குப்பைத்தொட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
குப்பைத்தொட்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, செப்டம்பர் 16, 2011

அணு உலை கழிவுகளின் குவிப்பிடம் இந்தியா - குப்பைத்தொட்டி

வணக்கம் உறவுகளே,

இன்றைக்கு கூடங்குளம் ஒரு ஹாட் கேக் எல்லோருக்கும் (பேப்பர் / டி‌வி)  .  தினம் தினம் செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது. மேலும் நம்ம நண்பர் சக பதிவர் கூடல் பாலா (தொடர்புக்கு +919940771407) அவர்களும் உண்ணாவிரதம் இருக்கிறார், அவருக்கு ஆதரவாக சக பதிவர்களும், பிளாக், ட்விட்டர், ஃபோன் என தங்களால் இயன்ற வழியில் ஆதரவும் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள். நானும் இப்ப அந்த ஜோதியில ஐக்கியம் ஆயிட்டேனே

இங்கே போராடும் மக்களுக்கு ஆதரவாக நிறைய கட்சிகள் ஆதரவு குரல்களும் எழுப்பி உள்ளன. மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக பல தலைவர்களும் போராட்டத்திற்கு வரக்கூடும் என்று எதிர் பார்க்கிறோம்.  இதில் சில பல உள்குத்துகளும் உண்டு, ஆளும் கட்சிக்கு தலைவலி  கொடுக்கவேண்டும்.. (வேண்டாம் நமக்கு அரசியல் எஸ்கேப்) 

சரி விசயத்துக்கு வருகிறேன்.

இன்னைக்கு நாம் நாட்டின் மின் தேவை 568 பில்லியன் கிலோ வாட்ஸ்.  இவ்வளவு கரெண்ட் எதுக்குன்னு மலைக்காதீங்க, எல்லாத்துக்கும் நாம தான் காரணம். என்ன புரியலையா  அதை கடைசி சொல்லுறேன்

தற்போதைய கணக்குப்படி மின்சாரம்

அனல் மின்நிலையங்கள் மூலம் 65.34%
நீர்மின் நிலையங்கள் மூலம்    21.53%
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள்  மூலம் 10.42%
(காற்று/எரிவாயு/சூரிய சக்தி)
அணு மின் நிலையங்கள் மூலம் 2.70%  நமக்கு கிடைக்குது

அப்ப கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு US$ 3.5 பில்லியன் எதுக்கு செலவு பண்ணனும் அப்பிடின்னு நீங்க கேக்குறது புரியுது. இன்னும் பத்து முதல் 15 வருடங்களுக்குக்குள் இப்போது இருக்கும் நிலக்கரியில 90% பயன்படுத்தப்பட்டுவிடும், இதனால் அனல் மின் உற்பத்தி முற்றிலும் நிறுத்த வேண்டிய நிலைமை வரும். அப்போ அந்த 65% மின்சாரத்துக்கு என்ன பண்றது காத்தும் / தண்ணியும் கேரண்டீ இல்லை. மழை / காத்து இருக்குறப்பதான் இது சரியா வரும் மத்த நேரங்கள்-ல மின் உற்பத்தி பண்ண முடியாது  மழை ஒரு மூணு மாசம் நல்லா பெய்யும் காத்து கூட அப்பிடித்தான்.

இந்த நிலையில அணு மின்நிலையங்கள் குறைந்த செலவில் அதிக மின் உற்பத்திக்கு கை குடுக்கும்.   அதுக்கு தான் இப்ப இருந்தே தயாராகுறோம் அப்பிடின்னு அரசு சொல்லுது. அவங்க என்ன காரணம் சொல்லுறாங்கன்னா வருஷம் பூராவுமா சுனாமியும் நிலநடுக்கமும் வருது, எப்பாயாவது தானே வருது அதை எல்லாம் தாங்கக்கூடிய அளவுல இந்த மின்னிலையம் கட்டியிருக்கோம் பயப்படாதீங்க (அச்சம் தேவை இல்லை - முதல்வர் அறிவிப்பு)  . இதுக்கு முன்னாடி 2006 சுனாமி வந்த்தப்ப கல்பாக்கம் பத்திரமா தானே இருந்துச்சு? அப்பிடினும் கேக்குறாங்க அரசு தரப்புல.

அதை விட இன்னொண்ணு என்னான முக்கவாசி பணத்தையும் ஏற்கனவே செலவு (ஏப்பம்) பண்ணிட்டோம் ஏற்கனவே 100 மெகாவாட்  மின்சார உற்பத்தி நடந்துகிட்டு இருக்கு இப்ப நிப்பாட்டுனா முதலுக்கே மோசம் வந்துடும்ன்னு சொல்றாங்க அரசு தரப்புல. 

அதெல்லாம் சரி தான் அதுக்காக எப்பிடி உயிரை பணயம் வைக்கிறதுன்னு கேக்குறீங்களா?  நம்ம இஞ்சீனியருங்க அழகு தெரியாதா எங்களுக்கு ஒரு வேலை பார்த்துட்டு நிறைய வேலை முடிச்சுட்டோம்ன்னு ரிபோர்ட் குடுத்துவாங்க.  பாவம் அமைச்சருங்க, முதல்அமைச்சருங்க அவங்க ரிப்போர்ட்டை நம்பி எதையாவது சொல்லிடுவாங்க பின்னாடி ஏதாவது ஆச்சுன்னா அவஸ்தைப்படப்போறது எங்க புள்ள குட்டீங்க தானே ஏற்கனவே போபால் மக்கள் பட்ட அவஸ்தை இன்னைக்கு வரைக்கும் அவங்க வாரிசுகள் படுற அவஸ்த்தையை நாங்க மறக்கலைன்னு நீங்க சொல்லுறது எனக்கு புரியுது.  அதுவும் ஞாயம் தான்.

என்ன பண்றது இதுக்கு பின்னாடி இருக்குற அரசியல் உலக அரசியல், என்னான இந்த அணு உலை கழிவுகள் கொட்ட ஒரு எடம் வேணுமே  அவங்களுக்கு ஏற்கனவே வேண்டிய அளவு அவங்க நாட்டுல கொட்டி முடிஞ்சாச்சு.  அதனால நம்ம ஊரை அதுக்கு ஒரு குப்பைத்தொட்டி மாதிரி பயன்படுத்திக்கலாம்ன்னு நினைக்கிறாங்க அதனால தானோ இதுக்கு மட்டும் எவ்வளவு வேணா செலவு செய்யவும் தயாரா இருக்காங்களோன்னு ஒரு சின்ன சந்தேகம்..

சரி நாம எப்பிடி இந்த போராட்டத்துக்கு ஆதரவு தருவது, நாம போயி உண்ணாவிரதம் இருக்கலாம் அவங்களோட சேர்ந்து ஆனா பிரச்சனை தீர்ந்துடுமா என்ன?  தீராதுன்னே தோணுது.   எப்பிடியும் சமாதானம் பேச வருவாங்க அது கூட ஆபத்து இல்லை, நமக்குள்ளேயே யாராவது கருப்பு ஆடு இருந்தா இன்னும் ஆபத்து. அவங்க விலை போயிட்டா போராட்டம் பிசுபிசுத்து போயிடுமே..   ஆனா இந்த போராட்டம் இதுக்கு முன்னாடி நடந்த மாதிரி இல்லாம வெற்றி மட்டும் அடையணும்ன்னு ஆசைப்படுறேன்.    

என்ன செயாலாம்ன்னு யோசிச்சேன்,  ஏன்னா இன்னைக்கு தனி நபர் மின் நுகர்வு இந்தியால தான் ஒரு ஆளு 704 கிலோ வாட்ஸ்ன்னு ஒரு ஆய்வு சொல்லுது.  நம்ம தேவைகளை கொஞ்சம் குறைச்சுக்கிட்டா உற்பத்தி பண்ண வேண்டிய நிர்பந்தமும் குறைஞ்சுடுமே.  தேவை இருந்தாத்தானே உற்பத்தி தேவை இல்லையினா என்ன பண்ணுவாங்க அதை பத்திரமா சேமிச்சும் வைக்க முடியாதே. அப்ப தேவையை குறைச்சுட்டா, சரி எப்பிடி எல்லாம் குறைக்கலாம் கீழே இருக்குற மாதிரி சில விஷயங்களை தவிர்த்தாலே மின் தேவையை குறைக்கலாம் ஏதோ நம்மால முடிஞ்சது

1.    காலையில எந்திருச்சு  கீசர் (Geyser) போட்டு திரும்ப தூங்கப்போறது.  1 மணி நேரம் கழிச்சு எந்திரிக்கும் போது அதுவே ஆஃப் ஆகி இருக்கும். அரை மணி நேரம் போட்டாலே தேவையான அளவு  சூடு கெடைச்சுடும் (சென்னை மக்கள் மன்னிக்கவும்) 

2.    முழிச்சிக்கிட்டு இருக்குற நேரம் எல்லாம் டி‌வி பாக்கணும்னு நினைக்கிறது

3.     பகல்-ல கூட பல்பு போட்டு விட்டு இருக்குறது

4.    நைட் 8 மணிக்கு மேலே எல்லா கடைகளையும் அடைச்சுடணும் இல்லை பெரிய பெரிய லைட் மட்டுமாவது அணைச்சுடனும்

5.    வீட்டுல இருக்குற மிக்ஸி கிரைண்டர் எல்லாம் எடுத்துவிட்டுட்டு அம்மிக்கல்லுக்கு மாறுனா உங்க வீட்டுக்காரம்மா (நீங்க கூட) சிலிம் ஆகுறது கன்பர்ம்

6 .     சாயந்தரம் ஒரு ரெண்டு மணி நேரம் பக்கத்துல இருக்க கோயிலுக்கோ / பார்க்குகோ நடந்து போயிட்டு வரலாம் அந்த ரெண்டு மணி நேரம் உங்க வீட்டு மின்சாரமும் குறையும், உடம்புல இருக்குற சுகரும் குறையும்

இன்னும் நாம நெனச்சா எதுவேணா செய்யலாம்... உங்களுக்கு தோணுனதை கமெண்ட்-ல போட்ட நெறையா பேருக்கு பயன் உள்ளதா இருக்கும்..

இந்த அவலம் வேண்டாமே  நமக்கு - சிந்திப்போமா ??







வெள்ளி, செப்டம்பர் 09, 2011

குப்பைத்தொட்டி - மெட்ராஸ் ஸ்டேட் டூ தமிழ்நாடு

இந்தியா சுதந்திரம் அடைந்த பின் மதராசு மாகாணம் என்ற பெயர் மதராசு மாநிலம் என்று மாற்றம் கண்டது, தமிழ்நாடு, கடலோர ஆந்திரப் பகுதிகள், மேற்கு கேரளம், தென் மேற்கு கர்நாடக கடற்கரைப் பகுதிகள் ஆகியவை மதராசு மாநிலத்தின் கீழ் வந்தது.
1953-இல் மதராசு மாநிலத்தின் தெலுங்கு பேசும் மக்கள் உள்ள வட பகுதிகள் ஆந்திர மாநிலமாகவும் தமிழ் பேசும் தென் பகுதிகள் மதராசு மாநிலமாகவும் மேலும் பிரிக்கப்பட்டது.

1956இல்  மாநில எல்லைகளை மறு வரையறை செய்யும் சட்ட திருத்தத்தின் மூலம் மதராசு மாநிலத்தின் மேற்கு கடற்கரை பகுதிகள் கேரளாவிற்கும் கர்நாடகத்திற்கும் இடையே பிரித்தளிக்கப்பட்டது. ஆனால் அப்போதும் அந்த பெயர் மாற்றப்படவில்லை ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்"  என்றும், தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்றும் வழக்கத்தில் இருந்தது.   இன்னும் வட இந்தியாவில் மதராசி என்ற சொல் இன்றும் வழக்கத்தில் உள்ளது, அவர்களுக்கு தென் இந்தியாவில் இருந்து வரும் எல்லோருமே மதராசிகள் தான்.

"சென்னை ராஜ்ஜியம்" என்ற பெயரை "தமிழ்நாடு" என்று மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைக்காக, விருதுநகரில் சங்கரலிங்கனார் 1957-ல் உண்ணா விரதம் இருந்தார்.  இவர் விருதுநகரை அடுத்த மண்மலைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர். திருச்செங்கோட்டில் ராஜாஜி நடத்திய காந்தி ஆசிரமத்தில் பணிபுரிந்தவர். "தமிழ்நாடு" என்று பெயர் சூட்ட வேண்டும், ஜனாதிபதி, கவர்னர் பதவிகளை ஒழிக்க வேண்டும், அரசு ஊழியர்கள் கதர் அணியவேண்டும் என்பவை உள்பட 12 கோரிக்கைகளுக்காக 1957-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அவர் உண்ணாவிரதம் தொடங்கினார். அப்போது அவருக்கு வயது 63.

விருதுநகரில், முத்துமாரியம்மன் கோவிலுக்கு அருகில் ஒரு சிறிய ஓலைக்குடிசையில் அவர் உண்ணாவிரதம் இருந்தார். குடிசையில் காங்கிரஸ் கொடி பறந்தது.   இந்த உண்ணாவிரதம் பற்றி காமராஜரிடம் நிருபர்கள் கேட்டனர்.

"சங்கரலிங்கனாரின் 12 கோரிக்கைகளில், 10 கோரிக்கைகள் மத்திய அரசு சம்பந்தப்பட்டது" என்று அவர் பதில் அளித்தார்.

மிகவும் களைத்து, இளைத்துப் போன சங்கரலிங்கனார் ஒரு கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை போய்ப்பார்த்தனர். தி.மு.கழகத் தலைவர் அறிஞர் அண்ணாவும் சென்று பார்த்தார். 

"இவ்வளவு உறுதியுடன் இருக்கிறீர்களே. உங்கள் கோரிக்கையை ஏற்கமாட்டார்களே"  என்று அண்ணா கூறினார். 

"நான் இறந்த பிறகாவது என் கோரிக்கையை ஏற்பார்களா என்று பார்ப்போம்" என்று சங்கரலிங்கனார் தழுதழுத்த குரலில் சொன்னார். 

நாளுக்கு நாள் அவர் உடல் நிலை மோசம் அடைந்தது. நாடித்துடிப்பும், ரத்த அழுத்தமும் குறைந்து கொண்டே போயின.

அவரைக் காப்பாற்றும் எண்ணத்துடன், மதுரை பொது மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தார்கள். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி, உண்ணாவிரதம் தொடங்கிய 78-வது நாளில் (அக்டோபர் 13, 1957) அவர் மரணம் அடைந்தார். இதன்பின், தமிழ்நாடு பெயர் மாற்ற கோரிக்கை மேலும் தீவிரம் அடைந்தது.

தலைவர்கள் வலியுறுத்தினார்கள். கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் தீர்மானங்கள் நிறைவேற்றின. இதன் பிறகு, தமிழில் "தமிழ்நாடு" என்றும், ஆங்கிலத்தில் "மெட்ராஸ் ஸ்டேட்" என்றும் குறிப்பிட அரசாங்கம் தீர்மானித்தது.

இதுபற்றிய அறிவிப்பை 24-2-1961-ல் சட்டசபையில் நிதி அமைச்சர் சி.சுப்பிரமணியம் வெளியிட்டார். அதில்

"நமது மாநிலத்தின் பெயர், அரசியல் சட்டத்தில் "மெட்ராஸ்" என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. மெட்ராஸ் என்பது, ஆங்கிலத்தில் இருக்கக் கூடிய பதம். தமிழில் குறிப்பிடும்போது, சென்னை மாநிலம் என்று சொல்கிறோம். சென்னை ராஜ்ஜியம், சென்னை சர்க்கார் என்றும் சொல்கிறோம். இனி தமிழில் "சென்னை ராஜ்ஜியம்" என்று எழுதுவதற்கு பதிலாக, "தமிழ்நாடு" என்று எழுதலாம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆங்கிலத்தில் எழுதும்போது மட்டும், "மெட்ராஸ்" என்று குறிப்பிடப்படுமே தவிர, மற்ற எல்லா இடங்களிலும் "தமிழ்நாடு சட்டசபை, "தமிழ்நாடு சர்க்கார்" என்று குறிப்பிடப்படும். எல்லோரும் வரவேற்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இந்த முடிவை எடுத்து இருக்கிறோம். 

"இப்படி இரண்டு விதமாக பெயர் இருக்கலாமா?" என்று பலருக்கு சந்தேகம் ஏற்படலாம். ஜெர்மனியை எடுத்துக்கொள்ளுங்கள். உலகில், "ஜெர்மனி" என்றால்தான் தெரியும். ஆனால் ஜெர்மானியர்கள் தங்கள் தேசத்தை "டூஷ் லேண்ட்" என்றுதான் அவர்கள் மொழியில் கூறுகிறார்கள். இதனால் அவர்களுக்கு ஏதாவது குறைவு வந்துவிட்டதா? வெளி உலகில், "ஜெர்மனி" என்று சொல்லக்கூடாது என்று அவர்கள் தடுக்கவில்லை. அரசியல் சட்டத்தை மாற்ற அவசியம் இல்லாமலேயே, "சென்னை ராஜ்ஜியம்" என்பது "தமிழ்நாடு" என்று மாற்றப்படுகிறது.

இவ்வாறு சி.சுப்பிரமணியம் அறிவித்தார்.

எனினும், ஆங்கிலத்திலும் "TAMILNADU" என்று அழைக்கப்படவேண்டும். அதற்காக, அரசியல் சட்டத்தை திருத்த வேண்டும்" என்று தி.மு.கழகமும், மற்றும் பல கட்சிகளும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. அந்த கோரிக்கை அப்போது ஏற்கப்படவில்லை.  பிறகு அதுவும் ஏற்கப்பட்டு இப்போது ஆங்கிலத்திலும் TAMILNADU  என்றே எழுதப்படுகிறது.


இன்றைய லொள்ளு

வெள்ளி, செப்டம்பர் 02, 2011

குப்பைத்தொட்டி - தனி தெலுங்கானா போராட்டம்

தனி தெலுங்கானா போராட்டம்  

இந்தியாவின் விடுதலைக்குப்பின் இந்தியாவின் பல்வேறு மாகாணங்கள் சிறு சிறு அரசர்களின் ஆட்சியில் இருந்தது அதில் ஒன்று  ஐதராபாத்.  ஐதராபாத்தின் நிசாம் தன்னாட்சியை தொடர விரும்பினார். ஆனால் ஐதராபாத்தில் இருந்த இந்துக்கள் எல்லாம் இந்தியாவுடன் இணைவதையே விரும்பினர். அப்போதைய கணக்கின் படி இந்துக்கள் அதிகம் இருந்தனர்  (93% சதவீதம்). அவர்கள் எல்லாம் சேர்ந்து "JOIN INDIA"  என்ற இயக்கம் தொடங்கி நிசாமிற்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டனர். அப்போது இருந்த காங்கிரஸ் தலைவர்களும், கம்யூனிஸ்ட்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவாய் இருந்தனர். ஆனால் நிசாம் அவர்களை ஒடுக்க தன் படையின் துணையோடு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தார். 

புதிதாக அமைந்த இந்திய அரசு செப்டம்பர் 17,1948 அன்று இந்திய இராணுவத்தின் போலோ நடவடிக்கையை நிசாமிற்கு எதிராக துவங்கியது.  திரு J. N. சௌதாரி தலைமையில் ஐதராபாத நகருக்குள் புகுந்த இந்தியா இராணுவம் நிசாமின் படைகளை துவம்சம் செய்தது, இதன் மூலம் ஐதராபாத் நாடு இந்தியா வசம் ஆனது.

கம்யூனிஸ்ட்கள் தலைமையில் தெலுங்கானப் புரட்சி என அறியப்படும் விவசாயிகள் போராட்டம் 1946ஆம் ஆண்டு துவங்கி 1951வரை தொடர்ந்தது. இந்தியா விடுதலை பெற்றபோது தெலுங்கு பேசும் 22 மாவட்டங்களில் பரவியிருந்தனர். இவற்றில் 9 நிசாம் ஆட்சியின் கீழிருந்த ஐதராபாத் சமஸ்தானத்திலும், 12 மதராஸ் மாகாணத்திலும் ஒன்று பிரெஞ்ச் காலனி ஏனாமிலும் இருந்தன.  இவை எல்லாம் ஒன்று சேர்த்து "விசாலஆந்திரா" என்பதே அவர்களின் கனவாக இருந்தது.  இறுதியில் பொட்டி ஸ்ரீராமுலு என்ற தலைவரின் போராட்டத்தின் விளைவாக மதராஸ் மாகாணத்திலிருந்த 12 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கர்நூலைத் தலைநகராகக் கொண்ட ஆந்திர மாநிலம் 1953ஆம் ஆண்டு உருவானது. டிசம்பர் 1953இல் இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு மொழிவாரி மாநிலங்கள் ஆணயத்தை ஏற்படுத்தினார்.

உள்துறை அமைச்சர் கோவிந்த் வல்லப் பந்த் மேற்பார்வையில் நீதியரசர் ஃபசல் அலி தலைமையில் இயங்கிய இவ்வாணையம் தெலுங்கானா பகுதி மற்றும் புதிதாக உருவான ஆந்திரா பகுதி இரண்டிலும் பேசும் மொழி தெலுங்காக இருந்தபோதும் தெலுங்கானா மக்களின் விருப்பத்திற்கிணங்க இணைப்பதை தவிர்க்க வேண்டும் என தனது அறிக்கையில் 382ஆம் பத்தியில் குறிப்பிட்டிருந்தது.அவ்வறிக்கையின் 386ஆம் பத்தியில் தெலுங்கானா மக்களின் கவலைகளைக் கருத்தில்கொண்டு ஐதராபாத் மற்றும் ஆந்திராவை இரு மாநிலங்களாக வைத்துக்கொண்டு 1961 பொதுத்தேர்தலின் பின்னர் அமையும் ஐதராபாத் மாநில மக்களவையில் 2/3 பங்கினர் இணைய விரும்பினால் இவற்றை இணைக்கலாம் என தெரிவித்திருந்தது.

ஆனால் இந்தப் பரிந்துரையை ஏற்கமறுத்து இந்திய அரசு இரு பகுதிகளையும் இணைத்த ஒன்றுபட்ட ஆந்திரப் பிரதேச மாநிலத்தை நவம்பர்1, 1956இல் நிறுவியது.இருப்பினும் தெலுங்கானா மக்களின் கவலைகளை நீக்க இரு பகுதி மக்களுக்கும் சமமான அதிகார பகிர்வு,நிதி பகிர்வுகளை உறுதி செய்யும் பெருந்தகையாளர் உடன்பாடு ஒன்றை அளித்தது. இந்த உடன்படிக்கையின் படி தெலுங்கானா பகுதியில் உள்ள அடிலாபாத், நிஜாமாபாத், மேடக், கரீம்நகர், வாரங்கல், கம்மம், நலகொண்டா, மகபூப்நகர் மற்றும் ஹைதராபாத் ஆந்திராவுடன் இணையும், மேலும் ஹைதராபாத் தலைநகர் ஆக்கப்படும் என்றும் ஆந்திரா இனி ஆந்திர பிரதேசம் என்று அழைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது, மேலும் தெலுங்கானா பகுதிக்கான கவுன்சில் ஒன்று அமைக்கப்படும், அது தெலுங்கானா பகுதியில் வளர்ச்சிப்பணிகளை அல்லது திட்டங்களை மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டது. 

தனி தெலுங்கானாவுக்கான போராட்டம்

1956ஆம் ஆண்டின் பெருந்தகையாளர் உடன்பாட்டின்படி தெலுங்கானாவிற்கு உரிய பகிர்வுகள் மற்றும் உறுதிகள் செயல்படுத்துவதில் குறைபட்டிருந்த மக்கள் 1969ஆம் ஆண்டு இறுதியில் இந்த உடன்பாடு முடிவுக்கு வரவிருப்பதை எதிர்த்து இந்த உடன்பாட்டை நீடிக்க வேண்டும் என குரல் எழுப்பினர். தெலுங்கானா மற்றும் ஜெய் ஆந்திரா இந்த இரண்டு இயக்கங்களும் 1969 முதல் 1972 வரை ஆந்திராவை ஸ்தம்பிக்க வைத்த போரட்டங்கள், சனவரி 1969இல் ஓஸ்மானியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அது மெதுவே பரவி தெலுங்கானா மக்கள் இயக்கமாக உருப்பெற்றது. அரசு ஊழியர்கள் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களும் போராட்டத்திற்கு துணை நின்றனர்.இந்த இயக்கம் வன்முறையில் முடிந்து 360 மாணவர்களுக்கும் மேலானவர்கள் உயிரிழந்தனர்.

ஆட்சிபுரிந்த காங்கிரஸ் கட்சியிலிருந்து வேறுபாடு கொண்டு வெளியேறிய காங்கிரஸ் தலைவர்கள் எம்.சென்னாரெட்டி தலைமையில் தெலுங்கானா பிரஜா சமிதி என்ற கட்சியை ஆரம்பித்தனர். அடுத்து வந்த தேர்தல்களில் வெற்றி பெற்ற போதும், கட்சி தலைமைக்கு (இந்திரா காந்தி) தனி தெலுங்கானாவில் விருப்பம் இல்லை என உணர்ந்தார், இதை தொடர்ந்து அப்போதைய முதல்வர் பிரம்மானந்த ரெட்டி  ராஜினாமா செய்ய செப்டம்பர் 1971 இல் P.V. நரசிம்ம ராவ் முதல்வர் ஆனார், தெலுங்கானா பிரஜா சமிதி கட்சி உறுப்பினர்கள்  தமது கொள்கைகளைக் கைவிட்டு காங்கிரசில் மீண்டும் இணைந்தது இந்த இயக்கத்திற்கு மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது.

1972 இல் துவங்கிய ஜெய் ஆந்திரா போராட்டம் இன்னொரு மிகப்பெரிய போராட்டமாக பார்க்கப்படுகிறது,  முல்கிகள் (தெலுங்கானா பகுதியில் பிறந்து வளர்ந்தவர்கள்) மட்டுமே தெலுங்கானா பகுதியில் மற்றும் ஹைதராபாத் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து தொடங்கப்பட்ட போராட்டம். இதை எதிர்த்து மாநில அரசு உயர் நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தது, அந்த வழக்கை விசாரித்த 4 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முல்கி சட்டம் செல்லாது என்று தீர்ப்பளித்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் அப்பெயல் செய்த இந்த வழக்க்கின் தீர்ப்பு உயர் நீதி மன்றத்தின் தீர்ப்புக்கு எதிராய் வந்தது, 3 அக்டோபர் 1972 இல் வெளியான தீர்ப்பு ஆந்திரா அரசியலில் புயலை கிளப்பியது.

பிற பகுதியை சேர்ந்த ஆந்திர மக்கள் தலைநகரில் தங்களின் உரிமை இழந்து விட்டதாய் நினைத்தனர், இதை தொடர்ந்து வன்முறை நிகழ்வுகளும் தொடர்ந்தன, எனவே ஆந்திராவில் குடியரசு தலைவர் ஆட்சி அமுலுக்கு வந்தது.   அதன் பிறகு மெல்ல மெல்ல சகஜ நிலை திரும்பியதும் 1973இல் குடியரசு தலைவர் ஆட்சி விலக்கி கொள்ளப்பட்டது, அடுத்த தேர்தலில் காங்கிரஸ் அரிதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது, திரு. சென்னா ரெட்டி அவர்கள் ஆறாவது முதல்வராக பொறுப்பேற்று கொண்டார். பொறுப்பேற்ற பின் தனி தெலுங்கானா இனி ஒரு பிரச்சனையாய் இருக்காது என்று அறிவித்தார், அதன் விளைவு கட்சியில் அவருக்கு எதிரான உள்ளடி வேலைகள் நடக்க துவங்கின, விளைவு 1980 இல் ராஜினாமா செய்தார், அதன் பின் T. அஞ்சனையா முதல்வர் ஆனார் ஆனால் அவரும் 1 வருடம் 4 மாதங்களில் பதவியை இழந்தார், அதன் பின் பொறுப்புக்கு வந்த பவனம் வெங்கட்ராமன் மீண்டும் பதவியை இழக்க நேர்ந்தது, அதன் பின் ஸ்ரீ கே. விஜய பாஸ்கர ரெட்டி முதல்வர் ஆனார், அதாவது 4 ஆண்டுகளுக்குள் 4 முதல்வர்கள் மாறும் ஒரு மோசமான சூழ்நிலை நிலவியது ஆந்திராவில். 

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு தெலுங்கு தேசம் என்ற கட்சியை துவங்கி ஆட்சியை கைப்பற்றினார் திரு N. T. ராமா ராவ்.  அவருடைய அரசும் தந்திரமாக கலைக்கப்பட்டது, இருந்தாலும் மறு முறையும் வென்று முதல்வர் ஆனார் NTR. ஆனால் அடுத்த முறை அவர் கொண்டு வந்த சில சட்டங்கள் மக்கள் விரும்பாத காரணத்தினால் 1989இல் காங்கிரஸ்க்கு வாக்களித்து மீண்டும் சென்னா ரெட்டி முதல்வர் ஆனார்.  பிறகு உட்கட்சி பூசலால் சென்னா ரெட்டிக்கு பதில் ஜனார்த்தன ரெட்டி முதல்வர் ஆனார், பின் அவரும் ராஜினாமா செய்தார் பின் விஜய பாஸ்கர ரெட்டி  முதல்வர் ஆனார். இதை கண்ட மக்கள் வெறுப்படைந்து மீண்டும் அடுத்த தேர்தலில் 1994 தெலுங்கு தேசத்திற்கு வாக்களித்து என்‌டி‌ஆர் முதல்வர் ஆனார், அடுத்த தேர்தலிலும் 1999இல் தெலுங்கு தேசம் வெற்றி பெற்று  சந்திரா பாபு நாயுடு முதல்வரானார்.   பின் 2004-இல் YSR என்று அழைக்கப்படும் ஒய்‌. எஸ். ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்று முதல்வர் ஆனார்.     

இருபது ஆண்டுகள் நீறுபூத்த நெருப்பாக இருந்த இயக்கத்திற்கு 1990களில் பாரதிய சனதா கட்சி தான் வெற்றி பெற்றால் தனித் தெலுங்கானா பெற்றுத் தருவதாக வாக்குறுதி கொடுத்து புத்துயிர் ஊட்டியது.ஆனால் தங்கள் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் கட்சியின் எதிர்ப்பினால் அதனை நிறைவேற்றமுடியவில்லை.காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் தனி தெலுங்கானா மாநிலத்தை ஆதரித்து தெலுங்கானா காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர் அமைப்பை நிறுவினர். அதே நேரம் தனி மாநிலம் காணுவதையே ஒற்றைக் குறிக்கோளாகக் கொண்ட தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி(TRS)என்ற புதிய கட்சியை கல்வகுன்ட்ல சந்திரசேகர் ராவ் துவக்கினார்.

2004ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது காங்கிரசும் டி‌ஆர்‌எஸ் கட்சியும் கூட்டணி அமைத்து தனி தெலுங்கானா காணும் வகைகளை ஆராய்வதாக உறுதி கூறி ஆட்சியைக் கைப்பற்றின. மைய அரசின் பொது குறைந்த திட்டத்திலும் தெலுங்கானா மாநிலம் அமைப்பது இடம் பெற்றிருந்தது.அவ்வுறுதியின் அடிப்படையில் டி‌ஆர்‌எஸ்-ம்  கூட்டணி அரசில் பங்கேற்றது. இரண்டாண்டுகள் எதுவும் நிகழாத நிலையில் செப்டம்பர் 2006இல் டி‌ஆர்‌எஸ் கூட்டணியிலிருந்து விலகியது.

காங்கிரசு அரசிற்கு தெலுங்கானா மாநிலம் அமைக்க அழுத்தம் கூடியது. மார்ச் 2008இல் அனைத்து டி‌ஆர்‌எஸ் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக பதவி விலகி இடைத்தேர்தல்களுக்கு வழிவகுத்தனர். ஆனால் இந்த இடைத்தேர்தல்களில் டி‌ஆர்‌எஸ் தனது 16 சட்டமன்ற தொகுதிகளில் ஏழையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளில் இரண்டையும் மட்டுமே தக்க வைத்துக்கொள்ள முடிந்தது.

இதனிடையே தெலுங்குதேச கட்சியின் தேவேந்தர் கௌட் என்ற கட்சியின் சட்டமன்ற துணைத்தலைவர் கட்சியிலிருந்து பிரிந்து நவ தெலுங்கானா பிரஜா கட்சியை துவக்கினார். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 2008இல் தனது 26 ஆண்டு அரசியல் வாழ்வின் வரலாற்றில் ஓர் திருப்புமுனையாக தெலுங்குதேசம் கட்சியும் தெலுங்கானா மாநிலம் அமைவதை ஆதரித்தது.

2009 பொதுத் தேர்தல்களின் போது டி‌ஆர்‌எஸ் மற்ற எதிர்கட்சிகளுடன் மகாகூட்டணி அமைத்து காங்கிரசை தோற்கடிக்க உறுதி பூண்டனர். புதிதாக திரைப்பட நடிகர் சிரஞ்சீவி துவங்கிய பிரஜா ராஜ்யம் கட்சியும் தெலுங்கானா அமைய வாக்குறுதி கொடுத்தனர்.நவ தெலுங்கானா கட்சி சிரஞ்சீவியுடன் இணைந்தனர்.  இருப்பினும் தேர்தல் முடிவுகள் காங்கிரசிற்கு ஆதரவாகவே இருந்தன;மாநிலத்தில் ஆட்சியையும் தக்க வைத்துக்கொண்டது.முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி தனித் தெலுங்கானா அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

டிசம்பர் 2009: டி‌ஆர்‌எஸ் தலைவர் கே. சந்திரசேகர் ராவ் (KCR)தமது கோரிக்கைக்காக சாகும்வரை உண்ணாநோன்பு துவக்கினார்.அவரது கைது மற்றும் உடல்நிலை மோசமடைவதை அடுத்து கடையடைப்புகளும் வன்முறையும் மீண்டும் எழுந்துள்ளது. டிசம்பர் 2009, 10-ஆம் நாளன்று, இந்திய மைய அரசு, தெலுங்கானா மாநிலம் அமைவதற்கான ஏற்பாடுகளை செய்யும் என்று அறிவித்தது. இதற்கான அறிவிப்பை மைய உள் துறை அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்கள் அதே நாளில் வெளியிட்டார்.

இன்னும் குப்பையை கிளறுவோம் - அடுத்த வெள்ளிக்கிழமை



வெள்ளி, ஆகஸ்ட் 26, 2011

குப்பைத்தொட்டி - வரலாற்றுப்பக்கங்களில் இருந்து சிறுதுளி


நாம் மறந்த வரலாற்றை நினைவு படுத்தும் சிறு முயற்சி

பசி தீர்த்தல் இலக்கு
வழி ஒன்றே அது உழைப்பு
மூன்றுவேளை
முழுவயிறு லட்சியம்
ஒருவேளை
முழுவயிறு நிச்சயம்

இந்தியா
மூன்று பக்கம் கடல்
ஒரு பக்கம் மலை
எங்க பார்த்தாலும் தலை!

நான் அஜித் சொல்லலைங்கோ ஜனத்தொகையை பத்தி சொல்லுறேன் அதுவும் அடிப்படை வசதிகள் சரியா கிடைக்காம இருக்குற மக்களோட வாழ்க்கை இப்பிடி தான் இருக்கு. இத்தனை மனித வளங்கள் இருந்தும் ஏன் இந்தியா இன்னும் இப்பிடியே இருக்கு?, மனித வளத்தை இன்னும் சரியான வழியில் நாம் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்பதை இது காட்டுகிறது.

இதை சரி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பு, ஆனா இது வரை போட்ட திட்டங்கள் எல்லாம் ஒரு குறிப்பிட்ட சாரருக்கு மட்டுமே பயன்பட்டு இருக்கு அதற்கு ஆதாயமா அவங்களும் நிறைய வாங்கி அனுபவிச்சாச்சு.. நீங்க எந்த பேரு வேணா வச்சுக்கிடலாம், லஞ்சம் இல்லை அன்பளிப்பு இல்ல எதுவோ உங்களுக்கு புடிச்சது     

சமீபத்தில ஒரு பாட்டு வாகை சூடவா படத்தில் இருந்து ஒரு வரி சொல்லுறேன்

"அய்யனாரு சாமி
அழுது தீர்த்து பார்த்தோம்
சொரணை கெட்ட சாமி
சோத்த தானே கேட்டோம்"

இப்பிடி கஷ்ட ஜீவனம் நடத்துற மக்கள் இங்கே அதிகம்.. 

இன்னைக்கு தான் இது எல்லாம் தெரிஞ்ச மாதிரி ஒரு பெருசு உண்ணாவிரதம் உக்காந்துகிட்டு இருக்காரு, இன்னும் நெறைய பெருசுங்க சுத்தி கத்தி திட்டிக்கிட்டு இருக்காங்க,  இன்னொரு பெருசு எல்லாத்தையும் மௌனமா வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்கு. நாட்டுல சில பெருசுங்க தொல்லை ஜாஸ்தியாயிட்டே வருது.  இது கூட பிசிபிசித்து போய்விடும்ன்னு தான் எனக்கு தோணுது.  இது எல்லாம் புதுசு இல்லை, என்னைக்கு வெள்ளைக்காரன் நம்ம கிட்ட இந்த நாட்டை விட்டுட்டு போனானோ அப்ப இருந்தே இருக்கு இதுக்கு முன்னாடி நடந்த போராட்டங்கள் எதுக்காக நடந்துச்சு அதன் முடிவு என்னாச்சு அதைப்பத்தி தான் இன்றைய குப்பைதொட்டியில தேடப்போறோம்.. 

காலிஸ்தான் கோரிக்கை

நோக்கம் :    இந்தியா மற்றும் பாகிஸ்தான் பகுதிகளில் இருக்கும் பஞ்சாப் பகுதியை பிரித்து ஒரு தனி சீக்கிய அரசை உருவாக்க சீக்கிய இன மக்களால் தொடங்கப்பட்ட முயற்சி.  18 ஆம் நூற்றாண்டுக்கு பின் சீக்கிய பேரரசு மீண்டும் உருவாக்க வேண்டும்  நோக்கத்தில் முன்னெடுக்கப்பட்டது.

இந்த இயக்கம் 1970 மற்றும் 1980 களில் அதன் உச்சநிலையை அடைந்தது. இப்போதெல்லாம், அது பரவலாக ஒரு சிறிய அளவிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. வெளிநாட்டு சீக்கிய ஆதரவாளர்கள் நன்கொடைகள் மூலம் ஒரு சுதந்திர சீக்கிய நாடு பெற இந்த போராளி குழுக்கள் முயற்சிகள் செய்து வருகின்றன, இன்னும் இளைஞர்களை ஈர்க்க மற்ற நாடுகளில் இருந்து நிதி உதவிகளையும் பெற்று வருகின்றன. 

1971 இல், காலிஸ்தான் ஆதரவாளராக ஜக்ஜித் சிங் செளகான், அமெரிக்கா பயணித்தது. அவர் காலிஸ்தான் உருவாவதை பிரகடனம் செய்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஒரு விளம்பரம் அளித்தார் அதன் மூலம் மில்லியன் டாலர்களை சேகரிக்க முடிந்தது.

ஏப்ரல் 12, 1980 இல்,  அனந்தபூர் சாஹிப் அவர்கள் இந்திரா காந்தியோடு  ஒரு ஆலோசனை கூட்டம் நடத்தி பின் "காலிஸ்தான் தேசிய கவுன்சில்"  உருவாக்கம் பற்றி அறிவித்தார். அவர் தன்னை அதன் ஜனாதிபதி என்றும் மற்றும் பல்பிர் சிங் சாந்து பொது செயலாளர் என்று அறிவித்தார். மே 1980 இல், ஜக்ஜித் சிங் செளகான் லண்டன் பயணித்தது மற்றும் காலிஸ்தான் உருவாவதை அறிவித்தார். இதே போன்ற ஒரு அறிவிப்பு பல்பிர் சிங் வெளியிட்டார் மேலும் அதை தொடர்ந்து காலிஸ்தான் நாணயம் வெளியிடப்பட்டது.   அமிர்தசரஸ் மற்றும் பிற இடங்களில் அதிகாரிகள் செயலற்று போனனர்.   இதை ஒரு காங்கிரஸ் கட்சியின்  அரசியல் ஸ்டண்ட் என்று லோங்வால் தலைமையிலான அகாலி தளம் எதிர்த்து குரல் எழுப்பியது. 

1980 இல், சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் இந்திய இராணுவத்திற்கு சாதகமாக நடக்க ஆரம்பித்ததால் இராணுவ நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டது.  அதில் ஒன்று புளூஸ்டார் நடவடிக்கை (Operation Blue Star)

புளூஸ்டார் நடவடிக்கை என்பது சூன் 3-6, 1984-ல் நடைபெற்ற இந்திய ராணுவத்தின் நடவடிக்கை ஆகும். அம்ரித்சர் நகரின் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்த சீக்கியப் பிரிவினைவாதிகளை பிடிக்கும் பொருட்டு, அப்போதைய இந்திய பிரதமரான இந்திரா காந்தியின்  ஆணைப்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஜர்னைல் சிங் பிந்தரன்வாலே-வால் தலைமை தாங்கப்பட்ட பிரிவினைவாதிகள் பெருமளவில் ஆயுதங்களை சீக்கிய கோவிலில் சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இந்த நடவடிக்கை இந்திய இராணுவத்தினால் டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களோடு நடத்தப்பட்டது. ராணுவ நடவடிக்கை வெற்றி பெற்றாலும், இத்தகைய நடவடிக்கை பெருத்த விவாதத்துக்குள்ளானது, குற்றம் சாட்டப்பட்டது.  அரசு அளித்த நியாயப்படுத்தும் விவரங்கள் பெருமளவில் கேள்விக்குள்ளாக்கப்பட்டன. இந்தியா டுடே பத்திரிகையால் "புளூஸ்டார் நடவடிக்கை" முதல் 10 அவமானகரமான அரசியல் நடவடிக்கைகளில் ஒன்றாக கூறப்பட்டது.

அரசுத் தரப்பில், சாவு எண்ணிக்கை ராணுவத்தில் 83 ஆகவும் பொதுமக்கள் தரப்பில் 492 ஆகவும் கூறப்படினும் சில தன்னிச்சையான மதிப்பீடுகள் சாவு எண்ணிக்கை இன்னும் அதிகம் இருக்குமென கூறுகின்றன.

இந்த ராணுவ நடவடிக்கை உலகம் முழுவதிலுமுள்ள சீக்கியர்களிடையே பெரும் கிளர்ச்சியை உண்டு பண்ணியது. மேலும் இந்தியாவிலும் பதட்ட நிலையால் சீக்கியர் மேல் பல இடங்களில் தாக்குதலும் நடைபெற்றது. ராணுவத்தில் இருந்த சீக்கியர் ஆட்சிக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். இந்திய அரசு குடியாண்மை பணிகளிலும் ராணுவத்திலும் இருந்த பல சீக்கியர் பணிகளைத் துறந்தனர். மேலும் சில சீக்கியர்கள் இந்திய அரசால் அளிக்கப்பட விருதுகளையும் பாராட்டுப் பத்திரங்களையும் அரசிடம் திரும்பக் கொடுத்தனர்.

ராணுவ நடவடிக்கை நடைபெற்ற நான்கு மாதங்களுக்கு பிறகு, அதாவது 31 அக்டோபர் 1984 அன்று, இந்திரா காந்தி அவர்கள் இரண்டு சீக்கிய மெயக்காப்பாலர்களால் படுகொலை செய்யப்பட்டார். இது ஒரு பழிவாங்கிய நிகழ்வாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. தான் கொல்லப்படுவதற்கு முதல் நாளிரவு ஒரு அரசியல் கூட்டத்தில், "இந்தியாவுக்காக என் உயிர் போனால் நான் வருத்தப்படமாட்டேன். என் ஒவ்வொரு துளி ரத்தமும் இந்தியாவை பலமிக்க நாடாக்கும்", என்று

இந்திரா காந்தி பேசினார். இந்திரா காந்தியின் படுகொலையைத் தொடர்ந்து 5000-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் சீக்கிய-எதிர்ப்பு கலகங்களில் கொல்லப்பட்டனர். சீக்கிய இனத்தவரிடையே இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.சீக்கியரால் 'பெரும் படுகொலை' எனக் கருதப்படும், 1761-ல் ஆப்கானிய அகமது ஷா அப்தாலி-யின் சீக்கிய இனப் படுகொலையோடு இந்நிகழ்வு ஒப்பு நோக்கப்படுகிறது.

இந்திய அரசியலமைப்பின் கீழ் தனிநாடு கோரிக்கை தடை செய்யப்பட்டு உள்ளது, மேலும் காலிஸ்தானுக்கு ஆதரவாக பல்வேறு கிளர்ச்சி குழுக்கள் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக போராடி உள்ளது. இந்திய பாதுகாப்பு படைகள் 1990 களின் ஆரம்பத்தில் பஞ்சாப் முக்கிய பிரிவினைவாத கிளர்ச்சியை அடக்கிவிட்டது, ஆனாலும் பல இந்திய சீக்கிய அரசியல் கட்சிகள் இன்னும் இந்திய உள்ளே அமைதியான முறையில் சுதந்திர காலிஸ்தானுக்கு போராடிக்கொண்டு இருக்கிறது.  இன்னும் தள் கல்சா போன்ற இயக்கங்கள்   சர்வதேச அளவில் காலிஸ்தானுக்கு போராடி வருகிறது இன்னும் இந்த இயக்கத்தின் செயல்பாடுகள் இந்தியாவிற்கு வெளியே இன்னும் தீவிரமாக உள்ளன.

பஞ்சாப் தற்போதைய நிலைமையில் அமைதியான உள்ளது.   தேசப்பற்று, இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் இடையே புதுப்பிக்கப்பட்ட மரியாதை உயர் நிலை எல்லாம் குறிப்பிடத்தகுந்த மாற்றங்கள். சீக்கியர்கள்  இன்னும் தங்களின் தனித்துவத்தை சமூகத்தில் பராமரித்து வருகிறார்கள். இந்தியாவில் தற்போது ஒரு சீக்கியர் (மன்மோகன் சிங்) பிரதமராக வரமுடிந்தது மனமாற்றங்கள் மூலமே.

 இது போலே உலகில் தமிழர் அதிகம் உள்ள பிற நாடுகளில் தமிழர்கள் தலைமை ஏற்கும் நாள் தொலைவில் இல்லை.  நான் இறப்பதற்குள் உலகமே ஒரு தமிழன் தலைமையில் நடைபோடுவதை பார்த்துவிட்டு சாக வேண்டும்

இன்னும் குப்பையை கிளறுவோம் - அடுத்த வெள்ளிக்கிழமை

வெள்ளி, ஆகஸ்ட் 19, 2011

குப்பைத்தொட்டி - (19-08-2011)


முஸ்கி : பதிவு கொஞ்சம் பெருசு, டைம் இல்லாதவங்க ஃப்ரீயா இருக்குறப்ப வந்து படிங்க  

"படிக்காத முட்டாளுன்னு பல பேரு சொன்னனுங்க
அதனால குத்தம் என்ன அண்ணாச்சி
படிச்சாலும் வேலை வெட்டி கெடைக்காத தேசத்தில
அறிவாளி ஆனா மட்டும் என்னாச்சு"

இது ரஜினி நடிச்ச படிக்காதவன் படத்துல வந்த பாட்டு, அப்ப இந்தியால இருந்த  நிலைமைய பட்டவர்த்தனமா தெரிஞ்சுக்கலாம். இன்னும் கமல் நடிச்ச வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா போன்ற படங்கள் இன்னும் ஒரு படி மேலே போய் வேலை இல்லா திண்டாட்டம் பத்தி சொல்லி இருப்பாங்க.

என் சொல்றேன் தெரியுமா, இன்னைக்கு நாம பாக்குற இந்தியா வேற, அன்னைக்கு இருந்த இந்தியா வேற. நமக்கு முந்தைய தலைமுறை அதாவது நம்ம அப்பாக்கள் ரூ. 3000   சம்பாதிச்சா பெரிய விஷயம்.  அதிகபட்சம் 25  ஆண்டுகள் வேலை செஞ்ச ஒருத்தர் கடைசி மாச சம்பளமே ரூ 15,000 தாண்டாது அதுவும் ஜி‌எம் லெவல்-ல.   இது எல்லாம் ரொம்ப நாளைக்கு முன்னாடி இல்லை 1990 வரை இது தான் நிலைமை. 

இன்னைக்கு என்ன நெலைமை படிச்சு முடிச்சு டிகிரி வாங்குறோமோ இல்லையோ வேலை வாங்கிட முடியுது..   சம்பளம் குறைந்தது ரூ. 10000 கெடைக்குது. எப்பயுமே ரூ 2000 வரை பர்ஸ்-ல வச்சுக்கிட்டு சுத்த முடியுது, வாரம் ஒரு முறை பெரிய ஹோட்டல் போயி ரூ 1000 மொய் வச்சுட்டு வர முடியுது.  இப்பிடி நாம சொகுசா வாழ்ந்து கொண்டு இருக்கோமே எப்பிடி? 

கொஞ்சம் யோசிச்சு பாருங்க உங்க அப்பா நீங்க கேட்ட எத்தனை விஷயத்தை மறுக்கமா செஞ்சு குடுத்து இருந்தாரு உங்க சின்ன வயசுல. இன்னைக்கு எத்தனை விஷயங்களை நீங்க உங்க குழந்தை கேட்டப்ப மறுத்து இருக்கீங்க. பிள்ளை கேக்குறதுக்கு முன்னாடியே செஞ்சு குடுக்குற பெத்தவங்க எத்தனை பேரு இங்கே?

எங்கே லஞ்சம் ஊழல் ஆரம்பிக்குது தெரியுமா?  நான் என்ன குழந்தைன்னு தெரிஞ்சுக்க நர்ஸுக்கு எங்கப்பா குடுத்தாறே ரூ 100 அங்கே இருந்து தான்.  அதாவது நாம பொறக்கும் போதே ஆரம்பிச்சுடுதுன்னு சொல்ல வர்றேன். அப்பறம் பெர்த் சர்டிபிகேட் வாங்க, கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்க, அப்பறம் ஸ்கூல்-ல சீட் வாங்க, காலேஜ்-ல  சீட் வாங்க அப்பிடின்னு நாம வளர வளர அதுவும் வளர்ந்து கிட்டே வருதே.   எல்லா வேலைக்கும் ஒரு அமெளண்ட் வெட்ட வேண்டி இருக்கே!!?

ஏதோ கொஞ்ச பேரு மட்டும் லஞ்சம் வாங்குற மாதிரியும், ஊழல் பண்ற மாதிரியும் சிலர் போராட்டம் பண்றது தான் இன்னைக்கு ட்ரெண்ட். எல்லாம் ஒரு விளம்பரம் தான். நேத்து ஒரு மெயில் வந்துச்சு அதை அப்பிடியே காப்பி பண்ணி இருக்கேன்

Please FORWARD to save ourselves

Anna Hazare says bring back the Black Money.

Do u know what will happen if 1,456 Lac Crores comes back.

1. India Financially No.1
2. Each district will get 60000 crores & each village will get 100 Crores
3. No need to pay taxes for next 20 yrs.
4. Petrol 25 Rs, Diesel 15 Rs, Milk 8 Rs.
5. No need to pay electricity bill.
6. Indian borders will become more stronger than the China Wall.
7. 1500 Oxford like Universities can be opened.
8. 28,000 kms Rubber road (like in Paris) can be made.
9. 2,000 hospitals (with all facilities) all medicine Free.
10. 95 crore people will have their own house.

Support Anna Hazare by forwarding this message to atleast 10 Indians.

10 things to know about Anna Hazare 'n Jan Lok Pal Bill.. !

1. Who is Anna Hazare?
An ex-army man. Fought 1965 Indo-Pak War

2. What's so special about him?
He built a village Ralegaon Siddhi in Ahamad Nagar district, Maharashtra

3. So what?
This village is a self-sustained model village. Energy is produced in the village itself from solar power, biofuel and wind mills. In 1975, it used to be a poverty clad village. Now it is one of the richest village in India. It has become a model for self-sustained, eco-friendly & harmonic village.

4. Ok,...?
This guy, Anna Hazare was awarded Padma Bhushan and is a known figure for his social activities.

5. Really, what is he fighting for?
He is supporting a cause, the amendment of a law to curb corruption in India.

6. How that can be possible?
He is advocating for a Bil, The Jan Lokpal Bill (The Citizen Ombudsman Bill), that will form an autonomous authority who will make politicians (ministers), beurocrats (IAS/IPS) accountable for their deeds.

7. It's an entirely new thing right..?
In 1972, the bill was proposed by then Law minister Mr. Shanti Bhushan. Since then it has been neglected by the politicians and some are trying to change the bill to suit thier theft (corruption).

8. Oh.. He is going on a hunger strike for that whole thing of passing a Bill ! How can that be possible in such a short span of time?
The first thing he is asking for is: the government should come forward and announce that the bill is going to be passed. Next, they make a joint committee to DRAFT the JAN LOKPAL BILL. 50% goverment participation and 50% public participation. Because you cant trust the government entirely for making such a bill which does not suit them.

9. Fine, What will happen when this bill is passed?
A LokPal will be appointed at the centre. He will have an autonomous charge, say like the Election Commission of India. In each and every state, Lokayukta will be appointed. The job is to bring all alleged party to trial in case of corruptions within 1 year. Within 2 years, the guilty will be punished. Not like, Bofors scam or Bhopal Gas Tragedy case, that has been going for last 25 years without any result.

10. Is he alone? Whoelse is there in the fight with Anna Hazare?
Baba Ramdev, Ex. IPS Kiran Bedi, Social Activist Swami Agnivesh, RTI activist Arvind Kejriwal and many more. Prominent personalities like Aamir Khan is supporting his cause.

என்ன படிச்சாச்சா, மொதோ இவ்வளவு கருப்பு பணம் இருக்கா தெரியல, அப்பிடியே இருந்தாலும் எந்த நாட்டுல இருக்கோ அந்த நாடு அவ்வளத்தையும் தர சம்மதிக்குமா இல்லையோ தெரியல ஏன்னா அவங்க நாட்டு பொருளாதாரம் குடை சாஞ்சுடுமே. அப்பிடியே தர சம்மதிச்சாலும் அங்கே வரி காட்டாம பணத்தை இந்தியாக்கு எடுத்துட்டு வர முடியாது. அவனுங்க 40% வரி போட்டா என்ன ஆகும்? முக்கா காசு அவனுங்களுக்கு அழ வேண்டி இருக்கும். 

அவ்வளவு ஏங்க இவ்வளவு பணத்தை வச்சு என்ன பண்றதுன்னு யாருக்கும் தெரியாது. ஆனா ஒரு சந்தோஷம் இவ்வளவு காசு வருதேன்னு. சும்மா வந்தா யாரு தான் சந்தோஷப்பட மாட்டாங்க.  வழக்கம் போல ஏதாவது கோவில்ல கொண்டு போயி பொக்கிஷ அறையில பத்திரமா வச்சுடுவாங்களோ!!? சரி விசயத்துக்கு வர்றேன்   

இன்னைக்கு இந்தியால சுயஅதிகாரம் உள்ள அமைப்புகள் எத்தனை தெரியுமா?  இத்தனை இருக்கும் போது புதுசா எதுக்கு இன்னொன்னு எனக்கு தெரியல?  இது வரைக்கும் எத்தனையோ ஊழல் வெளியே வந்து இருக்கு. எத்தனை பேர் கம்பி எண்ணிக்கிட்டு இருக்காங்க உங்களுக்கே தெரியும்.  அப்ப என்ன அர்த்தம் இங்க இருக்கிற சட்டம் எல்லாம் சரியா தான் இருக்கு ஆனா செயல்படுத்துற ஆளுங்க தான் சரியில்லை அப்பிடித்தானே.

ஒரு உதாரணம் சொல்றேன் தேர்தல் ஆணையம் இந்தியா குடியரசு ஆனதில இருந்தே இருக்கு.  ஆனா டி.என். சேசன் என்கிறவர் வந்த பின்னாடி தான் அதன் மேல மரியாதையே வந்துச்சு ஏன்னா அவர் செய்த மாற்றங்கள், அதாவது அவங்கவங்க வேலையை சரியா செஞ்சா இந்தியால பாதி பிரச்சனைகள் குறைஞ்சுடும். கேக்குறதுக்கு ஆள் இல்லாம நீ ரொம்ப கெட்டுப்போயிட்ட மாப்ளே அப்பிடினு கவுண்டமணி பேசுவாறு அது மாதிரி இங்கயும் யாரும் கேக்கமாட்டாங்கன்கிற தைரியத்தில நிறையா பேரு அலும்பிக்கிட்டு இருக்காங்க.. 

இன்னைக்கும் கூட ஒரு சாதாரண வருமான வரி தணிக்கை அலுவலர் பிரதமரின் வருமானவரி சரிபார்த்து தவறு இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கும் அதிகாரம் உண்டு.  யாராவது செய்யுறாங்களா? எத்தனை பேரோட வருமான வரி படிவம் சரிபார்க்கப்படுகிறதோ தெரியாது, வந்த வரை வரவுன்னு வாங்கி போட்டுக்கிற மாதிரி தெரியுது, யாராவது போட்டுக்குடுத்தா மட்டுமே இன்ஸ்பெக்ஷன்,சோதனை எல்லாம்.. 

இந்தியாவோட இன்னொரு பக்கமும் இருக்கு ஒரு நாளைக்கு ரூ 20 சம்பாதிக்க முடியாத ஆளுங்களும் இங்கே இருக்க தானே செய்யுறாங்க, எங்கேன்னு கேக்குறீங்களா கிராமத்தில விவசாய கூலிகளா இல்ல செங்க சூலையில் கொத்தடிமைகளா இல்ல மிச்சர் கம்பெனியில முறுக்கு பிழியிறாங்க.  இப்பிடி விதம் விதமா இருக்காங்க.

ஏன் இந்த ஏற்ற தாழ்வு? இன்னும் மலம் அள்ளும் மனிதர்கள் இங்கு இருக்கத்தானே செய்கிறார்கள் 

சட்டம் இயற்றும் உரிமை எங்களுக்கு மட்டுமேன்னு திமிரா பேசிக்கிட்டு திரியிறாங்களே ஏன்?

எல்லாத்துக்கும் பதில் ஒண்ணு தான் அது நாம, ஆமா நாம மட்டும் தான்... தப்பான தலைமைகளை தேர்ந்து எடுப்பது அவர்களை தொடர்ந்து ஊக்குவிப்பதும் நாம தானே. 

ஊழலை எதிர்த்து நாடு முழுவதும் பரவுகிறது : ஹசாரேவுடன் உண்ணாவிரதம் இருக்க மக்கள் தயார்

காந்தியவாதி அன்னா ஹசாரே, இன்று ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதத்தை துவக்குகிறார். 15 நாட்கள் உண்ணாவிரதம் இருப்பதற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

வலுவான லோக்பால் மசோதா அமைய தனக்கு உறுதுணையாக இருக்கும் அனைத்து மக்களுக்கும் நன்றி என சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து, திகார் சிறையில் உள்ள அவர் கூறியுள்ளதாவது, இன்று, தான் பொதுமக்களை சந்திக்க உள்ளேன். எனது உடல்நிலையில் எவ்வித குறைபாடுமில்லை. நான் நலமாகவே உள்ளேன். என் உடல்நிலை குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். வலுவான லோக்பால் மசோதா அமையும் வரை எனது போராட்டம் தொடரும். எனக்கு ஆதரவாக நிற்கும் மக்களை பார்த்து நான் உளமகிழந்துள்ளேன் என்று அவர் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால் : அரசின் அணுகுமுறையைப்பொறுத்து, அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதம் 15 நாட்களுக்கு மேலும் செல்லலாம் என அவரது ஆதரவாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார். இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய அவர், மிக நீண்ட போராட்டம் நடத்த தாங்கள் முதலில் முடிவு செய்திருந்ததாகவும், ஆனால் சட்ட பிரச்னைகள் காரணமாக 15 நாட்கள் போராட்டம் நடத்த ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். அதே சமயம் எங்கள் போராட்டம் குறித்த அரசின் அணுகுமுறையைப் பொறுத்து இந்த போராட்டம் மேலும் சில நாட்கள் நீட்டிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

கிரண் பேடி: "உடல் நிலை ஒத்துழைக்கும் வரை ஹசாரே உண்ணாவிரதத்தை தொடர்வார்' என, அவரது குழுவில் உள்ள கிரண் பேடி தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ஹசாரேயின் உண்ணாவிரதம் காலவரையற்றது. சாகும்வரை உண்ணாவிரதம் போராட்டம் அல்ல. அவர் உடல்நிலை ஒத்துழைக்கும்வரை நீண்ட காலம் உண்ணாவிரதத்தை தொடர்வார். அவரது உடல் நிலை மோசமடைய அனுமதிக்கக்கூடாது' என்றார். "ஹசாரேவுக்கு மருத்துவ வசதி தேவைப்பட்டால், அதை கொடுக்கவேண்டும்' என, டாக்டர் நரேஷ் தெரஹான் குழுவினர் தெரிவித்தனர்.

மேல சொன்னது எல்லாம் இன்னைக்கு பேப்பர்-ல வந்த செய்திகள் எல்லோரும் படிச்சு இருப்பீங்க. எனக்கு என்ன தோணுதுன்னா இவர் உண்ணாவிரதத்தை விட்டுட்டு மௌனவிரதம் இருந்தா அவருக்கும் நல்லது அப்புறம் நாட்டுல தேவை இல்லாத குழப்பங்கள் குறையும்.   ஒரு குடிமகனா ஒரு நாட்டு முன்னேறத்துக்கு என்ன செய்யணுமோ அதை செய்யாம ஒரு நாட்டை முடக்க செய்கிறேன் பார்ன்னு வீரம் பேசிக்கிட்டு திரியிறது சரியா? 

டிஸ்கி :  இது என்னோட கருத்து மட்டுமே.  நல்லா யோசிங்க இவர் சரியான தலைமைன்னு உங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சா மட்டும் ஆதரவு குடுங்க..  இல்லாட்டி வேலை அற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தையை வேடிக்கையாக கூட நம்பி விடாதேன்னு எம்‌ஜி‌ஆர் சொன்னரே அது மாதிரி வருத்தப்பட வேண்டி இருக்கும்.