர்கள் மொழியில் கூறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏதாவது குறைவு வந்துவிட்டதா? வெளி உலகில், "ஜெர்மனி" என்று சொல்லக்கூடாது என்று அவர்கள் தடுக்கவில்லை. அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.

இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.

எனினும், ஆங்கிலத்திலும் "TAMILNADU" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அந்த கோரிக்கை அப்போது ஏற்கப்படவில்லை.  பிறகு அதுவும் ஏற்கப்பட்டு இப்போது ஆங்கிலத்திலும் TAMILNADU  என்றே எழுதப்படுகிறது.


இன்றைய லொள்ளு

வியாழன், செப்டம்பர் 08, 2011

நல்லா போடுறாங்கயா நங்கூரம்

ஒரு நாளு மூணு அரசியல்வாதிங்க (யார் பேரு வேணா வச்சுக்குங்க) கார்ல போகும் போது  ஒரு விபத்துல மாட்டிக்கிட்டாங்க. மூணு பேரும் செத்தும் போயிட்டாங்க, நேரா எமலோகம் எமன் அவங்களை பார்த்த உடனே

"மொதோ ரெண்டு பேரையும் சொர்க்கத்துக்கும், கடைசியா இருந்த வயசான ஆளை நரகத்துக்கும் அனுப்புங்க" அப்பிடின்னாரு

நரகத்துக்கு போக சொன்னவருக்கு கடுப்பு,

"இது அநியாயம் எமா, எங்களை விசாரிக்காம நீ பாட்டுக்கு என்னை நரகத்துக்கும் அவங்கள  சொர்க்கத்துக்கும் போகச்சொல்லுற. நல்லா யோசிச்சு ஒரு முடிவுக்கு வா, ஏன்னா நாங்க மூணு பேரும் ஒரே மாதிரி லஞ்சம் வாங்கி இருக்கோம், மக்களை ஏமாத்தி நிறைய கொள்ளை அடிச்சு இருக்கோம், கொள்ளை அடிச்ச பணம் வெளிநாட்டுல பதுக்கி வச்சு இருக்கோம்.  நான் மட்டும் ஏன் நரகத்துக்கு போகணும்?"

"சரி நான் போட்டி வைக்கிறேன் பாஸ் பண்ணுறவாங்க எல்லாம் சொர்க்கத்துக்கு மத்தவங்க எல்லாம் நரகத்துக்கு சரியா?"

மூணு பேரும் ஒத்துக்கிட்டாங்க

மொதோ ஆளைப்பார்த்து "நான் சொல்லுறதை இங்கிலீஷ்-ல ஸ்பெல்லிங் சொல்லணும்,  INDIA - ஸ்பெல்லிங் சொல்லு?"
அவர் சரியா சொல்லீட்டாரு

ரெண்டாவது ஆளை பார்த்து "ENGLAND ஸ்பெல்லிங் சொல்லு? "
அவரும் சொல்லிட்டாரு

கடைசியா நம்ம பெரியவரை பார்த்து "SRILANKA ஸ்பெல்லிங் சொல்லு"

"இது அநியாயம் எனக்கு இங்கிலீஷ் எல்லாம் தெரியாது தமிழ்-ல ஏதாவது கேளுங்க சொல்லுறேன்!!"  அப்பிடின்னாரு பெருசு

"சரி தமிழ்-ல கேள்வி சரியா சொல்லீட்டா சொர்க்கம் இல்ல நரகம்"

"நான் சொல்லுறதை பேப்பர்-ல எழுதுங்க"

மொதோ ஆளை பார்த்து "நாய் லொள் லொள் என குலைக்கும்"   மொதோ ஆளு சரியா எழுதி குடுத்தாறு

ரெண்டாவது ஆளை பார்த்து "ஆடு மே மே என கத்தும்" அவரும் சரியா எழுதி குடுத்துட்டாரு

கடைசியா இவரை பார்த்து "இருபத்தி நாலாம் புலிகேசியின் இருபத்தி இரண்டு திட்டங்களில் இரண்டு சோடை போனாலும் பரவாயில்லை இருக்கும் இருபது சரியாய் இருக்கிறது"

கொஞ்சம் கஷ்டம் ஆனா அவரால சரியா எழுத முடியலை.

"எனக்கு இன்னொரு சந்தர்ப்பம் குடுங்க எமா, எனக்கு தமிழ் தெரியும் நான் நிறைய வரலாற்று இலக்கியம் எழுதி இருக்கேன் அதனால வரலாறு சம்மந்தமா ஏதாவது கேளுங்க சரியா சொல்லுறேன்" அப்பிடின்னாரு பெருசு.

எமனும் மனசு மாறி சரி அப்பிடின்னு ஒத்துக்கிட்டாரு

"இந்தியாக்கு சுதந்திரம் எப்ப கெடைச்சது?" மொதோ ஆளைப்பார்த்து கேட்டாரு

"1947" - அப்பிடின்னாரு மொதோ ஆளு

"இந்திய சுதந்திரப்போர்-ல இறந்தவங்க எண்ணிக்கை எவ்வளவு?" ரெண்டாவது ஆளைப்பார்த்து கேட்டாரு

"ஏதாவது சாய்ஸ் கெடைக்குமா? ரெண்டாவது ஆளு கேட்டாரு.

"அ) 1,00,000 ஆ) 2,00,000 இ) 3,00,000 மூணு ஆப்ஷன் குடுத்தாரு எமன்

"2,00,000"  - அப்டின்னாரு ரெண்டாவது ஆளு அவரும் பாஸ்

இப்ப நம்ம ஆளைப்பார்த்து

"இந்த 2,00,000 பேர்-ல ஒரு 100 பேரு ஊரு அட்ரஸ் சொல்லுங்க" அப்பிடின்னாரு எமன்

சொல்லத்தெரியல பெருசுக்கு, தோல்விய ஒப்புக்கிட்டு "சரி நான் நரகத்துக்கே போறேன்" அப்பிடின்னு புறப்பட்டாரு பெருசு..

நீதி :  நிர்வாகம் உங்களை பழிதீர்க்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டால் நீங்கள் தப்பிக்க வழி இல்லைஇன்றைய தத்துவம்

சில பூக்கள் வெயிலில் மலரும்
சில பூக்கள் நிழலில் மலரும்
கடவுளுக்கு தெரியும் எது
உங்களுக்கான இடம் அங்கேயே
நீங்கள் இருக்கிறீர்கள்
எங்கிருந்தாலும் மகிழ்ச்சியாய் இருங்கள் 


சிலரை மாற்ற வேண்டுமா நீங்கள் மாறுங்கள்
ஒரே சூரியன் தான்
வெண்ணையை உருக வைக்கும்
களிமண்ணை இறுக வைக்கும்

வெள்ளம் வரும் போது
மீனுக்கு எறும்பு உணவு
வெள்ளம் வற்றினால்
மீன் எறும்புக்கு உணவு
எல்லாம் காலம்
செய்யும் மாயம்
எல்லோருக்கும் ஒரு
காலம் உண்டுஇன்றைய லொள்ளு - தொழில்நுட்ப வளர்ச்சி திங்கள், செப்டம்பர் 05, 2011

சர்வம் பல்ப்மயம் - இது எங்க ஏரியா

ஒரு நாளு பாத்திரம் விளக்கிக்கிட்டு இருந்த அம்மாவை பார்த்து பொண்ணு கேட்டா
"ஏம்மா  உங்களுக்கு அங்க அங்க வெள்ளை முடி இருக்கு?"
அதுக்கு அம்மா
"நீ எப்ப எல்லாம் என்ன கஷ்டப்படுத்துற மாதிரி குறும்பு பண்ணுறியோ அப்ப எல்லாம் அம்மாக்கு ஒரு வெள்ளைமுடி வளரும்"
கொஞ்ச நேரம் பொண்ணு யோசிச்சா அப்புறமா
"அப்ப ஏன் பாட்டிக்கு தலைமுடி எல்லாம் வெள்ளையா இருக்கு, நீ ரொம்ப கஷ்டப்படுத்துட்டீயா?"

*************************************************************************************************************************
ஒரு நாளு ஒரு டீச்சர் ஸ்கூல்-ல சுறா மீன் பத்தி கிளாஸ் எடுத்துக்கிட்டு இருந்தாங்க அப்ப
"சுறா மீன் பெருசா இருந்தாலும் ஒரு மனுசனை முழுசா முழுங்க முடியாது, ஏன்னா அதுக்கு தொண்டை சிறுசு"
நடுவில புகுந்த ஒரு பொண்ணு
"இல்ல மிஸ் போன வாரம் பேப்பர்-ல போட்டு இருந்தான், சுறா ஒரு ஆளை முழுங்கிடுச்சுன்னு"
"நான் தான் சொல்லுறேன்-ல அதுக்கு எல்லாம் சாத்தியமே இல்லை, சுறாவால மனுசனை முழுங்க முடியாது" - திரும்ப சொன்னாங்க டீச்சர்
"சரி நான் சொர்க்கத்துக்கு போனதுக்கு அப்புறம் அவர்கிட்டயே கேட்டு தெரிஞ்சுகிறேன்" - அப்பிடின்னா பொண்ணு
"அந்த ஆள் நரகத்துக்கு போயிருந்தா?" டீச்சர் கேட்டாங்க
"அப்ப நீங்க கேட்டு எனக்கு சொல்லுங்க" அப்பிடினுச்சாம் பொண்ணு

*************************************************************************************************************************
ஒரு நாள் ஸ்கூல்-ல டூர் கூட்டிக்கிட்டு போனாங்க, போன எடத்துல மத்தியானம் சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தாங்க அது பஃபே சிஸ்டம், ஒரு டீச்சர் என்ன பண்ணாங்க மொதோ இருந்த ஆப்பிள் தட்டுல "எல்லோரும் ஒன்று மட்டும் எடுத்துக்கொள்ளவும் கடவுள் பார்த்துக்கொண்டு இருக்கிறார்" அப்பிடின்னு ஒரு பேப்பர்-ல எழுதி வச்சாங்க.

கடைசியா சாக்லேட் தட்டு இருந்த்தது,   அதுல ஒரு குட்டி பையன் "இங்க எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க கடவுள் ஆப்பிள் தட்டை கவனிச்சுக்கிட்டு இருக்காரு!!" அப்பிடின்னு எழுதி வச்சுட்டு போயிட்டான்

*************************************************************************************************************************

அவர் : நல்ல வக்கீலுக்கும் சிறந்த வக்கீலுக்கும் என்ன வித்தியாசம்?
இவர் : தெரியலயே!!
அவர் : நல்ல வக்கீலுக்கு சட்டம் நல்லா தெரியும், சிறந்த வக்கீலுக்கோ எல்லா நீதிபதிகளையும் நல்லா தெரியும்

*************************************************************************************************************************

ஒரு நாளு ஒரு அழகான காலேஜ் பொண்ணு, புரொஃபசர் ரூமுக்கு வந்துச்சு

"நான் எக்ஸாம்-ல பாஸ் பண்ணனும் சார், நான் எதுவேணுமினாலும் செய்யிறதுக்கு தயாரா இருக்கேன், மிச்சம் உங்க கையில தான் இருக்கு"

"அப்பிடியா, எது வேணுமின்னாலும் செய்வீயா"?

"ஆமா சார்!!"

"அப்ப புஸ்தகத்தை எடுத்து படி"

*************************************************************************************************************************

ஒரு நாளு ஒரு வீட்டுக்காரம்மா காலையில எந்திரிச்ச உடனே
"என்னங்க இன்னைக்கு ஒரு கனவு நீங்க எனக்கு ஒரு வைர மாலை பரிசா குடுக்குற மாதிரி, இதுக்கு என்ன அர்த்தம்"

"மனச போட்டு குழப்பிக்காதே, இதுக்கு பதில் சாயந்தரம் தெரியும்" அப்பிடின்னு சொல்லிட்டு வீட்டுக்காரரு வேலைக்கு போயிட்டாரு.

சாயந்தரம் வீட்டுக்காரரு கையில ஒரு கிஃப்ட் பார்சல், ஆர்வமா அந்தம்மா தொறந்து பார்த்தாங்க, அதுல
"கனவுகளும் அதன் பலன்களும்" புத்தகம்..

சனி, செப்டம்பர் 03, 2011

வாய்க்கொழுப்புன்னா இது தானா அண்ணே !!?

குப்புவோட வீட்டுக்காரம்மா முட்டை பொரியல் பண்ணிக்கிட்டு இருந்தாங்க,  திடீர்ன்னு சமையல் கட்டுல நுழைஞ்ச சுப்பு

"பார்த்து பார்த்து, கொஞ்சம் எண்ணை நிறையா ஊத்து, வெங்காயம் கருகுது பாரு இன்னும் கொஞ்சம் எண்ணை ஊத்து. கொஞ்சம் கிளறி விடு. உனக்கு என்ன காதே கேக்காதா அங்க பாரு முட்டை ஆங்கங்க கெட்டியா இருக்கு பாரு அதையெல்லாம் உடைச்சிவிடு. என்ன பண்றே உப்பு போடலை கொஞ்சம் நிறையா போடு, இல்லாட்டி வாயிலேயே வைக்க முடியாது.. "  முட்டை பொரியிறத விட ரொம்ப பொரிஞ்சாறு..   

"இப்ப என்ன ஆச்சுன்னு இப்பிடி வாய் மூடாம கத்திக்கிட்டு இருக்கீங்க, கொஞ்ச நேரம் சும்மா இருங்க எனக்கு முட்டை  பொரியல் பண்ண தெரியாதுன்னு நெனச்சீங்களா?"

"ஒண்ணும் இல்ல நான் கார் ஓட்டும் பொது நீ என்ன செய்யிறயோ அதை தான் நான் இப்ப செஞ்சு காட்டினேன்" அப்பிடின்னாரு சிரிச்சுக்கிட்டே

========================================================================

ஒரு நாளு சுப்பு ரோட்டுல நடந்து போய்க்கிட்டு இருந்தாரு,

"நில், இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் தலை மேல் செங்கல் விழுந்து இறந்து போவாய்" - எங்கோ இருந்து வந்த குரலைக்கேட்டு அங்கேயே நின்றார்

அது போலவே ஒரு செங்கல் அவர் முன் விழுந்தது

கொஞ்ச தூரம் நடந்தார் திரும்பவும்

"நில், இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால் உன் மேல் ஒரு கார் இடித்து இறந்து போவாய்"  அங்கேயே நின்றார் சுப்பு

சொன்னது போலவே ஒரு கார் அவரை கடந்து சென்றது

"யார் நீ? எங்கிருந்து  பேசுகிறாய்?" சுப்பு கேட்டார்

"நான் உன் காவல் தெய்வம் உனக்கு ஆபத்து ஏற்படும் சமயத்தில் உன்னை எச்சரித்து காபாற்றவே இருக்கிறேன்"

"இப்ப எல்லாம் காப்பத்துன நீ என் கல்யாணதப்ப எங்கே இருந்தே ஏன் என்னை எச்சரிக்காம போனே?"

"அப்போதும் நான் இப்பிடி தான் கத்துனேன், ஆனா உனக்கு தான் காது கேக்கலை"

========================================================================

சுப்பு காதுல மாட்டுற ஹியரிங் எய்ட் வாங்கணும்ன்னு கடைக்கு வந்தாறு

"ஹியரிங் எய்ட் எவ்வளவுப்பா?"

"பத்தாயிரம் ரூவா ஸார்" கடையில இருந்த பையன் சொன்னான்

"ஒண்ணும் கேக்கலை"

பையன் கொஞ்சம் சத்தமா "பத்தாயிரம் ரூவா ஸார்"

"கொஞ்சம் கம்மியா கெடைக்குமா?"

"சரி ஒரு நூறு ரூவா குடுங்க"

பையன் ஒரு ஹியரிங் எய்ட் மாதிரியே ஒண்ண எடுத்துட்டு வந்து "இதை காதுல மாட்டுங்க அப்புறம் இதை பேன்ட்-ல வைங்க"

"இது நல்லா வேலை செய்யுமா?" சுப்பு கேட்டாரு

"இது வேலையே செய்யாது, ஆனா இத பாக்குறவங்க  உங்ககிட்ட கொஞ்சம் சத்தமா பேசுவாங்க உங்களுக்கு கேக்கும்"  அப்பிடின்னான் கொஞ்சம் சத்தமா..

========================================================================

ஒரு நாளு ஒரு ட்ராஃபிக் போலீஸ் ஒரு மறைவான எடத்துல இருந்து போற வர்ற வண்டிய எல்லாம் நோட் பண்ணிக்கிட்டே இருந்தாரு, எவனாவது ஓவர் ஸ்பீட்-ல போன, ட்ராஃபிக் ரூல்ஸ்-ஐ வயலேட் பண்ண நிறைய காசு பாக்கலாம்ன்னு ஒரு நப்பாசை

அன்னைக்கு அவருக்கு கெட்ட நேரம் எல்லோரும் சரியா வண்டி ஒட்டிக்கிட்டு போனாங்க. போலீஸ்க்கு குழப்பம், இங்க நம்ம   மறைஞ்சி தானே நின்னுக்கிட்டு இருக்கோம் எப்பிடி எல்லோரும் சரியா வண்டி ஒட்டுராங்களே அப்பிடின்னு

ஒரு மணி நேரம் ஆச்சு ரெண்டு மணி நேரம் ஆச்சு ஹுகூம் ஒரு கேஸ் கூட மாட்டுற மாதிரி தெரியல, ஏதோ தப்பு நடக்குதுன்னு மட்டும் தெரிஞ்சது, சரி என்னானு பாக்கலாம்ன்னு வெளியே வந்தாரு. வந்தவருக்கு அதிர்ச்சி 300 அடிக்கு முன்னாடி
" ட்ராஃபிக் போலீஸ் உஷார் " ன்னு போர்டு வச்சுக்கிட்டு ஒரு பையன் நின்னுக்கிட்டு இருந்தான், அந்தப்பக்கம் பார்த்தா இன்னொரு பையன் "செய்த உதவிக்கு உங்களால் முடிந்த்தது" அப்பிடின்னு ஒரு போர்டோட அவன் காலுக்கு கீழே ஒரு பை நிறைய சில்லறை..

எப்பூடி!!??
========================================================================

நல்ல குழந்தை தான் வீட்டிலும்,
நல்ல மனைவி பக்கத்து வீட்டிலும்
இருக்கிறார்கள் என்று நினைப்பது
ஆணின் மனம்

========================================================================

எந்த ஒரு ஆணும்
தாய் நினைப்பது போல அழகாய் இருக்க வேண்டும்
பிள்ளை நினைப்பது போலே பணக்காரனாய் இருக்க வேண்டும்
பெண்டாட்டி நினைப்பது போலே ஒரு சின்ன வீடாவது இருக்க வேண்டும்
என்று நினைக்கிறான் ஆனால் அது எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை
என்பதை நினைக்க மறக்கிறான்
========================================================================

நீ அசிங்கமாய் இருக்கிறாய் என்று யாராவது சொன்னால்
பரவாயில்லை கவலைபடாதீர்கள்
நீ முட்டாள் என்று யாராவது சொன்னால்
பரவாயில்லை கவலைபடாதீர்கள்
நீ அறிவாளி என்று யாராவது சொன்னால்
அறைந்துவிடுங்கள்,  கேலி செய்வதற்கும் ஒரு எல்லை உண்டு

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

குப்பைத்தொட்டி - தனி தெலுங்கானா போராட்டம்

தனி தெலுங்கானா போராட்டம்  

இந்தியாவின் விடுதலைக்குப்பின் இந்தியாவின் பல்வேறு மாகாணங்கள் சிறு சிறு அரசர்களின் ஆட்சியில் இருந்தது அதில் ஒன்று  ஐதராபாத்.  ஐதராபாத்தின் நிசாம் தன்னாட்சியை தொடர விரும்பினார். ஆனால் ஐதராபாத்தில் இருந்த இந்துக்கள் எல்லாம் இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர். அப்போதைய கணக்கின் படி இந்துக்கள் அதிகம் இருந்தனர்  (93% சதவீதம்). அவர்கள் எல்லாம் சேர்ந்து "JOIN INDIA"  என்ற இயக்கம் தொடங்கி நிசாமிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்களும், கம்யூனிஸ்ட்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாய் இருந்தனர். ஆனால் நிசாம் அவர்களை ஒடுக்க தன் படையின் துணையோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். 

புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17,1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கையை நிசாமிற்கு எதிராக துவங்கியது.  திரு J. N. சௌதாரி தலைமையில் ஐதராபாத நகருக்குள் புகுந்த இந்தியா இராணுவம் நிசாமின் படைகளை துவம்சம் செய்தது, இதன் மூலம் ஐதராபாத் நாடு இந்தியா வசம் ஆனது.

கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமஸ்தானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன.  இவை எல்லாம் ஒன்று சேர்த்து "விசாலஆந்திரா" என்பதே அவர்களின் கனவாக இருந்தது.  இறுதியில் பொட்டி ஸ்ரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது. டிசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார்.

உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு ஒன்றை அளித்தது. இந்த உடன்படிக்கையின் படி தெலுங்கானா பகுதியில் உள்ள அடிலாபாத், நிஜாமாபாத், மேடக், கரீம்நகர், வாரங்கல், கம்மம், நலகொண்டா, மகபூப்நகர் மற்றும் ஹைதராபாத் ஆந்திராவுடன் இணையும், மேலும் ஹைதராபாத் தலைநகர் ஆக்கப்படும் என்றும் ஆந்திரா இனி ஆந்திர பிரதேசம் என்று அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, மேலும் தெலுங்கானா பகுதிக்கான கவுன்சில் ஒன்று அமைக்கப்படும், அது தெலுங்கானா பகுதியில் வளர்ச்சிப்பணிகளை அல்லது திட்டங்களை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. 

தனி தெலுங்கானாவுக்கான போராட்டம்

1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். தெலுங்கானா மற்றும் ஜெய் ஆந்திரா இந்த இரண்டு இயக்கங்களும் 1969 முதல் 1972 வரை ஆந்திராவை ஸ்தம்பிக்க வைத்த போரட்டங்கள், சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.

ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும், கட்சி தலைமைக்கு (இந்திரா காந்தி) தனி தெலுங்கானாவில் விருப்பம் இல்லை என உணர்ந்தார், இதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் பிரம்மானந்த ரெட்டி  ராஜினாமா செய்ய செப்டம்பர் 1971 இல் P.V. நரசிம்ம ராவ் முதல்வர் ஆனார், தெலுங்கானா பிரஜா சமிதி கட்சி உறுப்பினர்கள்  தமது கொள்கைகளைக் கைவிட்டு காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.

1972 இல் துவங்கிய ஜெய் ஆந்திரா போராட்டம் இன்னொரு மிகப்பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது,  முல்கிகள் (தெலுங்கானா பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள்) மட்டுமே தெலுங்கானா பகுதியில் மற்றும் ஹைதராபாத் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்கப்பட்ட போராட்டம். இதை எதிர்த்து மாநில அரசு உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது, அந்த வழக்கை விசாரித்த 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முல்கி சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பெயல் செய்த இந்த வழக்க்கின் தீர்ப்பு உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராய் வந்தது, 3 அக்டோபர் 1972 இல் வெளியான தீர்ப்பு ஆந்திரா அரசியலில் புயலை கிளப்பியது.

பிற பகுதியை சேர்ந்த ஆந்திர மக்கள் தலைநகரில் தங்களின் உரிமை இழந்து விட்டதாய் நினைத்தனர், இதை தொடர்ந்து வன்முறை நிகழ்வுகளும் தொடர்ந்தன, எனவே ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்தது.   அதன் பிறகு மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பியதும் 1973இல் குடியரசு தலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் அரிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது, திரு. சென்னா ரெட்டி அவர்கள் ஆறாவது முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்ற பின் தனி தெலுங்கானா இனி ஒரு பிரச்சனையாய் இருக்காது என்று அறிவித்தார், அதன் விளைவு கட்சியில் அவருக்கு எதிரான உள்ளடி வேலைகள் நடக்க துவங்கின, விளைவு 1980 இல் ராஜினாமா செய்தார், அதன் பின் T. அஞ்சனையா முதல்வர் ஆனார் ஆனால் அவரும் 1 வருடம் 4 மாதங்களில் பதவியை இழந்தார், அதன் பின் பொறுப்புக்கு வந்த பவனம் வெங்கட்ராமன் மீண்டும் பதவியை இழக்க நேர்ந்தது, அதன் பின் ஸ்ரீ கே. விஜய பாஸ்கர ரெட்டி முதல்வர் ஆனார், அதாவது 4 ஆண்டுகளுக்குள் 4 முதல்வர்கள் மாறும் ஒரு மோசமான சூழ்நிலை நிலவியது ஆந்திராவில். 

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை துவங்கி ஆட்சியை கைப்பற்றினார் திரு N. T. ராமா ராவ்.  அவருடைய அரசும் தந்திரமாக கலைக்கப்பட்டது, இருந்தாலும் மறு முறையும் வென்று முதல்வர் ஆனார் NTR. ஆனால் அடுத்த முறை அவர் கொண்டு வந்த சில சட்டங்கள் மக்கள் விரும்பாத காரணத்தினால் 1989இல் காங்கிரஸ்க்கு வாக்களித்து மீண்டும் சென்னா ரெட்டி முதல்வர் ஆனார்.  பிறகு உட்கட்சி பூசலால் சென்னா ரெட்டிக்கு பதில் ஜனார்த்தன ரெட்டி முதல்வர் ஆனார், பின் அவரும் ராஜினாமா செய்தார் பின் விஜய பாஸ்கர ரெட்டி  முதல்வர் ஆனார். இதை கண்ட மக்கள் வெறுப்படைந்து மீண்டும் அடுத்த தேர்தலில் 1994 தெலுங்கு தேசத்திற்கு வாக்களித்து என்‌டி‌ஆர் முதல்வர் ஆனார், அடுத்த தேர்தலிலும் 1999இல் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று  சந்திரா பாபு நாயுடு முதல்வரானார்.   பின் 2004-இல் YSR என்று அழைக்கப்படும் ஒய்‌. எஸ். ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.     

இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர். அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி(TRS)என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் டி‌ஆர்‌எஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் டி‌ஆர்‌எஸ்-ம்  கூட்டணி அரசில் பங்கேற்றது. இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் டி‌ஆர்‌எஸ் கூட்டணியிலிருந்து விலகியது.

காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது. மார்ச் 2008இல் அனைத்து டி‌ஆர்‌எஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் டி‌ஆர்‌எஸ் தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.

இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரஜா கட்சியை துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.

2009 பொதுத் தேர்தல்களின் போது டி‌ஆர்‌எஸ் மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர். புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர்.  இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

டிசம்பர் 2009: டி‌ஆர்‌எஸ் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் (KCR)தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்துள்ளது. டிசம்பர் 2009, 10-ஆம் நாளன்று, இந்திய மைய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று அறிவித்தது. இதற்கான அறிவிப்பை மைய உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அதே நாளில் வெளியிட்டார்.

இன்னும் குப்பையை கிளறுவோம் - அடுத்த வெள்ளிக்கிழமை