இன்னைக்கு இருக்க அவசர உலகத்தில நிறைய பேரு காலை உணவை சரியா எடுத்துக்கிறது இல்லை, சிலர் எடுத்துக்கிறதே இல்லை. அதனால என்ன ஆகும்ன்னு கேக்குறீங்களா? பக்கவாதம், மாரடைப்பு மற்றும் திடீர் மரணம். இது மிரட்டுறதுக்காக சொல்லலைங்க. சமீபத்திய ஆராய்ச்சிகள் அப்படித்தான் சொல்லுது. இது மாதிரி அசம்பாவிதங்களை தடுக்க இந்த காலை உணவு உதவி செய்யுதுன்னு ஆராய்ச்சி முடிவுகள் சொல்லுது. அதோட காலை உணவு தான் அந்த நாளோட முக்கியமான உணவுன்னும் சொல்றாங்க.
அவங்க ஆராய்ச்சியோட முடிவு என்ன சொல்லுதுன்னா மாரடைப்பு, பக்கவாதம், திடீர் மரணம் எல்லாம் காலை 8 மணியிலிருந்து 10 மணிக்குள்ள அதிகம் ஏற்படுறதாம். அதுக்கு காரணம் பிளட்லெட் என்கிற ரத்ததில இருக்க ஒருவகை உயிரணுக்கள் ரொம்ப ஆக்டிவா இருக்குமாம். இதோட வேலை ரத்தத்தை கெட்டிப்படுத்துறது. அதாவது உடம்புல எங்கையாவது காயம் பட்டு ரத்தம வந்து கொஞ்ச நேரத்தில கெட்டி ஆயிடும் அதுக்கு காரணம் இந்த பிளேட்லட்.
இது காலையில ஆக்டிவா இருக்குறதால, தமனிக்குள்ள கொழுப்புகள் மூலமா உள்ள நுழைஞ்சு அங்கே இருக்குற ரத்தத்தை உறைய வைச்சுடுதாம், அதனால தான் மாரடைப்பு, பக்கவாதம் திடீர்ன்னு ஏற்படுத்துன்னு சொல்றாங்க. சரி அதுக்கும் காலையில சாப்பிடுறதுக்கும் என்ன சம்மந்தம்ன்னா நீங்க சாப்பிடுற உணவு இந்த பிளேட்லட் ஆக்டிவேஷன குறைக்குதாமா, அதனால மாரடைப்பு பக்கவாதம் வர்றது தவிர்க்கப்படுத்துன்னும் சொல்றாங்க.
உடம்பு வெயிட் போட்டுருக்கு உடம்பை குறைக்கணும் இல்லை ஆஃபிஸ் தூரமா இருக்கு சீக்கிரம் போகணும் இப்படி நிறைய காரணம் சொன்னாலும் காலையில உணவை தவிர்க்க கூடாதுங்க, அட்லீஸ்ட் 2 வாழைப்பழம் சாப்பிட்டு போனா 2 மணி நேரம் தேவையான சக்தி உடம்புக்கு கிடைக்கும்.
அதனால நண்பர்களே காலை உணவை தவிர்க்காதீங்க.
இன்னைக்கு காலையில ஒரு கட்டுரை படிச்சேன் நம்ம கழுகு இணைய தளத்தில, அதுல மைதா மாவு எப்பிடி தயாரிக்கிறாங்கன்னு விரிவா எழுதி இருக்காங்க. மைதா மாவு நீரிழிவு நோய்க்கு எப்பிடி வழி செய்யுதுன்னும் சொல்லி இருக்காங்க. அதை படிச்சதுக்கு அப்பறம் பப்ஸ் திங்க கூட பயமா இருக்கு. நீங்களும் படிச்சு பாருங்களேன். http://www.kazhuku.com/2011/11/blog-post_18.html
இன்றைய சிந்தனை
1. சூழ்நிலைக்கு ஏற்ப எந்த ஒரு முடிவையும் எடுக்க துணிந்தவரே சிறந்த தலைவர்.
2. தொழிலாளியிடம் மட்டும் அல்ல முதலாளியிடமும் இருக்க வேண்டியது விசுவாசம்
3. மறுதலிப்பது நேர்மையற்ற செயல் அல்ல, ஆனால் கீழ்படியாமை நேர்மையற்றது