புதன், நவம்பர் 30, 2011

நம்பினோர் கெடுவதில்லை

ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் வாழ்வது ஒரு வாழ்க்கையா, இதை விட இறப்பது மேல் இல்லையா? விரக்தியின் உச்சத்தில் எல்லாவற்றையும் விட்டுவிட முடிவெடுத்தேன், வேலை, உறவு உயிர் எல்லாம். வாழவே பிடிக்காத இந்த சமூகத்தில் இத்தனை நாள் பொறுமையாய் வாழ்ந்ததே போதும் இனியும் வேண்டாம் இந்த பிழைப்பு. எனக்குள் நானே பிதற்றிக்கொண்டே உறங்கிப்போனேன்.

எத்தனை மணி என்று தெரியவில்லை.  நான் இருந்த இடம் முழுவதும் வெளிச்சம் ஆனால் அது புது இடமாய் இருந்ததால் விடியவில்லை என்று மட்டும் உணர்ந்தேன். வேறு ஏதோ ஆகி விட்டதையும் அறிந்தேன். தென்றல் மெல்ல வருடியது, அந்த சுகம் இதுவரை அனுபவித்திராதது.  தென்றல் வழி வந்த சுகந்தத்தில் மெல்ல மயங்கியும் நின்றேன். 

"குழந்தாய்.."

சத்தம் கேட்டு கண்கள் விரித்துப்பார்தேன். அங்கே கடவுள் கொஞ்சம் அதிர்ச்சி கொஞ்சம் ஆச்சரியம்.. 

"எல்லாவற்றையும் விட்டுவிட நினைக்கிறாயா?" - மெல்ல கேட்ட கடவுளை நோக்கி "விடாமல் இருக்க ஏதேனும் ஒரு காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்?" கொஞ்சம் கோபமாய் கேட்டேன்

"இங்கே சுற்றிப்பார், என்ன எல்லாம் இருக்கிறது.? "

"நிறைய மூங்கில் மரங்களும், நிறைய கொடிகளும் இருக்கின்றன. அதனால் என்ன?"

"இவைகள் இங்கே வந்த கதையை சொல்கிறேன் கேள்" என்றார் மெல்லிய சிரிப்புடன்

"ஒரே நேரத்தில் தான் இந்த கொடிகளுக்கும், மூங்கில் மரங்களுக்கும் விதைகளை தூவினேன்.  தேவையான நீரும் ஒளியும் வழங்கினேன். ஆனால் இந்த கொடிகள் வேகமாய் விதையை பிளந்து மண்ணையும் பிளந்து கொண்டு வந்துவிட்டன. ஆனால் இந்த மூங்கில் விதைகளில் இருந்து எதுவும் வரவில்லை, ஆனாலும் நான் தொடர்ந்து நீரும் ஒளியும் வழங்கிக்கொண்டு தான் இருந்தேன். "  மெல்ல ஆசுவாசப்படுத்திக்கொண்டு தொடர்ந்தார்

"ஒரு ஆண்டு கழிந்தும் அப்படியே தான் இருந்தது. ஒரு மாற்றமும் இல்லை. இப்படியே இரண்டாவது ஆண்டும் ஓடியது. மூன்று, நான்கு ஆண்டுகள் கடந்தும் ஒன்றும் வித்தியாசம் இல்லை. ஐந்தாவது ஆண்டு மண்ணை பிளந்து கொண்டு சிறு செடி வெளியே தலை நீட்டி பார்த்தது. ஆனாலும் அது இந்த கொடியோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாகவே இருந்தது. ஆனால் அதன் பின் 6 மாதங்களில் இந்த மூங்கிலின் உயரம் 100 அடியையும் தாண்டி வளர்ந்துவிட்டது. 5 வருஷம் அது தன் வேரை பலப்படுத்திக்க
எடுத்துக்கிச்சு, தேவையான அளவு பலம் வந்ததுக்கப்பறம் அது மேலே வளர்ந்துச்சு" தொடர்ந்து

"குழந்தாய் இன்னும் கேள், நான் யாருக்கும் தாங்கிக்கொள்ள முடியாத  துயரங்களை எப்போதும் கொடுப்பதில்லை. உனக்கு  சோதனை வருகிறது என்றால் உன் வேர்கள் பலப்படுத்தப்பட்டுக்கொண்டு இருக்கிறது என்று எடுத்துக்கொள் உனக்கான காலம் வரும் அப்போது நீயும் இந்த மூங்கில் போல உயர்வடைவாய்" சொல்லிவிட்டு என் முகம் பார்த்தார்.

"எவ்வளவு உயரத்திற்கு நான் போவேன்?"  எனக்குள் இருந்த சந்தேகத்தை அவரிடம் கேட்டேன்

"இந்த மூங்கில் மரம் எவ்வளவு பெரிதாய் வளரும்?" திருப்பிக்கேட்டார் கடவுள்

"அதால எவ்வளவு பெருசா வளரமுடியுமோ அவ்வளவு பெருசா.."

"அது உனக்கும் பொருந்தும்" சொல்லிவிட்டு சிரித்தார்

திடீரென முகத்தில் மழை பெய்வதை போலுணர்ந்தேன்..

கண் விழித்த பார்த்த போது,  தொட்டிலில் தூங்கிக்கொண்டு இருந்த என் குழந்தை பெய்த மழை..

கிஞ்சித்தும் இருள் இல்லாமல் பொலபொலவென விடிந்து இருந்தது பொழுது என் மனதிலும் இரவில் இருந்த இருள் இப்போது இல்லை.இன்றைய லொள்ளு

என்ன பண்ணுறாங்கன்னு யாராவது சொல்லுங்கப்பா..14 கருத்துகள்:

நிரூபன் சொன்னது…

வணக்கம் பாஸ்,
நலமாக இருக்கிறீங்களா?

எமது முயற்சிக்கு என்றோ ஒரு நாள் உரிய பலன் கிடைக்கும் என்பதனை கடவுளுடனான உரையாடல், குழந்தையின் நெகிழ்வூட்டும் செயல்கள் வாயிலாக விளக்கமாகச் சொல்லியிருக்கிறீங்க.

நல்லதோர் நீதிக் கதை.

பாலா சொன்னது…

தற்கால மனிதர்களுக்கு தேவையான ஒரு கதை. அருமை. அந்த போட்டியில் கிரவுண்டில் புகுந்த தேனீ கூட்டத்துக்கு பயந்து இவ்வாறு படுத்துக் கொண்டிருக்கிறார்கள்.. :)

தமிழ்வாசி பிரகாஷ் சொன்னது…

கதையும் அருமை.. லொள்ளு சூப்பர்

MANO நாஞ்சில் மனோ சொன்னது…

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்!!!!!

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வேரை பலப்பத்தாமல் வீரியத்துடன் வளர்ந்திட நினைக்கிறது இன்றை விதைகள்...

வாழ்க்கைக்கு தேவையான அழகிய சிந்தனைக்கதை...

வாழ்த்துக்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

தேனீக்கள் புகுந்துவிட்டது...

தேனீக்க்ள் கொட்டிவிடக்கூடாது என்பதற்காக இப்படி படுத்துவிட்டார்கள்...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
rajamelaiyur சொன்னது…

லொள்ளு சூப்பர்

M.R சொன்னது…

நல்ல கருத்து நண்பரே

சக்தி கல்வி மையம் சொன்னது…

ஒரு வேல கங்குலி பேட்டிங் செய்ய வந்திருப்பர்ந்னு நினைக்கிறேன்.. அதனாலதான் எல்லாம் தூங்கராங்களோ?

செல்ல நாய்க்குட்டி மனசு சொன்னது…

கிரிக்கெட் மைதானத்துடன் ரகசிய டீல் பேசிக் கொண்டிருக்கிறார்களோ?

மகேந்திரன் சொன்னது…

இது நான்குமறை தீர்ப்பு....

Unknown சொன்னது…

அருமையான வாழும் வரை போராடு கதை நச்...போட்டோல உசுர காப்பாத்திக்க படுத்து இருக்காங்கய்யா!