திங்கள், நவம்பர் 28, 2011

சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீடு - ஒரு பார்வை

மத்திய அரசு, இரு தினங்களுக்கு முன் சில்லறை வணிகத்தில் நேரடி அந்நிய முதலீட்டிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இது சரி என்று சிலரும் தவறு என்று என்று சிலரும் பேசிக்கொள்வது என்னை குழப்பியதின் விளைவே இந்த தேடல்.

முதலில் அரசு தரப்பில் என்ன காரணங்கள் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம் 

பொருட்களை எடுத்துச்செல்வதில் இருக்கும் முதலீட்டு பற்றாக்குறை முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது உலகிலேயே பழங்கள் மற்றும் காய்கறியின் உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் நாம் இருந்தாலும் அதை முறையாக பராமரிக்க இயலாத சூழ்நிலையில் இருக்கிறோம். நாம் உற்பத்தி செய்வது ஆண்டுதோறும் 200 மில்லியன் மெட்ரிக் டன், ஆனால் நம்மிடம் இருப்பது 5836 கோல்ட் ஸ்டோரேஜ் எனப்படும் குளிர் பதன நிலையங்கள் இவற்றின் மூலம் 23.6 மில்லியன் மெட்ரிக் டன் பொருட்களை மட்டுமே கையாள முடியும், அவற்றிலும் 80% உருளைகிழங்கு பதப்படுத்த மட்டுமே பயன்படுகிறது (உபயம் சிப்ஸ் கம்பெனிகள் போல)  

நம்மால் பதப்படுத்த முடியாத காரணத்தினால் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 1 டிரில்லியன் ரூபாய்கள், இது மொத்த  உற்பத்தியில் 57 சதவீதம். இன்னும் சில புள்ளி விவரங்கள் நாம் உற்பத்தி செய்யும் பழங்களில் 35-40% வீணாவதாகவும்!!(?), தானிய வகைகளில் 10% வீணாவதாகவும் சொல்கின்றன.  குளிர் பதன துறையில் மட்டும் முதலீட்டை அனுமதிப்பது பயன் அளிக்காது, ரீடைல் அவுட்லெட்களும் அதிகரிப்பதன் மூலம் வீணாகும் பொருள்களை எளிதில் சந்தைப்படுத்த முடியும் அப்பிடின்னு சொல்றாங்க.

அது மட்டும் இல்லாம இடைதரகர்களின் தலையீடும் குறையும் பலன் விலை நேரே விவசாயிகளுக்கு கிடைக்கும், அது மட்டும் இல்லாம அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி தரும். சுமாரா 5 வருசத்தில 1 கோடி பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும. 

கபினேட்ல என்ன முடிவு வச்சு இருக்காங்கன்னா
1.    51% நேரடி முதலீடு செய்ய அனுமதிப்பது, குறைத்த பட்சம் 100 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை ஈர்ப்பது
2.    50% உள்கட்டமைப்புக்கு ஒதுக்குவது இதன் மூலம் திறன் வாய்ந்த பதன கிடங்குகளை அமைக்க முடியும்.
3.  30% பொருட்கள் குடிசை/சிறு தொழில் மூலம் உற்பத்தி ஆகும் பொருட்களை கொள்முதல் செய்து சந்தைபடுத்துதல். 
4.    விவசாய பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பது.
5.  10 லட்சத்திற்கு அதிகம் மக்கள் வசிக்கும் ஊர்களில் மட்டும் கடைகளை திறப்பது
6.    விவசாய பொருட்களை கொள்முதல் செய்யும் முதல் உரிமை அரசிடம் தான் இருக்கும்
7.    எந்த பொருட்கள் கொள்முதல் செய்தாலும் அதே பெயரில் தான் உலகம் முழுவதும் விற்கப்பட வேண்டும்

மேலும் விவரங்களுக்கு


சரி இப்ப எதிர்தரப்புல பரவலா சொல்லப்படுற விஷயங்களை பார்ப்போம் 

1. தினமணி தலையங்கம்

எத்தனை எத்தனையோ பிரச்னைகள் இருக்க, இப்போது அவசர அவசரமாக அமைச்சரவைகூடி சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்திருப்பதற்கு இரண்டு காரணங்கள்தான் இருக்க முடியும். முதலில், அரசை எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, நிர்வாக மெத்தனம், ஊழல் குற்றச்சாட்டுகள், ரூபாயின் மதிப்பு குறைவால் ஏற்பட்டிருக்கும் நிதிநிர்வாகச் சிக்கல் போன்ற பிரச்னைகளிலிருந்து மக்களின் கவனத்தையும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் முனைப்பையும் திசைதிருப்புவது ஒரு நோக்கம். இரண்டாவதாக, வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை அன்னிய முதலீடாக இந்தியாவுக்குக் கொண்டு வந்த பிறகு, அந்தப் பணத்தைக் கொண்டுவர முயற்சி செய்து எதுவும் கிடைக்கவில்லை என்று கையை விரிப்பது இன்னொரு நோக்கம்.

 மத்திய அரசின் நோக்கம் புரிகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் எழுப்பும் எதிர்ப்புக் குரல்தான் நிஜமா, பொய்யா என்று யோசிக்க வைக்கிறது. இவர்களது அக்கறை நிஜமாக இருக்குமானால், அனைத்து எதிர்க்கட்சிகளும் சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீட்டுக்கு எதிராக கைகோத்து அரசைப் பணிய வைக்க வேண்டும். அப்போதுதான் இவர்களது எதிர்ப்பு நிஜமா, நடிப்பா என்பதை நாம் உறுதிசெய்ய முடியும்.

 2. ஜெயலலிதா :  சில்லரை வணிகத்தில் 51 சதவீத அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்று, மத்திய அமைச்சரவை அவசரமாக முடிவு செய்துள்ளது. இந்த முடிவால், சில்லரை வணிகத்தில் ஈடுபட்டுள்ள வியாபாரிகள் அதிர்ச்சியும், அச்சமும் அடைந்துள்ளனர்.சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதன் மூலம், நாட்டில் உள்ள கோடிக்கணக்கான பாரம்பரிய சில்லரை வியாபாரிகளை பாதிக்க வைக்கும். மத்திய அரசு இந்த முடிவை எடுக்கும் முன், மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டிருக்க வேண்டும்.

3. கருணாநிதி கண்டனம்:  நாட்டில் சில்ல‌ைர வியாபாரத்தில் அன்னிய முதலீடு வந்தால் நாட்டின் பொருளாதாரம் சீரழியும். பலர் தங்களுடைய தொழிலை இழக்கும் அபாயம் ஏற்படுவதுடன் பொருளாதாரத்தில் சுனாமி என்ற பேரழிவு ஏற்படும். இதனை திரும்ப பெற வேண்டும் என கூறியுள்ளார்.

4. மத்திய அரசின் முடிவை ஆதரித்தால், சிறு மற்றும் சில்லரை வர்த்தக நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஆதரவை எதிர்க்கட்சியான இடதுசாரி கட்சியினர் பெற்று விடுவர் என அஞ்சுவதால், கேரள காங்கிரசார், மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்

5. மாயாவதி: சில்லரை வணிகத்தில், அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என மத்திய அரசு எடுத்த முடிவால், உ.பி., மாநிலத்தில் உள்ள சிறு வியாபாரிகள் எல்லாம், கடைகளை மூடும் நிலைக்கு தள்ளப்படுவர். இதன் மூலம் உ.பி., மாநிலமே திவாலாகும் சூழ்நிலை உருவாகும். இத்திட்டத்தின் மூலம், ராகுலின் வெளிநாட்டு நண்பர்கள் தான் பலன் அடைவர்' என்று உ.பி., மாநில முதல்வர் மாயாவதி காட்டமாகக் கூறியுள்ளார்.

ஒரு சாமானியனாக எனக்குள் ஓடிய ஒரு விஷயம் வால்மார்ட் போன்ற பெரிய நிறுவனங்கள் இந்தியாவிற்குள் வரும் போது போட்டியின் காரணமாய் பொருட்களின் விலைகள் குறையும் என்பது நிதர்சனம்.

நிறைய தேடியும் இன்னும் சரியா புரியலை இது சரியா தப்பான்னு , யாருக்காவது புரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்களேன்..  

14 கருத்துகள்:

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

அந்நிய முதலீடு பற்றி தீர விசாரித்தே அனுமதிக்க வேண்டும். இல்லையெனில் நாம் அம்போ தான்,.


நம்ம தளத்தில்:
எனக்குள் நான் - {பய(ங்கர) டேட்டா} - தொடர்பதிவு

Unknown சொன்னது…

மாப்ள இதுல முக்கியமான விஷயமே...அந்த முதலீடே இங்கிருந்து போனது தான்யா...இப்போ வேற வழில பூமராங்கா திரும்பி வருது அவ்ளோ தான்...அப்போ நல்லதா கேட்டதா!...அதோட முடியாது சீக்கிரத்துல பல முறை தன்னை பெருக்கி கிட்டு மீண்டும் வெளிய போகும்...அதுவும் நடக்கும்!

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

விக்கி சொல்றதுதான் உண்மையான நிலவரம், நம்ம கையை கொண்டே நம்ம கண்ணை குத்த செய்வது...!!!

ராஜி சொன்னது…

எல்லா முடிவுகளிலும் நல்லதும் இருக்கு. கெட்டதும் இருக்கு. கெட்டது வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கிட்டு செயல்படுத்துறது நல்லதுன்னு எனக்கு தோணுது சகோ

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,

நீண்ட நாட்களின் பின் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.

பல் தேசியக் கம்பனிகளின் வருகை மூலம் எம் நாட்டின் பொருளாதார வீக்கம் அதிகரிக்கும் என்பது என் கருத்து!
பொருட்களின் விலையும் குறைவடைய சான்ஸ் இருக்கு பாஸ்.

சக்தி கல்வி மையம் சொன்னது…

எனக்கும் ஒன்னும் புரியல பாஸ், நிருபன் பொருளாதார வீக்கம் அதிகரிக்கும் ன்னு சொல்லி இருக்கார். அதனால் என்ன பாதிப்புன்னு தெரியல, எகோநோமிக்ஸ் படிச்சவங்கள கேட்கணும்..

நண்டு @நொரண்டு -ஈரோடு சொன்னது…

ம் ...

பெயரில்லா சொன்னது…

இது வருதுன்னு ஆறு மாசம் முன்னாடி நான் எழுதினது நேரம் இருந்தா படிச்சு சொல்லுங்க நண்பரே...

அழியப்போகும் இந்திய சிறு வணிகர்கள்...
http://reverienreality.blogspot.com/2011/07/blog-post_24.html

உணவு உலகம் சொன்னது…

இதே சந்தேகம் எல்லோருக்கும் இருக்கு. பொருளாதார மேதைகள் அலசலாம். பயன்படும்.

M.R சொன்னது…

இரு தரப்பு கருத்தும் கேட்டு குழப்பம் தான் . மற்றவர்கள் சொன்னது போல் பொருளாதார நிபுணர்கள் கரக்டாக கணித்து நன்மையா தீமையா என்று சொன்னால் நன்றாக இருக்கும் .

ஓசூர் ராஜன் சொன்னது…

அரசு செய்யவேண்டிய பணிகளை செய்யவில்லை. அந்நியர்களை அதனால் செய்ய வைக்கிறோம் என்பது சரியா?

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். பயனுள்ள தகவல்கள். கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி.. நண்பரே!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"

வவ்வால் சொன்னது…

இந்திய சில்லரை வர்த்தக சந்தை மிகப்பெரியது சுமார் 496 பில்லியன் டாலர்கள் எனப்மதிப்பிட பட்டுள்ளது, ஆனால் வர்த்தகம் பெரும்பாலும் முறைப்படுத்தப்படாமல் சிறிய சில்லரை வர்த்தகமாகவே இருக்கு. இது 97% , மிதி 3% தான் முறையான சில்லரை வர்த்தகம். இதனால் விற்பனை வரி, சேவை, வருமான வரி சரியாக அரசுக்கு வருவதில்லை.


மேலும் விரிவாக நான் ஒரு பதிவும் போட்டுள்ளேன் பார்க்கவும்.

வால்மார்ட்,சுதேசியம்,பொருளாதாரம்

கனவின் பயணம் சொன்னது…

1. Profits & benefits will go to big corporations and corrput politicians ( one time? or commission?)

2. Prices will reduce and stabilized, but will be in control by 51%.

3.Farmers will loose their bargaining power.

4.Small farmers/traders wont survive this mess. There is a chance, people can take franchise and survive, thats again consolidating, out of 100, either 10 or 20 might do that.

5.Loads of people will lose their job, doing commission business and having small storage areas, small farmers.

6.Loads of people will be forced to "SLAVE"(Angadi theru?) jobs, which is more or less cooli/bill cashier, wherhe earlier, they might have owned and ran the business themselves.

7.This will impact the people across different industries, which ever small/family owned business, once they begin to sell, they sell everything, including pharmacy,clothes etc.

8.The change is inevitable, but at this time, the indian society is not ready for it yet.

9. Any one who doesnt have a job/professional degree, runs a small business needs to worry, how his future will be in ten years.

10. I can list too many reasons, but its so obvious, this is done for the sake of US interests. I just think and wish, we will get an election for central soon.

- Hari.
( As you know, we run a small business and i live in US)